search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kachchathivu"

    • தி.மு.க உடந்தையாக இருந்ததே தவிர, மீனவர்களுக்காக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
    • வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரசும், திமுகவும் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கின்றன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் இன்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தவறான செயல். காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்த இச்சம்பவத்துக்கு தி.மு.க உடந்தையாக இருந்ததே தவிர, மீனவர்களுக்காக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

    மீனவர்களுக்கு காங்கிரஸ், தி.மு.க இழைத்த இந்த அநீதியை மீனவ சமுதாயத்தினர் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். இந்த பிரச்சினையில் தேசிய ஜனநாயக கூட்டணி நம்பிக்கை கொடுக்கும் வகையில் செயல்படும் என மீனவர்கள் நம்புகின்றனர்.

    தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் மாற்றம் ஏற்பட வேண்டும் என மக்கள் மனதில் நிலவுகிறது. மூன்றாம் முறையாக மோடி பிரதமராக வருவது அவசியம் என மக்கள் நினைக்கின்றனர். எனவே அனைத்து தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்.

    பிரதமர் மோடியை 29 பைசா என உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். இதை விட மிக மோசமான அரசியல் வேறு எதுவும் இருக்காது என மக்கள் நினைக்கின்றனர். மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி கொடுப்பதில் நேரு காலத்திலிருந்து கோட்பாடு இருக்கிறது. மாநிலத்தின் வளர்ச்சி, நீளம், அகலம், மாவட்டங்களின் பின்தங்கிய நிலை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள அந்தக் கோட்பாட்டை யாராலும் மீற முடியாது. இதைப் பிரித்துப் பார்ப்பது திமுகவுக்கு வழக்கமாகிவிட்டது.

    காவிரியில் தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீர் தர மறுப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் மனித நேயமற்ற இச்செயலுக்குக் கூட்டணி என்பதால் திமுக கண்டிக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு வருத்தத்தை அளிக்கிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரசும், திமுகவும் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கின்றன. இதை விவசாயிகள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

    பாஜக தேர்தல் அறிக்கையில் தமிழுக்கும், திருக்குறளுக்கும் முக்கியத்துவம் அளித்திருப்பது பெருமை அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக மக்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? தமிழக மக்களுக்கு வர வேண்டிய நிவாரணத்தை கூட தரவில்லை.
    • அ.தி.மு.க. தொண்டர்களும், பிரசாரத்தை கவனித்துக் கொண்டிருந்த பொது மக்களும், உற்சாகமாக கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

    உசிலம்பட்டி:

    மதுரை தொகுதிக்கு உட்பட்ட மதுரை மாநகர பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் தேனி தொகுதிக்கு உட்பட்ட உசிலம்பட்டி பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணசாமி ஆகியோரை ஆதரித்து இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் வாகன பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதா வது:-

    நல்லவர்களுக்கு இந்த தேர்தலில் வெற்றி பெற வாக்காளர்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும். அப்போது தான் மக்களின் தேவைகளுக்கு நாடாளு மன்றத்தில் குரல் எழுப்ப முடியும். உசிலம்பட்டிக்கு வந்தாலே நான் உணர்வு பூர்வமாக ஆகிவிடுகிறேன். நான் யாரையும் குறைகூறி பிரசாரம் செய்பவன் அல்ல. கச்சத்தீவை மீட்போம் என்று கூறினார்கள். ஆனால் இது வரைக்கும் என்ன செய்தீர்கள்? வெள்ளம் வந்தபோது தமிழக மக்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? தமிழக மக்களுக்கு வர வேண்டிய நிவாரணத்தை கூட தரவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தேனி பிரசாரத்தில் பேசியபோது தான் நடித்த 'அமரன்' படத்தில் சொந்தக் குரலில் பாடிய பாடலை பிரசாரத்திற்காக அதே மெட்டில் மாற்றி, 'அமரன்' பாட்ட கேட்டால் சோடா பாட்டில் அல்ல, இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் பறக்கும்' என அதே மெட்டில் பாடிக் காட்டினார். இதை கேட்டு அவரது ஆதரவாளர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும், பிரசாரத்தை கவனித்துக் கொண்டிருந்த பொது மக்களும், உற்சாகமாக கை தட்டி ஆரவாரம் செய்தனர். இதனால் உற்சாகமடைந்த நடிகர் கார்த்திக்கும் மேலும் 2 வரியை பாடி அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். 

    • கச்சத்தீவை 1974-ல் காங்கிரஸ் அரசும், தி.மு.க. அரசும் தாரை வார்த்து இலங்கைக்கு கொடுத்தது.
    • கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் உறுதி கூறியுள்ளார்.

