என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • 120 மாவட்ட செயலாளர்களில் பெரும்பாலானவர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர்.
    • முதல் கட்டம், 2ம் கட்டம், 3ம் கட்டம் என மொத்தம் 57 மாவட்டங்களுக்கான புதிய நிர்வாகிகளின் பட்டியல்.

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பனையூர் அலுவலகத்தில் நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தினார்.

    இதைதொடர்ந்து, விஜய் கடந்த 28ம் முதல் 4 நாட்களுக்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    மேலும், தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளிடம் விஜய் நேர்காணல் நடத்தி வருகிறார்.

    அதன்படி, 234 சட்டசபை தொகுதிகளுக்கும் பணிகளை தீவிரப்படுத்த 120 மாவட்ட செயலாளர்களில் பெரும்பாலானவர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர்.

    அதில், முதல் கட்டம், 2ம் கட்டம், 3ம் கட்டமாக புதிதாக மாவட்ட செயலாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இன்று தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் மத்தியில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது:-

    2026 ஆம் ஆண்டு இலக்கை அடைய என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வேன்.

    மக்கள் பணிகளை இனி தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்;

    கட்சி நிர்வாகிகள் களத்திற்கு செல்ல தயங்கக் கூடாது. உங்கள் உழைப்பில்தான் கட்சியின் வளர்ச்சி உள்ளது.

    நானும் உழைக்கிறேன்; நீங்களும் உழையுங்கள்; வெற்றி அடைவோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 234 சட்டசபை தொகுதிகளுக்கும் பணிகளை தீவிரப்படுத்த 120 மாவட்ட செயலாளர்களில் பெரும்பாலானவர்கள் தேர்வு.
    • 2ம் கட்டமாக மேலும் 19 மாவட்ட செயலாளர்கள் உள்பட புதிய நிர்வாகிகள் தேர்வு.

    நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகளை தொடங்கி உள்ளார். கட்சி தொடங்கி ஓர் ஆண்டு நிறைவு பெற உள்ள நிலையில் 2026-ம் ஆண்டு சட்ட சபை தேர்தலை சந்திப்பதற்கு தயாராகவும் தொடங்கி இருக்கிறார்.

    சமீபத்தில் சென்னை அருகே பரந்தூர் விமான நிலைய பிரச்சனை தொடர்பாக விவசாயிகளை சந்தித்து பேசிய அவர் தனது அரசியல் பயணம் புத்துணர்ச்சியுடன் தொடங்கி விட்டதாக அறிவித்தார்.

    தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற வகையில் பொறுப்பாளர்களை நியமனம் செய்ய நடிகர் விஜய் முடிவு செய்தார். இதற்காக கடந்த சில மாதங்களாக அவர் 234 தொகுதிகளுக்கும் நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணியை செய்து வந்தார்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி பணிகளை செய்வதற்கு என்று மாவட்ட செயலாளர் தலைமையில் வலுவான அணியையும் அவர் உருவாக்கி வருகிறார். ஒவ்வொரு மாவட்ட செயலாளர் தலைமையில் இணைச் செயலாளர், பொருளாளர், 2 துணை செயலாளர்கள் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் மாவட்ட கட்சிப் பணிகளை மேற்கொள்வார்கள்.

    இந்த அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வாகி வருகிறார்கள். 120 மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஒன்றியம், நகரம் மற்றும் கிராம அளவில் கிளை அமைப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு முடித்ததும் விஜய் கட்சியில் மாநிலம் முழுவதும் சுமார் 3.5 லட்சம் நிர்வாகிகள் களப்பணியாற்றுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.

    அதன்படி, 234 சட்டசபை தொகுதிகளுக்கும் பணிகளை தீவிரப்படுத்த 120 மாவட்ட செயலாளர்களில் பெரும்பாலானவர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். அதில் முதல் கட்டமாக நடிகர் விஜய் கடந்த 24ம் தேதி அன்று தமிழக வெற்றிக்கழகத்துக்கு புதிதாக 19 மாவட்ட செயலாளர்களை அறிவித்தார்.

    இதைதொடர்ந்து, 2ம் கட்டமாக மேலும் 19 மாவட்ட செயலாளர்கள் உள்பட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய மாவட்ட செயலாளர்களின் 3ம் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி கிழக்கு, சேலம், கோவை, வடசென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய மாவட்ட செயலாளர்கள் விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

    மேலும், தவெகவின் புதிய மாவட்ட செயலாளர்களுக்கு கட்சி தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழக வெற்றிக் கழகத்தில் மூன்றாம் கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.
    • சிறப்பு திட்ட அமலாக்கத்துறை செயலாளர் தாரேஸ் அகமது மாற்றப்பட்டுள்ளார்.

