என் மலர்tooltip icon

    இந்தியா

    பஹல்காம் தாக்குதல் ஜம்மு-காஷ்மீர் மக்களின் வருமானத்தை தடுப்பதற்கான பாகிஸ்தானின் சதி: பிரதமர் மோடி
    X

    பஹல்காம் தாக்குதல் ஜம்மு-காஷ்மீர் மக்களின் வருமானத்தை தடுப்பதற்கான பாகிஸ்தானின் சதி: பிரதமர் மோடி

    • பஹல்காம் தாக்குதல் இந்தியாவில் கலவரத்தை தூண்டுவதை நோக்கமாக கொண்டது
    • இந்தியா பயங்கரவாதத்திடம் அடிபணியாது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஜம்மு-காஷ்மீர் இளைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.

    பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செனாப் பாலத்தை திறந்து வைப்பதற்காகவும், கத்ரா- ஸ்ரீநகர் இடையே வந்தே பாரத் ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைப்பதற்காகவும் அம்மாநிலம் சென்றுள்ளார்.

    கத்ராவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    * பாகிஸ்தான் மனித நேயம், சுற்றுலா, காஷ்மீரிகளின் "rozi-roti"-க்கு எதிரானது, அதனால்தான் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைத் தாக்கியது

    * பஹல்காம் தாக்குதல் இந்தியாவில் கலவரத்தை தூண்டுவதை நோக்கமாக கொண்டது.

    * காஷ்மீர் மக்களின் வருமானத்தை நிறுத்துவதற்கான பாகிஸ்தான் சதிதான் பஹல்காம் தாக்குதல்.

    * இந்தியா பயங்கரவாதத்திடம் அடிபணியாது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஜம்மு-காஷ்மீர் இளைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.

    * பாகிஸ்தான் ஆபரேஷன் சிந்தூர் பெயரை கேட்கும் போதெல்லாம், அவமானகரமான தோல்வியை நினைவு கூறும்.

    * பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் அதிக அளவில் சேதம் அடைந்த வீடுகளை சீரமைக்க 2 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும். சிறிய அளவில் சேதம் அடைந்த வீடுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    Next Story
    ×