என் மலர்
இந்தியா

பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்
ஒடிசாவில் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் மூன்று பேரால் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஒடிசாவின் சுபர்ணபூர் மாவட்டத்தில் ஷோரூமில் பணிபுரியும் அந்த பெண் கடந்த வியாழக்கிழமை பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அவரை பின்தொடர்ந்து சென்ற முகமூடி அணிந்த மூவர் ஆள்நடமாட்டமற்ற பகுதியில் இளம்பெண் மீது மயக்க மருந்து தெளித்துள்ளது. அப்பெண் மயங்கியதும் கடத்திச் சென்று மூவரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
சுயநினைவுக்கு திரும்பிய அப்பெண் காவல் நிலையம் சென்று புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை தொடங்கிய காவல்துறை, இரண்டு சந்தேக நபர்களை வெள்ளிக்கிழமை காலையில் பிடித்துள்ளது.
மூன்றாவது நபரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.






