என் மலர்
நீங்கள் தேடியது "கோவில் ஆக்கிரமிப்பு"
- மக்களின் சமய நம்பிக்கைகளுக்கு உரிய மதிப்பளித்து திருப்பணிகளை சிரத்தையுடன் மேற்கொண்டு வருகிறது.
- 2,392 திருக்கோவில்களில் திருப்பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு திருக்குடமுழுக்குகள் செய்யப்பட்டுள்ளன.
திராவிட மாடல் ஆட்சியில் தற்போது வரை 7,132 கோடி மதிப்புள்ள 7,400 ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் போறிஞர் அண்ணா காட்டிய வழியில் பயணிக்கும் திராவிட மாடல் அரசு தமிழ் நாட்டில் மதச்சார்பின்மைணய கடைபிடித்து சமய நல்லிணக்கத்தை ஆதரிக்கும் அரசாக விளங்குகிறது.
மேலும் மக்களின் சமய நம்பிக்கைகளுக்கு உரிய மதிப்பளித்து திருப்பணிகளை சிரத்தையுடன் மேற்கொண்டு வருகிறது.
திராவிட மாடல் அரசு மக்களின் சமய உணர்வுகளை மதித்து இறை வழிபாட்டுத்தலங்களை மேலும் வளப்படுத்திவதில் பெரும் அக்கறையோடு செயல்படும் அரசு என்பதற்கு இந்து சமய அற நிலையத் துறையின் சிறப்பான செயல்பாடுகள் சான்றாகியுள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற நாள் முதல் தற்போதுவரை 2,392 திருக்கோவில்களில் திருப்பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு திருக்குடமுழுக்குகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், 7132 கோடி ரூபாய் மதிப்புள்ள 7.௪௦௦ ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி, 12202 திருக்கோவில்களில் 5,515 கோடி ரூபாய் செலவில் 23234 திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருத்தலங்களின் ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக. 1.770 கோடி ரூபாய் செலவில் 19 கோவில் வளாகங்களில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மாண்புமிகு முதலமைச்சரின் வழிக்காட்டுதல்களால் திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களின் உள்ளம் அறிந்து செயல்படும் முதலமைச்சரின் நடவடிக்கைகளால் மக்கள் மகிழ்ச்சியோடு திருக்கோவில்களில் வழிபட்டு வருகிறார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் பேட்டி
- பாரபட்சம் இல்லாம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலைக்கு நேற்று வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடு முழுவதும் சுதந்திர இந்தியாவின் 75 -வது ஆண்டு பவள விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவுடன் சுதந்திரம் அடைந்த பல்வேறு நாடுகள் பொருளாதார வீழ்ச்சியால் பின்தங்கி உள்ளது.
75 ஆண்டுகளில் உலக நாடுகளில் இந்தியா வல்லரசாகவும், நல்லர சாகவும் வளர்ந்துள்ளது. தமிழக அரசு அனைத்து துறைகளையும் சிறப்பாக செயல்படுத்தி கொண்டிருக்கு வேளையில் சுதந்திர இந்தியாவின் 75 -வது ஆண்டு பவள விழாவில் அதிக கவனம் செலுத்தாதது வேதனை அளிக்கிறது. மொழிப்போர் தியாகிகள் மற்றும் திராவிட இயக்க தியாகிகளுக்கு வழங்கும் சலுகையை சுதந்திர பேராட்ட தியாகிகளுக்கும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
சுதந்திர இந்தியாவின் பவள விழா கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கோவில் சொத்துக்கள் பல இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுத்து கோவில் ஆக்கிரமிப்பு இடங்களை மீட்க வேண்டும். பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டு உள்ளதாக அறநிலையத்துறை தெரிவிக்கின்றது. இன்னும் பல கோவில்களில் சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளது. அறநிலையத்துறை உண்மையாக செயல்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
தமிழகத்தில் மதமாற்றம் செய்வது அதிகரித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மதமாற்றத்தால் இந்துக்கள் சிறுபான்மையினராக மாறியுள்ளனர்.
தமிழக அரசு மதமாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும். தி.மு.க. அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். தி.மு.க. மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இப்போது தேர்தல் வந்தாலும் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். தி.மு.க. அரசு அரசு விழாவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது.
மேலும் திருவண்ணா மலை நகரை இணைக்கும் 9 பாதையின் முகப்பிலும் அண்ணாமலையார் நுழைவு வாயில் அமைக்க வேண்டும்.
அருணாசலேஸ்வர் கோவிலுக்கு விரைவில் யானை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் அசோக்குமார், பா.ஜ.க. பட்டியல் அணி மாவட்டத் தலைவர் விஜயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






