என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இந்தப் படம் விஜய் ஆண்டனியின் 25-வது படமாகும்.
    • அருவி, வாழ் படத்தின் இயக்குனரான அருண் பிரபு இந்தப் படத்தை இயக்குகிறார்.

    சென்னை:

    இயக்குனர் இமயம் பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகர் கண்ணன். இவர் காதல் ஓவியம் படத்தின் மூலம் மறக்கமுடியாத நடிகராக அறியப்பட்டவர்.

    இந்நிலையில், 'சக்தி திருமகன்' படத்திற்காக அழுத்தமான கதாபாத்திரத்தின் மூலம் மீண்டும் பெரிய திரைக்கு மறுபிரவேசம் செய்கிறார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது comeback இந்தப் படத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது.

    இதில் வாகை சந்திரசேகர், சுனில் கிரிப்லானி, செல் முருகன், திருப்தி ரவீந்திர, கிரண், ரியா ஜித்து, ஷோபா விஸ்வநாத் மற்றும் குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் கேசவ் என பலரும் நடித்துள்ளனர்.

    அருவி மற்றும் வாழ் படத்தின் இயக்குனரான அருண் பிரபு 'சக்தி திருமகன்' படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவாளர் ஷெல்லி காலிஸ்ட், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, எடிட்டர் ரேமண்ட் டெரிக் கிராஸ்தா, நடன இயக்குனர் ராஜசேகர் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் உள்ளனர்.

    இந்தப் படம் விஜய் ஆண்டனியின் 25-வது படமாகும். இந்தப் படத்தை மீரா விஜய் ஆண்டனி என்ற பெயரில் விஜய் ஆண்டனி பிலிம்ஸ் கார்ப்பரேஷன் தயாரித்துள்ளது.

    அழுத்தமான கதைசொல்லல் மற்றும் உணர்ச்சிகரமான நடிப்பால் இந்த படம் பார்வையாளர்களை நிச்சயம் ஈர்க்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    • எத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும் நான் மயங்கவில்லை.
    • எம்ஜிஆர்க்கு வந்த சோதனை யாருக்கும் வந்திருக்காது, கடையெழு வள்ளல்களை மிஞ்சியவர் எம்ஜிஆர்.

    ஈரோடு மாவட்டம் கோபியில் அதிமுக சார்பில் நடைபெறும் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார்.

    விழாவில் செங்கோட்டையன் பேசியதாவது:-

    அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான், என்னை சோதிக்காதீர்கள்.

    அதுதான் எனது வேண்டுகோள் நான் செல்கின்ற பாதை எம்.ஜி.ஆர்., அம்மா வகுத்த பாதை.

    அவர்களின் படங்கள் இல்லாததால்தான் விவசாயிகள் பாராட்டு விழாவில் கலந்துகொள்ளவில்லை.

    எத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும் நான் மயங்கவில்லை.

    எம்ஜிஆர்க்கு வந்த சோதனை யாருக்கும் வந்திருக்காது, கடையெழு வள்ளல்களை மிஞ்சியவர் எம்ஜிஆர்.

    எனது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பை நான் கேட்கவில்லை. அவர்களாகவே பந்தோபஸ்து தந்தார்கள்.

    அம்மா விரலை நீட்டும் போதே, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டவன் நான்.

    அவர் ஏன் என்னை கழட்டி விட்டார்? என்பதை சொல்ல முடியாத நிலை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை சென்னை - கும்மிடிப்பூண்டி இடையே 25 புறநகர் ரயில்கள் ரத்து.
    • பயணிகள் வசதிக்காக சென்ட்ரல் - பொன்னேரி இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

    சென்னை - கும்மிடிப்பூண்டி தடத்தில் நாளை 25 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (பிப். 13) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை சென்னை - கும்மிடிப்பூண்டி இடையே 25 புறநகர் ரயில்கள் ரத்து

    எனினும், பயணிகள் வசதிக்காக சென்ட்ரல் - பொன்னேரி இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

    • வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • பிரவீன் நுழைவுவாயில் பணியில் இருந்தபோது திடீரென தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

    அரக்கோணத்தில் உள்ள இந்திய கடற்படை விமானத்தள வளாகத்தில் பிரவீன் என்ற வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தற்கொலை செய்து கொண்ட வீரர் பிரவீன் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

    பிரவீன் நுழைவுவாயில் பணியில் இருந்தபோது திடீரென தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

    பிரவீன் தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேயர் பிரியா கிரிக்கெட் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
    • திமுக சார்பு அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சிக்கு பிறகு மேயர் ப்ரியா பேட்டி அளித்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி, திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த போட்டிகளில் இளைஞரணி, அயலக அணி, மாணவரணி, விளையாட்டு மேம்பாட்டு அணி உள்ளிட்ட 20 அணிகள் பங்கேற்க உள்ளன.

