என் மலர்
இமாச்சல பிரதேசம்
- இரவில் பனிக்கட்டியான சாலையில் டிரக் சரியத் தொடங்குகிறது
- ரிசார்ட்டில் சிக்கிய சுமார் 5,000 சுற்றுலா பயணிகளை போலீசார் நேற்று மீட்டுள்ளனர்.
இமாச்சல பிரதேசத்தில் தொடங்கியுள்ள கடுமையான பனிப்பொழிவு போக்குவரத்துகளைப் பாதித்து வருகிறது. ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்கள் வழுக்கும் மேற்பரப்பில் சறுக்குவதால் கட்டுப்பாட்டை இழந்து ஆபத்துகளை எதிர்கொள்கின்றனர்.
இதுபோன்ற ஒரு சம்பவத்தில், மணாலி அருகே சோலாங் பள்ளத்தாக்கில் பனி மூடிய சாலையில் ஒரு சிறிய டிரக் கட்டுப்பாடில்லாமல் சறுக்கி பள்ளத்தாக்கில் கவிழும் வீடியோ வெளியாகி உள்ளது.
இரவில் பனிக்கட்டியான சாலையில் டிரக் சரியத் தொடங்குகிறது. எனவே ஓட்டுநர் வாகனத்திலிருந்து வெளியே குதித்தார். மேலும் கீழே சரியும் தனது டிரக்கை கையால் நிறுத்த முயற்சித்தார்.
ஆனால் தரை வழுக்களாக இருந்ததால் அவர் அதற்கு சிரமப்பட வேண்டியிருந்தது. கடைசியில் டிரக் சறுக்கியவாரே சாலையை விட்டு விலகி, கீழே உள்ள பள்ளத்தாக்கில் விழுந்தது.
இமாச்சலில் கடந்த டிசம்பர் 8 இல் முதல் பனிப்பொழிவு தொடங்கிய நிலையில் இந்த வாரம் இரண்டாம் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. மணாலியில் பனிப்பொழிவு காரணமாக சோலாங் மற்றும் அடல் சுரங்கப்பாதைக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
1,000 வாகனங்கள் மணிக்கணக்கில் சிக்கித் தவித்தன. மேலும் குலு [kullu] பகுதியில் ரிசார்ட்டில் சிக்கிய சுமார் 5,000 சுற்றுலா பயணிகளை போலீசார் நேற்று மீட்டுள்ளனர். இதற்கிடையே ஜம்மு காஷ்மீரிலும் நேற்றைய தினம் ஆண்டின் முதல் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.
- ‘ஒயிட் கிறிஸ்துமஸ்’ மலை போல் ஆன சிம்லா
- வாகனம் சறுக்கி விழுந்த விபத்துகளால் 4 பேர் பலி
சிம்லா:
இந்தியாவில் இமாச்சல பிரதேசத்தின் சிம்லா முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஒட்டி உள்ள பகுதியாக இருப்பதால் இங்கு குளிர் பல நேரங்களில் மைனஸ் டிகிரிக்கும் சென்றுவிடும். இதனால் சுற்றுலாப் பயணிகள் இங்கு விரும்பி வருகின்றனர்.
திருமணமான புது தம்பதிகள் தங்களின் தேன்நிலவை கொண்டாட அதிக அளவில் இங்கு வந்து செல்கின்றனர். தற்போது முந்தைய ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது.
இங்குள்ள மலை பிரதேசங்களில் பனிகள் படர்ந்து வெள்ளியை சிதறிவிட்டது போல் பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது.
இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதை யொட்டி சிம்லாவில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் ஒயிட் கிறிஸ்துமஸ் கொண்டாட சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.
இதனால் அங்கு போக்குவரத்து அதிகரித்திருப்பதால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் சிம்லாவிற்கு சுற்றுலா வந்த பயணிகளின் வாகனங்கள் பனியில் சிக்கி சறுக்கில் விழுந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர்.
பயணிகளின் வருகையை குறைக்கவும் மேலும் உயிரிழப்புகளை தடுக்கவும் சிம்லாவை சுற்றி உள்ள 3 தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட 223 சாலைகளை அந்த மாநில அரசு மூடியுள்ளது.
சிம்லாவில் வெள்ளிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை குறிப்பாக சனிக்கிழமை உச்சக்கட்ட பனிப்பொழிவு இருக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
- மணாலி அருகே ரோஹ்தாங்கின் சோலாங் மற்றும் அடல் சுரங்கப்பாதை இடையே சுமார் 1000 வாகனங்கள் சிக்கிக் கொண்டது
- தலைநகர் சிம்லா முற்றிலும் பனியால் மூடப்பட்டதுபோல் காட்சியளிக்கிறது.
