என் மலர்tooltip icon

    பஞ்சாப்

    • நாடு முழுவதும் நேற்று முன்தினம் கிருஷ்ணர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது.
    • ‘மதத்தை கடந்த மனம்’, ‘இந்தியாவின் கலாசார ஒற்றுமை’ போன்ற கருத்துகளை பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

    நாடு முழுவதும் நேற்று முன்தினம் கிருஷ்ணர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. அன்று பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை கிருஷ்ணர், ராதைபோல அலங்காரம் செய்து சந்தோஷப்படுவார்கள். இந்தநிலையில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் படம்பிடிக்கப்பட்ட இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அதில் முஸ்லிம் தம்பதி ஒன்று தங்களுடைய மகனை கிருஷ்ணர்போல வேடமிட வைத்து இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ள இந்த வீடியோ, 'மதத்தை கடந்த மனம்', 'இந்தியாவின் கலாசார ஒற்றுமை' போன்ற கருத்துகளை பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

    • பஞ்சாப் அணிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு தவறாமல் ப்ரீத்தி ஜிந்தா நேரில் வந்து விடுவார்.
    • பஞ்சாப் அணியின் இணை உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தாவிடம் அந்த அணியின் 23% பங்குகள் உள்ளது.

    ஐபிஎல் தொடர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை ஒருமுறை கூட கோப்பை வென்றதில்லை. ஆனாலும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் ப்ரீத்தி ஜிந்தா தான்.

    ஒருகாலத்தில் பாலிவுட்டில் பிரபல நடிகையாக கோலோச்சிய ப்ரீத்தி ஜிந்தா தற்போது சினிமாவில் இருந்து விலகியுள்ளார். பஞ்சாப் அணிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு தவறாமல் ப்ரீத்தி ஜிந்தா நேரில் வந்து விடுவார்.

    பஞ்சாப் அணியின் இணை உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தாவிடம் அந்த அணியின் 23% பங்குகள் உள்ளது. சக உரிமையாளர்களான மோஹித் பர்மனுக்கு 48% பங்குகளும் நெஸ் வாடியாவிற்கு 23% பங்குகளும் கரண் பாலுக்கு 6% பங்குகளும் உள்ளது.

    இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் இணை உரிமையாளரான மோஹித் பர்மன் தனது பங்குகளில் ஒரு பகுதியை மூன்றாம் தரப்பினருக்கு விற்பதைத் தடுக்க கோரி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தை ப்ரீத்தி ஜிந்தா நாடியுள்ளார். இந்த வழக்கு ஆகஸ்ட் 20ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

    மோஹித் பர்மன் தனது பங்குகளில் 11.5 சதவீதத்தை விற்க உள்ளார் என்றும் இது ப்ரீத்தி ஜிந்தாவிற்கு சாதகமாக இருக்காது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தகவல்களை மோஹித் பர்மன் மறுத்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரவீந்தர் அவரது தம்பி, மகன், உறவினர் என நால்வருமாக சேர்ந்து இளைஞனின் சகோதரியைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர்
    • நடந்ததை வெளியே சொன்னால் வீடியோவை வெளியிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

    பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தங்கள் வீட்டுப் பெண்ணை இழுத்துச்சென்ற இளைஞனின் சகோதரியைப் பெண்ணின் தகப்பன் உட்பட 4 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரப் பிரதேசம் கோரக்பூரைச் சேர்ந்த ரவீந்தர் சிங் என்பவரது மகள் அப்பகுதியில் வசித்து வந்த பஞ்சாபை சேர்ந்த இளைஞனை காதலித்து வந்த நிலையில் ரவீந்தர் சிங்கின் எதிர்ப்பை மீறி கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் புது வாழ்வைத் தொடங்க ஊரைவிட்டு சென்றுள்ளனர்.

