என் மலர்
ஜம்மு காஷ்மீர்
- மாநில அந்தஸ்து எந்த எம்.எல்.ஏ.வுக்கோ அல்லது எங்கள் அரசாங்கத்துக்கோ அல்ல.
- எங்கள் எம்.எல்.ஏக்கள் அதற்கு ஒரு தடையாக இருக்க மாட்டார்கள் என்றார்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றால் மாநில சட்டசபை கலைக்கப்பட வேண்டும் என ஒரு செய்தித்தாளில் படித்தேன். அப்படியானால் அது நடக்கட்டும்.
என் நாற்காலியைப் பற்றி எனக்கு கவலை இல்லை. எங்கள் எம்.எல்.ஏ.க்களை பயமுறுத்துவதற்காக இந்த செய்திகள் செய்தித் தாள்களில் விதைக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் இன்னும் 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
மாநில அந்தஸ்து எந்த எம்.எல்.ஏ.வுக்கோ அல்லது எங்கள் அரசாங்கத்துக்கோ அல்ல. அது ஜம்மு காஷ்மீர் மக்களுக்காக.
எங்கள் எம்.எல்.ஏக்கள் அதற்கு ஒரு தடையாக இருக்க மாட்டார்கள். மாநில அந்தஸ்து வழங்கப்படும் நாளில் நான் ஆளுநரிடம் சென்று சட்டசபையைக் கலைப்பேன் என தெரிவித்தார்.
- பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையின்போது உதம்பூர் படைத்தளம் முக்கிய பங்காற்றியது.
- பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டார்.
ஸ்ரீநகர்:
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள உதம்பூர் மாவட்டத்திற்குச் சென்ற ராஜ்நாத் சிங் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் பாதுகாப்புப் படைவீரர்களைச் சந்தித்தார்.
இந்தப் பயணத்தின்போது ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதியும் உடன் இருந்தார்.
இந்தச் சந்திப்பிற்குப்பின் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், நமது வடக்கு எல்லைப் பகுதியைப் பாதுகாப்பதில் உதம்பூர் மிகவும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சிய அடைகிறேன் என தெரிவித்தார்.
அதன்பின், பாதுகாப்புப் படைவீரர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்.
பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையின்போது உதம்பூர் படைத்தளம் முக்கிய பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
- சண்டை எங்கே நடந்தாலும் அது நல்லது அல்ல.
- சண்டை விரைவில் முடிவுக்கு வந்தால், சிறந்ததாக இருக்கும்.
இஸ்ரேல்-ஈரான் இடையிலான சண்டை 8 நாட்களை தாண்டி நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் மீது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்திய ஈரான், இன்று கொத்துக்குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது.
அதேவேளையில் அணுஉலை இருக்கும் இடங்கள், அணு ஆராய்ச்சி நிலையங்கள் உள்ள இடங்களை குறிவைத்து ஈரான் மீது இஸ்ரேல் கடுமையாக தாக்குதல் நடத்தியது வருகிறது.
இந்த நிலையில் இஸ்ரேல்- ஈரான் சண்டை குறித்து ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு உமர் அப்துல்லா பதில் கூறுகையில் "இரு நாடுகளுக்கு இடையிலான சண்டை நல்ல விசயம் அல்ல. சண்டை எங்கே நடந்தாலும் அது நல்லது அல்ல. ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தள்ளப்பட்டதற்கு, ஈரான் செய்தது என்ன?. இந்த சண்டை விரைவில் முடிவுக்கு வந்தால், சிறந்ததாக இருக்கும்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு அமெரிக்க உளவுத்துறைத் தலைவர், ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் அளவுக்கு அருகில் இல்லை என்றார். அப்போது அதுதான் ஆதாரம். இப்போது இரண்டு மாதங்களுக்குப் பிறகு இஸ்ரேல் திடீரென ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 90 மாணவர்கள் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர். 400 பேர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்" என்றார்.
- இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ம் தேதி தொடங்குகிறது.
- யாத்திரைக்கான பாதுகாப்பை பலப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ல் தொடங்கி ஆகஸ்ட் 8 உடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து யாத்திரைக்கான பாதுகாப்பை பலப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக, அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் அனைத்து வழிகளும் பறப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பஹல்காம் மற்றும் பால்தால் வழியான பாதைகளும் அடங்கும்.
