என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தனியார் நிதி நிறுவன மேலாளர் 3 நாட்களாக வீட்டிற்கு வந்து கடன் தொகை கட்டச் சொல்லி கேட்டுள்ளார்.
    • உறவினர்கள் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் கணக்குப்பட்டி பகுதியை சேர்ந்த பழனியப்பன் மகன் அய்யந்துரை (30). இவர் சொந்தமாக தறி தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சினேகா (26) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று . அர்ஜுன் (3) ஜாஸ்மிகா (4)ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். தறித்தொழிலில் நலிவடைந்த காரணத்தால் இளம்பிள்ளை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் தொழில் நடத்த 4 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

    73 மாதம் கட்ட வேண்டிய தவணைத் தொகையை மாதம் தவறாமல் கட்டி வந்த நிலையில் 19-வது தவணைத் தொகை கட்டுவதற்கு காலதாமதம் ஆனதால் தனியார் நிதி நிறுவன மேலாளர் 3 நாட்களாக வீட்டிற்கு வந்து கடன் தொகை கட்டச் சொல்லி கேட்டுள்ளார். இந்த நிலையில் தொடர்ந்து பணம் கட்ட சொல்லி கேட்டதால் மனம் உடைந்த அய்யந்துரை நேற்று மதியம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அவரது மனைவி சினேகா அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தாரமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே கடன் தொகை கட்ட சொல்லி தொந்தரவு செய்து வந்த மேலாளர் மீது வழக்கு பதிவு வேண்டும். இல்லையென்றால் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி அவரது உறவினர்கள் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து உறவினர் அய்யனார் என்பவர் கூறுகையில், அய்யந்துரை தனது சொந்த தொழிலுக்காக தனியார் வங்கியில் 4 லட்ச ரூபாய் பணம் பெற்று தொடர்ந்து கட்டி வந்த நிலையில் 19-வது தவணை பணம் கட்டுவதற்கான காலதாமதம் ஏற்பட்டது. இதனால் வங்கி மேலாளர் அய்யந்துரையை பணம் கட்ட சொல்லி தொந்தரவு செய்து வந்ததால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வங்கி மேலாளரின் தொந்தரவு காரணமாகவே மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதால் இது குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் உள்ளனர்.

    எனவே மன உளைச்சலை ஏற்படுத்திய மேலாளர் மீதும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை மீதும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இறந்த குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் இல்லையென்றால் உடலை வாங்க மாட்டோம் என கூறினார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. 

    • கள ஆய்வு கூட்டத்தின்போது தேவையற்ற சலசலப்புகளை தவிர்க்க வேண்டும்.
    • தேவையற்றவர்களை கள ஆய்வு கூட்டத்திற்கு அழைக்க வேண்டாம்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை கழகத்தில் இன்று காலை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

    கட்சி வளர்ச்சி குறித்தும், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி வியூகம், அ.தி.மு.க. மேற்கொண்டு வரும் பணிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    நிர்வாகிகளிடம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

    * பிற கட்சியில் இருந்து வருபவர்களுக்கு பதவி வழங்குவதில் கவனம் தேவை.

    * மாநில பொறுப்பு வழங்கியதால் தான் கட்சி மாறியது மிகப்பெரிய செய்தியானது.

    * கள ஆய்வு கூட்டத்தின்போது தேவையற்ற சலசலப்புகளை தவிர்க்க வேண்டும்.

    * மற்ற மாவட்டங்களில் நடந்ததுபோல சென்னையில் நடக்கக்கூடாது.

    * தேவையற்றவர்களை கள ஆய்வு கூட்டத்திற்கு அழைக்க வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

    • ராமேசுவரம் மீனவர்கள் 49 பேரை எல்லைதாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.
    • ராமேசுவரம் துறைமுக பகுதியில் நடந்த அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந்தேதி மற்றும் கடந்த ஜனவரி மாதம் 25-ந்தேதி கடலில் மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்கள் 49 பேரை எல்லைதாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

    மேலும் அவர்களுக்கு சொந்தமான 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை அரசு ராமேசுவரம் மீனவர்களை சிறையில் அடைத்துள்ளது. அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்துவது குறித்து கடந்த 25-ந்தேதி ராமேசுவரம் துறைமுக பகுதியில் நடந்த அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இன்று ராமேசுவரம் பேருந்து நிலையம் எதிரே அனைத்து விசைப்படகு மீனவர் சங்கத்தினர், சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு சிறை மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், இலங்கை கடற்படை வசம் உள்ள படகுகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். 

    • சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் அ.தி.மு.க. கள ஆய்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.
    • சென்னை ஒருங்கிணைந்த மாவட்டத்தில் வருகிற 4-ந்தேதி கள ஆய்வு நடக்கிறது.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை கழகத்தில் இன்று காலை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

    கட்சி வளர்ச்சி குறித்தும், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி வியூகம், அ.தி.மு.க. மேற்கொண்டு வரும் பணிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் அ.தி.மு.க. கள ஆய்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. சென்னை ஒருங்கிணைந்த மாவட்டத்தில் வருகிற 4-ந்தேதி கள ஆய்வு நடக்கிறது. இது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார், பா.வளர்மதி, மாதவரம் மூர்த்தி , ரமணா, அப்துல் ரஹீம், மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆதி ராஜாராம்,கே.பி. கந்தன்,பாலகங்கா, வெங்கடேஷ்பாபு, வி.என்.ரவி, சோமசுந்தரம், வாலாஜாபாத் கணேசன், தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ், அலெக்சாண்டர், அமைப்பு செயலாளர் ராயபுரம் மனோ, அண்ணா தொழிற்சங்க தலைவர் கமலக்கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.. வி.எஸ்.பாபு, மைத்ரேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க தலைமை கழகத்துக்கு காலை 10.30 மணிக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். எடப்பாடியார் வாழ்க , வருங்கால முதல்வர் வாழ்க, என கோஷங்கள் எழுப்பினார்கள். கட்சி நிர்வாகிகள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

    • காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
    • நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தெற்கு கேரளா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

    நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

    2-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    3-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • நிர்மல் குமார் தனது சமூக வலைதள பக்கங்களில் அ.தி.மு.க. குறித்த பதிவுகளை நீக்கி உள்ளார்.
    • இன்று மாலை அவர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழக பா.ஜ.க.வின் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் மாநிலத் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல்குமார் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பா.ஜ.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளராக இருந்த நிர்மல்குமார் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நிர்மல் குமார் தனது சமூக வலைதள பக்கங்களில் அ.தி.மு.க. குறித்த பதிவுகளை நீக்கி உள்ளார். இன்று மாலை அவர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    எடப்பாடியார் FOR EVER என வைக்கப்பட்டிருந்த கவர் போட்டோவையும் நிர்மல் குமார் நீக்கினார்.

    • சுற்றுசூழலை பாதுகாக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றையும் தமிழக அரசு அமைக்க வேண்டும்.
    • ‘மாசுபடுத்துபவரே இழப்பீடு செலுத்த வேண்டும்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் தோல் தொழிற்சாலைகளிடமிருந்து வசூலிக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாலாற்றில் தோல் தொழிற்சாலைகளால் கலந்து விடப்படும் தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீரால் பாதிக்கப்பட்ட , ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் கடந்த 2001, 2009 ஆகிய ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட இழப்பீட்டை அடுத்த 6 வாரங்களில் வழங்க வேண்டும்;

    தோல் தொழிற்சாலைகளில் இருந்து திறக்கப்படும் கழிவு நீரால் பாலாறு மற்றும் வேலூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் கண்காணிக்க உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

    எனவே, இனியும் தாமதிக்காமல் தோல் தொழிற்சாலை கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உடனடியாக நீதி வழங்க வேண்டும். உச்சநீதிமன்ற ஆணைப்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், அதற்கான தொகையை 'மாசுபடுத்துபவரே இழப்பீடு செலுத்த வேண்டும்' என்ற தத்துவத்தின் அடிப்படையில் தோல் தொழிற்சாலைகளிடமிருந்து வசூலிக்க வேண்டும். சுற்றுசூழலை பாதுகாக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றையும் தமிழக அரசு அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தந்தை பெரியாரை அவமதிக்கும் யாருக்கும் தான் மரியாதை கொடுக்க தயாராக இல்லை.
    • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது.

