என் மலர்
உள்ளூர் செய்திகள்
- 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
- அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற 5-ந்தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மொத்தம் 46 பேர் போட்டியிடும் இத்தேர்தர்லில் திமுகவுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வேட்பாளர் சீதாலட்சுமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மரப்பாலம் முனிசிபல் சத்திரம் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்காததை கண்டித்து சாலை மறியிலில் ஈடுபட்ட சீதாலட்சுமி உள்பட 9 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- கோல் போஸ்ட் தலையில் விழுந்ததில் ஆத்ரிக் (7) என்ற சிறுவன் மயக்கம் அடைந்துள்ளான்.
- சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவடி விமானப் படை ஊழியர்கள் குடியிருப்பில் உள்ள மைதானத்தில் கால்பந்து கோல்போஸ்ட் தலையில் விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கால்பந்தாட்டத்தில் கோல் கீப்பராக விளையாடியபோது கோல் போஸ்ட் தலையில் விழுந்ததில் ஆத்ரிக் (7) என்ற சிறுவன் மயக்கம் அடைந்துள்ளான். இதையடுத்து நண்பர்கள் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது சிறுவனை பரிசோதித்த டாக்டர் சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கல்லூரி மாணவர்களான சந்தோஷ், தமிழரசு, அஸ்வின், விஸ்வேஸ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி சந்துரு மற்றும் 2 கல்லூரி மாணவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையை அடுத்த முட்டுக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த 25-ந் தேதி இரவு இளம்பெண்கள் வந்த காரை, 2 கார்களில் வந்த 8 வாலிபர்கள் சாலையின் குறுக்கே காரை நிறுத்தி வழிமறித்தனர். அத்துடன் அந்த பெண்களை, வீடு வரைக்கும் காரில் பின்தொடர்ந்து விரட்டிச்சென்று மிரட்டினர். இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கானத்தூர் போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, துணை கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். வாலிபர்கள் வந்த 2 கார்களையும் பொத்தேரியில் பறிமுதல் செய்தனர். அதில் ஒரு கார் இரும்புலியூரை சேர்ந்த சந்துரு என்பவருக்கு சொந்தமானது என தெரிந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவர்களான சந்தோஷ், தமிழரசு, அஸ்வின், விஸ்வேஸ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தோஷ், தமிழரசு, அஸ்வின், விஸ்வேஸுக்கு பிப்.14-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
மேலும் வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி சந்துரு மற்றும் 2 கல்லூரி மாணவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
- தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகிறார்கள்.
- நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சென்னை:
சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரெயில் சேவை மிகவும் கை கொடுத்து வருகிறது.
மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து விமான நிலையம், புறநகர் ரெயில் நிலையம், பஸ் நிலையம் போன்றவற்றை இணைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. 2 வழித்தடங்கள் மூலம் மெட்ரோ ரெயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகிறார்கள். மெட்ரோ ரெயிலில் பயணிகள் எளிதாக செல்ல பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதனால் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், இன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக Whatsapp Chatbot மூலம் ஆன்லைன் டிக்கெட்டுகள் பெறுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தொழில்நுட்பக் கோளாறு சீர் செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் இப்போது சென்னை மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகளை வாட்ஸ்அப் மூலம் வாட்ஸ்அப் சாட்பாட் - 8300086000 ஐப் பயன்படுத்தி வாங்கிக்கொள்ளலாம் என்றும் சி.எம்.ஆர்.எல் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு என நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
முன்னதாக, தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணிகள் அனைவரும் CMRL மொலைப் ஆப், Paytm, Phonepe, சிங்கார சென்னை கார்டு, CMRL டிராவல் கார்டுகள், பயணச்சீட்டு வழங்குமிடம் ஆகிய மற்ற வழிகள் மூலம் டிக்கெட்டுகளை பெறுமாறு மெட்ரோ ரெயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
- சிலிண்டர் விலை குறைவு காரணமாக வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
சென்னை:
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துவிட்டது.
இதனையடுத்து மாதந்தோறும் இந்நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கும். அந்த வகையில் தற்போது வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை ரூ.6.50 குறைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.6.50 குறைந்து ரூ.1959.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. சிலிண்டர் விலை குறைவு காரணமாக வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. 14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.818.50-க்கு ஆக நீடிக்கிறது.
- தமிழகத்தை திமுக அரசு பாலைவனமாக மாற்றி வருகிறது.
- திட்டத்தை கைவிடாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்தார்.
சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:-
ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் இயற்கை வளங்கள் தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகத்தை திமுக அரசு பாலைவனமாக மாற்றி வருகிறது.
