என் மலர்
பீகார்
- இன்று ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
- மரக்கன்றுகளை நடுவதில் பீகார் அரசு கவனம் செலுத்துகிறது.
ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஒரு மரத்திற்கு ராக்கி கயிறு கட்டினார். பின்னர் மரக்கன்றுகளை அவர் நட்டார்.
இந்த நிகழ்வில் அவருடன் பீகார் துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் இருந்தனர்.
இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பீகாரின் பசுமையை பாதுகாக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மாநில அரசு 2012-ம் ஆண்டு முதல் ரக்ஷா பந்தன் பண்டிகையை 'பீகார் விருக்ஷ் சுரக்ஷா திவாஸ்' ஆக கடைபிடித்து வருகிறது. நாம் மரங்களை நட்டு, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். மரக்கன்றுகளை நடுவதில் மாநில அரசு கவனம் செலுத்துகிறது. மாநிலத்தில் சுற்றுச்சூழல் சுற்றுலாவை அரசு ஊக்குவித்து வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 9 ஆண்டுகளுக்குமுன் தொடங்கப்பட்ட பாலத்தின் கட்டுமானப் பணி ஆமை வேகத்தில் நடத்து வருகிறது.
- கட்டப்பட்டுக் கொண்டிருக்கும்போதே கடந்த ஆண்டுகளில் 2 முறை இடிந்து விழுந்தது
பீகாரில் கங்கை ஆற்றின் குறுக்கே 9 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் பாலம் 3 வது முறையாக இடிந்து விழுந்ததுள்ளது. பீகார் மாநிலம் கஹரியா மாவட்டத்தில் சுல்தான்கஞ்ச் - குவானி கட் பகுதிகளை இணைக்கும் வகையில் கங்கை ஆற்றின் குறுக்கே இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது. 9 ஆண்டுகளுக்குமுன் தொடங்கப்பட்ட பாலத்தின் கட்டுமானப் பணி ஆமை வேகத்தில் நடத்து வருகிறது.
கட்டப்பட்டுக் கொண்டிருக்கும்போதே கடந்த ஆண்டுகளில் 2 முறை இடிந்து விழுந்த இந்த பாலத்தின் பகுதி இன்று 3 வது முறையாக இடிந்து கங்கை ஆற்றில் விழுந்தது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீப காலங்களாகவே பீகாரில் அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து வரும் நிலையில் தற்போது இந்த பாலம் கங்கை ஆற்றில் இடிந்து விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- கணவரை பிரிந்து வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டோம்.
- கலியுகத்தின் அறிகுறி என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மாமியார் மருமகள் என்றாலே எப்போதுமே எதிர் எதிர் துருவங்களாக இருப்பது தான் வழக்கம். இதற்கு மாறாக மாமியார் மருமகள் இருவரும் தங்களுடைய எல்லையைத் தாண்டி ஓரின சேர்க்கை திருமணம் செய்துள்ளனர்.
பீகார் மாநிலம் கோபால் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பெல்வா கிராமத்தைச் சேர்ந்த நடுத்தர வயது பெண் சுமன். இவருடைய சொந்த மருமகள் ஷோபா. கடந்த 3 ஆண்டுகளாக மாமியார் சுமனுக்கு மருமகள் சோபா மீது காதல் ஏற்பட்டது. இருவரும் வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் ரீதியாக நெருக்கமாக இருந்தனர்.
இது இவர்களின் கணவர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கண்டித்தனர். இதனால் மாமியார் மருமகள் இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இருவரும் அங்குள்ள ஒரு கோவிலில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
அப்போது மாமியார் சுமன் பேண்ட் சட்டை அணிந்து மணமகன் போல காட்சி அளித்தார். மருமகள் சோபாவுக்கு மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோவிலில் இருவரும் மாலை மாற்றினர். பின்னர் மாமியார் சுமன் மருமகள் கழுத்தில் தாலி கட்டினார். அவரது நெற்றியில் குங்குமம் வைத்தார். இருவரும் புதுமண தம்பதிகளாக அங்குள்ள நெருப்பை சுற்றி வந்து அக்னிசாட்சியாக நாங்கள் எப்போதும் ஒன்றாக இருப்போம் என உறுதி ஏற்றனர்.
மருமகளை திருமணம் செய்து கொண்ட மாமியார் கூறுகையில்:-
நான் எனது மருமகளை வெறித்தனமாக காதலிக்கிறேன். அவள் வேறொருவரை திருமணம் செய்து கொண்டதை என்னால் தாங்க முடியவில்லை.
