தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 3 நாள் டெல்லி பயணம்

பயணத்தில் அரசியல் முக்கியத்துவம் ஏதும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.புதன்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
RN Ravi
Published on: 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

3 நாட்கள் பயணமாக டெல்லி சென்று உள்ள அவர் வருகிற செவ்வாய்க்கிழமை சென்னை திரும்புவார் என்று ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாகவும் அவரது பயணத்தில் அரசியல் முக்கியத்துவம் ஏதும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை வந்த பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவி புதன்கிழமை அன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com