என் மலர்
ஒடிசா
- நீண்ட காலமாக தனது மனைவி மற்றும் குழந்தைகளிடமிருந்து பிரிந்து வசித்து வந்தார்.
- இரவு முழுவதும் அவர்களின் உடல்களின் அருகே ஹிமான்ஷு ரத்த வெள்ளத்தில் அமர்ந்திருந்தார்.
ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் தோனாபால் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஹிமான்ஷு (55).
மதுவுக்கு அடிமையான இவர், சண்டை காரணமாக நீண்ட காலமாக தனது மனைவி மற்றும் குழந்தைகளிடமிருந்து பிரிந்து வசித்து வந்தார்.
இதற்கிடையில், ஹிமான்ஷு செவ்வாய்க்கிழமை இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். தனது வயதான பெற்றோர்களான ஹதிபந்து சாஹு (81) மற்றும் சாந்தி சாஹு (72) ஆகியோருடன் சண்டையிட்டார்.
கோபத்தில், கற்களை உடைக்கும் பெரிய சுத்தியலால் அவர்களை அடித்தார். இதன் விளைவாக, பெற்றோர் துடிதுடித்து இறந்தனர். இரவு முழுவதும் அவர்களின் உடல்களின் அருகே ஹிமான்ஷு ரத்த வெள்ளத்தில் அமர்ந்திருந்தார்.
இன்று (புதன்கிழமை) காலை, அக்கபக்கத்தினர் ஹிமான்ஷு பெற்றோரின் உடல் அருகே அமர்ந்திருந்தது கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.
தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹிமான்ஷுவை கைது செய்தனர். பெற்றோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பரிபாடாவில் உள்ள பிஆர்எம் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.
- பேராசிரியர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லையளித்ததாக மாணவி புகார் தெரிவித்திருந்தார்.
- இந்த புகார் குறித்து நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஒடிசா மாநிலத்தின் பாலசோர் நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். பேராசிரியரின் தகாத நடவடிக்கை குறித்து கல்லூரி புகார் குழுவிடம் ஜூலை 1 ஆம் தேதி மாணவி புகார் அளித்தார். அந்த புகாரில் பேராசிரியர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லையளித்ததாகவும், மிரட்டியதாகவும் மாணவி தெரிவித்திருந்தார். இருப்பினும், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை ஆசிரியர் சமீர்குமார் சாஹு மறுத்தார்.
அதனை தொடர்ந்து ஒரு வாரத்துக்குள் இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் உறுதியளித்தாலும், நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து கடந்த 12-ந்தேதி கல்லூரிக்குள் மாணவியுடன் சேர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, திடீரென முதல்வர் அலுவலகத்தின் அருகே தன் மீது பெட்ரோல் ஊற்றி, மாணவி தீக்குளித்தார். மருத்துவமனையில் 3 நாட்களாக உயிருக்கு போராடிய நிலையில், நேற்று இரவு கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
இதற்கிடையே, புகாரை வாபஸ் பெறும் படி, கல்லூரியின் முதல்வரும், புகார்கள் குழு உறுப்பினர்களும் அழுத்தம் கொடுத்ததாக மாணவியின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். மேலும் புகாரை வாபஸ் பெறவில்லை என்றால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்றும் கைது செய்யப்படுவீர்கள் என்றும் மிரட்டல் விடுத்ததாகவும் கூறினார்.
இதனை தொடர்ந்து, கல்லூரியின் துறைத் தலைவர் மற்றும் முதல்வர் திலீப் கோஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகார் மீது உரிய விசாரணை நடத்தப்படவில்லை என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், "ஒடிசாவில் நீதிக்காக போராடிய மகளின் மரணம், பாஜக அமைப்பால் செய்யப்பட்ட கொலையே தவிர வேறொன்றும் இல்லை. தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தலை துணிச்சலாக பேசினார் அந்த மாணவி. ஆனால் நீதி வழங்கப்படவில்லை. மாறாக அச்சுறுத்தப்பட்டார். துன்புறுத்தப்பட்டார். மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தப்பட்டார். அவளை பாதுகாக்க வேண்டியவர்களே அவளை சுக்குநூறாக உடைத்தார்கள்
இது தற்கொலை அல்ல. இது அமைப்பின் திட்டமிட்ட படுகொலை. மோடி ஜி, ஒடிசாவாக இருந்தாலும் சரி, மணிப்பூராக இருந்தாலும் சரி... நாட்டின் மகள்கள் எரிந்து, உடைந்து, இறந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அமைதியாகவே இருக்கிறீர்கள். நாட்டிற்கு உங்கள் மௌனம் தேவையில்லை. பதில்தான் தேவை. இந்தியாவின் மகள்களுக்கு பாதுகாப்பும் நீதியும் தேவை" என்று தெரிவித்துள்ளார்.
- கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து கடந்த 12-ந்தேதி கல்லூரிக்குள் மாணவியுடன் சேர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
- திடீரென முதல்வர் அலுவலகத்தின் அருகே தன் மீது பெட்ரோல் ஊற்றி, மாணவி தீக்குளித்தார்.
ஒடிசா மாநிலத்தின் பாலசோர் நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். பேராசிரியரின் தகாத நடவடிக்கை குறித்து கல்லூரி புகார் குழுவிடம் ஜூலை 1 ஆம் தேதி மாணவி புகார் அளித்தார். அந்த புகாரில் பேராசிரியர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லையளித்ததாகவும், மிரட்டியதாகவும் மாணவி தெரிவித்திருந்தார். இருப்பினும், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை ஆசிரியர் சமீர்குமார் சாஹு மறுத்தார்.
அதனை தொடர்ந்து ஒரு வாரத்துக்குள் இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் உறுதியளித்தாலும், நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து கடந்த 12-ந்தேதி கல்லூரிக்குள் மாணவியுடன் சேர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, திடீரென முதல்வர் அலுவலகத்தின் அருகே தன் மீது பெட்ரோல் ஊற்றி, மாணவி தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த மாணவியை மீட்டு புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி 95 சதவீத தீக்காயங்களுடன் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக ஒடிசா காவல்துறை தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், தீக்குளித்த 22 வயது கல்லூரி மாணவி, 3 நாட்களாக உயிருக்கு போராடிய நிலையில், நேற்று இரவு உயிரிழந்தார்.
இதற்கிடையே, புகாரை வாபஸ் பெறும் படி, கல்லூரியின் முதல்வரும், புகார்கள் குழு உறுப்பினர்களும் அழுத்தம் கொடுத்ததாக மாணவியின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். மேலும் புகாரை வாபஸ் பெறவில்லை என்றால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்றும் கைது செய்யப்படுவீர்கள் என்றும் மிரட்டல் விடுத்ததாகவும் கூறினார்.
இதனை தொடர்ந்து, கல்லூரியின் துறைத் தலைவர் மற்றும் முதல்வர் திலீப் கோஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே, மாணவியின் மறைவுக்கு முதலமைச்சர் மோகன் சரண் மாஜி இரங்கல் தெரிவித்ததோடு, குற்றவாளிகள் அனைவரும் கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள் என்று அவரது குடும்பத்தினருக்கு உறுதியளித்துள்ளார்.
- வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் அஸ்தரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
- பாதுகாப்புத்துறை சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா புதிய மைல் கல்லை எட்டி இருக்கிறது.
புவனேஸ்வர்:
ஒடிசா கடலோர பகுதியில் வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் அஸ்தரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
இதுதொடர்பாக, பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ. இந்திய விமானப் படையுடன் இணைந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானத்தில் இருந்து அஸ்தரா ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.
ஒடிசா கடலோர பகுதியில் சுகோய் போர் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. ஆளில்லா விமானங்கள் மூலம் இருவேறு இடங்களில் அனுப்பப்பட்ட இரு இலக்குகளையும் அஸ்தரா ஏவுகணை துல்லியமாக அழித்தது.
ஏவுகணையின் அனைத்து செயல்பாடுகளும் ஒடிசாவில் உள்ள சந்திப்பூர் ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை மையத்தின் மூலம் பெறப்பட்ட தரவுகள் கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டபோது அவை மிகச்சிறப்பாக செயல்பட்டன என தெரிய வந்தது. இதன்மூலம் பாதுகாப்புத்துறை சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா புதிய மைல் கல்லை எட்டி இருக்கிறது.
மத்திய பாதுகாப்பு மற்றும் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் மட்டுமின்றி ஹிந்துஸ்தான் விமான நிறுவனம் உள்பட 50க்கும் மேற்பட்ட பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் அஸ்தரா ஏவுகணை உருவாக்கத்தில் பங்கெடுத்துள்ளன.
இந்நிலையில், அஸ்தரா ஏவுகணை உருவாக்கம் மற்றும் வெற்றிகரமான சோதனையில் பங்கெடுத்த அனைவருக்கும் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்
- ஒருபுறம், வயது முதிர்வு மறுபுறம் நாய் கடித்த காயம் ஆகியவற்றால் அவர் நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டார்.
- மூதாட்டி கால் கடுக்க நடந்து சென்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒடிசாவின் நுவபாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 95 வயது மூதாட்டி மங்கல் பாரி மொஹாரா. ஒரு அடி எடுத்து வைப்பது கூட அவருக்கு சிரமமானது. இந்த சூழலில் சமீபத்தில் மூதாட்டி மொஹாராவை ஒரு நாய் கடித்தது.