இமாச்சல பிரதேசத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அடர்ந்த பனிப்பொழிவு காரணமாக மணாலி அருகே ரோஹ்தாங்கின் சோலாங் மற்றும் அடல் சுரங்கப்பாதை இடையே சுமார் 1000 வாகனங்கள் சிக்கிக் கொண்டதால் பல மணி நேரமாக நீண்ட போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்தனர். பனிப்பொழிவுக்கு மத்தியில் போக்குவரத்து நெரிசலை அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர்கால நாட்களில் பனி படர்ந்த மலைகளைக் காண சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி இப்பகுதிக்கு வந்து செல்வார்கள். அதன்படி பனி படர்ந்த மலைப்பகுதியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டைக் கொண்டாடச் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் இந்த வருடமும் அலைமோதியது.
இந்த சூழலில் பனிப்பொழிவு அதிகரிப்பால் பல்வேறு இடங்களிலிருந்து வந்த 700 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சிக்கல்கள் இருந்தபோதிலும் அதிக பனிப்பொழிவு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தலைநகர் சிம்லா முற்றிலும் பனியால் மூடப்பட்டதுபோல் காட்சியளிக்கிறது. இந்த வருடத்தின் முதல் பனிப்பொழிவானது டிசம்பர் 8 ஆம் தேதி தொடங்கியிருந்த நிலையில் இரண்டு வாரங்கள் கழித்து தற்போது ஏற்பட்டுள்ள மிகையான பனிப்பொழிவு காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
- கடும் பனிப்பொழிவு காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
- பனிப்பொழிவுக்கு மத்தியில் போக்குவரத்து நெரிசலை அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இமாச்சல பிரதேசம்:
இமாச்சல பிரதேசத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அடர்ந்த பனிப்பொழிவு காரணமாக ரோஹ்தாங்கின் சோலாங் மற்றும் அடல் சுரங்கப்பாதை இடையே சுமார் 1000 வாகனங்கள் சிக்கிக் கொள்வதால் நீண்ட போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பனிப்பொழிவுக்கு மத்தியில் போக்குவரத்து நெரிசலை அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு இடங்களில் இருந்து வந்த 700 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதனால் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்தனர்.
- ஆற்றில் தவறி விழுந்து அடித்து செல்லப்பட்ட நிகில் குமாரை தீவிரமாக தேடி வந்தனர்.
- கடுங்குளிர் காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.
சிம்லா:
ராஜஸ்தான் மாநிலம் பார்மரை சேர்ந்தவர் நிகில் குமார் (வயது 28). ஜவுளிக்கடை அதிபர். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாடுவதற்காக தனது நண்பர்களுடன் இமாசல பிரதேசம் மாநிலம் குலு-மணாலிக்கு சுற்றுலா சென்றார்.
மணாலியில் உள்ள பனிமலையில் தனது நண்பர்களுடன் ஏறி உற்சாக சாகசத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் அங்கு 'ஐஸ்'கட்டியாக உறைந்து இருந்த சந்திரா ஆற்றங்கரையில் நின்று போட்டோவுக்கு 'போஸ்' கொடுத்தார். இதனிடையே நிகில் குமாரின் பாரத்தை தாங்காமல் ஐஸ்கட்டி நொறுங்கி உடைந்தது. நொடிப்பொழுதில் நடந்த இந்த சம்பவத்தில் நண்பர்கள் கண் எதிரே நிகில் குமார் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
ஆற்றில் தவறி விழுந்து அடித்து செல்லப்பட்ட நிகில் குமாரை தீவிரமாக தேடி வந்தனர். கடுங்குளிர் காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. சுமார் 20 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தவறி விழுந்த இடத்தில் இருந்து 1 கி.மீ தொலைவில் ஆற்றில் நிகில் குமார் உயிரிழந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். ஒரு புகைப்படத்திற்காக தனது உயிரையே விலையாக கொடுத்த நிகில் குமாரின் 'இறுதி' போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- சாமியார் சின்மோய் கிருஷ்ணதாஸ் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
- இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
வங்கதேச மக்கள் தொகையில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு எதிராக இந்துக்களை ஒருங்கிணைத்து போராட்டங்களும் நடத்தப்பட்டன. வங்கதேச சனாதானி விழிப்புணர்வு இயக்கம் சார்பிலும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளராக இருந்த இஸ்கான் அமைப்பைச் சேர்ந்த இந்து சாமியார் சின்மோய் கிருஷ்ணதாஸ் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது வங்கதேச கொடியை அவமதித்து இந்துக்களைப் போராட்டத்துக்குத் தூண்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கடந்த மாதம் 25-ம் தேதி சின்மோய் தாஸ் கைது செய்யப்பட்டார்.