இந்த உத்தரவை தொடர்ந்து ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை அமர்நாத் யாத்திரை பகுதிகளில் பலூன்கள், டிரோன்கள் உள்ளிட்ட எந்தவகையான சாதனங்களும் பறப்பதற்கு தடைவிதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகான பாதுகாப்பு சூழலை கருத்தில் கொண்டே ஜம்மு காஷ்மீர் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
- தேசிய மாநாட்டுக் கட்சி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ளார்.
- மாலிக் இந்த ஆண்டு மார்ச் 21 அன்று ஆம் ஆத்மியின் மாநிலத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஒரே ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக், தேசிய மாநாட்டுக் கட்சி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ளார்.
மாலிக் தனது முடிவை X தளத்தில் வெளியிட்டு, ஜம்மு-காஷ்மீர் மக்களின் நம்பிக்கை மற்றும் நலன் எப்போதும் எனது முன்னுரிமையாக இருக்கும் என்பதால், எனது மக்களின் நலனுக்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் பெரும்பான்மை கொண்ட தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணிக்கு இந்த முடிவு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
கடந்த ஆண்டு தோடா தொகுதியில் பாஜகவை தோற்கடித்து இவர் ஆம் ஆத்மியின் முதல் எம்எல்ஏ ஆனார். மாலிக் இந்த ஆண்டு மார்ச் 21 அன்று ஆம் ஆத்மியின் மாநிலத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
- காஷ்மீரின் 87 சுற்றுலா தலங்களில் 48 இடங்களை அதிகாரிகள் தற்காலிகமாக மூடிவிட்டனர்.
- பெதாப் பள்ளத்தாக்கு, பூங்காக்கள், வெரினாக், கோகர்னாக் மற்றும் அச்சாபல் தோட்டங்கள் திறக்கப்படும்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீர் உள்ள 16 சுற்றுலாத் தலங்கள் செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்படும் என்று துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்துள்ளார்.
சுற்றுலாத் தலங்கள் படிப்படியாக திறக்கப்படும் என்று சின்ஹா கூறினார். முதல் கட்டமாக, அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் சந்தைக்கு அருகிலுள்ள பெதாப் பள்ளத்தாக்கு, பூங்காக்கள், வெரினாக், கோகர்னாக் மற்றும் அச்சாபல் தோட்டங்கள் திறக்கப்படும்.
ஏப்ரல் 22 தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீரின் 87 சுற்றுலா தலங்களில் 48 இடங்களை அதிகாரிகள் தற்காலிகமாக மூடிவிட்டனர். இந்நிலையில் பஹல்காம், குல்மார்க், சோனாமார்க் மற்றும் தால் ஏரி போன்ற முக்கிய சுற்றுலா தலங்கள் ஏற்கனவே திறந்திருந்ததாகவும், சில முக்கிய இடங்கள் மட்டுமே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் சுற்றுலா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- ஜம்மு காஷ்மீர் சட்டசபை வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பதற்றமான சூழல் நிலவியது.
- தீ விபத்தில் மேஜை, நாற்காலி, சோபாக்கள் உள்பட பல பர்னிச்சர் பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
ஸ்ரீநகர்:
ஜம்முவில் உள்ள சட்டசபை வளாகத்தில் முகப்பு அறை பகுதியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த மேஜை, நாற்காலிகள், சோபாக்கள் உள்பட பல பர்னிச்சர் பொருட்கள் எரிந்து சாம்பலாகின. இந்த தீ விபத்தால் பதற்றமான சூழல் நிலவியது.
தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர்கள் தீயை போராடி கட்டுப்படுத்தினர். இதனால் மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
இந்த விபத்தில் முகப்பு அறை சுவற்றில் மாட்டப்பட்டு இருந்த ஏராளமான முன்னாள் கவர்னர்களின் போட்டோக்கள் எரிந்து சேதம் அடைந்தன.
தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அமர்நாத் யாத்ரீகர்கள் வர இருப்பது நல்ல விசயம்.