உலகம் என்ன நினைக்கும் என்பதை பற்றி கவலைப்படாமல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு திருமணம் செய்து கொள்ள எங்களது மனம் தூண்டியது.
கணவரை பிரிந்து வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் எப்போதும் பிரிய மாட்டோம். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் தம்பதியினர் தாங்கள் திருமணம் செய்து கொண்ட வீடியோவை அவர்களுடைய குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மாமியார் மருமகள் திருமணம் செய்த காட்சி சமூக வலைதளங்களில் சூடான விவாதத்தை தூண்டி உள்ளது.
சிலர் அவர்களின் முடிவை ஆதரித்தும் பலர் இது இயற்கைக்கு மாறான விதி மீறல். கலியுகத்தின் அறிகுறி என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மாமியார் மருமகள் திருமணம் செய்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பாம்பும் கீரியும் சண்டையிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
- தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள பாம்பு படமெடுத்து கொத்தியது.
பாம்புக்கும் கீரிக்கும் இடையே தீராத பகை உள்ளது. பாம்புக்கும் கீரிக்கும் இடையேயான சண்டையை பற்றி நாம் பல கதைகளில் படித்திருப்போம்.
இந்நிலையில், உண்மையிலேயே பாம்பும் கீரியும் சண்டையிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
பீகாரின் பாட்னா விமான நிலையத்தின் ஓடுதளப் பாதையில் இருந்த ஒரு பாம்புடன் 3 கீரிகள் சண்டையிட்டு கொண்டது.
ஒரு பாம்பை 3 கீரிகள் சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்தியதால், தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள பாம்பு படமெடுத்து கொத்தியது.
- பராபர் மலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாபா சித்தேஸ்வர் கோவிலில் சாவன் மாத சிற்பபுப் பூஜைகள் நடந்தன
- கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் லத்தியால் பக்தர்களை தாக்கியுள்ளனர்.
பீகார் மாநிலம் பராபர் மலையில் அமைந்துள்ள பாபா சித்தேஸ்வர் கோவிலில் இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


பீகாரின் ஜெகன்னாபாத் மாவட்டத்தில் பராபர் மலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாபா சித்தேஸ்வர் கோவிலில் வருடந்தோறும் சாவன் புனித மாதத்தில் நடக்கும் சிறப்புப் பூஜைகளில் ஏராளமானோர் கலந்துகொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் அதிகபடியான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்த நிலையில் பூக்கடை அருகில் சிறிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனைக் கட்டுப்படுத்த போலீசார் லத்தியால் பக்தர்களை தாக்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து கூட்டநெரிசல் ஏற்பட்டதாக உயிர்தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதனை போலீஸ் தரப்பு மறுத்துள்ளது.

இந்த கூட்டநெரிசலில் 3 பெண்கள் உட்பட உயிரிழந்த 7 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கூட்டநெரிசலில் சிக்கி 9 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- குதிராம் போசுக்கு ஆகஸ்ட் 11-ம் தேதி முசாபர்பூர் சிறையில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.
- 18 வயதான அவர் எவ்வித அச்சமின்றி வந்தே மாதரம் என முழங்கியபடி மரணம் அடைந்தார்.
பாட்னா:
வங்காளத்தின் மிதுனாப்பூர் கிராமத்தில் 1889-ம் ஆண்டு குதிராம் போஸ் பிறந்தார். இளம் வயதிலேயே இந்திய விடுதலைக்காக புரட்சிகரமான செயல்களில் ஈடுபட்டார். 1905-ம் ஆண்டில் நடைபெற்ற வங்கப் பிரிவினை போராட்டத்தில் பங்கேற்றார். அதன்பின், பல காவல்நிலையங்களை குதிராமின் குழு குண்டுகளால் தாக்கியது. தாக்குதல் நடத்துவது யார் என தெரியாமல் ஆங்கிலேய அரசு திகைத்தது.
1908-ம் ஆண்டில் குதிராம் போஸ் கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது, காவல்நிலையங்கள் மீதான தாக்குதல் குதிராம் போசின் செயல் என ஆங்கிலேய அரசு கண்டுபிடித்தது.
இதையடுத்து, அவருக்கு 1908, ஆகஸ்ட் 11-ம் தேதி முசாபர்பூர் சிறையில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது 18 வயதான குதிராம் போஸ் எவ்வித அச்சமுமின்றி நாட்டுக்காக, வந்தே மாதரம் என முழங்கியபடி மரணம் அடைந்தார்.
