என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் பால் விலை"

    • நிறைகொழுப்பு பாலின் விற்பனை விலை லிட்டர் 80 ரூபாய் என்கிற இமாலய இலக்கை தொட்டிருக்கிறது.
    • தேனீர், காபி மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக உயரும்.

    தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தனியார் பால் நிறுவனங்களின் பால் மற்றும் தயிரின் விற்பனை விலை உயர்வு அமலுக்கு வந்து ஒரு மாதமே ஆகும் நிலையில் தென்னிந்தியாவின் முன்னணி தனியார் பால் நிறுவனமான ஹட்சன் நிறுவனம் இன்று (13-ந் தேதி) இரவு முதல், நாளை (வெள்ளிக்கிழமை) காலை முதல் ஆரோக்யா பாலுக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 4 ரூபாயும், தயிருக்கான விற்பனை விலையை கிலோவுக்கு 3 ரூபாய் வரையிலும் உயர்த்துவதாக பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை வழங்கியுள்ளது.

    அதன்படி நிறைகொழுப்பு பால் 500 மிலி 38 ரூபாயில் இருந்து 40.00ரூபாயாகவும், ஒரு லிட்டர் 71.00ரூபாயில் இருந்து 75 ரூபாயாகவும், மற்றொரு வகை ஒரு லிட்டர் 78 ரூபாயில் இருந்து 82 ரூபாயாகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் 500 மிலி 33 ரூபாயில் இருந்து 34 ரூபாயாகவும், 1 லிட்டர் 63 ரூபாயில் இருந்து 65 ரூபாயாகவும், தயிர் 400 கிராம் 32 ரூபாயில் இருந்து 33 ரூபாயாகவும் உயர்கிறது.

    இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு அதிகளவில் பயன்படுத்தப்படும் நிறைகொழுப்பு பாலின் விற்பனை விலை லிட்டர் 80 ரூபாய் என்கிற இமாலய இலக்கை தொட்டிருக்கிறது.

    ஒரு மாத இடைவெளியில் இரண்டாவது முறையாக பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்தும் ஹட்சன் நிறுவனத்தின் தன்னிச்சையான விற்பனை விலை உயர்வு அறிவிப்பிற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு இந்த விற்பனை விலை உயர்வு அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறது.

    ஏனெனில் உணவகங்கள், தேனீர் கடைகள் மற்றும் தனியார் அலுவலக கேண்டீன்கள் அனைத்தும் ஹட்சன் போன்ற முன்னணி தனியார் நிறுவனங்களின் பாலினை பயன்படுத்தி வருவதால் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வதால் தேனீர், காபி மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக உயரும்.

    இதனால் மாதாந்திர ஊதியம் பெறும் பணியாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் என பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

    மேலும் கோடை காலம் தொடங்கவிருக்கும் தற்போதைய சூழலில் தமிழ்நாடு முழுவதும் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் பால் உற்பத்தி சற்றே சரிவடையத் தொடங்கி இருந்தாலும் கூட பால் கொள்முதல் விலையிலோ அல்லது மூலப்பொருட்கள் விலையிலோ எந்தவிதமான உயர்வோ அல்லது மாற்றங்களோ இல்லாத இந்த காலகட்டத்தில் ஹட்சன் நிறுவனத்தின் இந்த தன்னிச்சையான பால் விற்பனை விலை உயர்வானது பிற தனியார் பால் நிறுவனங்களின் பால் மற்றும் தயிர் விற்பனை விலை உயர்வுக்கும் வழி வகுக்கும் என்பதால் இந்த விற்பனை விலை உயர்வு அறிவிப்பை ஹட்சன் நிறுவனம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

    • பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டு இருந்ததால் விடுதிகளுக்கு வாங்கப்பட்ட பால் நிறுத்தப்பட்டது.
    • கடந்த 2 மாதத்தில் பால் விற்பனை 20 சதவீதம் குறைந்ததோடு மட்டுமின்றி தற்போது மழை பெய்து வருவதால் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பால் விற்பனையில் அரசின் ஆவின் நிறுவனம் முன்னிலையில் உள்ளது. தனியார் பால் விலையைவிட ஆவின் பால் விலை எப்போதும் குறைவாக இருப்பதால் பொது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று உள்ளது.