அவருக்கு ஆரம்ப சிகிச்சை அளித்த உள்ளூர் மருத்துவர் அவருக்கு ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும், ஆனால் தற்போது தன்னிடம் தடுப்பூசி இல்லை என்று கூறினார்.
இதனால் மோஹாரா, தடுப்பூசி போடுவதற்காக தனது கிராமத்திற்கு அருகிலுள்ள சீனப்பள்ளி சமூக சுகாதார மையத்திற்குச் செல்ல வேண்டி இருந்தது.
பத்து கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள சீனப்பள்ளிக்குச் செல்ல போக்குவரத்து வசதி இல்லாததால், மொஹாரா கால்நடையாகவே புறப்பட்டார்.
ஒருபுறம், வயது முதிர்வு மறுபுறம் நாய் கடித்த காயம் ஆகியவற்றால் அவர் நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டார். பெரும் சிரமங்களுக்கு இடையில் அங்கு தடுப்பூசி போட்ட பிறகு, அவர் கிராமத்திற்குத் 10 கி.மீ திரும்பி நடந்தார். மூதாட்டி கால் கடுக்க நடந்து சென்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- நாடு முழுவதும் நமது அரசியலமைப்பு சட்டம் மீது பா.ஜ.க. தாக்குதல் நடத்துகிறது.
- தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வின் நலன்களுக்காக பணியாற்றுகிறது என தெரிவித்தார்.
புவனேஸ்வர்:
ஒடிசாவில் நேற்று நடந்த அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
மகாராஷ்டிராவைப் போல பீகார் சட்டசபை தேர்தலையும் அபகரிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
நாடு முழுவதும் நமது அரசியலமைப்பு சட்டம் மீது பா.ஜ.க. தாக்குதல் நடத்துகிறது.
இங்கு நேற்று முன்தினம் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில் பீகார் தேர்தலை பா.ஜ.க. திருடுவதை தடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
தேர்தல் ஆணையம் தனது பணியை செய்யவில்லை. மாறாக பா.ஜ.க.வின் நலன்களுக்காக பணியாற்றுகிறது.
பா.ஜ.க. 5 முதல் 6 முதலாளிகளுக்காக மட்டுமே அரசை நடத்துகிறது. சாதாரண மக்களுக்காக செயல்படவில்லை.
நீர், காடு மற்றும் நிலம் பழங்குடியினருக்கானது. தொடர்ந்து அவர்களிடமே இருக்கும்.
பஞ்சாயத்துகள் (திட்டமிட்ட பகுதிகளுக்கு நீட்டிப்பு) சட்டம் 1996-ஐ ஒடிசா பா.ஜ.க. அரசு அமல்படுத்தவில்லை. பழங்குடியினருக்கு வன உரிமை பட்டாக்கள் வழங்கப்படவில்லை.
பிஜு ஜனதா தள அரசைப் போலவே பா.ஜ.க. அரசும் ஒடிசாவை கொள்ளையடிக்கிறது என தெரிவித்தார்.
- உள்ளூர் சமூக விதிமுறைகளை மீறி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.
- அப்போது சிலர் அவர்களை அடித்து முள் குச்சிகளால் குத்துவதும் வெளியான வீடியோவில் காணப்பட்டது.
ஒடிசாவில் காதலித்து திருமணம் செய்த இளம் ஜோடியை சிலர் காளைகளைப் போல கலப்பையில் கட்டி வைத்து வயலை உழுத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ராயகடா மாவட்டத்தின் கஞ்சமாஜிரா கிராமத்தில் இளம் பெண்ணும் ஒரு இளைஞனும் உள்ளூர் சமூக விதிமுறைகளை மீறி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.
இதற்கு தண்டனையாக, அவர்கள் நுகத்தடியில் கட்டி வைக்கப்பட்டு காளைகளைப் போல வயலை உளுத்துள்னர். அப்போது சிலர் அவர்களை அடித்து முள் குச்சிகளால் குத்துவதும் வெளியான வீடியோவில் காணப்பட்டது.
இந்த வீடியோ வைரலான நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மகாராஷ்டிராவை போன்று, பீகாரிலும் தேர்தலை அபகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
- நாடு முழுவதும் நமது அரசியலமைப்பை பாஜக தாக்கிக் கொண்டு வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மகாராஷ்டிராவை போன்று, பீகாரிலும் தேர்தலை அபகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. நாடு முழுவதும் நமது அரசியலமைப்பை பாஜக தாக்கிக் கொண்டு வருகிறது.
நேற்று இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பீகாரில் தேர்தலை பாஜக அபகரிப்பதை தடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அதன் வேலையை செய்யவில்லை. பாஜகவின் நலனுக்காக வேலை செய்து கொண்டிருக்கிறது.
பாஜக ஐந்து முதல் ஆறு முதலாளிகளுக்காக அரசாங்கத்தை நடத்துகிறது. நாட்டின் பொது மக்களுக்கான பணி செய்யவில்லை.
"ஜல், ஜங்கல், ஜாமின்" பழங்குடியினருக்கு சொந்தமானது. அவைகைள் அவர்களுக்கே இருக்கும். வன உரிமைப் பட்டாக்கள் பழங்குடியினருக்கு வழங்கப்படவில்லை. காங்கிரஸ் PESA மற்றும் பழங்குடி மசோதாவைக் கொண்டு வந்தது. இந்த சட்டங்களை நாங்கள் அமல்படுத்துவோம், பழங்குடியினருக்கு அவர்களின் நிலம் கிடைப்பதை உறுதி செய்வோம்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
- தாக்கி, காலால் எட்டி உதைத்த வீடியோ இணையத்தில் வைரலானது.
- மாநிலம் முழுவதும் உள்ள ஓ.ஏ.எஸ் அதிகாரிகள் "கூட்டு விடுப்பு" எடுத்திருந்தனர்.
ஒடிசா நிர்வாக சேவை (ஓ.ஏ.எஸ்) அதிகாரி ரத்னாகர் சாஹூ தாக்கப்பட்ட வழக்கில், பாஜக தலைவர் ஜெகந்நாத் பிரதான் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினரிடம் பிரதான் சரணடைந்தார்.
புவனேஸ்வர் மாநகராட்சி (பிஎம்சி) கூடுதல் ஆணையர் ரத்னாகர் சாஹூவை அவரது அலுவலகத்தில் இருந்து இழுத்துச் சென்று ஜெகந்நாத் பிரதானின் ஆட்கள் தாக்கி, காலால் எட்டி உதைத்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
சாஹூ மீதான இந்த தாக்குதலை கண்டித்து, மாநிலம் முழுவதும் உள்ள ஓ.ஏ.எஸ் அதிகாரிகள் "கூட்டு விடுப்பு" எடுத்திருந்தனர். பிரதான் கைது செய்யப்பட்டதை அடுத்து, அதிகாரிகள் தங்கள் விடுப்பை திரும்பப் பெற்றுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதான் உட்பட மொத்தம் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- துப்பாக்கியைக் காட்டி, நகை கடைக்காரரை கொள்ளைக்காரர்கள் மிரட்டியுள்ளனர்.
- ல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை திருடர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டம், ஹரிசந்தன்பூர் பஜாரில் உள்ள ஒரு நகைக் கடைக்குள் புகுந்த ஆயுத மேந்திய கொள்ளையர்கள், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
துப்பாக்கியைக் காட்டி, கடைக்காரர் மற்றும் வாடிக்கையாளர்களை கொள்ளைக்காரர்கள் மிரட்டும் சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நகைகளை கொள்ளையடித்து சென்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- ஒரே மாதத்தில் மாவட்டத்தில் நடக்கும் மூன்றாவது சம்பவமும் ஆகும்.
- கோபால்பூர் கடற்கரையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவமும் அம்மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனது தூரத்து உறவினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட 22 வயது இளைஞர் கோலந்தரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் ஜூன் 28-ஆம் தேதி நிகழ்ந்ததாகவும், ஜூன் 30-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கும் 11 வயது பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, சிறுமியின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவரின் தூரத்து உறவினர் மற்றும் இருவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
சிறுமி தாய் அளித்த புகாரின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட சிறுமியை வலுக்கட்டாயமாக பள்ளியின் கழிப்பறைக்கு அழைத்துச் சென்று, அவளது கைகளையும் கால்களையும் கட்டி வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும், பின்னர் கிராமவாசி ஒருவரால் சிறுமி மீட்கப்பட்டதாகவும் மேலும் தெரிவித்தனர்.
இது அந்தப் பகுதியில் நடக்கும் இரண்டாவது பாலியல் வன்கொடுமை சம்பவமும், ஒரே மாதத்தில் மாவட்டத்தில் நடக்கும் மூன்றாவது சம்பவமும் ஆகும்.
ஜூன் 6-ஆம் தேதி கோலந்தரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தன. மேலும் ஜூன் 15-ஆம் தேதி கோபால்பூர் கடற்கரையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவமும் அம்மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
- ஒடிசா மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
- பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை உலகப் புகழ்பெற்றது. இந்த ஆண்டுக்கான ரத யாத்திரைக்காக மூன்று பிரமாண்ட தேர்களும் புதிதாக வடிவமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டன.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேர்களை இழுக்கத் தொடங்கினர். வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களும் பூரி நகரின் வீதிகளில் அசைந்தாடி செல்லும் காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில், ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வருடாந்திர திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தேரின் வடங்களைப் பிடிக்க பக்தர்கள் முண்டியடித்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஒடிசா மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி அறிவித்துள்ளார்.