    தமிழ்நாடு முழுவதும் 31 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    தருமபுரி ஆட்சியராக சதீஷ், கிருஷ்ணகிரி ஆட்சியராக தினேஷ்குமார், விழுப்புரம் ஆட்சியராக ஷேக் அப்துல் ரகுமான், திண்டுக்கல் ஆட்சியராக சரவணன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பிரதாப், திருவண்ணாமலை ஆட்சியராக தர்பகராஜ், திருப்பத்தூர் ஆட்சியராக மோகனசந்திரன், திருவாரூர் ஆட்சியராக சிவசவுந்தரவல்லி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த சரயு பொதுத்துறை இணைச்செயலாளர் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார். திருவள்ளூர் ஆட்சியரான பிரபு சங்கரை சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த பழனி, இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

    தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையராக இன்னசென்ட் திவ்யா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் துணை முதலமைச்சரின் செயலாளர், துணை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் இயக்குநர்கள், செயலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு திட்ட அமலாக்கத்துறை செயலாளர் தாரேஸ் அகமது மாற்றப்பட்டுள்ளார்.

    • அண்ணா பல்கலைக்கழத்தின் பாலியல் வன்கொடுமை நிகழ்வு தமிழ்நாட்டிற்கே தலைக்குணிவு.
    • மறைந்த தலைவர் பெரியார் 100 சதவீதம் எவ்வளவோ நல்ல விஷயங்களை சொல்லி இருக்கிறார்.

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    சீமானை கேட்கிறேன் நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு. விலைவாசிகள் உயர்ந்து இருக்கு அதைப்பற்றி பேசுங்க. சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கு, மின்சார கட்டணம் மூன்று முறை உயர்த்தி இருக்கிறார்கள், சொத்து வரி ஏற்றி இருக்கிறார்கள், வீட்டு வரி ஏற்றி இருக்கிறார்கள், பால் வரி ஏற்றி இருக்கிறார்கள், தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை தலைதூக்கி இருக்கு அதைப் பற்றி பேசுங்க.

    அண்ணா பல்கலைக்கழத்தின் பாலியல் வன்கொடுமை நிகழ்வு தமிழ்நாட்டிற்கே தலைக்குணிவு.

    நாட்டில் தேனும், பாலும் ஆறாக ஓடுகிறதாம். அதனால், வேறு எதுவும் பேச இல்லை என்று சீமான் பெரியார் பற்றியே பேசுகிறார் என்றால், எதையோ திசை திருப்பவே அவர் முயற்சிக்கிறார் என்றே அரசியல் ஆர்வலர்கள், அரசியல் நோக்கர்கள் எல்லோரும் கருதுகின்றனர்.

    இனிமேலாவது சீமான் பெரியார் பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு, பசியும் பட்டினியுமாக இருக்கும் மக்கள், விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள் பற்றி பேசி இந்த ஆட்சிக்கு பெரிய அளவில் கவனத்தை கொண்டு போக செய்வது நல்ல விஷயம்.

    மறைந்த தலைவர் பெரியார் 100 சதவீதம் எவ்வளவோ நல்ல விஷயங்களை சொல்லி இருக்கிறார். அவர் சொல்லாததை எல்லாம் சொல்லி இப்போது மக்களை திசைத்திருப்ப வேண்டிய அவசியம் சீமானுக்கு ஏன் வந்தது. அதுதான் இன்றைக்கு மக்களின் கேள்வியாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கைலாசா தீவில் நிதியானந்தா இருப்பதாக தகவல். இது எங்கிருக்கிறது என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.
    • ஈக்வடாரில் உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    போலீசாரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் கடந்த 2019-ம் ஆண்டு தலைமறைவானார். பின்னர் "கைலாசா" தீவுக்கு சென்று விட்டதாக கூறப்பட்டது.

    தான் கைலாசா தீவில் இருப்பதாகவும், கைலாசாவை இந்துக்களுக்கான தனி நாடாக உருவாக்கியுள்ளதாகவும் கூறியிருந்தார். தங்களுக்கென தனி அரசு, தனிக்கொடி, பாஸ்போர்ட், நாணயம் உள்ளதாகவும் அறிவித்தார்.