    இந்நிலையில், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் நடைபெற இருக்கும் கிரிக்கெட் போட்டிக்காக சென்னை மேயர் பிரியா தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    மேயர் பிரியா கிரிக்கெட் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    திமுக சார்பு அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சிக்கு பிறகு மேயர் ப்ரியா பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கழகத்தின் விளையாட்டு அணி சார்பாக விளையாட்டு அணியின் செயலாளர் தயாநிதி மாறன் சிறப்பு முறையில் கிரிக்கெட் போட்டி நடத்த இருக்கிறார்.

    இதை துணை செயலாளர் கவுதம் அவர்களும் மற்றும் ஜெசிகா அவர்களும் ஒன்றிணைந்து திருவல்லிக்கேணியில் உள்ள இந்த பகுதியில் பயிற்சியை மேற்கொண்டிருக்கிறோம்.

    இன்றைக்கு தமிழகத்தில் விளையாட்டு துறைக்கு என்ற தனித்துவத்தை பிற மாநிலங்களின் வேகத்தக்க அளவிற்கு துணை முதலமைச்சர் தமிழகத்தை வளர்த்து வருகிறார்.

    வரக்கூடிய இளைஞர்களுக்கு இன்றைய விளையாட்டுத்துறையில் தங்களுடைய சாதனைகளை பயன்பிக்க நல்ல ஒரு மேடையை தமிழக அரசு உருவாக்கி கொடுத்திருக்கிறது.

    அந்த வகையில் கழகத்தை சார்ந்தவர்களும் விளையாட்டில் உற்சாகமாக இருக்க வேண்டும் என்ற வகையில் சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துருக்கிறார்கள்.

    வரும் 14, 15, 16 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெற இருக்கிறது. திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்ககென் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கான ஆட்சியை நடத்தி வருகிறார். பெண்களுக்கான திட்டமாக இருக்கிறது. கட்சியில் இருக்கக்கூடிய பெண்களையும் சமத்துவமாக கொண்டு விளையாட்டு போட்டிகளில் உரிமையை வழங்கி இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பள்ளியில் மாணவி தாலியை மறைத்தபடி வந்ததை ஆசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
    • கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இது தொடர்பாக ஆசிரியர்கள் புகார் அளித்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கும் காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்த 25 வயது நபருடன் அண்மையில் திருமணம் நடந்துள்ளது.

    திருமணம் முடிந்த நிலையில், தாலியை ஆடைக்குள் மறைத்து வைத்தபடியே மாணவி பள்ளிக்கு வந்துள்ளார். ஆனால் மாணவி தாலியை மறைத்தபடி வந்ததை ஆசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    இதனையடுத்து ஆசிரியர்கள் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இது தொடர்பாக ஆசிரியர்கள் புகார் அளித்தனர்.

    வீட்டில் விஷேசம் எனக்கூறிய மாணவி 3 நாட்கள் திருமணத்திற்கு விடுப்பு எடுத்தது விசாரணையில் தெரியவந்த நிலையில் திருமணம் செய்த 25 வயது நபர் மற்றும் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • ஊடகவியலாளர்கள் ஒலிவாங்கியை நீட்டிவிட்டால் அண்ணன் சீமான் எதையாவது உளருவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்.
    • திரள் நிதி வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள சீமானுக்கு திறமையாளர்களின் ஆலோசனைகளை பெறுவது தவறாக தெரிவது ஆச்சரியமன்று.

    திருவண்ணாமலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு பதிலளித்த சீமான், " விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்தித்துக்கொண்டார்கள் என்று உங்கள் செய்தியை பார்த்து தெரிந்துகொண்டேன். வியூக வகுப்பில் எனக்கு உடன்பாடில்லை. பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் இதெல்லாம் தேவைப்படும்" என்றார்.

    விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பை 'பணக்கொழுப்பு' என விமர்சித்திருந்த சீமானுக்கு தமிழக வெற்றிக் கழகம் பதிலிடி அளித்துள்ளது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் சம்பத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஊடகவியலாளர்கள் ஒலிவாங்கியை நீட்டிவிட்டால் அண்ணன் சீமான் எதையாவது உளருவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்.

    சமகால சமூகச் சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் வியூக வடிவமைப்பாளர்களை நியமிப்பதன் அவசியத்தை புரிந்துகொள்ளாமல் பணக் கொழுப்பு என்று பகிரங்கமாக அறிவித்துள்ள அண்ணன் சீமானுக்கு நடைமுறை அரசியல் யதார்த்தம் புரியவில்லை என்று தான் அர்த்தமாகிறது.