    சென்னை:

    வடசென்னை வளர்ச்சிக்காக ரூ.1,000 கோடியில் நடைபெற்றுவரும் திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர் சேகர் பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோர் உடன் இருந்தார்.

    ஆய்வு பணிகளை மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    * தமிழக அரசின் அனைத்து திட்டங்களுக்கும் எதிராகவே கவனர் செயல்பட்டு வருகிறார். அரசுக்கு எதிராக செயல்படுவதையே கவர்னர் தனது வேலையாக கொண்டுள்ளார். அது எங்களுக்கு நல்லாதாகவே உள்ளது. அவர் இதை தொடர்ந்து செய்ய வேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறேன். அவரின் இப்போக்கு ஆட்சிக்கு சிறப்பை தான் சேர்க்கிறது.

    * ஓராண்டிற்குள் எல்லா பணிகளையும் முடிக்க வேண்டும் என்று எல்லா துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    * அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா மற்றும் வட்டாரத்தில் இருக்கக்கூடிய எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் எல்லோரும் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வேகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நானும் அந்த பணிகளை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். துணை முதலமைச்சரும் ஆய்வு செய்து வருகிறார்.

    * ரூ.1,000 கோடியில் செயல்படுத்தப்படும் திட்டங்களால் வடசென்னை வளர்ந்த சென்னையாக மாற்றப்படும்.

    * தந்தை பெரியாரை அவமதிக்கும் யாருக்கும் தான் மரியாதை கொடுக்க தயாராக இல்லை. ஏனென்றால் பெரியார் தான் எங்களுடைய தலைவர். எங்களுடைய தலைவர்களுக்கு எல்லாம் தலைவர் அவர் தான்.

    * தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. அதனால் தான் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தொழிற்சாலைகள் எல்லாம் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கு என்றார். 

    • இந்திய, இலங்கை நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்பார்கள்.
    • வருகிற மார்ச் மாதம் 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

    ராமநாதபுரம்:

    இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் அமைந்துள்ளது கச்சத்தீவு. ராமேசுவரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கையில் நெடுந்தீவு கடல் பகுதியில் இருந்து 18 கடல் மைல் தொலைவிலும் அமைந்துள்ள கச்சத்தீவில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் தேவாலயம் அமைந்துள்ளது.

    ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் திருவிழாவில் இந்திய, இலங்கை நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா வருகிற மார்ச் மாதம் 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

    இதற்கான முறையான அழைப்பிதழ் யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயரிடமிருந்து ராமேசுவரம் வேர்க்கோடு பங்குத்தந்தைக்கு வந்துள்ளது. இந்தநிலையில் கச்சத்தீவு புனித திருப்பயண ஒருங்கிணைப்பு குழு சார்பில் ராமநாதபுரத்தில் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து கச்சத்தீவு திருவிழா தொடர்பாக இலங்கையிடமிருந்து வந்துள்ள கடிதத்தை கொடுத்து அதற்கான ஏற்பாடுகளை செய்து தரும்படி கேட்டுக் கொள்வதற்காக வந்திருந்தனர்.

    இதில் ராமேசுவரம் வேர்க்கோடு புனித ஜோசப் தேவாலய பங்குத்தந்தை அசோக்வினோ மற்றும் ராமேசுவரம் மீனவர் சங்க தலைவர்கள் சேசுராஜா, சகாயம் உள்ளிட்ட குழுவினர் கலெக்டரை சந்தித்தனர். பின்னர் கச்சத்தீவு திருவிழா ஒருங்கிணைப்பாளரான வேர்க்கோடு ஆலய பங்குத்தந்தை அசோக்வினோ கூறியதாவது:-

    வருகிற மார்ச் 14, 15-ந்தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா நடை பெற இருக்கிறது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தில் இருந்து 75 விசைப்படகுகள் மற்றும் 16 நாட்டு படகுகளில் சுமார் 3 ஆயிரம் பக்தர்கள் செல்ல உள்ளனர்.

