என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நாளை புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கேரள கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல், திருவண்ணாமலை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் நாளை அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
- பா.ஜ.க.வினருக்கும் போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
வேலூர்:
வேலூர் பா.ஜ.க சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிரீன் சர்க்கிளில் இருந்து கோட்டை வரை பைக்கில் பேரணியாக வந்து கோட்டை கொத்தளத்திற்கு தேசிய கொடியுடன் செல்ல உள்ளதாக அறிவித்து இருந்தனர்.
கோட்டைக்குள் செல்ல போலீசார் அனுமதி வழங்க வில்லை. இதனால் பா.ஜ.க.வினர் கோட்டைக்குள் செல்வதை தடுப்பதற்காக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோடீஸ்வரன் தலைமையில், டிஎஸ்பிக்கள் திருநாவுக்கரசு, சரவணன் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் கோட்டை வாயில் முன்பாக 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். காலை முதல் பொதுமக்கள் யாரையும் கோட்டைக்குள் அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில் பா.ஜ.க மாநில துணைத்தலைவர் நரேந்திரன், மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் தேசிய கொடியுடன் பைக்கில் கோட்டை நுழைவு வாயிலுக்கு வந்தனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கோட்டைக்குச் செல்ல அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் பா.ஜ.க.வினருக்கும் போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து பா.ஜ.க.வினர் ஊர்வலமாக நடந்து சென்று சிப்பாய் புரட்சி நினைவு தூண் அருகே ஊர்வலத்தை முடித்தனர்.
பா.ஜ.க.வினரின் பைக் பேரணி காரணமாக அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கோட்டை நுழைவுவாயில் முன்பாக பரபரப்பு ஏற்பட்டது.
- பெருநகர சென்னை மாநகராட்சியில் சிறந்த மண்டலம்-14-வது மண்ட லம் ரூ.30 லட்சம்.
- முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதிற்கான ரொக்கப்பணம் ரூ. 50 ஆயிரத்து 800-ல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
சென்னை:
உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கிலும் மற்றும் அவைகளின் செயல்பாடுகளின் அடிப்படையில் அவற்றிற்கிடையே போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கும் நோக்கிலும் பெருநகர சென்னை மாநகராட்சியில் சிறப்பாக செயல்படும் ஒரு மண்டலம், சிறப்பாக செயல்படும் ஒரு மாநகராட்சி, ஒரு நகராட்சி மற்றும் ஒரு பேரூராட்சி ஆகியவற்றுக்கு முதலமைச்சர் விருது சுதந்திர தின விழாவின்போது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கீழ்க்கண்ட உள்ளாட்சிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
சிறந்த மாநகராட்சி-கோவை-ரூ.50 லட்சம், சிறந்த நகராட்சி-திருவாரூர் ரூ.30 லட்சம், சிறந்த பேரூராட்சி-சூலூர் (கோவை மாவட்டம்) ரூ.20 லட்சம்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் சிறந்த மண்டலம்-14-வது மண்ட லம் ரூ.30 லட்சம்.
முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதிற்கான ரொக்கப்பணம் ரூ. 50 ஆயிரத்து 800-ல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
2024-ம் ஆண்டிற்கான முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதிற்காக 3 ஆண்கள் மற்றும் சிறப்பு நிகழ்வாக 4 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். ஆண்கள் பிரிவில் நெ. கதிரவன் (ஈரோடு மாவட் டம்), ஜோஷன் ரெகோ பெர்ட் (கன்னியாகுமரி மாவட்டம்), சி.ஜெயராஜ் (கடலூர் மாவட்டம்) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
பெண்கள் பிரிவில் செ.நிதிதா (கடலூர் மாவட் டம்), கவின்பாரதி (புதுக்கோட்டை மாவட்டம்), ச.உமாதேவி (விருதுநகர் மாவட்டம்), கா.ஆயிஷா பர்வீன் (ராமநாதபுரம் மாவட்டம்) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
- தி.மு.க.வுக்கு பயம் வந்துள்ளது. அந்த பயம் இருக்கணும்.
- கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறிகிறார்கள். அது விரைவில் உடைந்து விடும்.
சென்னை:
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து நடிகையும், பா.ஜ.க. மூத்த தலைவருமான குஷ்பு சுந்தர் விலகினார். தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு இந்தப் பதவி தடங்கலாக இருப்பதால் பதவி விலகியதாக குஷ்பு சுந்தர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
கடந்த சில மாதங்களாகவே நாட்டில் நடக்கும் சில விஷயங்கள் மீது கருத்துகளை வெளிப்படுத்தவும் எதிர்வினையாற்றவும் முடியாத நிலையில் இருப்பதாக உணர்ந்தேன். அதற்கு நான் வகிக்கும் மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி தடங்கலாக இருப்பதாக பல தருணங்களில் உணர்ந்தேன்.