    ஒவ்வொரு தேர்தலிலும் கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட அண்ணன் சீமான் இன்னும் எத்தனை ஆண்டுகள் "வென்றால் மகிழ்ச்சி,.தோற்றால் பயிற்சி" என்று நாம் தமிழர் உறவுகளை உசுப்பேத்திக் கொண்டே இருக்கப் போகிறாரோ தெரியவில்லை?

    திரள் நிதி வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள அண்ணன் சீமானுக்கு திறமையாளர்களின் ஆலோசனைகளை பெறுவது தவறாக தெரிவது ஆச்சரியமன்று.

    அண்ணே, நாங்கள் சட்டமன்றத்தில் பேசுவதற்காக அரசியல் செய்கிறோம், நீங்கள் பட்டிமன்றத்தில் பேசுவது தான் அரசியல் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.

    நாங்கள் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறுவது எப்படி என்று சிந்திக்கிறோம் நீங்கள் தமிழ்தேசிய அரசியலை எப்படி வெற்றி பெறாமல் வைத்திருப்பது என்று சிந்திக்கிறீர்கள்.

    பிரபாகரனிசத்தை முன்வைத்து கட்சி தொடங்கிய நீங்கள் இப்போது சீமானிசத்தில் கொண்டு போய் கட்சியை நிறுத்தியிருக்கிறீர்கள்.

    ஒன்று சொல்லட்டுமா அண்ணே, எங்கள் தலைவர் தளபதி விஜய் தன் ரசிகர்களை அரசியல் கட்சியின் தொண்டர்களாக உருமாற்றம், செய்து வருகிறார். நீங்கள் உங்கள் கட்சியின் தொண்டர்களை உங்கள் ரசிகர்களாக உருமாற்றம் செய்து வருகிறீர்கள். உங்களோடு என்றும் எங்களுக்கு ஒத்து போகாது அண்ணே....!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
    • அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசை குற்றம்சாட்டி வருகின்றன.

    தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    சமீபத்தில், கிருஷ்ணகிரி, திருச்சி, திருப்பூர் மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

    இந்த விவகாரத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசை குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்நிலையில், பள்ளிகளில் பாலியல் சார்ந்த துன்புறுத்தல்கள், தொல்லை இருந்தால் தெரிவிக்க வேண்டிய புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, பாலியல் தொடர்பாக புகார்கள் பள்ளி மாணவ, மாணவிகள் 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    தயக்கமின்றி புகார் தெரிவித்தால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மேலும், பள்ளிகளில் பாதுகாப்பற்ற சூழல், தேர்வு, உயர்கல்வி வழிகாட்டுதலுக்கும் இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பவே பெற்றோர்கள் பயந்து தயங்குகின்றனர்.
    • அதிகரித்துவரும் பாலியல் குற்றங்களை ஒடுக்க வேண்டிய உங்கள் இரும்புக்கரம் எங்கே முதல்வரே?

    பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பெருகி வருவது ஏன் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அரசுப்பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பெருகிவருவது ஏன் மு.க.ஸ்டாலின் அவர்களே..!

    புதுக்கோட்டை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் அப்பள்ளிகளின் ஆசிரியர்களே அங்குள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியாகியுள்ள செய்திகள், தமிழகத்தின் கல்வித்துறை தரம்தாழ்ந்து பாதாளத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதைத் தான் நமக்கு உணர்த்துகிறது.

    "பிச்சைப் புகினும் கற்கை நன்றே" என்று கல்வியின் அவசியத்தை உலகிற்கு எடுத்துக் கூறிய நமது தமிழகத்தில், நாளுக்கு நாள் அதிகரித்துவரும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பாலியல் அத்துமீறல்களால், பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பவே பெற்றோர்கள் பயந்து தயங்குகின்றனர் என்பது வேதனைக்குரியது.

    பள்ளி முதல் கல்லூரி வரை தொடரும் இந்த பாலியல் வன்கொடுமைகளால் பெண் பிள்ளைகளின் கல்வி பெருமளவில் பாதிக்கப்படும் என்பதை நீங்கள் இன்னும் உணரவில்லையா? அதிகரித்துவரும் பாலியல் குற்றங்களை ஒடுக்க வேண்டிய உங்கள் இரும்புக்கரம் எங்கே முதல்வரே?