இந்நிலையில், குதிராம் போசின் நினைவு தினமான இன்று பீகாரின் முசாப்பூர் சிறைக்குச் சென்ற அப்பகுதி மக்கள் அங்கு குதிராம் போசின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
- அணுகுண்டு தயாரிக்க உதவும் ஆபத்தான கதிரியக்க பொருள் கலிபோர்னியம்.
- கலிபோர்னியத்தை கடத்தியதாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாட்னா:
அணுகுண்டு தயாரிக்க உதவும் ஆபத்தான கதிரியக்க பொருள் கலிபோர்னியம். கதிரியக்கத்தைச் சார்ந்த பொருட்களுக்கு அதிக கட்டுப்பாடு விதிக்கப்படுவது வழக்கம். ஏனென்றால் அவை மற்ற உலோகங்கள் போல இருக்காது. முறையாகக் கையாளவில்லை என்றால் புற்றுநோய் பாதிப்புகூட ஏற்படும் அபாயம் உள்ளது. எனவேதான் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
இந்நிலையில், பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் என்ற பகுதியில் சுமார் 50 கிராம் கலிபோர்னியத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதன் சந்தை மதிப்பு மட்டும் ரூ.850 கோடியாகும். இதை கடத்த முயன்றது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பின்னணியில் இருப்பது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாநில சிறப்பு அதிரடிப் படை குச்சாய்கோட் போலீசாருடன் இணைந்து நடத்திய வாகன சோதனையின்போது இதை பறிமுதல் செய்தனர்.
குச்சாய்கோட் பல்தேரி சோதனைச்சாவடி அருகே வாகன சோதனை நடைபெற்றது. அப்போது 50 கிராம் எடை கொண்ட கலிபோர்னியம் கைப்பற்றப்பட்டது என கோபால்கஞ்ச் எஸ்.பி. தெரிவித்தார். இது ஒரு கிராமே சர்வதேச சந்தையில் ரூ.17 கோடிக்கு விற்கப்படுகிறது. ஆக, மொத்தம் 50 கிராம் கலிபோர்னியத்தின் சந்தை மதிப்பு ரூ.850 கோடி ஆகும்.
கட்டுப்பாடுகளை தாண்டி சர்வசாதாரணமாக காரில் வைத்துக் கடத்திவந்தது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- வயலின் நடுவே கட்டப்பட்டுள்ள பாலத்தை கட்டு கிராம மக்கள் குழப்பமடைந்தனர்.
- தனியார் நிலம் என்பதால் சாலை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் சாலையே இல்லாத இடமான வயல் வெளியில் பாலம் கட்டப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.3 கோடி செலவில் பாலம் மற்றும் சாலை அமைக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் தனியார் நிலம் என்பதால் சாலை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
அதே சமயம் அங்கு சாலை அமைக்கப்பட்ட பிறகு, வயலின் ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் தண்ணீர் செல்ல பாதை வேண்டும் என்பதால் சாலை அமைக்கும் முன்பே பாலம் காட்டியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது எதுவும் தெரியாத கிராம மக்கள் வயலின் நடுவே கட்டப்பட்டுள்ள பாலத்தை கட்டு குழப்பமடைந்தனர்.
அண்மையில் பீகார் மாநிலத்தில் 10க்கும் மேற்பட்ட பாலங்கள் இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- வடமாநிலங்களில் புகழ் பெற்றது கன்வார் யாத்திரை.
- 3 பேர் படுகாயங்களுடன் தூக்கி வீசப்பட்டனர்.
வடமாநிலங்களில் புகழ் பெற்ற கன்வார் யாத்திரை நடந்து வருகிறது. நேற்று கன்வார் பக்தர்கள் பீகாரில் சோனாப்பூரில் உள்ள பாபா ஹரிகர்நாத் கோவிலில் ஜலஅபிஷேகம் செய்வதற்காக கார்களில் சென்று கொண்டிருந்தனர்.

வைசாலி மாவட்டத்தில் அந்த யாத்திரை சென்று கொண்டிருந்த போது சுல்தான்பூர் என்ற கிராமத்தில் மின் வயர்கள் அறுந்து விழுந்தன. மின்சார வயர் ஒரு காரின் மீது விழுந்ததில் அந்த காரில் இருந்த 9 பேர் மின்சாரம் தாக்கி பலியானார்கள்.
