என் மலர்
டெல்லி
- 20 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்து நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு என எச்சரிக்கை கொடுத்தோம்- அமித் ஷா
- மாநிலங்களவையில் அமித் ஷா சொன்னது தவறு என்பது நிரூபணமாகியுள்ளது- ஜெய்ராம் ரமேஷ்
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 29-ந்தேதி நள்ளிரவு கனமழை மற்றும் மேக வெடிப்பு காரணமாக மழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் சில கிராமங்கள் மண்ணில் புதைந்தன. தற்போது வரை பலி எண்ணிக்கை 340-ஐ தாண்டியுள்ளது. இதற்கிடையே வயநாடு நிலச்சரிவு தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசும்போது, கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் கேரள அரசு எச்சரிக்கையை செயல்படுத்தவில்லைத் தெரிவித்திருந்தார்.
இதை கேரள மாநில முதல்வர் பினராயி விஜய் மறுத்திருந்தார். 30-ந்தேதி காலையில்தான் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எனத் தெரிவித்திருந்தார்.
அந்த நிலையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறியதை மறுத்து காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
ஜெய்ராம் ரமேஷ் வழங்கிய நோட்டீஸில் "மத்திய அரசின் முன்னெச்சரிக்கை குறித்த மத்திய உள்துறை மந்திரியின் அறிக்கைகள் பொய் என நிரூபிக்கப்பட்டதன் மூலம் ராஜ்யசபாவை தவறாக வழி நடத்தியது தெளிவாகிறது. ஒரு அமைச்சர் அல்லது உறுப்பினர் சபையை தவறாக வழி நடத்துவது சிறப்புரிமையை மீறுவதாகவும், அவையை அவமதிப்பதாகவும் அமைகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை அமித் ஷா மாநிலங்களவையில் "நிலச்சரிவு ஏற்படுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பாக ஜூலை 23-ந்தேதி மத்திய அரசு முன்னெச்சரிக்கை கொடுத்தது. ஜூலை 24 மற்றும் 25-ந்தேதி மீண்டும் எச்சரித்தோம். ஜூலை 26-ந்தேதி 20 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. மேலும் நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது" என அமித் ஷா தெரிவித்தார்.
- தாமரை வடிவிலான சக்கரவியூகத்தில் நாட்டு மக்கள் சிக்கியுள்ளனர்.
- மோடி, அமித் ஷா, அம்பானி, அதானி உள்ளிட்ட ஆறு பேரால் சக்கரவியூகம் கட்டுப்படுத்தப்படுகிறது.
ராகுல் காந்தி மக்களவையில் பேசும்போது மகாபாரதத்தில் வரும் சக்கரவியூகம் குறித்து பேசினார். தற்போது தாமரை வடிவிலான சக்கரவியூகம் அமைக்கப்பட்டுள்ளது. ஆறு பேர் இதை கட்டுப்படுத்துவதாகவும், அபிமன்யூ சக்கரவியூகத்தில் சிக்கியதைப் போல் மக்கள் தாமரை வடிவிலான சக்கரவியூகத்தில் சிக்கியுள்ளனர் என்றார்.
இந்த நிலையில் இன்று மத்திய மந்திரியான சிவராஜ் சிங் சவுகான், நாம் கிருஷ்ணரை நினைவு கூர்கிறோம். அவர்கள் சகுனியை நினைவு கூர்கிறார்கள் என ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
"ராகுல் காந்தி மகாபாரதத்தைப் பற்றி குறிப்பிடும்போது அவர் சகுனி, சக்கரவியூகம், பகடை (தாயம் விளையாட்டு) ஆகியவற்றை நினைவு கூர்கிறார். இந்த வார்த்ததைகள் எல்லாம் அதர்மத்துடன் தொடர்புடையது.
சகுனி வஞ்சகம், துரோகம் மற்றும் மோசடி ஆகியவற்றின் அடையாளமாக இருந்தார். இதையெல்லாம் காங்கிரஸ் ஏன் எப்போதும் நினைக்கிறது?. பாஜக மகாபாரதம் குறித்து பேசும்போதெல்லாம் கடவுள் கிருஷ்ணரை நினைவு கூர்கிறார்கள். அவர்கள் சகுனியை..." என சிவராஜ் சிங் சவுகான் ராகுல் காந்தியை விமர்சித்தார்.
