மதம் என பிரிந்தது போதும்.. மகனுக்கு கிருஷ்ணர் வேடமிட்ட முஸ்லிம் தம்பதி- வைரலாகும் வீடியோ

நாடு முழுவதும் நேற்று முன்தினம் கிருஷ்ணர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. ‘மதத்தை கடந்த மனம்’, ‘இந்தியாவின் கலாசார ஒற்றுமை’ போன்ற கருத்துகளை பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
மதம் என பிரிந்தது போதும்.. மகனுக்கு கிருஷ்ணர் வேடமிட்ட முஸ்லிம் தம்பதி- வைரலாகும் வீடியோ
Published on

நாடு முழுவதும் நேற்று முன்தினம் கிருஷ்ணர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. அன்று பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை கிருஷ்ணர், ராதைபோல அலங்காரம் செய்து சந்தோஷப்படுவார்கள். இந்தநிலையில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் படம்பிடிக்கப்பட்ட இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் முஸ்லிம் தம்பதி ஒன்று தங்களுடைய மகனை கிருஷ்ணர்போல வேடமிட வைத்து இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ள இந்த வீடியோ, 'மதத்தை கடந்த மனம்', 'இந்தியாவின் கலாசார ஒற்றுமை' போன்ற கருத்துகளை பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com