இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டம்

ராமேசுவரம் மீனவர்கள் 49 பேரை எல்லைதாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.ராமேசுவரம் துறைமுக பகுதியில் நடந்த அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
Published on

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந்தேதி மற்றும் கடந்த ஜனவரி மாதம் 25-ந்தேதி கடலில் மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்கள் 49 பேரை எல்லைதாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

மேலும் அவர்களுக்கு சொந்தமான 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை அரசு ராமேசுவரம் மீனவர்களை சிறையில் அடைத்துள்ளது. அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்துவது குறித்து கடந்த 25-ந்தேதி ராமேசுவரம் துறைமுக பகுதியில் நடந்த அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இன்று ராமேசுவரம் பேருந்து நிலையம் எதிரே அனைத்து விசைப்படகு மீனவர் சங்கத்தினர், சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு சிறை மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், இலங்கை கடற்படை வசம் உள்ள படகுகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். 

X

Maalai Malar
www.maalaimalar.com