என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 61.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
    • வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

    சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டர் விலை 61.50 ரூபாய் அதிகரித்து 1964.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் மற்றும் இந்திய பணத்தின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் கியாஸ் விலைகளை நிர்ணயித்து வருகின்றனர். சர்வதேச சந்தைக்கு ஏற்பட்ட தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயித்து வருகிறது. கியாஸ் சிலிண்டர்கள் விலை மாதத்திற்கு ஒருமுறை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் பெட்ரோல், டீசல் மற்றும் வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் கடந்த பல மாதங்களாக மாற்றம் செய்யப்படாமல் உள்ளது. வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை மட்டும் அடிக்கடி உயர்த்தப்படுகிறது.

    சிலிண்டர் விலையில் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு ஏற்ப ஏற்றம் இறக்கம் இருக்கும்.

    14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 818 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.

    • மருத்துவ செலவினங்களைக் கருத்தில் கொண்டு இதை 10 லட்சம் ஆக உயர்த்த வேண்டும்.
    • மூத்த குடிமக்களின் மக்கள் தொகையில் 71% கிராமப்புறங்களில் உள்ளனர்.

    சென்னை:

    70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு 5 லட்ச ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு அளிக்கும் பி.எம்.ஜெய் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அந்தத் திட்டத்தின் வயது வரம்பை 60 ஆக குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

    2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 10.4 கோடி பேர் 60 வயதைக் கடந்தவர்கள் இந்தியாவில் உள்ளனர் என்று தெரியவந்தது. கடந்த 13 ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும். 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான இந்த சலுகையை 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் விரிவுபடுத்தினால் பரவலாகப் பலர் இதில் பயன் பெற முடியும்.

    தற்போதைய திட்டத்தில் 5 லட்சம் வரை சிகிச்சை பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதிகரித்துவரும் மருத்துவ செலவினங்களைக் கருத்தில் கொண்டு இதை 10 லட்சம் ஆக உயர்த்த வேண்டும்.

    மூத்த குடிமக்களின் மக்கள் தொகையில் 71% கிராமப்புறங்களில் உள்ளனர். அவர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகம். ஒப்பீட்டளவில் கிராமப்புறங்களில் மருத்துவ வசதியும் குறைவாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தில் கிராமப்புறப் பெண்களுக்குக் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

    மூத்த குடிமக்களிலேயே மாற்றுத்திறனாளிகள் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய மூத்த குடிமக்களின் எண்ணிக்கையில் ஒரு லட்சம் பேருக்கு 5,177 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர் என்று கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கெனக் குறிப்பான திட்டம் வகுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • பட்டாசு சிதறி சேமிப்பு கிடங்கின் மீது விழுந்ததில், அங்கிருந்த கழிவு அட்டைப் பொருட்கள் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது.
    • மக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அருகில் சிலர் பட்டாசுகளை வெடித்துள்ளனர். இதில் பட்டாசு சிதறி சேமிப்பு கிடங்கின் மீது விழுந்ததில், அங்கிருந்த கழிவு அட்டைப் பொருட்கள் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. மேலும் காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவியது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தீ விபத்து காரணமாக அச்சம்பட்டி பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனிடையே குறுகிய சாலை வழியாக தீயணைப்பு வாகனம் நுழைய முடியாததால், தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.

    தமிழகத்தின் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    சேலம், ஈரோடு, தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    மேலும், நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    சென்னை பொறுத்தவரையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • தீ விபத்து போன்ற அசம்பாவிதங்களை தடுக்க தீயணைப்பு துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
    • கடந்த 3 ஆண்டுகளாக தீ விபத்து இல்லாத தீபாவளியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு நேற்று முதலே பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வருகிறது.

    பொது மக்கள் பாதுகாப்புடன் பட்டாசுகளை வெடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தீ விபத்து போன்ற அசம்பாவிதங்களை தடுக்க தீயணைப்பு துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், தமிழகம் முழுவதும் 21 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்கும்போது சென்னையில் 7 பேரும், மதுரையில் 5 பேரும், திருச்சியில் 3 பேரும் தீக்காயத்தால் பாதிப்படைந்துள்ளனர்.

    தஞ்சாவூரில் 6 பேர் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட 4 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

    கடந்த 3 ஆண்டுகளாக தீ விபத்து இல்லாத தீபாவளியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டும் தீ விபத்து இல்லாத தீபாவளியாக கொண்டாடப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
    • புறநகர் பகுதிகளில் கனமழை பெய்கிறது.

    கிழக்கு திசை காற்று தென் இந்திய பகுதிகளில் முழுமையாக வீச இருக்கிறது. இதனால் வருகிற 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் பருவமழை தீவிரம் அடைய உள்ளது.

    அதற்கு முன்னதாக மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஆகியவை காரணமாக இன்று (வியாழக்கிழமை) முதல் 2-ந்தேதி (சனிக்கிழமை) வரை மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    அதன்படி, இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையும் அறிவித்து இருந்தது.

    அந்த வகையில், சென்னை புறநகர் பகுதிகளான காட்டுப்பாக்கம், பூந்தமல்லி, குமணன்சாவடி, வேலப்பன்சாவடி, திருவேற்காடு, கோவூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதே போல் எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி பகுதிகளிலும் கனமழை பெய்கிறது.

    • மழை உள்ளிட்ட காரணங்களால் 75 சதவீத அளவுக்கு மட்டுமே பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
    • நடப்பாண்டில் பட்டாசு விற்பனை சிறப்பாக இருந்ததாக பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.