    கச்சத்தீவு செல்லும் பக்தர்களுக்கு படகு கட்டணமாக ரூ.2 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர கூடுதல் கட்டணமாக யாரும், பணம் தரக்கூடாது.

    ராமநாதபுரம் மாவட்டத்தை தவிர பிற மாவட்டங்களில் இருந்து திருவிழாவில் பங்கேற்க வருபவர்கள் அந்தந்த மாவட்ட போலீஸ் நிலையங்களில் இருந்து தடையின்மை சான்று பெற்று வர வேண்டும்.

    உரிய ஆவணங்களையும் கொண்டு வர வேண்டும். வருகிற பிப்ரவரி 6-ந்தேதி முதல் இதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படுகிறது. பிப்ரவரி 25-ந்தேதிக்குள் அந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து எங்களிடம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மீனவ சங்கத் தலைவர் ஜேசுராஜா கூறுகையில், பயணிகள் யாரும் சட்டவிரோ தமான பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது. இது ஒரு திருப்பயணம் என்பதால் கடவுளை தரிசிப்பதற்காக மட்டுமே செல்கிறோம். விழாவில் கலந்துகொள்ளும் அனைவரும் திருப்பயணியாகவே வரவேண்டும் என்றார்.

    • தூய அரசியல் அமைய 14 ஆண்டுகளாக போராடி வருகின்றோம்.
    • இளைஞர்கள் எல்லோரும் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு அக்ரஹாரம் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதா லட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீண்ட நாட்களாக இந்த நிலத்தில் நிலவி வரக்கூடிய தீய அரசியலை மாற்றி தூய அரசியல் அமைய செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் தமிழர் கட்சி 14 ஆண்டுகளாக போராடி வருகின்றோம்.

    குன்றக்குடி அடிகாளர் மக்களின் அடிப்படை தேவைகளை அரசு நிறைவேற்றி கொடுக்க வேண்டும், இல்லையென்றால் அந்த நாடு குற்றம் சமூகமாக மாறும், அப்படி குற்ற சமூகமாக இல்லாத வகையில் இருக்க மாற்ற துடிக்கக் கூடியவர்கள் நாம் தமிழர் பிள்ளைகள்.

    இந்த ஆட்சியாளர்கள் எப்படியாவது மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். வெற்றி பெற்ற பிறகு தொகுதி பக்கம் வராமல் இருப்பது, மக்களை பற்றி கவலை படாமல் இருப்பது, தேர்தல் வரும் போது ஓட்டுக்கு காசு கொடுத்து வாக்கு பெறுவது, ஓட்டை விற்றுக் கொண்டு இருக்கிறோம். அவர்கள் ஓட்டை வாங்கி கொண்டு நாட்டை விற்கிறார்கள்.

    அடுத்த தேர்தல் வரும் போது சிந்திப்பார்கள். ஆனால் மக்களை பற்றி சிந்தித்து கொண்டே இருப்பது கட்சி அரசியல். தேர்தல் அரசியலில் பெண்கள் ஓட்டை வாங்குவது என தி.மு.க. நினைத்தது, பெண்கள் ஓட்டை தி.மு.க. வுக்கு போடுவது இல்லை என்றும் அதனை எப்படி வாங்குவது என்று சிந்தித்து குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பது என்று நினைத்தது தான் தேர்தல் அரசியல்.

    அதே போன்று மாணவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுகிறார்கள். இளைஞர்கள் எல்லோரும் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஏன் என்றால் எங்கு பார்த்தாலும் ஊழல், சுற்றுச்சூழல் பாதிப்பு, இதையெல்லாம் பார்த்து இளைஞர்கள் சீமான் பின்னால் செல்கிறார்கள்.

    சீமான் பின்னால் இருப்பவர்கள் எந்த அரசியல் பின்னணி கொண்டவர்கள் இல்லை. 60 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தாய்மார்கள் ஆயிரம் ரூபாய்க்கு கையேந்தி நிற்கிறார்கள். ஆயிரம் ரூபாய்க்கு பெண்கள் கையேந்தினால் அது புரட்சி பெண்ணா வறட்சி பெண்ணா.