மேலும் ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ளுவது தொடர்பான அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நேரத்தில்,13 மணல் குவாரிகளை திறப்பதற்கு திமுக அரசு ஏன் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கேள்வி எழுப்பினார். இந்த திட்டத்தை கைவிடாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்தார்.
இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவது குறித்து எந்த கவலையும் இல்லாமல், கமிஷன், கலெக்ஷன், கரப்ஷனை மட்டுமே நோக்கமாகக் கொண்டு திமுக அரசு செயல்பட்டுக் வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை விமான நிலையம் வந்தடைந்த அமித்ஷாவிற்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவரிடம் வாழ்த்து பெற்று வரவேற்றார்.
குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பேரன் திருமண விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னைக்கு வருகை தந்தார்.
சென்னை விமான நிலையம் வந்தடைந்த அமித்ஷாவிற்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவரிடம் வாழ்த்து பெற்று வரவேற்றார்.
இந்நிலையில், வெங்கையா நாயுடுவின் பேரன் திருமண விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
அமித்ஷாவின் வரவை முன்னிட்டு சென்னைவியில் சில பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈ.சி.ஆர் சாலை வழியாக அமித்ஷா செல்ல இருப்பதால் அந்த சாலையில் செல்ல மற்ற வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் திருமண நிகழ்வில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
- ஆதவ் அர்ஜூனாவுக்கு, தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை ஆதவ் அர்ஜூனா இன்று சந்தித்தார்.
தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு, தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இதைதொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை ஆதவ் அர்ஜூனா இன்று சந்தித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வெளியேறிய பிறகு முதல் முறையாக திருமாவளவனை ஆதவ் அர்ஜூனா சந்தித்தார்.
தவெகவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள ஆதவ் அர்ஜூனா மரியாதை நிமித்தமாக திருமாவளவனை சந்தித்து உள்ளதாக தகவல் வெளியாகியானது.
இந்நிலையில், திருமாவளவன் - ஆதவ் அர்ஜூனா சந்திப்பு பிறகு இருவரும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.
அப்போது ஆதவ் அர்ஜூனா கூறுகையில், " தவெக கட்சி தலைவரும் சரி, அண்ணன் திருமாவளவனும் சரி ஒரே கருத்து, ஒரே கொள்கையில்தான் இருக்கிறோம். அதனால், நாங்கள் எதிர்துருவம் அல்ல. ஒரே துருவத்தில் கொள்கை அடிப்படையில் பயணம் எப்போதுமே இருக்கும். கொள்கை அடிப்படையில் நாங்கள் ஒற்றுமையாகதான் இருக்கிறோம்.
அவருடைய அறிவுரைகளை எடுத்துக்கொண்டு அதை செயல்களில் காட்டுவோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய திருமாவளவன், " தமிழக அரசியலில் ஒரு புதிய அணுகுமுறையை தொடங்கி வைத்திருக்கிறார். பொதுவாக ஒரு கட்சியில் இருந்து விலகினாலோ அல்லது விலக்கி வைத்தாலோ அதை ஒரு பகையாக கருதுகின்ற ஒரு பாரம்பரியம் தான் அரசியல் களக்கில் நீண்ட காலமாக இருந்து வருகிறது.
ஆனால், ஆதவ் அர்ஜூனா அவர்கள் கட்சியைவிட்டு வெளியேறக் கூடிய ஒரு சூழல் இருந்த நிலையிலும்கூட, அதை ஒரு பகையாக கருதவில்லை.
வலிகள் இருந்தாலும் கூட அதை எதிராக நிறுத்தவில்லை. தான் இன்னொரு கட்சியில் போய் சேர்ந்து, பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்று செயல்படுகிற இந்த சூழலில் உங்களுடைய வாழ்த்தும் எங்களுக்கு தேவை என்று என்னை தேடி ஆதவ் வந்திருக்கிறார் என்பது தமிழக அரசியல் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு நாகரிகமாக நான் பார்க்கிறேன்.
கருத்தியல் ரீதியாக எவ்வளவு முரண்கள் இருந்தாலும் களத்தில் நாம் எதிர் எதிர் துருவத்தில் நின்று செயல்படக்கூடிய நிலையில் இருந்தாலும்கூட இத்தகைய நட்புறவை பேணுவது ஒரு நாகரிகமாக அணுகுமுறை.
அந்த வகையில் ஆதவ் அர்ஜூனாவுக்கு வாழ்த்துகள்" என்றார்.
- கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களை கானத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இரு கார்களில் இருந்த இளைஞர்களை அடையாளம் கண்டு போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை ஈசிஆர் சாலையில் பெண்களை இளைஞர்கள் சிலர் காரில் துரத்திச் சென்ற சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இளைஞர்கள் பயன்படுத்திய இரு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களை கானத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரு கார்களில் இருந்த இளைஞர்களை அடையாளம் கண்டு போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் ஈசிஆர் வழக்கு தொடர்பாக பள்ளிக்கரணை காவல் ஆணையர் கார்த்திகேயன் விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து கார்த்திகேயன் பேசியதாவது:- ஈசிஆர் வழக்கில் இதுவரை 4 பேர் கைதாகி இருக்கும் நிலையில், 3 பேரை பிடிக்க காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காரில் இருந்த கட்சிக் கொடிக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை. காரினை ஓட்டிய ஓட்டுநர் தான் கட்சிக்கொடியை பயன்படுத்தியுள்ளார்.
பார்க்கிங் மற்றும் சுங்கத்துறை கட்டணத்தில் இருந்து தப்பிக்கவும் கட்சிக் கொடியை பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
7 இளைஞர்களில் 5 பேர் ஒரே கல்லூரியில் படித்து வருகின்றனர். ஒரு இளைஞர் வெளி மாநிலத்திலும், மற்றொருவர் படித்து முடித்து வேலை செய்தும் வருகிறார்.
இந்த வழக்கில் கைதாகியுள்ள சந்துரு என்பவர் மீது 2 குற்ற வழக்குகள் இருக்கிறது. இந்த சம்பவத்தை பொறுத்தவரை கொள்ளையடிக்கும் முயற்சியும் நடக்கவில்லை. அதேபோல் பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்த பின்னர் உடனடியாக சிஎஸ்ஆர் காபி கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்பின் விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் உடனடியாக வழக்குப்பதிவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டில் உண்மை கிடையாது. அதேபோல் புகார் அளித்த சில நிமிடங்களிலேயே காவல்துறையினர் பெண்ணின் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை ஆதவ் அர்ஜூனா சந்தித்துள்ளார்.
- விசிகவில் இருந்து வெளியேறிய பிறகு முதல் முறையாக திருமாவளவனை ஆதவ் அர்ஜூனா சந்தித்துள்ளார்.
தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு, தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை ஆதவ் அர்ஜூனா சந்தித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வெளியேறிய பிறகு முதல் முறையாக திருமாவளவனை ஆதவ் அர்ஜூனா சந்தித்துள்ளார்.
தவெகவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள ஆதவ் அர்ஜூனா மரியாதை நிமித்தமாக திருமாவளவனை சந்தித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- இணையதள மோசடிகள், போலியான அழைப்புகள், டிஜிட்டல் அரெஸ்ட் குறித்த பதிவு.
- தமிழ்நாடு காவல்துறை விழிப்புணர்வு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இணையதள மோசடிகள், போலியான அழைப்புகள், டிஜிட்டல் அரெஸ்ட் பற்றி தமிழ்நாடு காவல்துறை விழிப்புணர்வு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், டிஜிட்டல் அரெஸ்ட் செய்ததாக மோசடி செய்யும் கும்பல் தொடர்பாக கோவை போலீசார் வெளியிட்ட விழிப்புணர்வு பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
- 120 மாவட்ட செயலாளர்களில் பெரும்பாலானவர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர்.
- முதல் கட்டம், 2ம் கட்டம், 3ம் கட்டம் என மொத்தம் 57 மாவட்டங்களுக்கான புதிய நிர்வாகிகளின் பட்டியல்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பனையூர் அலுவலகத்தில் நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தினார்.
இதைதொடர்ந்து, விஜய் கடந்த 28ம் முதல் 4 நாட்களுக்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும், தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளிடம் விஜய் நேர்காணல் நடத்தி வருகிறார்.
அதன்படி, 234 சட்டசபை தொகுதிகளுக்கும் பணிகளை தீவிரப்படுத்த 120 மாவட்ட செயலாளர்களில் பெரும்பாலானவர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர்.
அதில், முதல் கட்டம், 2ம் கட்டம், 3ம் கட்டமாக புதிதாக மாவட்ட செயலாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் மத்தியில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது:-
2026 ஆம் ஆண்டு இலக்கை அடைய என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வேன்.
மக்கள் பணிகளை இனி தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்;
கட்சி நிர்வாகிகள் களத்திற்கு செல்ல தயங்கக் கூடாது. உங்கள் உழைப்பில்தான் கட்சியின் வளர்ச்சி உள்ளது.
நானும் உழைக்கிறேன்; நீங்களும் உழையுங்கள்; வெற்றி அடைவோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






