என் மலர்tooltip icon

    பீகார்

    • பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை 99.8 சதவீதம் நிறைவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
    • உயிரிழந்த 22 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.

    பீகாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடைமுறை நிறைவுப் பெற்றுள்ளது.

    பீகாரில் 7.23 கோடி வாக்காளர்களின் படிவங்கள் பெறப்பட்டு டிஜிட்டல் மயமாக்கும் பணி நிறைவு பெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை 99.8 சதவீதம் நிறைவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    அதன்படி, பீகாரில் 65.6 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    உயிரிழந்த 22 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.

    பீகாரில் ஒரு லட்சத்து இருபதாயிரம் வாக்காளர்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    • வாலிபர், மனைவியை சரமாரியாக தாக்கினார்.
    • வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பீகார் மாநிலம் கயா அடுத்த கிஜ்ரா சராய் நகரை சேர்ந்த வாலிபர் அவரது மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    அப்போது வாலிபர், மனைவியை சரமாரியாக தாக்கினார். பொருத்தது போதும் என்று பொங்கி எழுந்த அவரது மனைவி, திடீரென ஆவேசமடைந்தார். கணவனை அடித்து கீழே தள்ளினார். பின்னர் கணவனின் உடல் மீது உட்கார்ந்து கொண்டு அவரது நாக்கை கடித்து மென்று விழுங்கினார்.

    நாக்கு துண்டானதால் வாலிபர் வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது மனைவி கணவன் மீது உட்கார்ந்து கொண்டு இருந்தார். அவரது வாய், முகம் மற்றும் உடல் முழுவதும் ரத்தம் சிதறி கிடந்தது.

    இருவரையும் சமாதானம் செய்தனர். வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரது உடலில் இருந்து அதிக அளவு ரத்தம் வெளியேறியதால் ஆபத்தான நிலைக்கு சென்றார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக மகத் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • பீகாரில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த ஆய்வு மூலம் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பெயர் நீக்கம்.
    • குடியுரிமை சட்டத்தை மறைமுகமாக அமல்படுத்த பாஜக முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு.

    பீகார் மாநிலத்தில் இந்த வருட இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கிடையே இந்திய தேர்தல் ஆணையம் பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்த ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தகவல் தெரிவித்தது.

    அதன்படி வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்படும். அப்போது வாக்காளர்கள் முறையான சான்றிதழ் வழங்க வேண்டும். ரேசன் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்டவைகளை தவிர்த்து குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். ஜூலை 25ஆம் தேதிக்குள் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றால் வாக்காளர் பட்டியலில் இடம்பெற முடியாது என தேர்தல் ஆணையம் காலக்கெடு நிர்ணயித்தது.

    இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. குடியுரிமை சட்டத்தை மறைமுகமாக தேர்தல் ஆணையம் மூலமாக பாஜக அமல்படுத்த முயற்சி செய்வதாக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

    தேர்தல் ஆணையத்தின் SIR நடைமுறையால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட இருக்கிறது. ஆகஸ்ட் 1ஆம் தேதி வரைவு பட்டியலை வெளியிடுகிறது. இதில் 50 லட்சம் பேர் பெயர் இடம்பெறாது. இவர்களில் பெரும்பாலானோர் இறந்தவர்கள், வெளி மாநிலத்திற்கு புலம் பெயர்ந்தவர்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் வாக்காளர் நீக்கப்பட்டதற்கு அம்மாநில முன்னாள் துணை முதல்வராக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், "மெகா கூட்டணியில் (Mahagathbandhan) உள்ள அனைத்து கட்சிகளும் தேர்தலை புறக்கணிக்கனும். அதைத்தவிர வேறு வழியில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

    • எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
    • தான் மேற்கொண்ட செயல்முறை சட்டபூர்வமானது என்று தெரிவித்துள்ளது.

    பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து 52 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

    இதற்கான காரணங்கள் வாக்காளர்களின் இறப்பு மற்றும் இடம்பெயர்வு ஆகும். வரைவு வாக்காளர் பட்டியலில் தகுதியான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி பட்டியல் வெளியிடப்படும் என்று ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    அந்த அறிக்கையில், இதுவரை நடத்தப்பட்ட பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் 18 லட்சம் வாக்காளர்கள் இறந்துவிட்டதாகவும், 26 லட்சம் பேர் வெவ்வேறு தொகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும், 7 லட்சம் பேர் இரண்டு இடங்களில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்  செய்யும் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கு  தற்போது உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் தான் மேற்கொண்ட செயல்முறை சட்டபூர்வமானது என்றும், அரசியலமைப்பின் 324வது பிரிவின்படி இந்தத் திட்டத்தை மேற்கொண்டுள்ளதாகவும் கூறுகிறது.

    • பீகாரில் வாக்களர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
    • வரும் 25-ம் தேதியுடன் இந்தப் பணி நிறைவு பெற உள்ளது.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் வாக்களர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. வரும் 25-ம் தேதியுடன் இந்தப் பணி நிறைவு பெற உள்ளது.

    இந்நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    பீகாரில் வாக்காளர் பட்டியலில் இறந்த அல்லது இடம்பெயர்ந்த வாக்காளர்கள் என 52 லட்சம் பேரை நீக்கியுள்ளோம்.

    சிறப்பு தீவிர திருத்தத்தின்படி வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்டு 1-ம் தேதி வெளியிடப்படும்.

    இந்தப் பட்டியலில் அனைத்து தகுதியுள்ள வாக்காளர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    பீகாரில் சட்டசபைத் தேர்தலுக்கு முன் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படுவது அதன் அரசியலமைப்பு கடமை. முழு செயல்முறையும் நிலையான மற்றும் அதிகார வரம்புக்குட்பட்ட முறையில் நடத்தப்படுகிறது என தெரிவித்துள்ளது.

    • நிதிஷ் குமார் கட்சி வைத்திருக்கும் ஊரக பணிகள் துறை மூலமாக தேர்தலுக்கு முன்னதாக 1000 கோடி ரூபாய் விடுவிக்க அக்கட்சி இலக்கு.
    • அரசாங்கம் வெளியேறப் போகிறது என்பதை மற்ற அமைச்சர்கள் நன்கு அறிவார்கள்.

    பீகார் மாநிலத்தில் இந்த வருடம் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், முதல்வர் நிதிஷ் குமார் ஊரக வேலைகள் துறைக்கு (RWD) 1000 கோடி ரூபாய் விடுவிக்க இருப்பதாக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக தேஜஸ்வி யாதவ் கூறுகையில் "தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை முதல்வர், சீனியர் அமைச்சர் ஒரு கூட்டத்தில் ஊழல் கொள்ளை தொடர்பாக மோதிக் கொண்டனர்.

    நிதிஷ் குமார் கட்சி வைத்திருக்கும் ஊரக பணிகள் துறை மூலமாக தேர்தலுக்கு முன்னதாக 1000 கோடி ரூபாய் விடுவிக்க, அக்கட்சி இலக்கு வைத்துள்ளது. இந்தப் பணம் உலகளாவிய டெண்டர் மூலம் ஒப்பந்ததாரர்களிடமிருந்து பெறப்பட உள்ளது.

    தேர்தலுக்கு முன்பு கிராமப்புற சாலைகள் எதுவும் அமைக்கப்படுவதில்லை, ஆனால் டெண்டர் செயல்முறையை நிர்வகிப்பதன் மூலம் ஒரு கொள்ளையடிக்கும் விளையாட்டு நடந்து வருகிறது.

    முதல்வர் சுயநினைவில் இல்லை, அமைதியாக இருக்கிறார். அரசாங்கம் வெளியேறப் போகிறது என்பதை மற்ற அமைச்சர்கள் நன்கு அறிவார்கள். எனவே, கொள்ளையடிப்பதற்கான வெளிப்படையான போராட்டம் உள்ளது.

    இவ்வாறு தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.

