என் மலர்
மகாராஷ்டிரா
- கடந்த ஜூன் 6-ம் தேதி திடீரென தண்ணீர் ஊற்று போல் வெளியேறத் தொடங்கியது.
- அதைத் தீர்த்தம் போல் பருகியதுடன், தங்கள் உடலிலும் தெளித்துக்கொண்டனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் பிம்ப்ரி பகுதியில் உள்ள பிரேம்லோக் பூங்கா அருகே இருக்கும் ஒரு குல்மோகர் மரத்திலிருந்து கடந்த ஜூன் 6-ம் தேதி திடீரென தண்ணீர் ஊற்று போல் வெளியேறத் தொடங்கியது. இந்த மரம், மே-பூ மரம் என்றும் அழைக்கப்படுகிறது.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், மரத்திலிருந்து வருவது "புனித நீர்" என்று தவறாகப் புரிந்துகொண்டு, அதை வழிபடத் தொடங்கினர். இந்தச் செய்தி காட்டுத்தீ போல் பரவ, ஏராளமான மக்கள் அங்கு குவியத் தொடங்கினர்.
அவர்கள் மரத்திற்கு மஞ்சள், குங்குமம் வைத்து மாலை அணிவித்து வழிபட்டனர். சிலர் இந்தத் தண்ணீருக்கு நோய்களைக் குணப்படுத்தும் சக்தி இருப்பதாக நம்பி, அதைத் தீர்த்தம் போல் பருகியதுடன், தங்கள் உடலிலும் தெளித்துக்கொண்டனர்.
இந்த நிகழ்வு தொடர்பான வீடியோக்கள் வைரலாகப் பரவிய நிலையில் இது பிம்ப்ரி மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது.
உடனடியாக விசாரணை நடத்திய அதிகாரிகள், மரத்திலிருந்து தண்ணீர் கசிந்ததற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்தனர். நிலத்தடி நீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாகவே தண்ணீர் கசிந்துள்ளதாகவும், அந்தக் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தின் அருகே மரம் இருந்ததால், மரத்தின் தண்டு வழியாக தண்ணீர் வெளியேறுவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
- மனமுடைந்த காதலன் மது அருந்திவிட்டு இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்திற்குச் சென்றார்.
- வாலிபர் அளிக்கும் வாக்குமூலத்தை கொண்டு மேற்கொண்டு விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள கமலி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். தனது காதலனுடன் ஏற்பட்ட சிறிய வாக்குவாதத்தால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் மனமுடைந்த காதலன் மது அருந்திவிட்டு இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்திற்குச் சென்றார். அவர் தனது காதலியின் உடல் எரிநது கொண்டு இருந்த நெருப்பில் குதித்தார்.
இதனை கண்ட பெண் வீட்டார் அவரை மீட்டனர். மேலும் அவரைத் கடுமையாக தாக்கினர். இதனால் வாலிபர் சுயநினைவு இழந்தார். அங்கிருந்தவர்கள் படுகாயத்துடன் வாலிபரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் சிகிச்சையில் உள்ள வாலிபர் அளிக்கும் வாக்குமூலத்தை கொண்டு மேற்கொண்டு விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
- 5 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தனர்.
- படுகாயம் அடைந்த 5 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே ரெயில் நிலையத்தில் இருந்து மும்பை ரெயில் நிலையத்துக்கு புறநகர் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதிகமான கூட்டம் காரணமாக படிக்கட்டுகளில் அதிக அளவிலான பயணிகள் தொங்கியபடி பயணம் செய்தனர்.
தானேயை அடுத்த திவா மற்றும் கோபர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் சென்று கொண்டிருந்தபோது படிக்கட்டுகளில் தொங்கிய 10-க்கும் மேற்பட்டோர் தவறி கீழே விழுந்தனர்.
படுகாயத்துடன் கிடந்த அவர்களை ரெயில்வே போலீசார் மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் 5 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தனர்.
