என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜம்மு-காஷ்மீர்: பஹல்காம் தாக்குதலுக்குப் பின் மூடப்பட்ட 16 சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறப்பு
    X

    ஜம்மு-காஷ்மீர்: பஹல்காம் தாக்குதலுக்குப் பின் மூடப்பட்ட 16 சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறப்பு

    • காஷ்மீரின் 87 சுற்றுலா தலங்களில் 48 இடங்களை அதிகாரிகள் தற்காலிகமாக மூடிவிட்டனர்.
    • பெதாப் பள்ளத்தாக்கு, பூங்காக்கள், வெரினாக், கோகர்னாக் மற்றும் அச்சாபல் தோட்டங்கள் திறக்கப்படும்.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீர் உள்ள 16 சுற்றுலாத் தலங்கள் செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்படும் என்று துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்துள்ளார்.

    சுற்றுலாத் தலங்கள் படிப்படியாக திறக்கப்படும் என்று சின்ஹா கூறினார். முதல் கட்டமாக, அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் சந்தைக்கு அருகிலுள்ள பெதாப் பள்ளத்தாக்கு, பூங்காக்கள், வெரினாக், கோகர்னாக் மற்றும் அச்சாபல் தோட்டங்கள் திறக்கப்படும்.

    ஏப்ரல் 22 தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீரின் 87 சுற்றுலா தலங்களில் 48 இடங்களை அதிகாரிகள் தற்காலிகமாக மூடிவிட்டனர். இந்நிலையில் பஹல்காம், குல்மார்க், சோனாமார்க் மற்றும் தால் ஏரி போன்ற முக்கிய சுற்றுலா தலங்கள் ஏற்கனவே திறந்திருந்ததாகவும், சில முக்கிய இடங்கள் மட்டுமே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் சுற்றுலா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    Next Story
    ×