என் மலர்
இந்தியா

40 நாட்களில் 3 கட்சிகளுக்கு தாவிய கவுன்சிலர்.. இப்போ எந்த கட்சியில் இருக்கிறார் தெரியுமா?
- பஞ்சாபின் முன்னேற்றத்திற்காக உழைக்க விரும்பும் அனைத்து மக்களுக்கும் மேடையை வழங்குவதே எங்களது முக்கிய நோக்கம்.
- மக்கள் பாஜக மற்றும் காங்கிரஸை முற்றிலுமாக நிராகரித்து விட்டனர்.
முன்னாள் துணை மேயர் பர்வேஷ் டாங்ரி, முன்னாள் பிஎஸ்எஸ்சி இயக்குநரும், வார்டு எண் 78 ஜகதீஷ் ராம் சாம்ராய் மற்றும் ராஜ் குமார் ராஜு ஆகியோர் பா.ஜ.க மற்றும் காங்கிரசில் இருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளனர்.
பஞ்சாப்பில் ஜகதீஷ் ராம் சாம்ராய் ஒரு முக்கிய தலைவர். பல ஆண்டுகளாக அரசியலில் தீவிரமாக உள்ள அவர் பிபிசிசியில் பல பதவிகளை வகித்துள்ளார். ஜலந்தர் மேற்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கு முன்பாக துணை மேயர் மற்றும் எம்.சி.க்கள் அந்தந்த கட்சிகளில் இருந்து விலகியிருப்பது பாஜக மற்றும் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் நகராட்சியில் கவுன்சிலராக உள்ள ஜகதீஷ்ம் ராம் சாம்ராய் கடந்த 40 நாட்களில் 3 கட்சிகளுக்கு தாவியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.க.வுக்கு தாவி பிரசாரத்தில் ஈடுபட்ட இவர் நேற்று அம்மாநில முதலமைச்சரை சந்தித்து ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ளார்.
நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பகவந்த் மான் கூறுகையில், ஆம் ஆத்மி கட்சி நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது, மேலும் ஜலந்தர் மேற்கு இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றியைப் பதிவு செய்யும்.
நாங்கள் ஒரு குடும்பம் போன்றவர்கள். பஞ்சாபின் முன்னேற்றத்திற்காக உழைக்க விரும்பும் அனைத்து மக்களுக்கும் மேடையை வழங்குவதே எங்களது முக்கிய நோக்கம். மக்கள் பாஜக மற்றும் காங்கிரஸை முற்றிலுமாக நிராகரித்து விட்டனர். அவர்களின் தலைவர்கள் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியில் இணைவது, அனைத்து தலைவர்களும் தங்கள் எதிர்காலத்தையும், பஞ்சாபின் எதிர்காலத்தையும் ஆம் ஆத்மி கட்சியுடன்தான் பார்க்கிறார்கள் என்பதை நிரூபிக்கிறது, என்று மான் கூறினார்.