- ஒரு பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்
- இடிபாடுகளுக்கு அடியில் பலர் சிக்கியிருக்கலாம் என தெரிவித்தனர்.
புதுடெல்லி:
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழ்நாடு, கேரளா மற்றும் டெல்லி, உத்தர பிரதேசம், அரியானா ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
டெல்லி என்சிஆர், நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியின் வடமேற்கே உள்ள ஜஹாங்கீர்புரி பகுதியில் இன்று பிற்பகல் 2 மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். அவர்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ஒரு பெண் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும் ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இடிபாடுகளுக்கு அடியில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என தெரிவித்தனர்.
மீட்புப் பணிகளில் பேரிடர் மீட்புப்படை மற்றும் போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
#WATCH | Delhi: NDRF team arrives at the spot in the Jahangirpuri industrial area where a house collapsed today. Rescue and search operation is underway. Delhi Fire Department said that 4 people have been rescued from here. https://t.co/o3vPA6491S pic.twitter.com/lzSn2PISMw
— ANI (@ANI) August 2, 2024
- நாங்கள் விவரங்களை வெளியிட உத்தர விட்டிருந்தோம்.
- இந்த திட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
தேர்தல் பத்திரம் என்ற முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு யார் வேண்டுமென்றாலும் நிதி வழங்கலாம். ஆனால் யார் எந்த கட்சிக்கு நிதி வழங்கினார், எவ்வளவு நிதி வழங்கப்பட்டது உள்ளிட்ட தகவல்களை வாக்காளர்களால் பெற முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனால் வெளிப்படைத்தன்மையை வாக்களர்களுக்கு தெரிவிக்கும் உரிமையை மீறுவதாக இந்த திட்டம் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்தது. அத்துடன் வங்கி உடனடியாக தேர்தல் ஆணையத்திற்கு அனைத்து விவரங்களையும் அளிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் இணைய தளத்தில் விவரங்களை பதிவிட வேண்டும் என உத்தரவிட்டது. அத்துடன் இந்த வழக்கை முடித்து வைத்தது. இந்த நிலையில் அது தொடர்பாக வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பெரிய பெரிய நிறுவனங்கள் கட்சிகளுக்கு தேர்தல் நிதி வழங்கியுள்ளன. அதற்கு அரசியல் கட்சிகள் அந்த நிறுவனங்களுக்கு ஏதாவது கைமாறாக செய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் உச்சநீதிமன்ற கண்காணிப்பில் அந்த குழுவால் விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஒரு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்து.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம் "நாங்கள் விவரங்களை வெளியிட உத்தரவிட்டிருந்தோம். நாங்கள் விசாரணையில் ஒரு கட்டத்திற்குப் பிறகு அந்த திட்டத்தை ரத்து செய்துள்ளோம். தற்போது சிறப்பு விசாரணைக் குழு எனன் விசாரிக்கப் போகிறது. சட்டத்தீர்வுகள் இருக்கும்போது நாம் சிறப்பு விசாரணைக்குழுவை நியமிக்கலாமா?.
இதில் தலையிடுவது நீதிமன்றத்திற்கு இது முன்கூட்டியே மற்றும் பொருத்தமற்றதாக இருக்கும். ஏனெனில் சட்டம் மூலம் கிடைக்கக்கூடிய தீர்வுகள் தோல்வியடைந்த பிறகு தலையீடு தொடர வேண்டும். இதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்" என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இரு முறை கணினி வழியில் நடத்தப்படும்.
- நெட் தேர்வை ரத்து செய்து மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டது.
நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இரு முறை கணினி வழியில் நடத்தப்படும்.
அதன்படி, இந்தாண்டு ஜூன் பருவத்துக்கான முதல்கட்ட நெட் தேர்வு நாடு முழுவதும் 317 நகரங்களில் 1,205 மையங்களில் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வை எழுத மொத்தம் 11,21,225 பட்டதாரிகள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 9,08,580 பேர் தேர்வை எழுதினார்கள்.
தொடர்ந்து விடைத்தாள்களை திருத்தி தேர்வு முடிவுகளை துரிதமாக வெளியிட தேசிய தேர்வு முகமை திட்டமிட்டு இருந்த நிலையில், தேர்வை ரத்து செய்து மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டது.
இந்நிலையில், யுஜிசி நெட் தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டதுள்ளது.
அதன்படி, வரும் ஆகஸ்ட் 21ம் தேதி முதல் செப்டம்பர் 4ம் தேதி வரை UGC NET தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேர்வு காலை 9 மணி முதல் 12 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையும் 2 பிரிவுகளாக தேர்வு நடைபெறவுள்ளது.
வினாத்தாள் கசிவு புகாரைத் தொடர்ந்து, கடந்த மாதம் நடந்த UGC NET தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், புதிய தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- வினாத்தாள்களை மையங்களுக்கு எடுத்து செல்ல நன்கு பூட்டப்பட்ட பாதுகாப்பான வாகனங்களை பயன்படுத்த வேண்டும்.
புதுடெல்லி:
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந் தேதி நடந்தது. இந்த தேர்வில் பீகார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
தேர்வுக்கு முந்தைய நாள் வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்தது. மேலும் ஆள்மாறாட்டம் உள்ளிட்டவை நடந்ததாகவும் சர்ச்சையானது. இது தொடர்பாக மாணவர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் எழுப்பியது.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மறு தேர்வு நடத்த உத்தரவிடக்கோரியும் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. நீட் தேர்வில் ஒட்டுமொத்த விதிமுறைகளை மீறும் வகையில் முறைகேடு நடைபெறவில்லை. 20 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று நீதிபதிகள் கூறினார்கள்.
இந்த நிலையில் நீட் மறு தேர்வு நடத்தாதது ஏன்? என்பது குறித்து இன்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விரிவான விளக்கத்தை கொடுத்தனர்.
மேலும் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக கூடுதல் வழிகாட்டுதல்களை நிபுணர் குழுவினருக்கு நீதிபதிகள் வலியுறுத்தினர். அதன்படி,
நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு போன்றவற்றை தடுக்க சைபர் செக்யூரிட்டி நவீன தொழில் நுட்பத்துடன், இணைய பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
வினாத்தாள்களை தயாரிப்பது முதல் சரிபார்ப்பது வரை கடும் பரிசோதனைகளை உறுதி செய்ய வேண்டும். வினாத்தாள் கையாளுதல், சேமித்தலை சரிபார்க்க வழிகாட்டு நெறிமுறைகளை ஒழுங்குபடுத்த வேண்டும்.
வினாத்தாள்களை அந்தந்த மையங்களுக்கு எடுத்து செல்ல நன்கு பூட்டப்பட்ட பாதுகாப்பான வாகனங்களை பயன்படுத்த வேண்டும்.
வருங்காலத்தில் இதுபோன்ற தவறுகளை தேசிய தேர்வு முகமை சரி செய்ய வேண்டும். கல்வி அமைச்சகம் ஒரு மாதத்தில் நடைமுறைபடுத்தப்படும் திட்டத்தை உருவாக்கி 2 வாரங்களுக்கு பிறகு அந்த முடிவை நீதிமன்றத்தில் தெரியப்படுத்த வேண்டும்.
தேர்வு சீரமைப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட குழு 2024-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதிக்குள் தனது பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் நீட் தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
- டெல் அவிவ் நகருக்கான விமான சேவை வரும் 8-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
- 5 மாத இடைவெளிக்கு பிறகு மார்ச் 3-ம் தேதி ஏர் இந்தியா விமானசேவையை தொடங்கியது.
புதுடெல்லி:
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலை அடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதியில் இருந்து டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா தனது விமான சேவையை நிறுத்தியது. 5 மாத இடைவெளிக்கு பிறகு கடந்த மார்ச் 3-ம் தேதி டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா மீண்டும் விமான சேவையை தொடங்கியது.
இதற்கிடையே, ஈரானில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இதுவரை இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை என்றபோதும், அந்த நாட்டிற்கான விமான சேவைகளை பல நிறுவனங்கள் ரத்துசெய்யத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் செல்லும் விமானங்கள் மற்றும் டெல் அவிவ் நகரில் இருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்கள் அனைத்தும் வரும் 8-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மத்திய கிழக்கின் சில பகுதிகளில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு டெல் அவிவுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் எங்கள் விமானங்களின் திட்டமிடப்பட்ட பயணத்தை ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நிறுத்தி வைத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
இதேபோல் பல்வேறு விமான நிறுவனங்களும் தங்களது சேவையை ரத்துசெய்துள்ளன.
ஏற்கனவே ஏப்ரல் 19 முதல் 30ம் தேதி வரை இஸ்ரேலுக்கான விமான சேவையை ஏர் இந்தியா ரத்துசெய்தது குறிப்பிடத்தக்கது.
- மதுரை எய்ம்ஸ் பற்றிய ஒரு வார்த்தை கூட குறிப்பிடப்படவில்லை என்பது மிகவும் வேதனையை தருகிறது.
- மிக விரைவில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கும் என்ற உறுதியையும் கொடுக்கிறேன்.
பாராளுமன்ற மக்களவையில் இன்று மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விவகாரத்தை திமுக எம்.பி. ஆ.ராசா எழுப்பினார். விவாதத்தில் மதுரை எய்ம்ஸ் பற்றிய ஒரு வார்த்தை கூட குறிப்பிடப்படவில்லை என்பது மிகவும் வேதனையை தருகிறது என்று கூறிய அவர் தொடர்ந்து பேசியதாவது,
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டதோடு சரி, அதற்கு பிறகு கூடுதல் நிதி ஒதுக்கீடு அல்லது மேற்கொண்டு கட்டுமான பணிகளை மேற்கொள்வது போன்ற எந்த பணிகளும் நடத்தப்படவில்லை ஏன்? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா பேசியதாவது,
மதுரை எய்ம்ஸ் கட்டப்படுவதற்கு ஏற்பட்டுள்ள காலதாமதத்தை நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். ஆனால் மிக விரைவில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கும் என்ற உறுதியையும் கொடுக்கிறேன்
தொழில்நுட்ப காரணங்களால் தான் மதுரையின் தாமதம் ஆகிறது என்று விளக்கம் அளித்துள்ளார்.
- மாநிலங்களவையில் மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தார் இந்த தகவலை தெரிவித்துள்ளார்
- 2021-22 ஆண்டில் ரூ. 490 கோடி ஈட்டிய நிலையில் 2022-23 ஆண்டு காலத்தில் ரூ.873 கோடி ஈடுபட்டுள்ளது.
2024 நீட் முறைகேடு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, பல்கலைக்கழக நுழைவுத்தேர்வான CUET, பொறியியல் படிப்புகளுக்கான JEE தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளைத் தேசிய தேர்வு முகமை நடந்தி வருகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசால் உருவாக்கப்பட்ட இந்த தேசிய தேர்வு முகமை அமைப்பு இதுவரை நடத்திய தேர்வுகளிலிருந்து கட்டணம் மூலமாக ரூ.3,513 கோடி லாபம் ஈட்டியுள்ளது . கடந்த புதன்கிழமை பாராளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி விவேக்.கே எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தார் பதிலளித்துப் பேசும்போது இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
ஈட்டிய தொகையில் 87.2 சதவீதம் தேர்வுகளை நடத்துவதற்காகச் செலவிடப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். குறிப்பாகக் கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட CUET பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளுக்குப் பிறகு தேசிய தேர்வு முகமையின் வருமானம் 78 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021-22 ஆண்டில் ரூ. 490 கோடி ஈட்டிய நிலையில் 2022-23 ஆண்டு காலத்தில் ரூ.873 கோடி ஈடுபட்டுள்ளது.
- அன்று சக்கர வியூகத்தை கொண்டு அபிமன்யூவை என்ன செய்தார்களோ அதையே இன்று இந்தியாவுக்கும், இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும், சிறு, நடுத்தர தொழில்களுக்கும் செய்கிறார்கள்
- பாராளுமன்றத்தில் சக்கர வியூகம் குறித்த எனது பேச்சு சிலருக்குப் பிடிக்கவில்லை.
மக்களவை எதிர்க் கட்சித் தலைவராக ஆனது முதல் நாடாளுமன்றத்தில் ராகுல் பேச்சு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் கடந்த ஜூலை 29 ஆம் தேதி நடந்த பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பேசிய ராகுல் காந்தி பேசுகையில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு குருஷேத்திரத்தில் அபிமன்யூ என்ற இளம் வீரர் 6 பேர் கொண்ட சக்கர வியூகத்தால் கொல்லப்பட்டான்.