இதனால், மிகவும் தீவிரமாக யோசித்து ஆணையத்தின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகும் முடிவை எடுத்தேன். அதை முறைப்படி ஆணையத்தின் தலைவர் மற்றும் நான் சார்ந்த கட்சி மேலிடத்திடமும் வெளிப்படுத்திய பிறகே பதவி விலகல் கடிதத்தை கொடுத்தேன்.
தீவிர அரசியலில் என்னால் ஈடுபட முடியாமல் போவதற்கு மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி முக்கியக் காரணமாகும். இனி ஒரு அரசியல்வாதியாக என்னால் எனது கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்த இயலும். எனது முடிவுக்கு கட்சி ரீதியாகவோ வெளியில் இருந்தோ எந்தவொரு அழுத்தமோ கொடுக்கப்படவில்லை.
நான் தீவிர அரசியலில் ஈடுபட போவதால் தி.மு.க.வுக்கு பயம் வந்துள்ளது. அந்த பயம் இருக்கணும். அவர்கள் கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறிகிறார்கள். அது விரைவில் உடைந்து விடும்.
இவ்வாறு நடிகை குஷ்பு கூறினார்.
- பீச் பாய்ஸ் வாக்கர்ஸ் குழு சார்பில் கொடியேற்றப்பட்டது.
- கொடியேற்ற நிகழ்ச்சியில் பீச் பாய்ஸ் வாக்கர்ஸ் குழுவுடன் பலர் கலந்து கொண்டனர்.
78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் பீச் பாய்ஸ் வாக்கர்ஸ் (Beach boys walkers) சார்பாக இன்று தேசிய கொடி ஏற்றபட்டது. இந்த நிகழ்ச்சியில் பால சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றினார்.
இந்த ஆண்டு கொடியேற்ற விழாவில் அடையார் ஆனந்த பவன் நிர்வாக இயக்குநர் திரு. கே.டி. வெங்கடேசன், பீச் பாய்ஸ் அட்மின் மோகன் ராகவன், முன்னாள் அட்மின் ஏழுமலை, மீடியா95 சிஇஓ பழனி ராஜா மற்றும் பீச் பாய்ஸ் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பீச் பாய்ஸ் வாக்கர்ஸ் குழு சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் தேசிய கொடி ஏற்றி வருவது குறிப்பிடதக்கது.
- பாலம் முற்றிலும் சேதம் அடைந்து விட்டது.
- கனரக வாகனம் நீண்ட வரிசையில் நின்றுள்ளன.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பொழிந்தது. நள்ளிரவு 2 மணி வரை பொழிந்த இந்த மழையால் செலம்பூர் அம்மன் கோவிலில் இருந்து எண்ணமங்கலம் செல்லும் பாதையில் பேச்சுப்பாறை பாலம் காற்றாற்று ஓடை நீரால் ஏற்கனவே உடைந்திருந்த நிலையில் இருசக்கர வாகனம் மட்டுமே செல்லும் அளவிற்கு இருந்த பாலம் முற்றிலும் சேதம் அடைந்து விட்டது.
எண்ணமங்கலம் கிராமத்தில் 2 வீடுகளில் தண்ணீர் புகுந்திருந்தது. விடிய ற்காலை 4 மணி அளவில் அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் செட்டி நொடி பள்ளம் என்ற இடத்தில் மண்சரிவு ஏற்பட்டதால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனம் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் வாகனம் என சாலையின் இரு புறங்களிலும் நீண்ட வரிசையில் கனரக வாகனம் நீண்ட வரிசையில் நின்றுள்ளன.
மேலும் சம்பவ இடத்திற்கு பவானி நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் ராஜேஷ் கண்ணா, உதவி கோட்ட பொறியாளர் பாபு, சரவணன், நெடுஞ்சாலை ஆர்.ஐ.கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் ஜே.சி.பி. உதவியுடன் சாலையில் உள்ளமண் சரிவுகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்து வருகி ன்றார்கள். நெடுஞ்சாலை துறையுடன் பர்கூர் காவல் துறையினரும் போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர்.
- இயற்கை சீற்றங்களால் பெரும் பாதிப்புகள் உண்டாகின்றன.