    தீபாவளி பண்டிகையையொட்டி, சிவகாசியில் தயாரான பட்டாசுகள் நாமு முழுவதும் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாக தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

    சிவகாசியில் 1,150 பட்டாசு ஆலைகளில் 4 லட்சம் தொழிலாளர்களால் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டன.

    மழை உள்ளிட்ட காரணங்களால் 75 சதவீத அளவுக்கு மட்டுமே பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்தியா முழுவதும் விற்பனைக்காக அனுப்பப்பட்ட 95 சதவீத பட்டாசுகள் ரூ.6 ஆயிரம் கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக பட்டாசு வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

    தயாரிப்பு குறைந்த நிலையில் கூட கடந்தாண்டை விட, நடப்பாண்டில் பட்டாசு விற்பனை சிறப்பாக இருந்ததாக பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.

    • சென்னை தி.நகரில் டாஸ்மாக் பாரில் மது விற்பனை நடந்து வருகிறது.
    • மது பிரியர்கள் மதுபாட்டில்கள் வாங்க ஆர்வத்துடன் குவிந்து வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகைக்கு காலையிலேயே டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.

    டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படுவதே வழக்கம். ஆனால், தீபாவளி முன்னிட்டு விதியை மீறி மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

    சென்னை தி.நகரில் டாஸ்மாக் பாரில் மது விற்பனை நடந்து வருகிறது.

    காலையிலேயே டாஸ்மாக் கடை பார் திறக்கப்பட்டுள்ளதால் மது பிரியர்கள் மதுபாட்டில்கள் வாங்க ஆர்வத்துடன் குவிந்து வருகின்றனர்.

    • தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • இன்று வெள்ளியின் விலையில் மாற்றம் இல்லை.

    தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஒருநாள் உயர்வதும், மறுநாள் குறைவதுமாக ஒரு நிலையற்ற தன்மையிலேயே பயணித்து கொண்டிருக்கிறது. சென்னையில் நேற்று முன்தினம் கிராம் ரூ.7,315-க்கும், ஒரு பவுன் ரூ.58,520-க்கும் விற்பனை ஆனது.

    தங்கம் விலை நேற்று சற்று அதிகரித்தது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.59 ஆயிரத்து 520-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.65 அதிகரித்து ரூ.7,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.59,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7,455-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.109-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

    • நண்பர் கமல்ஹாசன் அவர்களது அன்பு அழைப்பை ஏற்று, அமரன் திரைப்படம் பார்த்தேன்.
    • நம் நினைவில் வாழும் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கும் பெரிய சல்யூட்.

    இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.

    ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். இந்த படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

    அமரன் படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு படக்குழுவினர் சிறப்பு திரையிடல் செய்தனர். அப்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு, படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் இந்த படத்தை பார்த்து மகிழ்ந்தனர்.

     

    அமரன் படத்தை பார்த்த முதலமைச்சர் முக ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:- நண்பர் கலைஞானி கமல்ஹாசன் அவர்களது அன்பு அழைப்பை ஏற்று, நேற்று அமரன் திரைப்படம் பார்த்தேன்.

    புத்தகங்களைப் போல்- திரைப்பட வடிவிலும் உண்மைக் கதைகளை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களது வீரத்தையும் அர்ப்பணிப்பையும் உணர்வுப்பூர்வமாகப் இயக்குநர் ராஜ்குமார் படமாக்கியுள்ளார்.

    மேஜர் முகுந்த் வரதராஜன்- திருமிகு. இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆகியோரது பாத்திரங்களைத் தங்களது நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்திய தம்பி சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் அமரன் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

    நாட்டைப் பாதுகாக்கும் நமது இராணுவ வீரர்களுக்கும்- நம் நினைவில் வாழும் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கும் பெரிய சல்யூட் என பதிவிட்டிருந்தார்.

    • தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் கடந்த வாரம் நடந்தது.
    • தவெக தலைவர் விஜய் உரைக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின.

    தமிழ்நாட்டில் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொது மக்கள் புத்தாடை அணிந்து, இனிப்புகள் உண்டு, பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகையை ஒட்டி நடிகர் ரஜினிகாந்த் வீட்டு வாசலில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். வீட்டு வாசலில் திரண்ட ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். உற்சாகமாக காணப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், "அனைவருக்கும் என்னுடைய தீபாவளி நல்வாழ்த்துக்கள். எல்லோரும் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக, சந்தோஷமாக இருக்க வேண்டும்." நடிகர் விஜயின் மாநாடு பற்றிய கேள்விக்கு, "மாநாடு உண்மையில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்," என்று தெரிவித்தார். 

    • ரெயிலின் சக்கரம் கழன்றதால் பெட்டி தடம்புரண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • ரெயில் பெட்டியை சீரமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை சென்ட்ரல் இருந்து போடிக்கு சென்று கொண்டிருந்த ரெயில் மதுரை சந்திப்பில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

    மதுரை ரெயில்வே சந்திப்பில் ரெயில் எஞ்சினுக்கு அடுத்த பெட்டியின் சக்கரம் கழன்று ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

    ரெயிலின் சக்கரம் கழன்றதால் பெட்டி தடம்புரண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டதாலும், பணிகளின் எண்ணிக்கை குறைவாகி இருந்ததாலும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    மதுரை ரெயில்வே சந்திப்பில் சக்கரம் கழன்று தடம்புரண்டு ரெயில் பெட்டியை சீரமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    ×