search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    ரூ.850 கோடி மதிப்புள்ள கதிரியக்க பொருளை காரில் கடத்திய 3 பேர் கைது
    X

    ரூ.850 கோடி மதிப்புள்ள கதிரியக்க பொருளை காரில் கடத்திய 3 பேர் கைது

    • அணுகுண்டு தயாரிக்க உதவும் ஆபத்தான கதிரியக்க பொருள் கலிபோர்னியம்.
    • கலிபோர்னியத்தை கடத்தியதாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    பாட்னா:

    அணுகுண்டு தயாரிக்க உதவும் ஆபத்தான கதிரியக்க பொருள் கலிபோர்னியம். கதிரியக்கத்தைச் சார்ந்த பொருட்களுக்கு அதிக கட்டுப்பாடு விதிக்கப்படுவது வழக்கம். ஏனென்றால் அவை மற்ற உலோகங்கள் போல இருக்காது. முறையாகக் கையாளவில்லை என்றால் புற்றுநோய் பாதிப்புகூட ஏற்படும் அபாயம் உள்ளது. எனவேதான் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

    இந்நிலையில், பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் என்ற பகுதியில் சுமார் 50 கிராம் கலிபோர்னியத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதன் சந்தை மதிப்பு மட்டும் ரூ.850 கோடியாகும். இதை கடத்த முயன்றது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பின்னணியில் இருப்பது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாநில சிறப்பு அதிரடிப் படை குச்சாய்கோட் போலீசாருடன் இணைந்து நடத்திய வாகன சோதனையின்போது இதை பறிமுதல் செய்தனர்.

    குச்சாய்கோட் பல்தேரி சோதனைச்சாவடி அருகே வாகன சோதனை நடைபெற்றது. அப்போது 50 கிராம் எடை கொண்ட கலிபோர்னியம் கைப்பற்றப்பட்டது என கோபால்கஞ்ச் எஸ்.பி. தெரிவித்தார். இது ஒரு கிராமே சர்வதேச சந்தையில் ரூ.17 கோடிக்கு விற்கப்படுகிறது. ஆக, மொத்தம் 50 கிராம் கலிபோர்னியத்தின் சந்தை மதிப்பு ரூ.850 கோடி ஆகும்.

    கட்டுப்பாடுகளை தாண்டி சர்வசாதாரணமாக காரில் வைத்துக் கடத்திவந்தது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×