- இயற்கை இடர்பாடுகள் குறித்து முறையாக ஆய்வு செய்யப்படும்.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சுதந்திர தின விழாவில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
சமீப காலமாக, நாம் பெரிதும் எதிர் கொள்ளும் பிரச்சனையாக காலநிலை மாற்றம் உருவாகியுள்ளது. இதனால் ஏற்படும் இயற்கை சீற்றங்களால் பெரும் பாதிப்புகள் உண்டாகின்றன. அண்மையில் கேரளாவில் பெய்த பெருமழை காரணமாக வயநாட்டில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த பாதிப்புகளில் இருந்து கேரளம் மீள்வதற்கான அனைத்து உதவிகளையும் நாம் வழங்கி உள்ளோம். தமிழ்நாட்டிலும், நீலகிரி மற்றும் வால்பாறை மலைப்பகுதி, கொடைக்கானல் போன்ற மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், ஏற்காடு மற்றும் ஏலகிரியை உள்ளடக்கிய மலைப்பகுதிகள் என மலை நிலப்பகுதிகள் அதிகம் உள்ளன.
அங்கு பெருமழைக் காலங்களில் ஏற்படக்கூடிய இயற்கை இடர்பாடுகள் குறித்து முறையாக ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
வனத் துறை, புவிசார் அறிவியல் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் சுற்றுச் சூழல் துறை உள்ளிட்ட பல்துறை வல்லுனர்களைக் கொண்ட குழுவினால், அறிவியல் அடிப்படையிலான ஒரு விரிவான ஆய்வு, மாநிலப் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலமாக இந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும்.
மேலும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் இடர்பாடுகளை முன்னதாக அறிவதற்கும், தவிர்ப்பதற்கும், தணிப்பதற்கும், நீண்டகாால அடிப்படையில் ஆபத்துகளைக் குறைப்பதற்கும் அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் குழு ஆய்வு செய்து, தனது பரிந்துரைகளை வழங்கும். அந்த பரிந்துரைகளின் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வார இறுதி நாட்களில் சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது.
- சிறப்பு மலை ரெயில்களில் பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
ஊட்டி:
சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சுதந்திரதினம், கிருஷ்ண ஜெயந்தி விடுமுறையை கொண்டாடுவதற்காக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக வார இறுதி நாட்களில் சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது.
அதன்படி குன்னூர்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் நாளை (16-ந்தேதி), நாளை மறுநாள் மற்றும் 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 3 நாட்கள் இயக்கப்பட உள்ளது.
இந்த ரெயில் குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு 9.40 மணிக்கு ஊட்டி செல்லும். இதேபோல ஊட்டியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்படும் ரெயில் 5.55 மணிக்கு குன்னூர் வரும். மேற்கண்ட ரெயில்கள் முதல் வகுப்பில் 80 இருக்கைகள் மற்றும் 2-வது வகுப்பில் 130 இருக்கைகளுடன் இயக்கப்படும்.
மேலும் ஊட்டி-கேத்தி இடையே இருமார்க்கங்களிலும் 3 சுற்றுகள் ஜாய்ரைடு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன் ஒருபகுதியாக முதல் சுற்று சிறப்பு ரெயில் ஊட்டியில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு 10.10 மணிக்கு கேத்தி செல்லும். அங்கிருந்து 10.30 மணிக்கு புறப்பட்டு 11 மணிக்கு ஊட்டிக்கு வரும்.
2-வது சுற்று ரெயில் 11.30 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்பட்டு 12.10 மணிக்கு கேத்தி வரும். அங்கிருந்து 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.10 மணிக்கு ஊட்டி வரும்.
3-வது சுற்று சிறப்பு ரெயில் மாலை 3 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்பட்டு 3.30 மணிக்கு கேத்தி வரும். பின்னர் 4 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு ஊட்டி வரும். மேற்கண்ட சிறப்பு மலை ரெயில்களில் பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- ராஜகோபுரத்தில் சுதந்திர தின விழா தேசிய கொடி ஏற்றப்பட்டது.
- நடராஜன் திருவடிகளில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டு ஏற்றப்பட்டது.
சிதம்பரம்:
உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் கீழரத வீதியில் உள்ள 142 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தில் சுதந்திர தின விழா தேசிய கொடி ஏற்றப்பட்டது.
நடராஜர் கோவில் சித் சபையில் முதற்கால பூஜை நடைபெற்று முடிந்த பின்னர் தேசியக் கொடியானது நடராஜன் திருவடிகளில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க பொது தீட்சிதர்கள் செயலர் வெங்கடேச தீட்சதர் தலைமையில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு ராஜ கோபுரத்தில் கொடி யேற்றப்பட்டது.
சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழா வருடத்திற்கு இரண்டு முறை இந்திய தேசியக்கொடி சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கீழ் கோபுரத்தில் ஏற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- கூடுதலாக 70 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
- போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க நடவடிக்கை.