    பனைக்குளம்:

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    நான் கூட்டணி சார்பாக தேர்தலில் போட்டியிட பாரதப் பிரதமரிடம் விருப்பம் தெரிவித்த போது ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுங்கள் என்று தெரிவித்தார். எனக்கு போட்டியாக பன்னீர்செல்வம் என பலரை நிறுத்தி உள்ளனர். யார் நிறுத்தி இருக்கிறார்கள் என்பதை நான் எனது வாயால் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, உங்களுக்கே தெரியும்.

    கச்சத்தீவை 1974-ல் காங்கிரஸ் அரசும், தி.மு.க. அரசும் தாரை வார்த்து இலங்கைக்கு கொடுத்தது. கச்சத்தீவை மீட்க 2011-ல் உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க. சார்பில் வழக்கு தாக்கல் செய்தபோது இங்கு இருக்கும் ஆவணங்கள் அனைத்தும் அங்கு சமர்ப்பிப்பட்டு உள்ளது. கச்சத் தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் உறுதி கூறியுள்ளார்.

    இந்த பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும். படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க பயிற்சி வகுப்புகள் தொடங் கப்படும். கனிமவளம் பாதிக்காத வகையில் தொழில் வளம் பெருக நடவடிக்கை எடுப்பேன். நானும் ராமநாதபுரத்தை சேர்ந்தவன் தான். பழைய பிரிக்கப்படாத ராமநாதபுரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர்தான் சொந்த ஊர்.

    அ.தி.மு.க.வில் தற்போது யார் வேட்பாளராக நிற்கிறார்கள் என்றே தெரியவில்லை. அந்த அளவிற்கு கட்சியின் நிலை கீழே சென்று உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்திய சீன எல்லைப் பகுதியில் 96 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பை சீனா மோடி ஆட்சியில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது
    • 50 ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய அரசால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவு பற்றி பேசுகிறாரா?

    கச்சத்தீவு விவகாரம் தற்போது பூதாகரமாக கிளம்பியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது இலங்கைக்கு தாரைவார்த்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சியை எப்போதும் நம்ப முடியாது என்று குற்றம் சாட்டினார்.

    இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    இந்திய சீன எல்லைப் பகுதியில் 96 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பை சீனா மோடி ஆட்சியில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. இதைத் தடுக்க தவறியதோடு அதைப்பற்றி பேசக்கூட துணிவும் திராணியும் இல்லாத மோடி அவர்கள் 50 ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய அரசால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவு பற்றி பேசுகிறாரா?

    அருணாச்சல பிரதேசம் - கல்வான் பள்ளத்தாக்கு, 14 -வது முனையத்தில் சீனா 2.5 லட்சம் ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. இங்கு சீன ராணுவ வீரர்கள் டென்ட் அமைத்து முகாமிட்டுள்ளனர். இதே பகுதியில் நடைபெற்ற சண்டையில், இந்தியாவின் 20 ராணுவ வீரர்கள் ஆயுதங்களின்றி சண்டையிட்டு உயிரிழந்துள்ளனர். இதேபோல லடாக், அக்சாய் சின் பகுதியில் 94 லட்சம் ஏக்கர் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது. இது குறித்து உங்கள் கட்சி தலைவர் சுப்ரமணியசுவாமி அவர்களே பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    பணமதிப்பிழப்பு, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு, ரஃபேல் ஊழல், தேர்தல் பத்திர ஊழல் போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளிலிருந்து மக்களை திசை திருப்பவே தேர்தல் நேரத்தில் கச்சத்தீவு குறித்து பேச துவங்கியிருக்கிறது பாஜக.

    இந்திய நிலப்பரப்பை சீனாவுக்கு தாரைவார்த்து கொண்டிருக்கும் மோடி கடந்த 10 ஆண்டுகளில் கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதை பொதுமக்களுக்கு விளக்க முடியுமா?" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கச்சத்தீவை ஆரம்ப காலங்களில் இந்தியா வைத்திருந்தது.
    • சித்தார்த்தனின் இந்த கருத்து அரசியல் வட்டாரங்கள் கடந்து பொது மக்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    கொழும்பு:

    கச்சத்தீவு இலங்கையிடம் இருக்கிறதா அல்லது இந்தியாவிற்கு கொடுப்பதா என்று இரண்டு நாடுகளும் தெளிவாக ஆராய வேண்டும் என தமிழீழ விடுதலை கழகத்தின் தலைவரும், இலங்கையின் முன்னாள் எம்.பி.யுமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், கச்சத்தீவை ஆரம்ப காலங்களில் இந்தியா வைத்திருந்தது. பின்னர் இலங்கைக்கு கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஒவ்வொரு முறையும் இலங்கை இந்தியாவிற்கு கொடுப்பதும், இந்தியா இலங்கைக்கு கொடுப்பதுமாக இல்லாமல், ஒரு நிரந்தரமான நிரந்தர முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது கருத்து என்றார்.

    இலங்கையின் முன்னாள் எம்.பி தர்மலிங்கம் சித்தார்த்தனின் இந்த கருத்து அரசியல் வட்டாரங்கள் கடந்து பொது மக்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    ×