பலியானவர்களுக்கு 30 முதல் 35 வயதே இருக்கும். படுகாயம் அடைந்த 5 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் ரெயில் பயணிகள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ரெயில் படிக்கட்டில் பயணித்த 5 பேர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, புதிதாக தயாரிக்கப்படும் புறநகர் ரெயில் பெட்டிகளில் தானியங்கி கதவுகளை பொருத்த ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது.
தற்போது இயக்கப்படும் ரெயில்களில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை சேர்க்கும் வகையில் மாற்றியமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மும்பை புறநகர் ரெயிலில் பயணம் செய்தவர்களில் 5 பேர் கீழே விழுந்து உயிரிழந்தனர்.
- ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே ரெயில் நிலையத்தில் இருந்து மும்பை ரெயில் நிலையத்துக்கு புறநகர் ரெயிலில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதிகமான கூட்டம் காரணமாக படிக்கட்டுகளில் அதிக அளவிலான பயணிகள் தொங்கியபடி பயணம் செய்தனர்.
தானேயை அடுத்த திவா மற்றும் கோபர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் சென்று கொண்டு இருந்தபோது படிக்கட்டுகளில் தொடங்கிய 10-க்கும் மேற்பட்டோர் தவறி கீழே விழுந்தனர்.
படுகாயத்துடன் கிடந்த அவர்களை ரெயில்வே போலீசார் மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் 5 பேர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தனர். பலியானவர்களுக்கு 30 முதல் 35 வயதே இருக்கும். காயம் அடைந்த 6 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் ரெயில் பயணிகள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் விபத்துக்கு மத்திய ரெயில் அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என சிவசேனா (UBT) கட்சித் தலைவர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆதித்யா தாக்கரே கூறியதாவது:-
ரெயில் மந்திரி (அஷ்வினி வைஷ்ணவ்) ரீல் மந்திரியாகியுள்ளார். கடந்த 2 முதல் 3 வருடங்களாக பயங்கரமான பல ரெயில் விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், எந்தவொரு பொறுப்பையும் ஏற்ப ஒருவர் கூட முன்வரவில்லை. ரெயில்வே துறை மற்றும் ரெயில்வே அமைச்சர் மட்டுமு இந்த விபத்துக்களுக்கு பொறுப்பு. இந்திய மக்கள் ரெயில் மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும் பல முறை வற்புறத்தியுள்ளனர். ஆனால் அவர் அதை கடந்து செல்கிறார்.
இவ்வாறு ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.
- ரெயிலில் அளவுக்கு அதிகமாக கூட்டம் இருந்ததே இந்த விபத்துக்கான காரணம் என்று கூறப்படுகிறது.
- இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தான் அதி மானோர் மின்சார ரெயில்களில் பயணம் செய்கிறார்கள். புறநகர் ரெயில்களில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணிக்கிறார்கள். இங்கு காலை, மாலை நேரத்தில் கூட்ட நெரிசல் ஏற்படுவது வழக்கம்.
இன்று காலை தானே ரெயில் நிலையத்தில் இருந்து மும்பை ரெயில் நிலையத்துக்கு புறநகர் ரெயிலில் ஒன்று சென்று கொண்டி ருந்தது. அதிகமான கூட்டம் காரணமாக அந்த ரெயில் படிக்கட்டுகளில் அதிக அளவிலான பயணிகள் கதவுகளில் தொங்கியபடி பயணம் செய்தனர்.
தானேயை அடுத்த திவா மற்றும் கோபர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் சென்று கொண்டு இருந்த போது படிக்கட்டுகளில் தொடங்கிய 10-க்கும் மேற்பட்டோர் தவறி கீழே விழுந்தனர்.
படுகாயத்துடன் கிடந்த அவர்களை ரெயில்வே போலீசார் மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் 5 பேர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியி லேயே இறந்தனர். பலியானவர்களுக்கு 30 முதல் 35 வயதே இருக்கும். காயம் அடைந்த 6 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் ரெயில் பயணிகள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
மும்பை ரெயில்வே போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக தானே-மும்பை புறநகர் ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஓடும் ரெயிலில் தவறி விழுந்து 5 பேர் பலியான சம்பவம் குறித்து நீத விசாரணை நடத்த வேண்டும் என்று தானே தொகுதி சிவசேனா எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
- மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறை கூறி ஜனநாயகத்தின் பிம்பத்தை அவர்கள் இப்போது கெடுக்கிறார்கள்.
- மக்கள் ராகுல் காந்தியை நிராகரித்து விட்டனர்.
மும்பை:
மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
இதற்கிடையே மகாராஷ்டிரா தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-
மக்களை சமாதானப்படுத்த முடியாவிட்டால், அவர்களை குழப்ப வேண்டும் என்ற கொள்கையை ராகுல் காந்தி ஏற்றுக் கொண்டுள்ளார். மக்களால் காங்கிரஸ் நிராகரிக்கப்பட்டு விட்டது. அதனால்தான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறை கூறி ஜனநாயகத்தின் பிம்பத்தை அவர்கள் இப்போது கெடுக்கிறார்கள்.
மக்கள் ராகுல் காந்தியை நிராகரித்து விட்டனர். அதற்கு பழிவாங்கும் விதமாக, அவர் மக்களையும் அவர்களின் ஆணையையும் நிராகரிக்கிறார். மக்கள் அளித்த தீர்ப்பை அவமதிக்கிறார்.
ஒரு முறை தோல்வியை ஏற்றுக்கொண்டு, நீங்கள் எங்கே தவறு செய்கிறீர்கள், மக்களுடனான உங்கள் தொடர்பு எங்கே இல்லை, அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சுயபரிசோதனை செய்வது மிகவும் புத்திசாலித்தனமாக இருக்கும்.
ஆனால் ராகுல் காந்தி தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தலைவராக உள்ளார். பீகார் உள்பட வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் எதிர்கால தோல்விகளுக்கு காங்கிரஸ் தலைவர் தனது சாக்குபோக்குகளைத் தயாரித்து வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நிகழ்ச்சிகளை முடிவத்துவிட்டு இரவு விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
- பணி நேரம் முடிவடைந்து விட்டதாக கூறி, விமானி விமானத்தை இயக்க மறுப்பு.
மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஜல்கானில் இருந்து மும்பைக்கு செல்ல விமான நிலையத்திற்கு வந்தபோது, தனது பணி நேரம் முடிவடைந்துவிட்டது எனக்கூறி விமானி விமானத்தை இயக்க மறுப்பு தெரிவித்ததால் சுமார் ஒருமணி நேரம் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேற்று மதியம் 3.45 மணிக்கு ஜால்கான் வருவதாக இருந்தது. ஆனால் தொழில்நுட்ப காரணத்தால் சுமார் இரண்டரை மணி நேரம் காலதாமதமாக வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக முக்தைநகருக்கு சென்றார்.
ஏக்நாத் ஷிண்டு உடன் அமைச்சர்கள் கிரிஷ் மகாஜன் மற்றும் குலாப்ராவ் பாட்டீல் மற்றும் சில நிர்வாக அதிகாரிகள் உடன் சென்றனர்.
முக்தைநகரில் நடைபெற்ற பால்கி யாத்திரையில் கலந்து கொண்டார். பின்னர் சான்ட் முக்தை கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் இரவு 9.15 மணிக்கு ஜல்கான் விமான நிலையம் வந்தடைந்தார்.
ஆனால், விமானி விமானத்தை இயக்க மறுத்துவிட்டார். தன்னுடைய பணி நேரம் முடிவடைந்து விட்டது. விமானத்தை இயக்க புதிய அனுமதி பெற வேண்டும். அதற்கு சற்று நேரம் தேவை எனத் தெரிவித்துள்ளார். இதனால் ஏக்நாத் ஷிண்டே விமான நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பின்னர் ஏக்நாத் ஷிண்டே உடன் வந்தவர்கள், விமானியிடம் சுமார் 45 மணி நேரம் பேசி, அவரை எப்படியாவது சம்மதிக்க வைக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். அத்துடன் இதற்கான அதிகாரிகளுடன் பேசி, அனுமதி பெற்றபின், விமானி விமானத்தை இயக்கியுள்ளார்.
இதற்கிடையே உடல் நிலை சரியில்லாத காரணத்தினால்தான் விமானி, விமானத்தை இயக்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அமைச்சர் மகாஜன் கூறுகையில் "விமானியின் உடல்நலம் தொடர்பான கவலையும், நேரப் பிரச்சினையும் இருந்தது. சில தொழில்நுட்ப சிக்கல்களும் இருந்தன. நாங்கள் விமான நிறுவனத்திடம் பேசினோம், அவர்கள் நிலைமையை விமானிக்கு அவர்களின் வழியில் விளக்கினர். அது ஒரு சிறிய பிரச்சினை" என்றார்.
- வெறும் 5 மாதங்களுக்குப் பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இது 9.70 கோடியாக அதிரடியாக அதிகரித்தது.
- மக்களவைத் தேர்தலில் 32% வெற்றி பெற்ற பாஜக, இந்த 85 தொகுதிகளின் அசாதாரண வாக்குப்பதிவால் சட்டமன்றத் தேர்தலில் 89% வெற்றி பெற்றது.
கடந்த ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில், ஆளும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆனால், இந்த தேர்தல் முடிவுகளில் பெரும் மோசடி நடந்திருப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
முன்னதாக நடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் கூட்டணி அதிக வெற்றியை பெற்றது. ஆனால் சில மாதங்களுக்கு பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறியது. இதன் பின்னணியில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெற்றது.
இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் நீண்ட கட்டுரை எழுதியுள்ள ராகுல் காந்தி, "மேட்ச் பிக்சிங் மகாராஷ்டிரா" என்ற தலைப்பில் அடுக்கடுக்கான ஆதாரங்களை முன்வைத்துள்ளார்.

ராகுல் காந்தி கட்டுரையின் சுருக்கம்:
தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் குளறுபடி: தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் எதிர்க்கட்சித் தலைவரின் பரிந்துரையை நிராகரித்து, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் தங்கள் விருப்பப்படி ஆட்களை நியமித்தனர். இது நீதித்துறைத் தலைவரை நீக்கி முறைகேடு செய்ய வழிவகுத்தது.
போலி வாக்காளர்கள் அதிகரிப்பு: 2019-ல் 8.98 கோடியாக இருந்த வாக்காளர்கள், 2024 மக்களவைத் தேர்தலில் 9.29 கோடியாக உயர்ந்தனர். ஆனால், வெறும் 5 மாதங்களுக்குப் பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இது 9.70 கோடியாக அதிரடியாக அதிகரித்தது.
மகாராஷ்டிராவின் மொத்த வயதுவந்தோர் மக்கள் தொகையே 9.54 கோடிதான் இருக்கும் நிலையில், இந்த 41 லட்சம் வாக்காளர் அதிகரிப்பு பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது.
வாக்குப் பதிவில் வினோத மாற்றம்: மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த பின்னரும், 7.83% (சுமார் 76 லட்சம்) வாக்காளர்கள் வாக்களித்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இது முந்தைய தேர்தல்களை விட மிக மிக அதிகம். குறிப்பாக, 85 தொகுதிகளில் உள்ள 12,000 வாக்குச்சாவடிகளில் மட்டும், மாலை 5 மணிக்குப் பிறகு சராசரியாக 600க்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர். ஒரு வாக்குக்கு ஒரு நிமிடம் என்றாலும், 10 மணி நேரம் வாக்குப்பதிவு நடந்திருக்க வேண்டும்!
பாஜக வெற்றிஅதிகரிப்பு: மக்களவைத் தேர்தலில் 32% வெற்றி பெற்ற பாஜக, இந்த 85 தொகுதிகளின் அசாதாரண வாக்குப்பதிவால் சட்டமன்றத் தேர்தலில் 89% வெற்றி பெற்று 149 இடங்களில் 132 இடங்களை வென்றது.
ஆதாரங்களை அழிக்கும் முயற்சி: முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் புகார் அளித்த போதும், தேர்தல் ஆணையம் அமைதி காக்கிறது.
மேலும், வாக்காளர் பட்டியல்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை பொதுவெளியில் வெளியிடும் கோரிக்கையை நிராகரித்து, விதிகளைத் திருத்தி அணுகலைக் கட்டுப்படுத்தி, ஆதாரங்களை அழிப்பதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிறார்.
ராகுல் காந்தி தனது கட்டுரையில், "இது கிரிக்கெட்டில் நடக்கும் மேட்ச் பிக்சிங் போன்றது. இப்படிப்பட்ட முறைகேடுகள் ஜனநாயக நிறுவனங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும்" என்று கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் மகாராஷ்டிர அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.
- அதிகப்படியான பைகள் வந்தால் அதனை பாதுகாப்பாக வைத்திருக்க போலீஸ் அதிகாரி ஒருவருடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
- பட்டப்படிப்பு படிக்காமலேயே மாதம் இவ்வளவு சம்பாதிக்கும் அவரது திறமையை பலரும் பாராட்டினர்.
மும்பையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் ஆட்டோ ஓட்டாமலேயே மாதம் ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை சம்பாதிப்பதாக அதிகாரி ஒருவர் சமூக வலைதளத்தில் செய்த பதிவு பேசுபொருளாகி உள்ளது.
பிரபல நிறுவனமான லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ராகுல்ரூபானி தனது லிங்க்டு -இன் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இந்த வாரம் விசா விண்ணப்பிக்க அமெரிக்க தூதரகம் சென்றேன். அங்கு பாதுகாப்பு அதிகாரிகள் எனது பையை உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த போது அங்கிருந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், பையை என்னிடம் தாருங்கள். நான் பத்திரமாக வைத்திருக்கிறேன். அதற்கு ரூ.1,000 கட்டணம் என்றார். முதலில் நான் தயங்கினேன். ஆனாலும் வேறு வழியின்றி அவரிடம் கொடுத்துவிட்டு சென்றேன். பிறகு தான் தெரிந்தது. இது அற்புதமான வணிகம் என்று. அந்த டிரைவர் தினமும் 20 முதல் 30 பேரின் உடமைகளை தனது ஆட்டோவில் பாதுகாக்கிறார்.
இதன்மூலம் அவருக்கு மாதம் ரூ.5 லட்சம் முதல் 8 லட்சம் வரை வருமானம் கிடைக்கும் என்று கருதுகிறேன். ஆட்டோ ஓட்டாமலேயே அவர் நன்றாக சம்பாதிக்கிறார் என பதிவிட்டுள்ளார். மேலும் அதிகப்படியான பைகள் வந்தால் அதனை பாதுகாப்பாக வைத்திருக்க போலீஸ் அதிகாரி ஒருவருடன் ஒப்பந்தம் செய்துள்ளார். அந்த போலீஸ் அதிகாரிக்கு சிறிய லாக்கர் வசதி இருக்கிறது. இதனால் பைகளை பாதுகாப்பாக வைத்து கொடுக்கிறார் என கூறியுள்ளார். அவரது இந்த பதிவு வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டனர். பட்டப்படிப்பு படிக்காமலேயே மாதம் இவ்வளவு சம்பாதிக்கும் அவரது திறமையை பலரும் பாராட்டினர்.
- இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
- இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூன் 20-ம் தேதி லீட்சில் தொடங்குகிறது.
மும்பை:
இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்நிலையில், மும்பையில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியதாவது:
பெங்களூருவில் நடந்த உயிரிழப்பு குறித்து கேட்கிறீர்கள். அதற்கு நான் பதில் சொல்ல வேண்டியது அவசியம். எனக்கு எப்போதும் வெற்றி கொண்டாட்ட ஊர்வலங்களை நடத்துவதில் நம்பிக்கை இருந்ததில்லை.
2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வென்றபோது கூட இதையே நான் கூறினேன். ஏனெனில் வெற்றி கொண்டாட்டத்தை விட மக்களின் வாழ்க்கை முக்கியமானது. ரோடு ஷோ நடத்துவதற்கு ஏற்ப நீங்கள் முழுமையாக தயாராக இல்லை என்றால், அதை நடத்தியிருக்கக் கூடாது. எதிர்காலத்தில் இதுபோன்ற விஷயங்களில் நாம் இன்னும் பொறுப்புணர்வுடன் இருக்கவேண்டும். மைதானத்திலோ அல்லது மூடிய அரங்கிலோ இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தலாம்.
இங்கிலாந்தில் விளையாடும்போது ஆடுகளத்தன்மை மட்டுமின்றி, மேகமூட்டமான சீதோஷ்ண நிலையையும் கவனிக்க வேண்டும். இதற்கு ஏற்ப ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வோம்.
இளம் வீரர்கள் உள்ளூர் முதல்தர கிரிக்கெட்டில் விளையாட வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். உள்ளூர் போட்டியில் தொடர்ந்து சிறப்பாக ஆடினால் தேசிய அணிக்கான கதவு திறக்கும். அதற்கு சரியான உதாரணம் இப்போது அணிக்கு திரும்பியிருக்கும் கருண் நாயர். அவரது அனுபவம் நிச்சயம் அணிக்கு உதவிகரமாக இருக்கும். ஆனால் ஒன்றிரண்டு டெஸ்ட் போட்டியை வைத்து ஒரு வீரரின் திறமையை மதிப்பிட மாட்டோம் என தெரிவித்தார்.
- இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
- இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூன் 20-ம் தேதி லீட்சில் தொடங்குகிறது.
மும்பை:
இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்நிலையில், மும்பையில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது:
ஒவ்வொரு தொடரிலும் ஏதாவது ஒரு வகையில் நெருக்கடி இருக்கும்.
நீண்ட காலம் சிறப்பாக விளையாடிய இரு முன்னணி வீரர்கள் இல்லாமல் இந்திய அணி களமிறங்குகிறது.
அவர்களது இடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதல்ல. சீனியர் வீரர்கள் இல்லாமல் விளையாட பழகி வருகிறோம்.
மற்றபடி டெஸ்ட் அணி கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட உடன் திகைத்து விட்டேன்.
இது மிகப்பெரிய பொறுப்பு. இதற்கான சவாலை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். கேப்டன் பணியில் எனக்கென ஸ்டைல் எதுவும் இல்லை.
அணியின் மற்ற வீரர்களின் பலம், பலவீனங்களை அவர்களுக்கு தெரிவிக்க முயற்சிப்பேன். அணியில் தங்களது இடம் பாதுகாப்பானது என்பதை அவர்கள் உணர வேண்டும். அப்போது தான் சிறப்பாக செயல்படுவர்.
டெஸ்ட் தொடருக்கான பேட்டிங் ஆர்டர் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இந்திய வீரர்கள் இரு அணியாக பிரிந்து பயிற்சி போட்டியில் பங்கேற்க உள்ளோம். பும்ரா விளையாடினால் சிறப்பாக இருக்கும். அவர் இல்லாதபோது சமாளிக்கத் தேவையான பவுலர்கள் அணியில் உள்ளனர்.
என்னைப் பொறுத்தவரையில் சராசரிகளை நம்புவது இல்லை. கேப்டனாக, மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க முயற்சிப்பேன் என தெரிவித்தார்.
- விடியற்காலை தனது தோழி வீட்டிற்கு சென்றுள்ளார்.
- 21ஆவது மாடிக்கு சென்ற அவர், திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 25 வயதேயான ஐ.டி. பெண் ஊழியர் 21ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அபிலஷா பௌசாஹேப் கோதிம்பிரே என்ற அந்த பெண் ஊழியர், அதிகாலை 4.30 மணிக்கு, அவளுடைய தோழி வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கு இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். திடீரென அவரது நண்பர் வசித்து வரும் 21ஆவது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துள்ளார்.
நான் வாழ்ந்து முடித்துவிட்டேன். இனிமேல் எனக்கு வாழ விருப்பமில்லை என கடிதம் எழுதி வைத்துள்ளார். மேலும் அந்த கடிதத்தில் இந்த முடிவை எடுத்ததற்காக பெற்றோர் மற்றும் நண்பர்கள் மன்னித்துக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.