    இதனால் ஆத்திரத்தில் இருந்த ருந்த ரவீந்தர் சிங், அவரது தம்பி வீரேந்தர் சிங், மகன் அமன் சிங் மற்றும் உறவினர் சந்தோஷ் சிங் ஆகிய நால்வருமாக சேர்ந்து கடந்த மே 1 ஆம் தேதி பஞ்சாபில் அந்த இளைஞனின் சொந்த ஊரான லூதியானாவுக்கு சென்றுள்ளனர்.

    அங்கு வீட்டில் தனது மகளை இழுத்துச்சென்ற இளைஞனின் சகோதரி இருந்த நிலையில் அவரை ரவீந்தர் அவரது தம்பி, மகன், உறவினர் என நால்வருமாக சேர்ந்து இளைஞனின் சகோதரியைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோவும் எடுத்துள்ளனர்.  நடந்ததை வெளியே சொன்னால்  வீடியோவை  ரிலீஸ் செய்துவிடும் என்று மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

    இதனால் கடந்த 3 மாதகங்களாகப் பயத்திலும், அதிர்ச்சியிலும் இருந்த இளைஞனின் சகோதரி தற்போது இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளதால் இந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் நால்வர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளைஞனின் சகோதரி இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • கனமழையால் ஜெய்ஜோன் சோ நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • ஆற்றில் இருந்து 5 பெண்களின் சடலங்கள் உட்பட 9 பேரில் உடல்கள் மீட்கப்பட்டன.

    இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கனமழையால் வாடா இந்திய மாநிலங்கள் வெள்ளக்காடாக மிதக்கின்றன.

    பஞ்சாப் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பருவகாலங்களில் மட்டும் தண்ணீர் வரும் நதியான ஜெய்ஜோன் சோவில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    திருமண நிகழ்விற்காக இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் காரில் வந்துள்ளனர். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள ஜெய்ஜோன் சோ நதியை கடக்கும் போது அவர்கள் வந்த கார் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

    ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அதனை கடக்க வேண்டாம் என்று கார் ஓட்டுநரிடம் உள்ளூர் மக்கள் எச்சரித்த போதும் அதனை பொருட்படுத்தாமல் அவர்கள் ஆற்றை கடந்துள்ளனர்.

    ஆற்றில் இருந்து 5 பெண்களின் சடலங்கள் உட்பட 9 பேரில் உடல்கள் மீட்கப்பட்டன. காணாமல் போன 2 பேரை தேடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    காரில் பயணித்த தீபக் பாட்டியா என்பவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ளூர் மக்கள் அனுமதித்தனர்.

    இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, இந்த துயரச் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு மாநில அரசு உறுதுணையாக நிற்கும் என்று தெரிவித்துள்ளார். 

    • ஹாக்கியில் இந்தியா வெண்கலம் வென்றதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தனர்.
    • உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    சண்டிகர்:

    ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவும், ஸ்பெயினும் இன்று மோதின.

    இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியது.

    ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா வெண்கலம் வென்றதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    மேலும், உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் முதல் மந்திரியான பகவந்த்சிங் மான் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம்பிடித்துள்ள பஞ்சாப் வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என பதிவிட்டுள்ளார்.

    ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன்பிரித் சிங், துணை கேப்டன் ஹர்திக் சிங் உள்பட 10 வீரர்கள் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பயிற்சியாளர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்தும் இப்படிப்பட்ட தவறுகள் நடக்கின்றன
    • வினேஷ் போகத் நிச்சயம் தங்கம் வென்றிருப்பார்

    பாரீஸ் ஒலிம்பிக்கில் நேற்றிரவு நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை குஸ்மானை வீழ்த்தி இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றார்.

    இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார். இந்த நிலையில், வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

    இதனையடுத்து, வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து அவரது மாமா மகாவீர் போகத் கண்ணீர் மல்க பேசினார்.