    தலைமறையாக இருந்த போதிலும் சமூக வலைத்தளங்கள் மூலம் சொற்பொழிவு வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். எனினும், கைலாசா நாடு எங்கு இருக்கிறது, நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பது தற்போது வரையில் புரியாத புதிராகவே இருந்து வந்தது.

    இந்த நிலையில், நித்தியானந்தா தொடர்பாக வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், அரசு சார்பில் நித்தியானந்தா ஈக்வடாரில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

    மடங்களை நிர்வகிக்க தக்காரை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி நித்யானந்தா சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணையின்போது, "நித்யானந்தா இந்தியாவிலேயே இல்லை. தென் அமெரிக்கா கண்டத்தின் ஈக்வடாரில் இருக்கிறார்" என்று அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வாதத்தை கேட்ட நீதிமன்றம் இந்தியாவிலேயே இல்லாத நித்தியானந்தா வழக்கு தாக்கல் செய்துள்ளதாக கூறி நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது.போலீசாரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் கடந்த 2019-ம் ஆண்டு தலைமறைவானார். பின்னர் "கைலாசா" தீவுக்கு சென்று விட்டதாக கூறப்பட்டது.

    தான் கைலாசா தீவில் இருப்பதாகவும், கைலாசாவை இந்துக்களுக்கான தனி நாடாக உருவாக்கியுள்ளதாகவும் கூறியிருந்தார். தங்களுக்கென தனி அரசு, தனிக்கொடி, பாஸ்போர்ட், நாணயம் உள்ளதாகவும் அறிவித்தார்.

    தலைமறையாக இருந்த போதிலும் சமூக வலைத்தளங்கள் மூலம் சொற்பொழிவு வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். எனினும், கைலாசா நாடு எங்கு இருக்கிறது, நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பது தற்போது வரையில் புரியாத புதிராகவே இருந்து வந்தது.

    இந்த நிலையில், நித்தியானந்தா தொடர்பாக வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், அரசு சார்பில் நித்தியானந்தா ஈக்வடாரில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

    மடங்களை நிர்வகிக்க தக்காரை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி நித்யானந்தா சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணையின்போது, "நித்யானந்தா இந்தியாவிலேயே இல்லை. தென் அமெரிக்கா கண்டத்தின் ஈக்வடாரில் இருக்கிறார்" என்று அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வாதத்தை கேட்ட நீதிமன்றம் இந்தியாவிலேயே இல்லாத நித்தியானந்தா வழக்கு தாக்கல் செய்துள்ளதாக கூறி நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது.

    • மக்களின் சமய நம்பிக்கைகளுக்கு உரிய மதிப்பளித்து திருப்பணிகளை சிரத்தையுடன் மேற்கொண்டு வருகிறது.
    • 2,392 திருக்கோவில்களில் திருப்பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு திருக்குடமுழுக்குகள் செய்யப்பட்டுள்ளன.

    திராவிட மாடல் ஆட்சியில் தற்போது வரை 7,132 கோடி மதிப்புள்ள 7,400 ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் போறிஞர் அண்ணா காட்டிய வழியில் பயணிக்கும் திராவிட மாடல் அரசு தமிழ் நாட்டில் மதச்சார்பின்மைணய கடைபிடித்து சமய நல்லிணக்கத்தை ஆதரிக்கும் அரசாக விளங்குகிறது.

    மேலும் மக்களின் சமய நம்பிக்கைகளுக்கு உரிய மதிப்பளித்து திருப்பணிகளை சிரத்தையுடன் மேற்கொண்டு வருகிறது.

    திராவிட மாடல் அரசு மக்களின் சமய உணர்வுகளை மதித்து இறை வழிபாட்டுத்தலங்களை மேலும் வளப்படுத்திவதில் பெரும் அக்கறையோடு செயல்படும் அரசு என்பதற்கு இந்து சமய அற நிலையத் துறையின் சிறப்பான செயல்பாடுகள் சான்றாகியுள்ளன.

    தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற நாள் முதல் தற்போதுவரை 2,392 திருக்கோவில்களில் திருப்பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு திருக்குடமுழுக்குகள் செய்யப்பட்டுள்ளன.