- காஷ்மீரில் அமைதி நிலவுகிறது என்ற செய்தி பரவ அதிகபட்ச எண்ணிக்கையில் வர வேண்டும்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு மிகப்பெரிய அளவிலான வருமான இழப்பை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள மக்கள் அங்கு செல்ல அச்சப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதற்கிடையே ஜம்மு-காஷ்மீர் அமைதி நிலவி வருவதாகவும், சுற்றுலா பயணிகள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளதாக தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூப் அப்துல்லா ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஜூலை 3ஆம் தேதி தொடங்கும் அமர்நாத் யாத்திரை காஷ்மீரில் அமைதி நிலவுகிறது என்ற செய்தியை நாட்டுக்கு மக்களுக்கு அனுப்பும் என பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பரூக் அப்துல்லா கூறியதாவது:-
அமர்நாத் யாத்ரீகர்கள் வர இருப்பது நல்ல விசயம். காஷ்மீரில் அமைதி நிலவுகிறது என்ற செய்தி பரவ அதிகபட்ச எண்ணிக்கையில் வர வேண்டும்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீருக்கு ஏற்பட்ட சேதத்தை அமைதியான அமர்நாத் யாத்திரை மூலம் குறைக்க முடியும்.
இவ்வாறு பரூக் அப்துல்லா தெரிவித்தார்.
பாபா நக்ரியில் நடந்த வருடாந்திர ஊர்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது நாட்டில் அமைதி நிலவவும், நமது இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் கிடைக்கவும், நாம் கடந்து செல்லும் வெறுப்புச் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் பிரார்த்தனை செய்ததாக தெரிவித்தார்.
- இதன் பொருள் ஜூன் 26, 2013 அன்று, பாரமுல்லா மற்றும் காசிகுண்ட் இடையேயான 135 கி.மீ ரயில் இணைப்பு செயல்பாட்டுக்கு வந்துவிட்டது.
- தொடர்ந்து சுய-பெருமை தேட முயற்சிப்பதால், இந்த உண்மையை தொடர்ந்து மறுக்கிறார்.
செனாப் நதி மீது உலகின் உயரமான உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் பாதை (USBRL) காங்கிரஸ் ஆட்சியின் தொடர்ச்சிக்கு ஒரு வலுவான எடுத்துக்காட்டு என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கூறியுள்ளார்.
இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடி, தனது இடைவிடாத சுயபிம்ப ஆசையால், அதை தொடர்ந்து மறுத்து வருகிறார் என்று அவர் குற்றம்சாட்டினார்.
இமயமலையின் கரடுமுரடான நிலப்பரப்பு வழியாக செல்லும், ரூ.43,780 கோடி செலவில் கட்டப்பட்ட 272 கி.மீ நீள ரெயில் இணைப்பான USBRL-ஐ பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
இந்நிலையில் இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷின் அறிக்கையில், நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது மார்ச் 1995 இல் USBRL முன்மொழிவு முதன்முதலில் அனுமதிக்கப்பட்டது. இது மார்ச் 2002 இல் அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ஒரு தேசிய திட்டமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் ஏப்ரல் 13, 2005 அன்று, ஜம்மு மற்றும் உதம்பூர் இடையேயான 53 கி.மீ ரயில் இணைப்பை பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார்.
2008 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி, ஸ்ரீநகருக்கு வெளியே அனந்த்நாக் மற்றும் மஜோம் இடையேயான 66 கி.மீ ரயில் இணைப்பை பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார்.
2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி, ஸ்ரீநகருக்கு வெளியே மஜோம் மற்றும் பாரமுல்லா இடையேயான 31 கி.மீ ரயில் இணைப்பையும் அவர் திறந்து வைத்தார்.
அக்டோபர் 29, 2009 அன்று, மன்மோகன் சிங் அனந்த்நாக் மற்றும் காசிகுண்ட் இடையேயான 18 கி.மீ ரயில் இணைப்பையும், ஜூன் 26, 2013 அன்று காசிகுண்ட் மற்றும் பானிஹால் இடையேயான 11 கி.மீ ரயில் இணைப்பையும் திறந்து வைத்தார்.
இதன் பொருள் ஜூன் 26, 2013 அன்று, பாரமுல்லா மற்றும் காசிகுண்ட் இடையேயான 135 கி.மீ ரயில் இணைப்பு செயல்பாட்டுக்கு வந்துவிட்டது.