    "நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. வினேஷிடம் இருந்து தங்கத்தை நாடே எதிர்பார்த்தது. போட்டியில் விதிகள் உள்ளன, ஆனால் ஒரு மல்யுத்த வீரர் 50-100 கிராம் அதிக எடையுடன் இருந்தால் வழக்கமாக அனுமதிப்பார்கள். வேதனையடைய வேண்டாம் என மக்களைக் கேட்டுக் கொள்கிறேன், ஒரு நாள் அவர் நிச்சயம் ஒரு பதக்கத்தைக் கொண்டு வருவாள். அடுத்த ஒலிம்பிக்கிற்கு அவரை தயார் செய்வேன்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், இன்று பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான் வினேஷ் போகத்தின் மாமா மகாவீர் போகத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

    இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை நான் அரசியலாக்க விரும்பவில்லை. ஆனால் பயிற்சியாளர்களுக்கும், பிசியோதெரப்பி நிபுணர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்தும் இப்படிப்பட்ட தவறுகள் நடக்கின்றன. பயிற்சியாளர்கள் பாரிஸுக்கு சுற்றுலா சென்றிருக்கிறதா?

    வினேஷ் போகத் விளையாடிய அரையிறுதி போட்டியை நான் பார்த்தேன். அவர் நிச்சயம் தங்கம் வென்றிருப்பார்" என்று வேதனையுடன் தெரிவித்தார். 

    • ரயில் மதாத் செயலி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது
    • சமீப காலமாக காஸ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் அதிகரித்து வருவதால் இந்த விவகாரம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

    ஜம்மு காஷிரில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நோக்கி இன்று அதிகாலை வந்தொண்டிருந்த ஜம்மு- ஜோத்புர் பயணிகள் விரைவு ரெயிலுக்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பாதியிலேயே நிறுத்தப்பட்டச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசாருக்கு பயணிகள் குறைதீர் செயலியான ரயில் மதாத் செயலி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் பிரோஸ்பூரில் உள்ள காசு பேகு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

    வெடிகுண்டு நிபுணர்கள் ரெயிலை சோதனையிட்ட நிலையில் விஷயம் அறிந்து பயணிகள் அலறியடித்து ரெயிலை விட்டு வெளியேறினர். ஆனால் சோதனையில் வெடிகுண்டுகள் ஏதும் சிக்காததால் அது போலியான மிரட்டல் என்று பின்னர் தெரியவந்தது. இந்நிலையில் செயலியில் மிரட்டல் வந்த செல் நம்பரைக் கொண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். சமீப காலமாக காஸ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் அதிகரித்து வருவதால் இந்த விவகாரம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

    • அக்னிபாத் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று அக்னி வீரரான இளைஞர் ஒருவர் வழிப்பறி கொல்லைகளில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • அக்னிவீரராக வங்க தேசத்தில் பணியாற்றி வந்த இஷ்மீத் சிங் வங்க தேசத்தில் பணியாற்றிவந்தார்.

    சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ள ராணுவவீரர்கள் ஆட்சேர்ப்பு திட்டமான அக்னிபாத் திட்டத்தின் மீதான விமர்சனங்கள் வலுவடையத் துவங்கியுள்ளன. அக்னிபாத் திட்டம் மூலம், 17.5 முதல் 23 வயதுடைய இளைஞர்களுக்கு ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். ஆனால் 25% பேர் மட்டுமே நிரந்தர பணி வழங்கப்படும்

    இந்த திட்டம் இளைஞர்களைப் பயன்படுத்திவிட்டு அவர்களைத் தூக்கியெறியும் வகையில் உள்ளது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று அக்னி வீரரான இளைஞர் ஒருவர் வழிப்பறி கொல்லைகளில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 2022 ஆம் ஆண்டு அக்னிபாத் திட்டத்தில் சேர்ந்தவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் இஷ்மீத் சிங். பயிற்சிபெற்ற அக்னிவீரராக வங்க தேசத்தில் பணியாற்றி வந்த இஷ்மீத் சிங் கடந்த 2 மாதங்களுக்கு முன் விடுப்பில் பஞ்சாப் திருப்பிய நிலையில் மீண்டும் பணிக்கு செல்லாமல் தனது சகோதரர் பிரப்பிரீத் சிங் மற்றும் நண்பர் பால்கரன் சிங் ஆகியோருடன் இணைந்து நெடுஞ்சாலைகளில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.