    திராவிடம் என்று எந்த வழியில் பொருள் கொண்டாலும் திருடன் என்று தான் பொருள் வருகிறது. திராவிடம் தீராத கொடிய விஷம். நூறு ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை பணம் கொடுப்பது தான் தேர்தல் அரசியல்.

    45 ஆயிரம் கோடி சாராய விற்பனை தேர்தல் அரசியல், தாலிக்கு தங்கம் தேர்தல் அரசியல், இந்த தேர்தல் அரசியலை தீ வைத்து கொளுத்தி விட்டு கட்சி அரசியல் நோக்கி மக்கள் செல்வது தான் இந்த மண்ணுக்கு தேவையான தூய்மையான அரசியல்.

    அண்ணா பல்கலைக்கழகம் மாணவி எப்படியெல்லாம் பாலியல் கொடுமை குறித்து அளித்த வாக்கு மூலம் மாணவி எப்.ஐ.ஆர் குறித்து வெளியிட்டது தான் திருட்டு திராவிடம். இத்தனை எப்.ஐ.ஆர் இருக்கும் நிலையில் மாணவி நகல் மட்டும் இணையதளத்தில் இருந்து கசிந்து வெளியானது எப்படி?

    அந்த சார், எந்த சார் என்று ஏதாவது விசாரித்து இந்த அரசு வெளியிட்டுள்ள தா? போராட வந்த பா.ம.க சுற்றுச்சூழல் அமைப்பாளர் சவுமியா, பா.ஜ.க குஷ்பு ஆகிய பெண்கள் கைது செய்யப்பட்டது ஏன்? அப்போது ஞானசேகரன் குற்றவாளியா? அரசு குற்ற வாளியா? என் வீட்டை 15 நாட்களுக்கு முற்றுகை செய்ய அனுமதி அளித்தது ஏன்? பெரியாரை வேண்டு மென்று விமர்சனம் செய்ய வில்லை. பெரியார் வேண்டாம் என்று தான் விமர்சனம் செய்கின்றேன்.

    பெரியார் பெரியார் என்று பேசுகிறார்கள். ஆனால் பெரியார் பேசியதை பேச மறுக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ் தென் மாநில கிளையை பெரியார் தலை மையில் உருவாக்கியது. சிறையில் இருந்த முத்துராமலிங்கத் தேவர், நல்லகண்ணு போன்ற தலைவர்கள் போல பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ், பெரியார் ஆகியோர் சிறையில் இல்லை.

    என்னை ஒன்று தான் செய்ய முடியும். வழக்கை போடலாம். சிறையில் போடலாம் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது. கூட்டத்தில் தொடர்ந்து சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை பார்த்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் பாதிக்க ப்பட்டவன் போறானா? பணம் போகிறதா என்று தெரியவில்லை.

    இப்போது தமிழகத்தில் பணம் இப்படி தான் போகி றது. இன்னும் ஒன்றை ஆண்டுகளில் 2026-ம்ஆண்டு புதிய அரசியல் படைப்போம். இனி என்னி டம் இருந்து தப்பிக்க முடியாது. சட்ட நகல் எரித்த பெரியார் நவம்பர் 26-ம் தேதி தி.மு.க சட்ட நகல் எரிப்பு நாள் என்று கொண்டாடி பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடு வதை திசை மாற்றுகிறார்கள்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் என வரும் போது தி.மு.க. குதிப்பது என்ன? இந்த நடைமுறையை ஆதரித்து பேசியது தி.மு.க.வின் தலை வராக இருந்த 1971ம் ஆண்டு கருணாநிதி தான் ஓரே நாடு ஓரே தேர்தல் வரவேற்று பேசினார். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் ஒரே நாடு, ஓரே மதம், கட்சி ஆகிய கோட்டுப்பாடுகளை வரவேற்று பேசியவர் பெரியார்.

    ஓரே நாடு, ஓரே கட்சி, ஓரே மதம், வேண்டும் என்று பெரியார் எழுதியது இருக்கிறது. பா.ஜ.க. பி டீம் நாம் தமிழர் கட்சி என்றால், அப்போது ஏ டீம் யாரு, அது தி.மு.க. தான். அதனால் அதை ஒழிக்க வேண்டும்.

