என் மலர்tooltip icon

    டெல்லி

    • ஒரு கட்சியின் பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிப்பது இதுவே முதல் முறை
    • பாஜக சர்வாதிகாரம் செய்தால், அது சரியானது. ஆனால் யாராவது அதைப் பற்றி பேசினால், அது தவறு. இது ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதைக் காட்டுகிறது

    ஆம் ஆத்மி கட்சியின் இரண்டு நிமிட தேர்தல் பிரச்சாரப் பாடலை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ திலீப் பாண்டே எழுதி பாடியுள்ளார். இந்த பாடல் ஏப்ரல் 25-ம் தேதி கட்சி தலைமையகத்தில் வெளியிடப்பட்டது.

    இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி இன்று தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான அதிஷி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "ஒரு கட்சியின் பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிப்பது இதுவே முதல் முறை. தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, இந்த பாடல் ஆளும் கட்சியையும் விசாரணை நிறுவனங்களையும் அம்பலப்படுத்தியுள்ளது.

    எங்கள் கட்சியின் பிரசார பாடலில் பாஜகவை குறிப்பிடவில்லை மற்றும் தேர்தல் நடத்தை நடத்தை விதிகளை மீறவில்லை. இதில் உண்மை வீடியோக்கள் மற்றும் சம்பவங்கள் உள்ளன.

    பாஜக சர்வாதிகாரம் செய்தால், அது சரியானது. ஆனால் யாராவது அதைப் பற்றி பேசினால், அது தவறு. இது ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதைக் காட்டுகிறது.

    பாஜக செய்த தேர்தல் விதிமுறை மீறல்களை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. பாஜக செய்த தேர்தல் விதிமுறை மீறல்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்தை நான் வலியுறுத்த விரும்புகிறேன். எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை நிறுத்த வேண்டாம்" என்று அவர் தெரிவித்தார்.

    ஆம் ஆத்மின் குற்றசாட்டு தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதில், "விதிகளை மீறி இருந்ததால் பரப்புரை பாடலில் சில வரிகளை மட்டுமே மாற்ற பரிந்துரைத்தோம். கெஜ்ரிவால் சிறையில் இருப்பது போன்று இடம்பெற்றுள்ள வரிகள் நீதித்துறையை அவதூறு செய்வதாக உள்ளது. விதிகளுக்கு முரணான இந்த சொற்கள் விளம்பரத்தில் பலமுறை வருகிறது" என்று தெரிவித்துள்ளது.

    • ஐ.பி.எல். போட்டியில் டெல்லியில் நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை-டெல்லி அணிகள் மோதின.
    • இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை ஜூன் 5-ந் தேதி எதிர்கொள்கிறது.

    புதுடெல்லி:

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது.

    இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அறிவித்து இருந்தது.

    20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் யார்-யார்? இடம் பெறுவார்கள்? என்று முன்னாள் வீரர்கள் நாள் தோறும் கணித்து வருகிறார்கள்.

    ஐ.பி.எல். போட்டியில் வீரர்களின் செயல்பாடு குறித்து அணி தேர்வு இருக்கும் என்று கருதப்படுகிறது. ஐ.பி.எல். போட்டியில் டெல்லியில் நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை-டெல்லி அணிகள் மோதின.

    இந்தப் போட்டிக்கு பிறகு கேப்டன் ரோகித் சர்மா-தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் 20 ஓவர் உலக கோப்பை குறித்து ஆலோசனை நடத்துவார்கள் என்று தகவல் வெளியானது.

    அதன்படி ரோகித் சர்மாவும் ரோகித் சர்மாவும் அகர்கரும் இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சதிப்புக்கு பிறகு வீரர்களின் தேர்வு இறுதி செய்யப்படும். நாளை அல்லது நாளை மறுநாள் இந்திய அணி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் வீராட் கோலி இடம் பெறுவார். அவர் தொடக்க வீரராக ஆடுவாரா? அல்லது 3-வது வீரராக ஆடுவாரா? என தெரியவில்லை.

    சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் உள்ளிட்டோர் இடம் பெறுவார்கள். ரிங்குசிங், ஷிவம் துபே, சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

    இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகி ஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா ஆகியவை உள்ளன. அந்த பிரிவில் இடம் பெற்றுள்ளன.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை ஜூன் 5-ந் தேதி எதிர்கொள்கிறது. 9-ந் தேதி பாகிஸ்தானுடனும், 12-ந் தேதி அமெரிக் காவுடனும் 15-ந் தேதி கனடாவுடனும் மோதுகிறது.

    • ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா.
    • டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளில் 4ல் ஆம் ஆத்மி, 3ல் காங்கிரஸ் போட்டி.

    டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி திடீரென பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

    ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் மேலிடம் தங்களின் கருத்துக்களை கேட்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளில் 4ல் ஆம் ஆத்மி, 3ல் காங்கிரஸ் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

    • பயணத்தில் அரசியல் முக்கியத்துவம் ஏதும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • புதன்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

    3 நாட்கள் பயணமாக டெல்லி சென்று உள்ள அவர் வருகிற செவ்வாய்க்கிழமை சென்னை திரும்புவார் என்று ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாகவும் அவரது பயணத்தில் அரசியல் முக்கியத்துவம் ஏதும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை வந்த பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவி புதன்கிழமை அன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    • நாம் சர்வாதிகாரத்தை நீக்கவும், ஜனநாயகத்தை பாதுகாக்கவும் வாக்களிக்க வேண்டும்.
    • பள்ளிக்கூடங்களை கட்டினார், இலவச மின்சாரம் வழங்கினார். இதனால் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால். இவரது மனைவி சுனிதா. கெஜ்ரிவால் சிறையில் உள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி, பஞ்சாப், அரியானா மற்றும் குஜராத் மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் என அக்கட்சியின் தலைவர் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் இன்று கிழக்கு டெல்லி தொகுதி வேட்பாளரை ஆதரித்து ரோடு ஷோ நடத்தினர்.

    அப்போது அவர் கூறுகையில் "நாம் சர்வாதிகாரத்தை நீக்கவும், ஜனநாயகத்தை பாதுகாக்கவும் வாக்களிக்க வேண்டும். உங்களடைய முதல்வர் (அரவிந்த கெஜ்ரிவால்) சிங்கம். அவரை உடைந்து போக செய்ய முடியாது. அவர் யாருக்கும் தலைகுனியமாட்டார். கெஜ்ரிவால் பள்ளிக்கூடங்களை கட்டினார். இலவச மின்சாரம் வழங்கினார். மொகல்லா கிளினிக் தொடங்கினார். இதனால் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்" என்றார்.

    நாளை மேற்கு டெல்லி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ரோடு ஷோ நடத்துகிறார்.

    • வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், பூடான், பஹ்ரைன், மொரிசியஸ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி.
    • மத்திய கிழக்கு மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு 2000 மெட்ரிக டன் வெள்ளை வெங்காயம் ஏற்றுமதி செய்யவும் அனுமதி.

    2023-24-ல் வெங்காயத்தின் உற்பத்தி அதற்கு முந்தைய காலக்கட்டத்தை விட குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டதாலும், உள்நாட்டில் தேவை அதிகரித்ததாலும், வெளிநாட்டிலும் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டதாலும் மத்திய அரசு வெங்காயம் ஏற்றுமதிக்கு தடைவிதித்துள்ளது.

    இந்த நிலையில் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், பூடான், பஹ்ரைன், மொரிசியஸ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு 99,150 மெட்ரிக் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

    மத்திய கிழக்கு மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு 2000 மெட்ரிக டன் வெள்ளை வெங்காயம் ஏற்றுமதி செய்யவும் அனுமதி அளித்துள்ளது.