    பஞ்சாபின் மொகாலியில் உள்ள பாலோங்கி பகுதியில் அறை ஒன்றை வாடைக்கு எடுத்துத் தங்கி அங்கிருந்தபடி சகோதரர் மற்றும் நபருடன் சேர்ந்து திருட்டு, கொள்ளை மற்றும் வழிபறிகளில் ஈடுபட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கான்பூரிலிருந்து சட்டவிரோதமாக ஆயுதங்களை வாங்கிய இஷ்மீத் சிங் கும்பல் அதைப் பயன்படுத்தி வாகனங்களில் செல்பவர்களை மிரட்டி வழிப்பறி செய்து வந்துள்ளனர்.

     

    இதுதொடர்பாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் போலீசார் நடத்திய விசாணையில் இஷ்மீத் சிங் கும்பல் சிக்கியுள்ளது. தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது. அக்னி வீரராப் பயிற்சி பெற்ற ஒருவர் கொள்ளையனாக மாறிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    • பஞ்சாபின் முன்னேற்றத்திற்காக உழைக்க விரும்பும் அனைத்து மக்களுக்கும் மேடையை வழங்குவதே எங்களது முக்கிய நோக்கம்.
    • மக்கள் பாஜக மற்றும் காங்கிரஸை முற்றிலுமாக நிராகரித்து விட்டனர்.

    முன்னாள் துணை மேயர் பர்வேஷ் டாங்ரி, முன்னாள் பிஎஸ்எஸ்சி இயக்குநரும், வார்டு எண் 78 ஜகதீஷ் ராம் சாம்ராய் மற்றும் ராஜ் குமார் ராஜு ஆகியோர் பா.ஜ.க மற்றும் காங்கிரசில் இருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளனர்.

    பஞ்சாப்பில் ஜகதீஷ் ராம் சாம்ராய் ஒரு முக்கிய தலைவர். பல ஆண்டுகளாக அரசியலில் தீவிரமாக உள்ள அவர் பிபிசிசியில் பல பதவிகளை வகித்துள்ளார். ஜலந்தர் மேற்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கு முன்பாக துணை மேயர் மற்றும் எம்.சி.க்கள் அந்தந்த கட்சிகளில் இருந்து விலகியிருப்பது பாஜக மற்றும் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

    பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் நகராட்சியில் கவுன்சிலராக உள்ள ஜகதீஷ்ம் ராம் சாம்ராய் கடந்த 40 நாட்களில் 3 கட்சிகளுக்கு தாவியுள்ளார்.

    காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.க.வுக்கு தாவி பிரசாரத்தில் ஈடுபட்ட இவர் நேற்று அம்மாநில முதலமைச்சரை சந்தித்து ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ளார்.

    நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பகவந்த் மான் கூறுகையில், ஆம் ஆத்மி கட்சி நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது, மேலும் ஜலந்தர் மேற்கு இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றியைப் பதிவு செய்யும்.

    நாங்கள் ஒரு குடும்பம் போன்றவர்கள். பஞ்சாபின் முன்னேற்றத்திற்காக உழைக்க விரும்பும் அனைத்து மக்களுக்கும் மேடையை வழங்குவதே எங்களது முக்கிய நோக்கம். மக்கள் பாஜக மற்றும் காங்கிரஸை முற்றிலுமாக நிராகரித்து விட்டனர். அவர்களின் தலைவர்கள் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியில் இணைவது, அனைத்து தலைவர்களும் தங்கள் எதிர்காலத்தையும், பஞ்சாபின் எதிர்காலத்தையும் ஆம் ஆத்மி கட்சியுடன்தான் பார்க்கிறார்கள் என்பதை நிரூபிக்கிறது, என்று மான் கூறினார்.