    இந்த நிலையில் கோடை விடுமுறையில் பால் விற்பனை குறைந்துள்ளது. சொந்த ஊர்களுக்கு குடும்பத்தோடு சென்றதால் தமிழகத்தில் பால் விற்பனை குறைந்தது.

    மேலும் வெயிலின் தாக்கம் ஒருபுறம் இருந்தாலும் மழையும் பரவலாக பெய்து வருவதால் தயிர், மோர் விற்பனை சரிந்தது. இதனால் பால் தேக்கம் அடைந்தது.

    ஓட்டல்கள், நிறுவனங்கள், டீக்கடைகளுக்கு தனியார் பால் அதிகளவில் வினியோகிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டு இருந்ததால் விடுதிகளுக்கு வாங்கப்பட்ட பால் நிறுத்தப்பட்டது.

    கடந்த 2 மாதத்தில் பால் விற்பனை 20 சதவீதம் குறைந்ததோடு மட்டுமின்றி தற்போது மழை பெய்து வருவதால் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக பால் கொள்முதல் அதிகரித்தது. ஆனால் அதற்கேற்ற அளவில் பால், தயிர், மோர் போன்றவை விற்பனை ஆகவில்லை. இதனால் ஹட்சன் நிறுவனம், ஆரோக்கியா நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்தது.

    புல்கிரீம் பால் லிட்டர் ரூ.68-ல் இருந்து ரூ.66-ஆகவும் அரை லிட்டர் பால் ரூ.37-ல் இருந்து ரூ.36 ஆகவும் குறைந்துள்ளது.

    அதே போல தயிர் லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

    ஒரு லிட்டர் தயிர் ரூ.71-ல் இருந்து ரூ.67 ஆகவும் 500 மில்லி தயிர் ரூ.32-ல் இருந்து ரூ.30-ஆகவும் குறைந்துள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி கூறியதாவது:-

    தனியார் நிறுவனம் பால் விலையை உயர்த்தும் போது அனைத்து வகை பாலுக்கும் உயர்த்தியது. குறைக்கும் போது நிறை கொழுப்பு பாலுக்கான விலையை மட்டும் குறைப்பது ஏற்புடையதல்ல. மற்ற பால் பாக்கெட் விலையையும் குறைக்க வேண்டும்.

    மேலும் இந்த விலை குறைப்பு மிகவும் குறைவாகும். தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை 10 ரூபாய் குறைத்துவிட்டு விற்பனை விலையை ரூ.2 மட்டுமே குறைத்துள்ளது. ஹட்சன் நிறுவனத்தை தொடர்ந்து மற்ற தனியார் பால் நிறுவனங்களும் விலையை குறைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பால் விலை உயர்வு தொடர்பாக, அந்நிறுவனம் பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவித்து உள்ளது.
    • தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    தமிழகத்தின் முன்னணி தனியார் பால் நிறுவனமான ஆரோக்யா, பால், தயிர் விற்பனை விலையை இன்று காலை முதல் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது. இதனால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    பால் விலை உயர்வு தொடர்பாக, அந்நிறுவனம் பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவித்து உள்ளது.

    அதன்படி, நிறை கொழுப்பு பால் 500 மி.லி. பாக்கெட் ரூ.36-ல் இருந்து 37 ஆகவும், 1 லிட்டர் பாக்கெட் ரூ.65-ல் இருந்து 67 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் 500 மி.லி. பாக்கெட் ரூ.31-ல் இருந்து 32 ஆகவும், 1 லிட்டர் பாக்கெட் ரூ.58-ல் இருந்து 60 ஆகவும், 400 கிராம் தயிர் பாக்கெட் ரூ.30-ல் இருந்து 32 ஆகவும், 500 கிராம் தயிர் ரூ.37-ல் இருந்து 38 ஆகவும், 1 கிலோ தயிர் ரூ.66-ல் இருந்து 68 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்ப்டடுள்ளது.

    தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் பால் கொள்முதலில் எந்த ஒரு விலை உயர்வோ, பால் உற்பத்தியில் பாதிப்போ, தட்டுப்பாடோ இல்லாத சூழலில் ஆரோக்யா நிறுவனம் பால், தயிர் விலையை உயர்த்தியுள்ளதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    மேலும், "இது பொதுமக்கள் தலையில் பெரும்பாரத்தை சுமத்தும் செயலாகும் என்பதோடு, இந்த பால், தயிர் விற்பனை விலை உயர்வானது மற்ற தனியார் பால் நிறுவனங்களையும் விற்பனை விலையை உயர்த்த தூண்டுவது போல் ஆரோக்யா நிறுவனத்தின் செயல்பாடுகள் அமைந்து உள்ளது கண்டிக்கத்தக்கதாகும். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் பால், தயிர் விற்பனை விலையை சொற்ப அளவில் மட்டும் குறைந்திருந்தனர் என்று தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த ஓராண்டில் பால் கொள்முதல் விலை, மூலப்பொருட்கள், வாகன எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலைகளில் மட்டுமல்ல பால் முகவர்களுக்கான வாழ்வாதாரத்தை உயர்த்திட பால், தயிர் விற்பனைக்கான கமிஷன் தொகையிலும் எந்த ஒரு மாற்றமும் இல்லாத சூழலில் ஆரோக்யா நிறுவனம் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்துவது என்பது ஏற்புடையதல்ல என்பதால் இந்த விற்பனை விலை உயர்வை ஆரோக்யா நிறுவனம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

    • மற்றொரு தனியார் நிறுவனமான ஜெர்சி வருகிற 3-ந்தேதி முதல் பால் விலையை உயர்த்துகிறது.
    • 450 கிராம் தயிர் பாக்கெட் 33 ரூபாயில் இருந்து 37 ரூபாயாகவும் உயருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் சென்னையை தவிர்த்த பிற வெளி மாவட்டங்களில் பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பல முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் இந்த மாதம் முதல் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்தி விட்டன.

    இந்த நிலையில் சென்னை முதல் தென் மாவட்டங்கள் வரை பால் விற்பனையில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனமான ஆந்திராவை சேர்ந்த திருமலா நிறுவனம் நாளை (1-ந்தேதி) பால் விலையை உயர்த்துகிறது. மற்றொரு தனியார் நிறுவனமான ஜெர்சி வருகிற 3-ந்தேதி முதல் பால் விலையை உயர்த்துகிறது.

    இந்த நிறுவனங்கள் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு 5 ரூபாய் வரையிலும் உயர்த்த முடிவு செய்துள்ளன. அதன்படி நிறைகொழுப்பு பால் 1 லிட்டர் பாக்கெட் 70 ரூபாயில் இருந்து 72 ரூபாயாகவும், 500 மி.லி. பாக்கெட் 36 ரூபாயில் இருந்து 37 ரூபாயாகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் 1 லிட்டர் பாக்கெட் 62 ரூபாயில் இருந்து 64 ரூபாயாகவும், 500 மி.லி. பாக்கெட் 32 ரூபாயில் இருந்து 33 ரூபாயாகவும், சமன்படுத்தப்பட்ட பால் 1 லிட்டர் பாக்கெட் 61 ரூபாயில் இருந்து 62 ரூபாயாகவும், 500 மி.லி. பால் பாக்கெட் 27 ரூபாயில் இருந்து 28 ரூபாயாகவும் உயருகிறது.

    தனியார் நிறுவன தயிர் 1 கிலோ பாக்கெட் 67 ரூபாயில் இருந்து 72 ரூபாயாகவும், 450 கிராம் தயிர் பாக்கெட் 33 ரூபாயில் இருந்து 37 ரூபாயாகவும் உயருகிறது.

    ×