    எனவே, "எந்தக் கொம்பனும் குறை சொல்லமுடியாத ஆட்சி" என்று இனியும் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாமல், அரசுக் கல்வி நிலையங்களில் தலைவிரித்தாடும் பாலியல் குற்றங்களை ஒடுக்க கடுமையான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆட்டோவில் பெண் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே வெளி ஆட்டோக்களுக்கு அனுமதி இல்லை.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே வெளி ஆட்டோக்களுக்கு அனுமதி இல்லை என ஆட்டோக்களுக்கு தாம்பரம் காவல்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோவில் பெண் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்க காவல் துறை சார்பில் முடிவு முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி:-

    * கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே வெளி ஆட்டோக்களுக்கு அனுமதி இல்லை.

    * காவல்துறையில் பதிவு செய்த ஆட்டோக்களை மட்டுமே கிளாம்பாக்கம் எதிரில் இருந்து இயக்க வேண்டும்.

    * கிளாம்பாக்கத்தில் ஆட்டோவில் ஏறும் முன் பயணிகள் ஓட்டுனரின் பதிவுச் சான்றிதழை பரிசோதிக்கலாம்.

    * பதிவு செய்யாமல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோக்களை இயக்கினால் பறிமுதல் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தென்னை, பனை மரங்களில் கள் இறக்க அனுமதிக்க வலியுறுத்தி 2009-ல் இருந்து போராடி வருகிறோம்.
    • கோவை, திருப்பூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், போராட்டத்துக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்தி வருகிறோம்.

    உடுமலை:

    தமிழகத்தில் மொத்தமாக 4.42 லட்சம் எக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள தென்னை சாகுபடியில் நோய்த்தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

    இப்பிரச்சினைக்கு தீர்வாக தென்னை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதிக்க வலியுறுத்தி கடந்த 2009ம் ஆண்டு முதல் கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதிக்க வேண்டியும், கள்ளை உணவு பட்டியலில் சேர்க்க வலியுறுத்தியும் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    இதற்காக திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் தமிழ்நாடு கள் இயக்கம், இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து திண்ணைக்கூட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து இந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் பெரியசாமி கூறியதாவது:-

    தென்னை, பனை மரங்களில் கள் இறக்க அனுமதிக்க வலியுறுத்தி 2009-ல் இருந்து போராடி வருகிறோம். ஆனால் அரசு கண்டு கொள்ளாததால் தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். எவ்வித தீங்கும் இல்லாத கள் விற்பனையால் டாஸ்மாக் வருவாய் பாதிக்கும் என்பதால் அரசு மவுனம் சாதித்து வருகிறது. இதை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்பட உள்ளது.

    கோவை, திருப்பூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், போராட்டத்துக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்தி வருகிறோம். இதே நிலை நீடித்தால் வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு எதிராக பிரசாரம் செய்யவும் திட்ட மிட்டுள்ளோம் என்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுச்செயலாளர் என்ற பதவியை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தக் கூடாது.
    • அவினாசி - அத்திக்கடவு திட்டத்துக்காக பாராட்டு விழா நடத்திய நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இல்லை.

    எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த வா.புகழேந்தி கூறியதாவது:-

    அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு எல்லா உரிமைகளும் உண்டு. தேர்தல் ஆணையம் விசாரிக்க முடியும் என்று ஒரு அருமையான தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்தல் ஆணையம் விசாரிப்பதற்கான தடையாணை நீக்கப்பட்டுள்ளது. நாங்கள் அனைவரும் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    இனி என்ன செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். எனவே பொதுச்செயலாளர் என்ற பதவியை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தக் கூடாது. கட்சி பெயரை பயன்படுத்தக் கூடாது. சிவில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. இனி அவர் ஊர் உலகத்தை ஏமாற்ற வேண்டாம்.

    இனி இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கும். நாங்கள் தேர்தல் ஆணையத்தை நோக்கி செல்வோம். எனது நோக்கம் எம்.ஜி.ஆர். கொடுத்த இரட்டை இலையை முடக்க வேண்டும் என்பது அல்ல. அது எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கக்கூடாது என்பது

    தான். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆகி இருக்க முடியாது.

    அவினாசி - அத்திக்கடவு திட்டத்துக்காக பாராட்டு விழா நடத்திய நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இல்லை. இது கண்டிக்கத்தக்கது. இந்த பாராட்டு விழாவுக்கு எடப்பாடி பழனிசாமி சென்றிருக்கிறார். எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பவர்கள், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை வீட்டிலிருந்து வெளியே எறிந்து விடுங்கள். ஜெயலலிதாவின் புகழை மறைக்க நினைப்பவர்களுக்கு பாடம் புகட்டாமல் விட மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×