வெங்கையா நாயுடு இல்லத்திருமணம்- அமித்ஷா, மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை விமான நிலையம் வந்தடைந்த அமித்ஷாவிற்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவரிடம் வாழ்த்து பெற்று வரவேற்றார்.
வெங்கையா நாயுடு இல்லத்திருமணம்- அமித்ஷா, மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
Published on

குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பேரன் திருமண விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னைக்கு வருகை தந்தார்.

சென்னை விமான நிலையம் வந்தடைந்த அமித்ஷாவிற்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவரிடம் வாழ்த்து பெற்று வரவேற்றார்.

இந்நிலையில், வெங்கையா நாயுடுவின் பேரன் திருமண விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

அமித்ஷாவின் வரவை முன்னிட்டு சென்னைவியில் சில பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈ.சி.ஆர் சாலை வழியாக அமித்ஷா செல்ல இருப்பதால் அந்த சாலையில் செல்ல மற்ற வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் திருமண நிகழ்வில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com