    மேலும், 7132 கோடி ரூபாய் மதிப்புள்ள 7.௪௦௦ ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி, 12202 திருக்கோவில்களில் 5,515 கோடி ரூபாய் செலவில் 23234 திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    திருத்தலங்களின் ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக. 1.770 கோடி ரூபாய் செலவில் 19 கோவில் வளாகங்களில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

    வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மாண்புமிகு முதலமைச்சரின் வழிக்காட்டுதல்களால் திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களின் உள்ளம் அறிந்து செயல்படும் முதலமைச்சரின் நடவடிக்கைகளால் மக்கள் மகிழ்ச்சியோடு திருக்கோவில்களில் வழிபட்டு வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது கடுமையான, மோசமான வார்த்தைகளை சீமான் பேசுகிறார்.
    • அமைதியாக தேர்தல் நடத்த முயலும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக சீமானின் செயல்கள் உள்ளன.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதில் ஆளும் கட்சியான திமுக சார்பில் சந்திரகுமார் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் சீதா லட்சுமி போட்டியிடுகிறார். மற்ற முன்னணி கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன.

    பெரியார் குறித்து சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலுக்கான பிரசாரத்திலும் பெரியார் குறித்து பேசி வருகிறார். மேலும், கட்சித் தலைவர்கள் கருத்துகளுக்கு கடுமையான வகையில் பதில் அளித்து வருகிறார்.

    இந்த நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சியை தடை செய்யக்கோரிய தேர்தல் ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த புகழேந்தி மனு கொடுத்துள்ளார்.

    அந்த மனுவில் புகழேந்தி கூறியிருப்பதாவது:-

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது கடுமையான, மோசமான வார்த்தைகளை சீமான் பேசுகிறார். திராவிட இயக்கத்தின் ஒப்பற்ற தலைவர்களை கொச்சைப்படுத்தி ஏராளமாக பேசுகிறார்.

    பிரச்சாரத்தின்போது சாதி, மதம், இனம் தொடர்பாக சர்ச்சை கருத்துகளை பேசி கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அமைதியாக தேர்தல் நடத்த முயலும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக சீமானின் செயல்கள் உள்ளன.

    கட்சியின் அங்கீகாரத்தை திரும்பப்பெற்று நாம் தமிழர் கட்சியை தடை செய்து சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் புகழேந்தி குறிப்பிட்டுள்ளார்.

    • ஆதவ் அர்ஜுனா இன்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
    • அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளராக இருந்த நிர்மல்குமார் த.வெ.க.வில் இணைந்தார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில், இன்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

    இதேபோல், அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளராக இருந்த நிர்மல்குமார் த.வெ.க.வில் இணைந்தார்.

    சென்னை பனையூர் அலுவலகத்தில் த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலையில் இணைப்பு நிகழ்வு நடைபெற்றது. அப்போது, விஜய் முன்னிலையில் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் இருவரும் த.வெ.க.வில் இணைந்தனர்.

    இந்நிலையில், தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு அக்கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தொடர்ந்து, அதிமுகவில் இருந்து வந்த சி.டி.ஆர்.நிர்மல்குமார், தவெகவின் துணை பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பேச்சாளர் ராஜ்மோகன், த.வெ.கவின் கொள்கை பரப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    • ஓராண்டுக்கும் மேலாக பேச்சு நடத்தப்படாத நிலையில் வரும் 4-ந் தேதி அடுத்தக்கட்ட பேச்சு நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
    • ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் இறங்கி போராடுவதையே தங்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பாக அரசு கருத வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பழைய ஓய்வூதியத் திட்டம், சம வேலைக்கு சம ஊதியம், அரசாணை 243 ரத்து உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் நிலையில் அவற்றை நிறைவேற்ற தமிழக அரசு இன்று வரை முன்வர மறுக்கிறது. அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் ஆசிரியர்களை சாலையில் இறங்கி போராட அரசு தூண்டுவது கண்டிக்கத்தக்கது.

    ஓராண்டுக்கும் மேலாக பேச்சு நடத்தப்படாத நிலையில் வரும் 4-ந் தேதி அடுத்தக்கட்ட பேச்சு நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்தப் பேச்சுகள் அனைத்தும் காலம் கடத்துவதற்காகத் தான் நடத்தப்படுகிறதே தவிர, ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் தமிழ்நாடு அரசுக்கு சிறிதும் இல்லை. ஆசிரியர்களுக்கு இடையே ஊதிய முரண்பாடு இருப்பது தெளிவாகத் தெரியும்போது நான்கு கட்ட பேச்சுகள் நடத்த எந்தத் தேவையுமில்லை.