    5 நேரம் தொழும் இஸ்லாமிய மக்கள் தொழும் போது ஒருமுறை ஒரு நொடியில் எங்களுக்காக வெற்றி பெற துவா செய்யுங்கள் என்று கேட்டு கொள்கின்றேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மற்றொரு தனியார் நிறுவனமான ஜெர்சி வருகிற 3-ந்தேதி முதல் பால் விலையை உயர்த்துகிறது.
    • 450 கிராம் தயிர் பாக்கெட் 33 ரூபாயில் இருந்து 37 ரூபாயாகவும் உயருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் சென்னையை தவிர்த்த பிற வெளி மாவட்டங்களில் பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பல முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் இந்த மாதம் முதல் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்தி விட்டன.

    இந்த நிலையில் சென்னை முதல் தென் மாவட்டங்கள் வரை பால் விற்பனையில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனமான ஆந்திராவை சேர்ந்த திருமலா நிறுவனம் நாளை (1-ந்தேதி) பால் விலையை உயர்த்துகிறது. மற்றொரு தனியார் நிறுவனமான ஜெர்சி வருகிற 3-ந்தேதி முதல் பால் விலையை உயர்த்துகிறது.

    இந்த நிறுவனங்கள் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு 5 ரூபாய் வரையிலும் உயர்த்த முடிவு செய்துள்ளன. அதன்படி நிறைகொழுப்பு பால் 1 லிட்டர் பாக்கெட் 70 ரூபாயில் இருந்து 72 ரூபாயாகவும், 500 மி.லி. பாக்கெட் 36 ரூபாயில் இருந்து 37 ரூபாயாகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் 1 லிட்டர் பாக்கெட் 62 ரூபாயில் இருந்து 64 ரூபாயாகவும், 500 மி.லி. பாக்கெட் 32 ரூபாயில் இருந்து 33 ரூபாயாகவும், சமன்படுத்தப்பட்ட பால் 1 லிட்டர் பாக்கெட் 61 ரூபாயில் இருந்து 62 ரூபாயாகவும், 500 மி.லி. பால் பாக்கெட் 27 ரூபாயில் இருந்து 28 ரூபாயாகவும் உயருகிறது.

    தனியார் நிறுவன தயிர் 1 கிலோ பாக்கெட் 67 ரூபாயில் இருந்து 72 ரூபாயாகவும், 450 கிராம் தயிர் பாக்கெட் 33 ரூபாயில் இருந்து 37 ரூபாயாகவும் உயருகிறது.

    • இளைஞர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்துக்கு அழைப்பு
    • இயக்கம் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

    சென்னை:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெள்ளை 'டீசர்ட் இயக்கம்' என்ற புதுமையான இயக்கத்தை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அறிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் ஏழைகள் மற்றும் உழைக்கும் மக்களிடம் பாராமுகமாக இருந்து அவர்களை மத்திய அரசு கைவிட்டுள்ளது. ஒரு சில தொழிலதிபர்களை வளமாக்குவதில் மட்டுமே மத்திய அரசின் மொத்த கவனமும் உள்ளது. இதனால் நாட்டில் ஏற்றத் தாழ்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இதைத் கருத்தில் கொண்டு காங்கிரஸ் சார்பில் வெள்ளை டீசர்ட் இயக்கம் தொடங்கப்படுகிறது. இந்த இயக்கத்தில் பங்கேற்குமாறு இளைஞர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்துக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

    இந்த இயக்கம் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இது தொடர்பாக தமிழகத்தில் காங்கிரஸ் திட்டம் பற்றி கேட்டபோது விரைவில் அதற்காக ஒரு தேதியை அறிவிப்போம். அந்த தேதியில் காங்கிரசை சேர்ந்தவர்கள் வெள்ளை டி சர்ட் வாங்கி அணிய வேண்டும்.

    இதில் கட்சி சின்னம், அடையாளங்கள் எதுவும் இருக்காது. ஒவ்வொருவரும் தாங்கள் விருப்பத்துக்கு ஏற்ப வெள்ளை டீசர்ட் வாங்கி அன்றைய தினம் அணிய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×