வங்கதேசத்தில் தொடர்ந்து இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்கள் மீதும், அவர்களது வழிபாட்டு தலங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. டாக்காவில் நமஹட்டா மையத்தில் உள்ள இஸ்கான் கோவிலை சூறையாடிய மர்ம நபர்கள், அங்கிருந்த கடவுள் சிலைகளுக்கும் தீவைத்தனர்.
இந்த நிலையில், வங்கதேசத்தில் இந்துகள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதும், அவர்களின் வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து சிம்லாவில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், "வங்கதேச இந்துக்களை காப்பாற்றுங்கள்," இந்துக்கள் மீதான அடாவடியை நிறுத்துங்கள்" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கண்டனக்குரல் எழுப்பினர்.
"வங்கதேச இந்துக்களுக்கு எதிராக நடத்தப்படும் அடாவடிகளை உலகமே பார்த்துக் கொண்டு இருக்கிறது. இந்துக்கள் கொலை செய்யப்படுகின்றனர், பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுகின்றனர். எங்களது கோவில்கள் அழிக்கப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் சபை, இந்திய அரசு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்டவை இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்," என்று போராட்டத்தில் கலந்து கொண்டவர் தெரிவித்துள்ளார்.
- துருக்கியில் பணிபுரியும் மணமகனுக்கு விடுமுறை அளிக்க முதலாளி மறுப்பு தெரிவித்துள்ளார்.
- மணமகளின் நோய்வாய்ப்பட்ட தாத்தா அவளுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இமாச்சலபிரதேம் மாநிலம் மண்டியில் விடுமுறை கிடைக்காததால் வீடியோ கால் மூலம் மணமக்கள் திருமணம் செய்து கொண்டனர்.
துருக்கியில் பணிபுரியும் மணமகனுக்கு விடுமுறை அளிக்க முதலாளி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனிடையே மணமகளின் நோய்வாய்ப்பட்ட தாத்தா அவளுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இதனால் மணமகன் மற்றும் மணமகளின் குடும்பத்தினர் மெய்நிகர் 'நிக்கா'வுக்கு ஒப்புக்கொண்டனர்.
இதனால் அதிநவீன தொழில்நுட்பத்தால் வீடியோ கால் மூலம் மணமகன் துருக்கியில் இருந்தும், மணமகள் பிலாஸ்பூரிலிருந்தும் திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், சிம்லாவில் உள்ள கோட்கரைச் சேர்ந்த ஆஷிஷ் சிங்கும், குலுவில் உள்ள பூந்தரைச் சேர்ந்த ஷிவானி தாக்குரும், நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக வீடியோ கான்பரன்சிங் மூலம் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சி.ஐ.டி, தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்பு.
- பிரபல ஓட்டலில் இருந்து வந்த சமோசாக்கள் பாதுகாப்பு ஸ்டாஃப்களுக்கு வழங்கப்பட்டது தொடர்பாக விசாரணை.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவிற்கு வந்த சமோசாக்களை அவருடைய பாதுகாப்பு ஸ்டாஃப்களுக்கு வழங்கியது தொடர்பாக சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது வினோதத்தை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க. இதை கிண்டல் செய்துள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. சுக்விந்தர் சிங் சுகு முதல்வராக இருந்து வருகிறார். கடந்த மாதம் 21-ந்தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சி.ஐ.டி. தலைமையகத்திற்கு சென்றுள்ளார்.
முதல்வர் வருகையையொட்டி பிரபல ஓட்டலில் இருந்து 3 பெட்டிகளில் சமோசாக்கள் மற்றும் கேக் வந்துள்ளது. இந்த சமோசாக்கள் முதலமைச்சர் பாதுகாப்பு ஸ்டாஃப்களுக்கு வழங்கப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக சி.ஐ.டி. விசாரணை நடத்த இமாச்சல பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இது இமாச்சல பிரதேச மாநிலத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சமோசா தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது குறித்து பா.ஜ.க. தலைமை செய்தி தொடர்பாளர் ரந்த்வீர் சர்மா "காங்கிரஸ் முதல்வரின் சமோசா குறித்து கவலைப்படுகிறது. மாநிலத்தின் வளர்ச்சி பற்றி அக்கறை கொள்ளவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "இந்த சம்பவம் ஹிமாச்சல பிரதேச அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. உண்மையில், முதல்வர் போன்ற வி.வி.ஐ.பி., தொடர்பான நிகழ்ச்சிகளில், இதுபோன்ற ஒருங்கிணைப்பு பிரச்னையால், அரசு இயந்திரம் தர்மசங்கடத்திற்கு உள்ளாகிறது" என்றார்.
- இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது.
- கட்சியை மறுசீரமைக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
சிம்லா:
இமாச்சல பிரதேச மாநில காஙகிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வருபவர் முன்னாள் முதல் மந்திரி வீரபத்ர சிங்கின் மனைவி பிரதீபா சிங்.
இந்நிலையில், இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி கூண்டோடு கலைக்கப்படுகிறது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி, மாவட்டத் தலைவர்கள் மற்றும் பிளாக் காங்கிரஸ் கமிட்டிகளின் மாநிலப் பிரிவு முழுவதையும் உடனடியாக கலைப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
இமாச்சலில் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே, ஒடிசாவில் தேர்தல் தோல்வியை தொடர்ந்து கட்சியை கூண்டோடு கலைத்து காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டது நினைவு கூரத்தக்கது.
ஹமிர்பூர்:
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நேற்று பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி விமரிசையாக தீபாவளி கொண்டாடப்பட்டது.
ஆனால் இமாசல பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்ணின் சாபத்திற்கு பயந்து பல நூற்றாண்டுகளாக தீபாவளி கொண்டாடாத வினோதம் இருந்து வருகிறது.
இமாசல பிரதேசத்தில் ஹமிர்பூர் மாவட்டத்தில் சம்மூ என்ற கிராமம் உள்ளது. பல நூற்றாண்டு களுக்கு முன்பு இந்த கிராமத்தை சேர்ந்த திருமண மான பெண் ஒருவர் கர்ப்பிணியாக இருந்தார். அவர் தீபாவளி கொண்டாடு வதற்காக தன் தாய் வீட்டுக்கு வந்திருந்தார்.
அப்போது மன்னனின் அரசவையில் சிப்பாயாக பணிபுரிந்து வந்த அவரது கணவர் திடீரென இறந்து விட்டார். இந்த செய்தி தீபாவளி கொண்டாட வந்த அவரது மனைவிக்கு தெரிவிக்கப்பட்டது.
இதை கேட்டு பேரதிர்ச்சியடைந்த அந்த பெண் அழுது புரண்டார். துக்கம் தாங்காமல் இருந்த அந்த பெண் தனது கணவரின் இறுதி ஊர்வலத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது அவர் அந்த கிராம மக்கள் தீபாவளி கொண்டாடக் கூடாது என்று சபித்ததாக புராண கதைகள் கூறுகிறது.
அன்றிலிருந்து இந்த கிராம மக்கள் தீபாவளி கொண்டாடுவதில்லை. பக்கத்து கிராமங்களில் தீபாவளி கொண்டாட்டத்தில் பட்டாசு சத்தம் கேட்கும் நேரத்தில் இங்கு மயான அமைதி நிலவுகிறது.
தீபாவளி பண்டிகையின் போது இந்த கிராமத்தில் வீடுகளில் தீபம் ஏற்றுவதில்லை. பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்காது. அதனையும் மீறி தீபாவளி கொண்டாடினால் கிராம மக்களுக்கு துரதிஷ்ட மும், பேரழிவும் ஏற்படும். மற்றும் மரணத்தை வரவழைக்கும் அபாயமும் ஏற்படும் என்று இளைய சமூகத்தினரை பெரியவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனால் இந்த கிராம மக்கள் யாரும் அந்த பெண்ணின் சாபத்திற்கு பயந்து தீபாவளி கொண்டாடுவதில்லை. பல நூற்றாண்டுகளாக இன்று வரை அது தொடர்கிறது.
இதுகுறித்து திருமணமாகி அந்த கிராமத்திற்கு வந்த பஞ்சாயத்து நிர்வாகியான பூஜாதேவி என்ற பெண் ஒருவர் கூறியிருப்பதாவது:-
நான் திருமணமாகி இந்த கிராமத்திற்கு வந்ததில் இருந்து தீபாவளி கொண்டாடுவதை பார்த்த தில்லை. இந்த கிராம மக்கள் வெளியூரில் குடியேறினாலும் அந்த பெண்ணின் சாபம் அவர்களை விட்டு விலகவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் வெகு தொலைவில் உள்ள வேறு ஒரு கிராமத்தில் குடியேறினார். அங்கு அவர் தீபாவளி கொண்டாட்டத்திற்காக பலகாரம் செய்த போது அவரது வீடு தீப்பற்றி எரிந்தது. அந்த பெண்ணின் சாபத்தால்தான் இது நடந்ததாக கிராம மக்கள் நம்பு கின்றனர்.