    பழைய ஓய்வூதியம், ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு பெரும் தடையாக இருக்கும் அரசாணை 243-ஐ நீக்குதல், உயர்கல்வி கற்பதற்கான ஊக்கத்தொகையை மீண்டும் வழங்குதல், ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் உரிமை, அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், தகுதித் தேர்வை தேவையற்றதாக அறிவித்து, அதன் காரணமாக வழங்கப்படாமல் இருக்கும் தற்போதைய ஆசிரியர்களின் பதவி உயர்வை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளும் எந்த பேச்சுகளும் இல்லாமல் நிறைவேற்றப்பட வேண்டியவை தான். தமிழக அரசு நினைத்தால் தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் 15 கோரிக்கைகளையும் 15 நிமிடங்களில் நிறைவேற்றி விட முடியும். ஆனால், அதற்கான மனம் தான் தமிழக அரசுக்கு இல்லை.

    வழிபடத் தகுந்தவர்கள் பட்டியலில் அன்னை, தந்தை ஆகியோருக்கு அடுத்த நிலையில் உள்ள ஆசிரியர்கள் அவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் இறங்கி போராடுவதையே தங்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பாக அரசு கருத வேண்டும். எனவே, தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டாமல், தொடக்கக் கல்வி ஆசிரியர்களை மீண்டும் ஒரு போராட்டத்தை நடத்தும் சூழலுக்கு தள்ளாமல், அவர்களின் 15 அம்சக் கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழுக்கும், தமிழ் தேசியத்திற்கும் துரோகம் செய்ய முடியாது என்பதால் நாதகவில் இருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
    • வலதுசாரிகளின் வழிகாட்டுதல் பேரில் சீமான் அரசியல் பேசுவதாக ஜெகதீச பாண்டியன் விமர்சனம் செய்துள்ளார்.

    நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ஜெகதீச பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சீமானுக்கு எழுதிய கடிதத்தில் "நமக்கு நேர் எதிர் சித்தாந்தங்களை கொண்ட பாண்டே ஹெச். ராஜா, ஆடிட்டர் குருமூர்த்தி, அண்ணாமலை, தமிழசை உங்களை தீம் பார்ட்னர் என்று கூறி வலிய வந்து உங்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது கலக்கத்தை ஏற்படுத்துகிறது.

    இந்தக் கருத்துக்கெல்லாம் சீமான் மறுப்பு தெரிவிப்பார் என்று எதிர்பார்த்திருந்தேன். மறுப்பு வராததால் பெரியாரைப் பற்றி சொன்ன கருத்துக்கள் சீமானின் கருத்துதானே ஒழிய என்னைப் போன்றவர்களின் கருத்து அல்ல என்று ஜனநாயகப் பூர்வமாக எனது கருத்தை தெரிவித்திருந்தேன்.

    தமிழ்நாட்டில் உள்ள முதலாளிதத்துவ கட்சிகளில்கூட கட்சிக்குள் சிறிது ஜனநாயகம் இருக்கிறது. 'ஆகச் சிறந்த ஜனநாயகத்தை கட்டி எழுப்புவோம்' என்ற முழக்கத்தோடு ஆரம்பித்த நமது கட்சிக்குள் எந்த ஜனநாயகமும் இல்லை.

    என் கருத்தியலுக்கு எதிராக பேசுவதாக நினைத்துக்கொண்டு தமிழுக்காக வாழ்நாள் முழுக்க அரசியல் செய்ய வேண்டும் என்று உங்களோடு வந்த என்னை அவதூறு பரப்புகின்றனர்.

    வலதுசாரி ஆதரவு கருத்துக்கு சீமான் மறுப்பு தெரிவிப்பார் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் கோவை விமான நிலையத்தில் பிரசாந்த் கிஷோரை விட தம்பி பாண்டே அறிவு மிக்கவன் என்றும், கொஞ்ச நாளைக்கு முன்பு பைத்தியம் என்று சொன்னவரை தமிழ் பேரறிஞர் ஹரிகர ராஜ சர்மா என்றும் நீங்கள் முழு சங்கிகள் பேசுவதுபோல பேசுவது பெருத்த அச்சத்தை ஏற்படுத்துகிறது.

    அண்ணன் இப்படியெல்லாம் பேசுகிறாரே என்று வேதனையோடு இருந்தபோது அடிக்கடி நீங்கள் குருமூர்த்தியை சந்தித்து அவர்களது வழிகாட்டுதலின் பேரில் தமிழர்களின் நாடி நரம்புகளில் உரமேறி இருக்கும் நமது தேசிய தலைவரையும் தமிழீழ விடுதலைக்கு பெரும்பங்காற்றிய திராவிட இயக்கத் தோழர்களின் குறியீடாக இருக்கக்கூடிய பெரியாரையும் எதிர் எதிராக நிறுத்துவது தமிழ்நாட்டில் தமிழர் அரசியல் வளர்ச்சி பெறாமல் இருக்க சங்பரிவார் கும்பலின் சதித்திட்டம் என்பது தெரிகிறது.