    இந்த வெங்காயம் முற்றிலும் ஏற்றமதியைச் சார்ந்தது. வழக்கமான வெங்காயத்தை விட இந்த வெங்காயம் அறுவடை செய்வதற்கு அதிக செலவாகும்.

    • வேட்பாளர்கள் பெயர் என்னிடம் வரும்போது, அதற்கான அறிவிப்பாணையில் கையெழுத்திடுவேன்.
    • அதன்பின் அறிவிப்பு வெளியிடப்படும். அதற்கான இன்னும் சில நாட்கள் காத்திருங்கள்.

    காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியமான அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு இன்னும் வேட்பார்ளர்கள் அறிவிக்கப்படாமல் உள்ளது. இன்று மாலை காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

    அப்போது அமேதி, ரேபரேலி தொகுதியில் யாரை நிறுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்படும் எனத் தகவல் வெளியானது. மேலும், இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியானது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

    அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய தொகுதி வேட்பாளர்களுக்காக இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும். ஆலோசனை முடிந்து வேட்பாளர்கள் பெயர் என்னிடம் வரும்போது, அதற்கான அறிவிப்பாணையில் கையெழுத்திடுவேன். அதன்பின் அறிவிப்பு வெளியிடப்படும்

    ராகுல் காந்தி தொகுதி மாறியதாக அடிக்கடி கூறப்படுகிறது. வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகியோர் எத்தனை முறை தொகுதிகள் மாறினார்கள் என்பதை என்னிடம் தெரிவிக்க வேண்டும்.

    காங்கிரஸ் கட்சி பாய்ந்தோடும் ஆறு போன்றது. கட்சியில் வளர்ச்சி பெற்று பின்னர் வெளியேறிய சிலரால் பாதிக்கப்படாது.

    இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.

    • ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் களம் இறங்குவார் என்று தகவல்கள் வெளியானது.
    • காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி, ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தொகுதிகளாக கருதப்படுகின்றன.

    ரேபரேலி தொகுதியில் இருந்து சோனியா தேர்வு செய்யப்பட்டு வந்தார். தற்போது அவர் மேல்சபை எம்.பி. ஆகிவிட்டதால் அந்த தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியானது.

    இதற்கிடையே ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் களம் இறங்குவார் என்று தகவல்கள் வெளியானது. கடந்த முறை ராகுல் அமேதி தொகுதியில் ஸ்மிருதிஇரானியிடம் தோல்வியை தழுவினார். வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அவர் எம்.பி.யாக முடிந்தது.

    இந்த தடவையும் அவர் வயநாடு தொகுதியில் களம் இறங்கி உள்ளார். நேற்று அந்த தொகுதியில் ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றது. இந்த நிலையில் அவர் அமேதியிலும் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    அமேதியில் ராகுலையும், ரேபரேலியில் பிரியங்காவையும் களம் இறக்குவது பற்றி காங்கிரஸ் தேர்தல் மையக்குழு ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. அதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    அமேதி, ரேபரேலி தொகுதி நிலவரம் பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ராகுல் மற்றும் பிரியங்காவை இந்த தொகுதிகளில் போட்டியிட வைக்க வேண்டும் என்று அனைத்து தலைவர்களும் கருத்து தெரிவித்தனர்.

    இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • 2019-ல் போன்றே தற்போதும் சிறப்பானதொரு வெற்றியை ஐக்கிய ஜனநாயக முன்னணி பெறும் என எதிர்பார்க்கலாம்.
    • ராஜஸ்தானில் காங்கிரஸ் பல இடங்களை வென்று அமோக வெற்றி பெறும்.

    புதுடெல்லி :

    முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மோடி சர்கார் போய்விட்டது. சில நாட்களாக பிஜேபி சர்கார் தான். அதுவும் நேற்றிலிருந்து என்.டி.ஏ., சர்கார்.

    ஏப்ரல் 19 முதல் ஏற்பட்டுள்ள வியத்தகு மாற்றத்தை கவனித்தீர்களா?

    ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 19 வரை காங்கிரசின் தேர்தல் அறிக்கை பிரதமர் மோடியால் புறக்கணிக்கப்பட்டது. ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலுக்குப் பிறகு, தேர்தல் அறிக்கை புதிய அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

    நன்றி, பிரதமரே! எனக்கூறியுள்ளார்.

    மற்றொரு பதிவில்,

    நேற்று வாக்குப்பதிவு நடைபெற்ற மாநிலங்களில் இருந்து வரும் செய்திகள் காங்கிரசுக்கு மிகவும் ஊக்கமளிக்கிறது.

    2019-ல் போன்றே தற்போதும் சிறப்பானதொரு வெற்றியை ஐக்கிய ஜனநாயக முன்னணி பெறும் என எதிர்பார்க்கலாம்.

    கர்நாடகாவில் நேற்று தேர்தல் நடந்த 14 தொகுதிகளில், 2019ல் காங்கிரஸ் தனது 1 மதிப்பெண்ணில் இருந்து பெரும் முன்னேற்றம் அடையும்.

    ராஜஸ்தானில் காங்கிரஸ் பல இடங்களை வென்று அமோக வெற்றி பெறும் என பதிவிட்டுள்ளார்.

    • சில வீடியோக்கள் பயனர்கள் மத்தியில் வரவேற்பையும், சில வீடியோக்கள் விமர்சனத்தையும் ஏற்படுத்துகின்றன.
    • டெல்லியில் ஒருவர் வித்தியாசமான முறையில் ரீல்ஸ் எடுத்ததால் தற்போது கைதாகி சிறைக்கு சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    இன்றைய உலகில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஏராளமான வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்கள் பதிவிடப்படுகின்றன. இவற்றில் சில வீடியோக்கள் பயனர்கள் மத்தியில் வரவேற்பையும், சில வீடியோக்கள் விமர்சனத்தையும் ஏற்படுத்துகின்றன.

    அந்த வகையில், டெல்லியில் ஒருவர் வித்தியாசமான முறையில் ரீல்ஸ் எடுத்ததால் தற்போது கைதாகி சிறைக்கு சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    கைதான நபர் வெளியிட்டுள்ள வீடியோவில், சாலையில் வாகனங்கள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் வேளையில் சாலையின் நடுவே இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதன் அருகே ஒரு நாற்காலியில் கால்மேல் கால் போட்டு அமர்ந்து அந்நபர் வீடியோ எடுத்துள்ளார்.

    இந்த வீடியோ வைரலான நிலையில் ரீல்ஸ் எடுத்த நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

    • வெள்ள பாதிப்பிற்கு ரூ.160 கோடி நிவாரணம் அறிவிப்பு.
    • ரிசர்வ் வங்கி உடனடியாக நிதியை விடுவிக்க உத்தரவு.

    மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.115 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு ரூ.160 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய பிரிந்துரையின் அடிப்படையில் நிதியை விடுவிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

    மாநில அரசின் கணக்கிற்கு ரிசர்வ் வங்கி உடனடியாக நிதியை விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 2ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று மாலை 6 மணியுடன் நிறைவு.
    • 3ம் கட்ட வாக்குப்பதிவு மே 7ம் தேதி நடைபெறுகிறது.

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.

    இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு நேற்று 2ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.

    2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வாக்காளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

    அதன்படி, காலை 9 மணி நிலவரப்படி 11.1 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 25.1 சதவீதமும், 1 மணி நிலவரப்படி 40 சதவீதமும், 3 மணி நிலவரப்படி 50.03 சதவீதமும், 5 மணி நிலவரப்படி 64 சதவீதமும் வாக்குகள் பதிவானது.

    இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.

    தொடர்ந்து, இரவு 8 மணி நிலவரப்படி 88 தொகுதிகளில் மொத்தம் 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தொடர்ந்து, 3ம் கட்ட வாக்குப்பதிவு மே 7ம் தேதி நடைபெறுகிறது.

    ×