ஆனால் பிரதமர் மோடி, தொடர்ந்து சுய-பெருமை தேட முயற்சிப்பதால், இந்த உண்மையை தொடர்ந்து மறுக்கிறார். USBRL போன்ற மிகவும் சவாலான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும் கட்டத்தில் இந்த உண்மை மிகவும் தெளிவாகத் தெரிகிறது என்று அவர் ஜெய்ராம் ரமேஷ் சுட்டிக் காட்டினார்.
- பஹல்காம் தாக்குதல் இந்தியாவில் கலவரத்தை தூண்டுவதை நோக்கமாக கொண்டது
- இந்தியா பயங்கரவாதத்திடம் அடிபணியாது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஜம்மு-காஷ்மீர் இளைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.
பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செனாப் பாலத்தை திறந்து வைப்பதற்காகவும், கத்ரா- ஸ்ரீநகர் இடையே வந்தே பாரத் ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைப்பதற்காகவும் அம்மாநிலம் சென்றுள்ளார்.
கத்ராவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
* பாகிஸ்தான் மனித நேயம், சுற்றுலா, காஷ்மீரிகளின் "rozi-roti"-க்கு எதிரானது, அதனால்தான் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைத் தாக்கியது
* பஹல்காம் தாக்குதல் இந்தியாவில் கலவரத்தை தூண்டுவதை நோக்கமாக கொண்டது.
* காஷ்மீர் மக்களின் வருமானத்தை நிறுத்துவதற்கான பாகிஸ்தான் சதிதான் பஹல்காம் தாக்குதல்.

* இந்தியா பயங்கரவாதத்திடம் அடிபணியாது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஜம்மு-காஷ்மீர் இளைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.
* பாகிஸ்தான் ஆபரேஷன் சிந்தூர் பெயரை கேட்கும் போதெல்லாம், அவமானகரமான தோல்வியை நினைவு கூறும்.
* பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் அதிக அளவில் சேதம் அடைந்த வீடுகளை சீரமைக்க 2 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும். சிறிய அளவில் சேதம் அடைந்த வீடுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
- நில அதிர்வு மற்றும் பலத்த காற்று ஆகியவற்றை தாங்கும் வகையில் இந்தப் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- வந்தே பாரத் ரெயில் மூலம், கத்ராவிற்கும் ஸ்ரீநகருக்கும் இடையே பயணிக்க சுமார் 3 மணிநேரம் மட்டுமே ஆகும்.
காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 22-ந்தேதி பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு கடந்த மாதம் 7-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை இந்தியா கடுமையான பதிலடி கொடுத்தது.
இந்தியாவின் முப்படைகளும் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானில் 100-க்கும் மேற்பட்ட ராணுவ நிலைகளும், பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்களும் அழிக்கப்பட்டன. இந்த அதிரடி நிகழ்த்தப்பட்டு சரியாக ஒரு மாதம் நிறைவு பெறும் நிலையில் காஷ்மீரில் வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இன்று அங்கு ஒருநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
காஷ்மீர் மாநிலத்தின் முன்னேற்றத்தில் புதிய சகாப்தம் என்ற பெயரில் சுமார் ரூ.44 ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதற்கான விழா பத்ராவில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி ஆலய வாரிய விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெற்றது.
விழாவுக்கு மத்திய மந்திரிகள் நிதின் ஜெய்ராம் கட்கரி, அஸ்வினி வைஷ்ணவ், டாக்டர் ஜிதேந்திரசிங், வி.சோ மண்ணா, ரவ்னீத்சிங், ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா, ஜம்மு-காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா, துணை முதல்-மந்திரி சுரிந்தர்குமார் சவுத்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பிரதமர் மோடி உலகின் மிக உயரமான ரெயில்வே பாலத்தை திறந்து வைத்தார்.
