அமர்நாத் யாத்திரை செல்லும் பகுதியில் பலூன்கள், டிரோன்கள் பறக்க தடை

இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ம் தேதி தொடங்குகிறது.யாத்திரைக்கான பாதுகாப்பை பலப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமர்நாத் யாத்திரை செல்லும் பகுதியில் பலூன்கள், டிரோன்கள் பறக்க தடை
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:

இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ல் தொடங்கி ஆகஸ்ட் 8 உடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து யாத்திரைக்கான பாதுகாப்பை பலப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக, அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் அனைத்து வழிகளும் பறப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பஹல்காம் மற்றும் பால்தால் வழியான பாதைகளும் அடங்கும்.

இந்த உத்தரவை தொடர்ந்து ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை அமர்நாத் யாத்திரை பகுதிகளில் பலூன்கள், டிரோன்கள் உள்ளிட்ட எந்தவகையான சாதனங்களும் பறப்பதற்கு தடைவிதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகான பாதுகாப்பு சூழலை கருத்தில் கொண்டே ஜம்மு காஷ்மீர் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com