சென்னை:
மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தாம்பரம் ரெயில் நிலையத்தில் இன்றுமுதல் ஞாயிற்றுக்கிழமை வரை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அந்த நாள்களில் காலை 10.30 முதல் பிற்பகல் 2.30 மணி வரையும், இரவு 10 மணி முதல் 11.59 மணி வரையும் சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரெயில்கள் பல்லாவரம் ரெயில் நிலையம் வரையும், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ரெயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

எனவே, அந்த வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மாநகர போக்குவரத்துக் கழகம் சாா்பில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கூடுதலாக பல்லாவரம் பஸ் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு 30 பஸ்களும், பல்லாவரம் பஸ்நிலையத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு 20 பஸ்களும், தாம்பரம் பஸ்நிலையத்தில் இருந்து தி.நகர் மற்றும் பிராட்வேக்கு கூடுதலாக 20 பஸ்களும் என மொத்தம் 70 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

மேலும், தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் விதமாக, கூடுவாஞ்சேரி மாா்க்கத்தில் செல்லும் அனைத்து பஸ்களும் இந்து மிஷன் மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் வருகிற 18-ந் தேதி வரை தற்காலிகமாக நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நம் நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட வீரர்களையும் தியாகிகளையும் நினைவுகூர்ந்து எந்நாளும் போற்றுவோம்!
- எண்ணற்ற உயிர்களைத் தியாகம் செய்து போராடிப் பெற்ற இந்த விடுதலையைக் கொண்டாடி மகிழ்வோம்!
சென்னை:
இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் தளத்தில்,
சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளைக் கடந்து, சமூக நல்லிணக்கத்தோடும் வேற்றுமையில் ஒற்றுமையோடும், நம் நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட வீரர்களையும் தியாகிகளையும் நினைவுகூர்ந்து எந்நாளும் போற்றுவோம்!
எண்ணற்ற உயிர்களைத் தியாகம் செய்து போராடிப் பெற்ற இந்த விடுதலையைக் கொண்டாடி மகிழ்வோம்! நாட்டின் வளர்ச்சிக்காக என்றென்றும் பாடுபடுவோம்!
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
- நோயாளிக்கு ரூ.250 செலவில் டயாலிசிஸ் செய்திட வழி வகுத்துள்ளார்.
- மாணவ-மாணவிகளுக்கு பிரயாஸ் டியூஷன் மையம் நடத்தி வருகிறார்.
சென்னை மாவட்டத்தை சேர்ந்த மீனா சுப்பிரமணியன் என்பவர் பிரயாஸ் அறக்கட்டளை மூலமாக சமூக சேவை செய்து வருகிறார். ஆடைகள், மிதியடி மற்றும் வீட்டு அலங்காரங்கள் செய்வதற்கு துறை திறன் கவுன்சில்களுடன் இணைந்து பிரயாஸ் அறக்கட்டளை சான்றளிக்கப்பட்ட தொழிற்பயிற்சி படிப்புகளை கற்பிக்க வழிகாட்டியாக உள்ளார்.
இதன் மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 600-க்கும் மேற்பட்ட பெண்கள் பயன் அடைந்துள்ளனர்.
மீனா சுப்பிரமணியன் தலைமையில் 2012-ம் ஆண்டு சிறப்பு மருத்துவ சிகிச்சை மற்றும் 10 படுக் கைகள் கொண்ட டயாலிசிஸ் வசதி உள்ள மருத்துவ மையம் நிறுவப்பட்டது. மிகக் குறைந்த செலவில் ஒரு நோயாளிக்கு ரூ.250 செலவில் டயாலிசிஸ் செய்திட வழி வகுத்துள்ளார்.
பிற்படுத்தப்பட்ட குடும்பத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு பிரயாஸ் டியூஷன் மையம் விருகம்பாக்கத்தில் நடத்தி வருகிறார். இதன் மூலம் தினமும் 60 குழந்தைகள் பயன் பெற்று வருகின்றனர்.
10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் தடையில்லாமல் மேற்படிப்பு தொடர கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறார்.
பெண்களுக்கும், சமுதா யத்திற்கும் சிறந்த முறையில் தொண்டாற்றி வரும் மீனா சுப்பிரமணியனின் சமூக சேவையை பாராட்டி 2024-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த சமூக சேவகர் விருது வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் ஐஸ்வர்யம் அறக்கட்டளை 2014-ம் ஆண்டு முதல் ஏழை, ஆதரவற்றோர், கைவிடப்பட்டோர், நோய் வாய்ப்பட்டோர் மற்றும் முதியோர் ஆகியோருக்கு மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது.
எனவே மாற்றுத் திறனாளிகளின் மறுவாழ்வுப் பணிக்கான நீண்ட கால சிறப்பான சேவையைப் பாராட்டி "சிறந்த தொண்டு நிறுவன"த்திற்கான விருது தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது.