    • பெண் ஒருவர், தான் செய்த யோகா தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • அர்ச்சனாவை பொற்கோவிலில் யோகா செய்ய அனுமதித்தது தொடர்பாக ஊழியர்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சர்வதேச யோகா தினமான நேற்றுமுன்தினம் (ஜூன் 21) கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் என பலரும் தாங்கள் செய்த யோகா தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

    அந்த வகையில், பெண் ஒருவர், தான் செய்த யோகா தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் வெளியிட்ட வீடியோவுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

    இன்ஸ்டாகிராம் பிரபலமான அர்ச்சனா மக்வானா என்பவர் பல வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அப்படி அவர் அமிர்தசரஸில் அமைந்துள்ள பொற்கோவிலில் யோகா செய்த வீடியோவை பகிர்ந்தார்.

    இந்த வீடியோ காட்சிகள் சீக்கிய சமூகத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து அர்ச்சனா மக்வானா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே அர்ச்சனாவை பொற்கோவிலில் யோகா செய்ய அனுமதித்தது தொடர்பாக ஊழியர்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, அர்ச்சனா மக்வானா பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பஞ்சாப் மாநிலத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் எல்லை பாதுகாப்பு படை தேடுதல் வேட்டை நடத்தினர்.
    • எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் பஞ்சாப் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ட்ரோன் ஒன்றை பறிமுதல் செய்தனர்.

    பஞ்சாப் மாநிலத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் எல்லை பாதுகாப்பு படை தேடுதல் வேட்டை நடத்தினர்.

    அமிர்தசரஸ் மாவட்டம் ரத்தன்குர்த் பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ட்ரோன் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. இதே போன்று தர்ன் தரன் மாவட்டத்தில் தால் கிராமத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் பஞ்சாப் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ட்ரோன் ஒன்றை பறிமுதல் செய்தனர்.

    தேடுதல் வேட்டையில் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு ட்ரோன்களும் சீனாவில் தயாரிக்கப்பட்ட DJI Mavic 3 Classic மாடல்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • பாஜக அரசுக்கு எதிராக போராடிய விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என கங்கனா பேசினார்.
    • குல்விந்தர் கவுர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சண்டிகர் விமான நிலையத்தில் வைத்து, மண்டி தொகுதி எம்.பி.யும் பாலிவுட் நடிகையுமான கங்கனா ரனாவத்தை குல்விந்தர் கவுர் என்ற மத்திய தொழிற்பாதுகாப்புப்படை பெண் காவலர் கன்னத்தில் அறைந்த விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது.

    பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்- ஹரியானா விவசாயிகள் வருடக்கணக்கில் போராட்டம் நடத்தினர். அப்போது பாஜக அரசுக்கு எதிராக போராடிய அனைத்து விவசாயிகளும் தனி நாடு கோரும் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கங்கனா பேசினார். இதன் காரணமாகவே கங்கானா கன்னத்தில் அறைந்ததாக பெண் காவலர் தெரிவித்துள்ளார்.

    இதனைத்தொடர்ந்து குல்விந்தர் கவுர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் பஞ்சாப் விவசாய சங்கங்கள் குல்விந்தர் கவுருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் குலவுந்தருக்கு ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டால் மாபெரும் அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது.

    அதன்படி, பெண் காவலர் குல்வீந்தர் கவுர் மீதான வழக்கு நேர்மையான முறையில் விசாரிக்கப்பட வேண்டும் என்று மொகாலில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை நோக்கி விவசாயிகள் இன்று பேரணியாக சென்றனர்.

    இந்த சம்பவத்துக்கு பிறகு கங்கனா வெளியிட்ட வீடியோவில் பஞ்சாபியர்கள் அனைவரும் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்ற தொனியில் பேசி மத நம்பிக்கைகளை புண் படுத்தியுள்ளதால் அவர் மீது எப்.ஐ.ஆர் பதிய வேண்டும் என்றும் விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளது.

    ×