இதனால் கிராம மக்கள் தீபாவளியன்று அந்த பெண்ணை வணங்கி தீபம் ஏற்றி வழிபடுகின்றனர் என்று அந்த பெண் கூறினார்.
மேலும் அந்த கிராமத்தை சேர்ந்த 70 தீபாவளிகளை கண்ட பெரியவர் ஒருவர் கூறியிருப்பதாவது:-
இந்த கிராமத்தில் யாராவது ஒருவர் தீபாவளியை கொண்டாடும் போதெல்லாம் ஏதோ ஒரு துரதிஷ்டம் அல்லது இழப்பு ஏற்படுகிறது என்றார்.
மேலும் இந்த கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் கூறும் போது, பல நூற்றாண்டுகளாக இந்த கிராம மக்கள் தீபாவளி கொண்டாடுவதை தவிர்த்து விட்டனர்.
தீபாவளி நாளில் ஒரு குடும்பம் தவறுதலாக பட்டாசுகளை வெடித்து வீட்டில் பலகாரம் செய்தால் பேரழிவு நிச்சயம் என்று கூறியுள்ளார்.
இளைய தலைமுறையினர் இந்த நம்பிக்கையில் இருந்து விடுபட விரும்பினாலும் கடந்த காலத்தில் நடந்த விபரீதங்கள் அவர்களை தீபாவளி கொண்டாடுவதை கட்டுப்படுத்தியுள்ளது.
- சுதந்திரப் போராட்ட சமயத்தில் உருவானது காங்கிரஸ் கட்சி.
- ராகுல் காந்தி நாட்டை பிளவுபடுத்த நினைப்பவர்களின் மொழியில் பேசி வருகிறார்.
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறியதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசியுள்ளார்.
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் சிர்மௌர்[Sirmaur] மாவட்டத்தில் நடந்த பேரணியில் பேசிய நட்டா, சுதந்திரப் போராட்ட சமயத்தில் உருவானது காங்கிரஸ் கட்சி. எனவே சுதந்திரம் கிடைத்த பின்னர் இனியும் அதற்கான தேவை இல்லாத காரணத்தால் காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும் என்றே காந்தி விரும்பினார்.

ஆனால் அதிகாரத்தைக் கைப்பற்றும் ஆசையினால் கட்சியை இடது பக்கத்தில் இருன்டயது வலது பக்கமாகவும், வலம் இருந்து இடமாகவும் அவர்கள் நகர்த்திக்கொண்டுள்ளனர்.
இப்போதெல்லாம் ராகுல் காந்தி நகர்ப்புற [urban] நக்சல் மொழியிலிருந்து முன்னேறி நாட்டை பிளவுபடுத்த நினைப்பவர்களின் மொழியில் பேசி வருகிறார் என்று சாடியுள்ளார். 1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காங்கிரஸ் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது
- ஒவ்வொரு கழிவறைக்கும் ரூ. 25 கட்டணம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புதிய வரி விதிப்புக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இமாச்சல பிரதேசம்:
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் நகர்ப்புறங்களில் உள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய வரியை அரசு அறிவித்துள்ளது.
இந்த புதிய விதியின் கீழ், மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள ஒவ்வொரு கழிப்பறைக்கும் மாதாந்திர கட்டணம் செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு கழிவறைக்கும் ரூ. 25 கட்டணம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாநிலம் முழுவதும் சுமார் 10 லட்சம் குடியிருப்பாளர்களை பாதிக்கும் ஒரு முடிவாகும்.

இந்த கட்டணம் ஏற்கனவே செலுத்தி வரும் கழிவுநீர் வடிகால் கட்டணத்துடன் சேர்க்கப்படும் என்றும், சேகரிக்கப்பட்ட தொகை ஜல் சக்தி துறைக்கு செலுத்தப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
பல நகர்ப்புற வீடுகளில் பல கழிப்பறைகள் இருப்பதால் நகர்ப்புறங்களில் இந்த வரி குறிப்பாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது, கழிவறை கட்டுவது அவசியம் என்று அரசு ஒருபக்கம் விழிப்புணர்வை ஏற்படுத்திவந்தது. இப்போது கழிப்பறைக்கு வரி போடப்படுகிறது. இதனால் குடும்பங்களுக்கு நிதி சுமை அதிகரிக்கிறது.
இந்த புதிய வரி விதிப்புக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.