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே 1,315 மீட்டர் நீளத்துக்கு பிரமாண்ட ரெயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
செனாப் ஆற்றில் இருந்து 359 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் உலகின் மிக உயரமான ரெயில்வே இரும்பு வளைவுப் பாலம் என்பது குறிப்பிடத்தக்கது. நில அதிர்வு மற்றும் பலத்த காற்று ஆகியவற்றை தாங்கும் வகையில் இந்தப் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்பாலம் வழியாக இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் மூலம், கத்ராவிற்கும் ஸ்ரீநகருக்கும் இடையே பயணிக்க சுமார் 3 மணிநேரம் மட்டுமே ஆகும். இதனால் தற்போதுள்ள பயண நேரம் 2 முதல் 3 மணி நேரம் வரை குறையும்.
உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரெயில் போக்குவரத்து (யு.எஸ்.பி.ஆர்.எல்.) திட்டத்தையும் பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். 272 கி.மீ தொலைவிலான இத்திட்டப் பணிகள் சுமார் ரூ.43,780 கோடி செலவில் நிறைவு செய்யப்பட்டுள்ளது. 119 கி.மீ தொலைவு கொண்ட இந்தத் திட்டத்தில் 36 சுரங்கப்பாதைகள் மற்றும் 943 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
செனாப் நதியின் கிளை நதியான ஆஞ்சி ஆற்றின் குறுக்கே, நாட்டின் முதல் கேபிள் ரெயில் பாலம் 473 மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
அனைத்து கால நிலையிலும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள யு.எஸ்.பி.ஆர்.எல். திட்டம் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இடையே தடையற்ற ரெயில் போக்குவரத்தை ஏற்படுத்தும்.
ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கோவில் உள்ள கத்ரா பகுதியில் இருந்து ஸ்ரீநகர் வரை இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
கத்ராவில் ரூ.46 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும், பல்வேறு சாலைத் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
தேசிய நெடுஞ்சாலை-701-ல் ரபியாபாத் முதல் குப்வாரா வரையிலான சாலை விரிவாக்கத் திட்டத்திற்கும், தேசிய நெடுஞ்சாலை-444-ல் ரூ.1,952 கோடிக்கும் அதிக மதிப்புடைய ஷோபியன் புறவழிச் சாலை கட்டுமானத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
ஸ்ரீநகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சங்கராமா சந்திப்பிலும், தேசிய நெடுஞ்சாலை- 44-ல் உள்ள பெமினா சந்திப்பிலும் இரண்டு மேம்பாலத் திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். கத்ராவில் ரூ.350 கோடிக்கும் அதிக மதிப்பில் உருவாக்கப்படும் ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி உயர் சிகிச்சை மருத்துவ மையத் துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப்பின்பு, பிரத மர்மோடி முதல் முறையாக காஷ்மீர் வந்ததால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் வரலாறு காணாத அளவுக்கு செய்யப்பட்டு இருந்தன.
பிரதமர் மோடி நிகழ்ச்சி நடைபெற்ற கத்ரா அரங்கத்தை சுற்றிலும் கண்காணிப்பு பணியில் டிரோன்கள் ஈடுபடுத்தப்பட்டன.
- கத்ராவில் ரூ.46 ஆயிரம் கோடிக்கும் மேலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
- பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் செல்கிறார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் செல்கிறார். பிரதமர் மோடியின் காஷ்மீர் பயணத்தை ஒட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உதம்பூர், ஸ்ரீநகர், பாராமுல்லா ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ஒரு வளைவான பாலம் ரெயில்வேயால் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இரும்பால் கட்டப்பட்ட இந்த பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்டது. இது உலகின் மிக உயரமான ரெயில்வே பாலம் ஆகும். நில அதிர்வு மற்றும் பலத்த காற்று சூழலை தாங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு உள்ளது.
ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான போக்குவரத்தை மேம்படுத்துவதில் இப்பாலம் முக்கியப் பங்கு வகிக்கும். இந்த பாலத்தில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து பார்வையிடுகிறார்.
இதனைத்தொடர்ந்து கம்பி வழி ரெயில் பாலமான அஞ்சி பாலத்தையும் பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். பின்னர் ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள்ள கத்ராவில் இருந்து ஸ்ரீநகர் வரை இயக்கப்படும் 2 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையையும் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
அதைத்தொடர்ந்து, கத்ராவில் ரூ.46 ஆயிரம் கோடிக்கும் மேலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், அங்கு ஏற்கனவே நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.