சக்கர வியூகம் என்பது வன்முறையும், பயமும் நிரம்பியது. தாமரை போன்று இருப்பதால் சக்கர வியூகத்தை பத்ம வியூகம் என்றும் சொல்வதுண்டு. இந்த 21-ம் நூற்றாண்டிலும், இதேபோன்ற சக்கர வியூகம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதுவும் தாமரை வடிவில் உள்ளது. அதை பிரதமர் மோடி தனது நெஞ்சில் தாங்கி உள்ளார். அன்று சக்கர வியூகத்தை கொண்டு அபிமன்யூவை என்ன செய்தார்களோ அதையே இன்று இந்தியாவுக்கும், இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும், சிறு, நடுத்தர தொழில்களுக்கும் செய்கிறார்கள். இந்த சக்கர வியூகத்தின் மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, மோகன்பகவத், அஜித்தோவல், அம்பானி, அதானி ஆகிய 6 பேர் உள்ளனர் என்று கூறினார். அவரது இந்த பேச்சுக்கு பாஜக எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் சக்கர வியூகம் பற்றிய தனது பேச்சுக்காக அமலாக்கத்துறை தனது வீட்டில் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக ராகுல்காந்தி தனது சமுக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ராகுல்காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பாராளுமன்றத்தில் சக்கர வியூகம் குறித்த எனது பேச்சு சிலருக்குப் பிடிக்கவில்லை. எனவே எனது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. ஆகையால் அமலாக்கத்துறையினரின் வருகைக்காகத் திறந்த கரங்களுடனும், தேனீர் மற்றும் பிஸ்கட்டுடன் காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
- மாநிலங்களவையில் பாஜக எம்.பி எம்.பி பீம் சிங் தனி நபர் மசோதா கொண்டுவந்துள்ளார்.
- இந்த மசோதா மீதான விவாதம் இன்றைய மாநிலங்களவை கூட்டத்தில் நடக்க உள்ளது.
நாடு முழுவதும் நகரமயமாக்கலை அதிகரித்து ஹை- டெக் நகர்களை உருவாக்கி அதற்கு நமோ நகர்கள் என்று பெயரிட வேண்டும் என மாநிலங்களவையில் பாஜக எம்.பி தனி நபர் மசோதா கொண்டுவந்துள்ளார்.
இந்த மசோதா மீதான விவாதம் இன்றைய மாநிலங்களவை கூட்டத்தில் நடக்க உள்ளது. பீகாரைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை எம்.பி பீம் சிங்கொண்டுவந்துள்ள இந்த மசோதாவில் , நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக கிராமங்களை விட நகர மக்கள் அதிக முன்னேற்றம் அடைத்துள்ளன.
ஆனாலும் நகரமயமாக்கல் குறைந்த அளவே நடந்துள்ளது. எனவே இந்தியா முழுவதும் 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க வேண்டும் என்று கடந்த 2015 ஆம் ஆண்டு [பாஜக]அரசு கொண்டுவந்த திட்டத்தைச் செயல்படுத்தி, நகரமயமாக்கலை அதிகரித்து பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும். உதாரணமாக சண்டிகர் மாநிலத்தில் சமீப காலங்களாக நகரமயமால் மூலம் அதிக பொருளாதார நன்மைகள் கிடைத்து வருகிறது.
அவ்வாறு நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் உருவாக்கப்படும் ஹை- டெக் நகரங்களுக்கு நமோ நகர் என்று பெயரிடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்தியப் பிரதமர் 'ந'ரேந்திர 'மோ'டியின் பெயரை சுருக்கி நமோ என பாஜவினர் குறிப்பிடுவது வழக்கமாக உள்ளது.

- நாடு முழுவதும் உள்ள 571 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 4 ஆயிரத்து 750 தேர்வு மையங்களில் சுமார் 23 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
- ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஏராளமானோரை சிபிஐ கைது செய்தது.
புதுடெல்லி:
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத்தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடந்தது. நாடு முழுவதும் உள்ள 571 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 4 ஆயிரத்து 750 தேர்வு மையங்களில் சுமார் 23 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்த 'நீட்' தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாக பீகார் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்தது தெரியவந்தது. அதேபோல் குஜராத், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலத்தில் ஆள்மாறாட்டம் மற்றும் மோசடிகள் நடைபெற்றது தெரிந்தது.
இதுதொடர்பாக அந்தந்த மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் மத்திய கல்வி அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் இந்த வழக்குகள் அனைத்தும் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டன.
அதைத்தொடர்ந்து 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஏராளமானோரை சிபிஐ கைது செய்தது. அவர்களில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் 13 பேர் மீது தற்போது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






