search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ma.subramanian"

    • பாதிக்கப்பட்ட மாணவிக்கு பெங்களூருவில் இருந்த செயற்கை கால் வாங்கி பொருத்தப்படும்.
    • தவறான சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார்-உஷாராணி தம்பதியின் மகள் பிரியா, ராணிமேரி கல்லூரியில் உடற்கல்வியியல் பாடத்தை எடுத்து படித்து வந்தார். கால்பந்து வீராங்கனையாகும் லட்சியத்துடன் தினமும் பயிற்சியில் ஈடுபட்ட வந்த அவர், கடந்த மாதம் 20-ந்தேதி வலது காலில் சுளுக்கு ஏற்பட்டது போல் வலியால் அவதிப்பட்டுள்ளார்.

    இதையடுத்து பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு நடந்த தவறான ஆப்ரேசன் காரணமாக மறுநாளே கால் பெரிய அளவு வீங்கி இருக்கிறது. இதையடுத்து அவரது உயிருக்கு ஆபத்து என்ற மருத்துவர்கள் கூறியதை அடுத்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரியாவுக்கு வலதுகால் துண்டித்து அகற்றப்பட்டது.

    இந்நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தற்போது மாணவிக்கு உள்ள காயம் சரியான உடன், பெங்களூருவில் இருந்து செயற்கை கால் வாங்கி பொருத்தப்படும் என்றும், அந்த மாணவிக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

    மருத்துவக்குழு அளித்துள்ள விளக்கத்தின் அடிப்படையில் மாணவிக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

    • தற்போது சென்னையில் மழைக்கால நோயான மெட்ராஸ் ஐ வேகமாக பரவி வருகிறது.
    • சிறப்பு முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் .

    சென்னை:

    சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழைக்கால நோய்களில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக மக்கள் நல்வாழ்வுத் துறையும், மாநகராட்சியும் இணைந்து மருத்துவ முகாம்கள் நடத்தும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.

    அதன்படி இன்று ஒவ்வொரு வார்டிலும் ஒரு மருத்துவ முகாம் வீதம் 200 வார்டுகளிலும் 200 இடங்களில் முகாம் நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் முகாம்களில் மருத்துவர்கள், நர்சுகள், உதவியாளர்கள் இடம்பெற்று இருப்பார்கள்.

    200 வார்டுகளிலும் எந்தெந்த இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறும் என்ற விபரம் அனைத்து மண்டல அலுவலகங்களிலும், வார்டு அலுவலகங்களிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    தற்போது சென்னையில் மழைக்கால நோயான 'மெட்ராஸ் ஐ' வேகமாக பரவி வருகிறது. மருத்துவ முகாம்களில் கண்வலி, காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு, டைபாய்டு, சேற்றுப்புண் உள்ளிட்ட வியாதிகள் தொடர்பாக பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கப்படும். மேல் சிகிச்சை தேவைப்படுபவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார்கள்.

    பொதுமக்கள் இந்த மருத்துவ முகாம்களை பயன்படுத்தி பாதுகாப்பாக இருக்கும்படி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    • மத்திய சுகாதாரத்துறை மந்திரியை சந்தித்து கோரிக்கை விடுக்க முடிவு.
    • நடப்பாண்டில் கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்க நடவடிக்கை.

    சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் தரம் உயர்த்தப்பட்ட ரேடியோ கதிரியக்கவியல் துறை திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

    கடந்த ஆண்டு 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் வாயிலாக தமிழகத்திற்கு கூடுதலாக 1500 இடங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது. ஒரே ஆண்டில் கூடுதலாக இவ்வளவு மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றிருப்பது மருத்துக் கல்லூரி வரலாற்றில் இதுதான் முதன்முறை. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மட்டும்தான் 1500 மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெற்று இருக்கிறது.

    நடப்பாண்டில் கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டஙகளில் மருத்துவக்கல்லூரி அமைக்கும் வகையில், தென்காசி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிபேட்டை உள்பட 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி அமைக்க, மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவை சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தென்காசியில் நடைபெறும் மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிடுகிறார்.
    • சங்கரன்கோவிலில் மக்கள் நல்வாழ்வை வலியுறுத்தி நடைபெறும் மாபெரும் மராத்தான் போட்டியை அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

    தென்காசி:

    தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருகிற 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகிறார்.

    வரவேற்பு

    இதற்காக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வழியாக மாலை 3.45 மணி அளவில் தென்காசிக்கு வருகை தரும் அமைச்சருக்கு தென்காசி இடைகாலில் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன் தலைமையில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    தொடர்ந்து தென்காசியில் நடைபெறும் மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை பார்வையிடுகிறார்.

    மாலை 4 மணிக்கு ஆய்குடி அமர்சேவா சங்கத்திற்குட்பட்ட விந்தன்கோட்டையில் உள்ள அமர் அப்துல்கலாம் மறுவாழ்வு பழத்தோட்டத்தை திறந்து வைக்கிறார். அதன்பின் அமர்சேவா சங்கத்தின் 40-வது வருட ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தென்காசியில் ஓய்வெடுக்கிறார்.

    மறுநாள் காலையில் சங்கரன்கோவிலில் மக்கள் நல்வாழ்வை வலியுறுத்தி நடைபெறும் மாபெரும் மராத்தான் போட்டியை தொடங்கி வைக்கிறார். இதனையொட்டி அமர்சேவா சங்கத்தில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ×