என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manoj Jarange Patil"

    • மும்பை ஆசாத் மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • அவருக்கு ஆதரவாக மராத்தா ஆதரவாளர்கள் மும்பை தெருக்களில் போராட்டம் நடத்தினர்.

    மும்பை:

    மராத்தாக்களுக்கு ஓபிசி பிரிவில் 10 சதவீத இடஒதுக்கீடு கோரி சமூக ஆர்வலர் மனோஜ் ஜரங்கே போராட்டம் நடத்தி வருகிறார்.

    இவர் ஆகஸ்ட் 29-ம் தேதி முதல் மும்பை ஆசாத் மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    அவருக்கு ஆதரவு தெரிவித்து மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து வந்துள்ள மராத்தா ஆதரவாளர்கள் மும்பை தெருக்களில் போராட்டம் நடத்தினர்.

    இதற்கிடையே, ஆசாத் மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் மனோஜ் ஜராங்கேவை மாநில அமைச்சர் உதய் சாமந்த நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்நிலையில், எங்கள் கோரிக்கையை அரசு ஏற்றுள்ளது எனக்கூறிய மனோஜ் ஜராங்கே ஜூஸ் குடித்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பாக, மனோஜ் ஜராங்கே கூறுகையில், எங்களுக்கு இன்று தீபாவளி. ஏனெனில் நாங்கள் விரும்பியதைப் பெற்றுள்ளோம். இட ஒதுக்கீடு கோரி நடைபெற்ற மராத்தா போராட்டம் வெற்றி அடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

    • குன்பி சமூகத்தினருக்கு வழங்கும் சான்றிதழ் வழங்க வேண்டும்.
    • கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா சமூகத்தினரை ஓபிசி (மிகவும் பிற்படுத்தப்பட்டோர்) பட்டியலில் சேர்க்க வேண்டும் என அந்த சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுகுறித்து மகாராஷ்டிர மாநில அரசு ஆலோசித்த வந்த போதிலும் இறுதியான முடிவை எடுக்கவில்லை.

    இந்த நிலையில்தான் குன்பி இனத்தினருக்கு வழங்கும் சான்றிதழ் வழங்க வேண்டும். இலவசக் கல்வி வழங்க வேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்திய மனோஜ் ஜராங்கே பாட்டீல் போராட்டத்தை அறிவித்தார்.

    அவருடன் ஆயிரக்காணக்கானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டக்குழுவினர் நேற்று நவிமும்பையை வந்தடைந்தனர். நவிமும்பையில் போராட்டக்காரர்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. எங்களது கோரிக்கைகள் ஏற்கடாவிடில், எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை நாங்கள் நாட்டுவோம் என மனோஜ் ஜராங்கே தெரிவித்திருந்தார்.

    இந்த நிலயைில் இரண்டு மந்திரிகள் நேற்றிரவு மனோஜ் ஜராங்கே உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் இன்று காலை 9.30 மணியளவில், மகாராஷ்டிர மாநில அரசு அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுள்ளது. போராட்டம் நிறைவு பெறுகிறது என அறிவித்தார்.

    மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேரில் வந்து மனோஜ் ஜராங்கேயின் போராட்டத்தை முடித்து வைப்பார் எனத் தெரிகிறது.

    தற்போது வரை மகாராஷ்டிரா மாநிலத்தில் குன்பி சான்றிதழ் 37 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இனிமேல் அதன் எண்ணிக்கை 50 லட்சமாக உயரும்.

    ×