    தமிழரின் அறிவாகவும் ஆற்றலாகவும் உணர்வாகவும் இருக்க்கூடிய தலைவர் பிரபாகரனின் குடும்பத்திலுள்ள கார்த்திக் மனோகரனை சிங்களவனே பயன்படுத்த தயங்கக்கூடிய வார்த்தையை பயன்படுத்தி வசைப்பாடினீர்கள் மாவீரர் குடும்பத்திற்கே மரியாதை கொடுக்காத நீங்கள் எப்படி மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பீர்கள்?

    வரலாறு தந்த மாபெரும் வாய்ப்பை தவற விட்டுவிட்டீர்கள்.ஒருகாலும் இந்த மண்ணில் அரசியல் மாற்றத்தை வலதுசாரி சிந்தனையோடு உங்களால் கொண்டுவர முடியவே முடியாது.இனிமேல் என்னால் வலதுசாரிகளின் வழிகாட்டுதலில் நீங்கள் பேசும் அரசியலின் பெயரால் தமிழுக்கும் தமிழ் தேசியத்திற்கும் துரோகம் செய்ய முடியாது.

    சங்கியாகவும் செயல்பட முடியாது என்ற காரணத்தால் நான் உயிருக்கு உயிராக நேசித்து தொடங்கிய வளர்த்த கட்சியில் இருந்து கனத்த இதயத்தோடு விலகுகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • குறளின் கருத்துகளை எடுத்துச்சொல்லும் தூதுவராக, திருக்குறளைப் பஞ்சாபி மொழியில் மொழிபெயர்த்தார்.
    • மிகச் சிறந்த அறிஞராக விளங்கிய அவரது மறைவு, தமிழ்நாட்டுக்கும் பஞ்சாப் மாநிலத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி அவர்களின் தந்தையார் தர்லோச்சன் சிங் பேடி மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.

    பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஃபரித்கோட் அரசு கல்வியியல் கல்லூரி முதல்வராகப் பணியாற்றிய அவர், திருக்குறள் மீது மிகுந்த பற்று கொண்டவராக விளங்கினார். "மனிதர்கள் மீதான அன்பை மையப்படுத்தியதாகவே திருக்குறள் திகழ்கிறது; அதனையேதான் குருநானக் அவர்களும் பரப்புரை செய்தார்" என்று கூறிய அவர், குறளின் கருத்துகளை எடுத்துச்சொல்லும் தூதுவராக, திருக்குறளைப் பஞ்சாபி மொழியில் மொழிபெயர்த்தார். அவரது இந்தப் பணி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    மிகச் சிறந்த அறிஞராக விளங்கிய அவரது மறைவு, தமிழ்நாட்டுக்கும் பஞ்சாப் மாநிலத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். தந்தையை இழந்து வாடும் ககன்தீப் சிங் பேடி அவர்களுக்கும், அவரது பிரிவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும், முதலமைச்சர், ககன்தீப் சிங் பேடி அவர்களைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார்.

    • பனையூர் அலுவலகத்தில் த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலையில் இணைப்பு நிகழ்வு நடைபெற்றது.
    • ஆதவ் அர்ஜுனாவுக்கு த.வெ.க.வில் முக்கிய பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆதவ் அர்ஜுனாவுடன் இணைந்து 2026 சட்டமன்ற தேர்தல் களத்தில் பணியாற்ற இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா த.வெ.க.-வில் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

    அதேபோல் அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளராக இருந்த நிர்மல்குமார் த.வெ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

    பனையூரில் உள்ள த.வெ.க. அலுலவகத்திற்கு வந்த ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமாரை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் வரவேற்று அழைத்து சென்றார்.

    அதன்படி சென்னை பனையூர் அலுவலகத்தில் த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலையில் இணைப்பு நிகழ்வு நடைபெற்றது. விஜய் முன்னிலையில் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் இருவரும் த.வெ.க.வில் இணைந்தனர்.

    அ.தி.மு.க. தொழில்நுட்பப் பிரிவு இணைச்செயலாளர் நிர்மல்குமாரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

    ஆதவ் அர்ஜுனாவுக்கு த.வெ.க.வில் முக்கிய பதவி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனிடையே, நாம் தமிழர் கட்சியிலிருந்து ஒரு பிரபலமும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×