3 பேர் படுகாயங்களுடன் தூக்கி வீசப்பட்டனர். இதுகுறித்து வைசாலி மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அங்கன்வாடி பணியாளர்கள் வழிமறித்து தங்களது கோரிக்கைகளைக் கேட்கும்படி கோஷம் எழுப்பினர்.
- கிரிராஜ் சிங் பைக்கில் ஏறி அங்கிருந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்திய பாஜக அமைச்சரவையில் ஜவுளித் துறை அமைச்சராக இருப்பவர் கிரிராஜ் சிங். பீகாரில் அவரது சொந்தத் தொகுதியான பெகுசாராய் [Begusarai] தொகுதியில் மனு கொடுக்க வந்தவர்கள் சூழ்ந்ததால் காரில் இருந்து இறங்கி பைக்கில் அங்கிருந்து அவர் தப்பிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் அருகே பூங்கா ஒன்றின் அடிக்கல் நாட்டு விழாவுக்காகத் தனது காரில் வந்துகொண்டிருந்த கிரிராஜ் சிங் பள்ளியை நெருங்கியதும் அங்கன்வாடி பணியாளர்கள் வழிமறித்து தங்களது கோரிக்கைகளைக் கேட்கும்படி கோஷம் எழுப்பினர்.
அவர்கள் தங்களின் மனுக்களை அமைச்சரிடம் கொடுக்க நெருக்கியடித்த நிலையில், காரில் இருந்து இறங்கி, பைக் ஒன்றின் பின்னால் அமர்ந்து அங்கிருந்து தப்பினார். இதனால் தங்களது கோரிக்கை மனுக்களைக் கொடுக்க வந்த அங்கன்வாடி பணியாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கிரிராஜ் சிங் பைக்கில் ஏறி அங்கிருந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- இரவில் நுழையும்போது ராஜேஷின் பெற்றோர் அவனை பார்த்துவிட்டனர்
- குஷ்பு வை சந்திக்க சந்தான் பல இரவுகளில் இதுபோல வந்து சென்றது பின்னர் தெரியவந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள ராம்நகர் கிராமத்தில் ராஜேஷ் குமார் [26] என்பவர் தனது மனைவி குஷ்பு [22], 2 வயது மகன் மற்றும் தாய் தந்தையுடன் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் குஷ்பூவை சந்திக்க அவரது சிறுவயது காதலன் சந்தான் [24] அவர்களது வீட்டுக்குள் நடு இரவில் நுழையும்போது ராஜேஷின் பெற்றோர் அவனை பார்த்துவிட்டனர்.
குஷ்பு வை சந்திக்க சந்தான் பல இரவுகளில் இதுபோல வந்து சென்றது பின்னர் தெரியவந்துள்ளது. இதை அறிந்த ராஜேஷ் குமார் கோபப்படாமல் தனது மனைவியை அவரது பால்ய கால காதலனுக்கே, முன் நின்று திருமணம் செய்து வைத்துள்ளார்.
தற்போது குஷ்பு , சந்தான் வீட்டில் புது வாழவைத் தொடங்கியுள்ளார். இதுகுறித்து ஊடகத்துக்குப் பேட்டியளித்த குஷ்பு தனது காதலை புரிந்துகொண்ட முன்னாள் கணவர் ராஜேஷ் குமாருக்கு தான் நன்றிக்கடன் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரிதினும் அரிதான இந்த சம்பவம் ராம் நகர் கிராம மக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
- செயின்ட் ஜோன் போர்டிங் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
- துப்பாக்கியால் சுட்டதால் 10 வயது மாணவனின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
தனது பையில் துப்பாக்கியை மறைத்து பள்ளிக்கு எடுத்துச்சென்ற 5 வயது மாணவன் 3ம் வகுப்பு மாணவனை சுட்ட சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் உள்ள செயின்ட் ஜோன் போர்டிங் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
துப்பாக்கியால் சுட்டதால் 10 வயது மாணவனின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக தனியார் பள்ளி முதல்வரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் துப்பாக்கியால் சுட்ட மாணவன் மற்றும் அவரது தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
சிறுவன் கையில் துப்பாக்கி எப்படி வந்தது? என விசாரணை மேற்கொண்டு வருவதாக சுபால் மாவட்ட எஸ்.பி. தகவல் தெரிவித்துள்ளார். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் பைகளை சோதனையிட போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.