    • காவல்துறையினர் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
    • கொலை, தற்கொலை உள்ளிட்ட கோணங்களிலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் முதலாமாண்டு எம்பிபிஎஸ் மாணவர் தனது விடுதி அறையில் நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    ஒடிசாவை சேர்ந்த யாதவேந்திர ஷாகு என்ற அந்த மாணவரின் அறை நீண்ட நேரமாக திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த சக மாணவர்கள், நிர்வாகத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

    காவல்துறையினர் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது, யாதவேந்திர ஷாகு படுக்கையில் சடலமாகக் கிடந்துள்ளார்.

    தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கொலை, தற்கொலை உள்ளிட்ட கோணங்களிலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும்.

    • பீகார் மாநிலத்தின் ஆராவில் ரோடு ஷோ நடத்தப்பட்டது.
    • வாகனம் மோதியதில் பிரசாந்த் கிஷோரின் விலா எலும்பில் லேசான காயம் ஏற்பட்டது.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என தேர்தல் வியூக நிபுணரும், ஜன் சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோர் முனைப்புடன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

    சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பிரசாந்த் கிஷோர் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார்.

    இந்நிலையில், ஆரா மாவட்டத்தில் இன்று ரோடு ஷோ நடந்தது. அதில் பிரசாந்த் கிஷோர் பங்கேற்றார். அவர் ஒரு கூட்டத்தின் வழியாக நடந்து சென்றபோது எதிர்பாராத விதமாக ஒரு வாகனம் மோதியதில் அவருக்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து, பிரசாந்த் கிஷோர் மருத்துவ சிகிச்சைக்காக பாட்னா சென்றார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • ராஷ்டிரிய ஜனதா தளம் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பது குறித்து யோசிக்கவில்லை.
    • ஏழைகளுக்கு வேலை வழங்குவதற்கு முன்னதாக அவர்களின் நிலத்தை பறித்துக் கொண்டது.

    பீகார் மாநிலத்தில் இந்த வருடம் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று அம்மாநிலத்தின் மோரிஹாரி என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அப்போது பிரதமர் மோடி "ராஷ்டிரிய ஜனதா தளம் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பது குறித்து யோசிக்கவில்லை. ஏழைகளுக்கு வேலை வழங்குவதற்கு முன்னதாக அவர்களின் நிலத்தை பறித்துக் கொண்டது.

    ஏழைகள் மற்றும் சமூக ரீதியாக ஒதுக்கப்பட்ட மக்கள் ஆகியவற்றின் பெயரை வைத்து காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் அரசியில் விளையாட்டு விளையாடுகிறது. தேசிய ஜனநாயக அரசு மீண்டும் ஒருமுறை ஆட்சியமைத்து, புதிய பீகாரை கட்டமைக்கும்" என்றார்.

    • 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பினர்.
    • முதல்வர் நிதிஷ் குமாருக்கு நெருக்கடியாக மாறியுள்ளது.

    பீகாரில் பரோல் கைதி ஒருவரை மருத்துவமனைக்குள் புகுந்த கும்பல் ஒன்று சுட்டுக்கொலை செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

    பிகார் மாநிலம் பாட்னாவில் கொலைக் குற்றவாளியாக பரோலில் வெளியே வந்த சந்தன் என்பவர் நேற்று, தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பினர்.

    காயமடைந்த சந்தன் சிகிச்சை பலனின்றி பலியானார். இதுகுறித்து பாட்னா காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

    பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருவது முதல்வர் நிதிஷ் குமாருக்கு நெருக்கடியாக மாறியுள்ளது.

    இந்த சம்பவத்துக்கு முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    • பீகாரில் 125 யூனிட் வரை எவ்வித மின் கட்டணமும் செலுத்த தேவையில்லை.
    • இத்திட்டம் வரும் ஆகஸ்டு 1 முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது.

    பாட்னா:

    பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    மக்கள் பயன்பெறும் வகையில் மின் நுகர்வில் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளேன். வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம் 125 யூனிட் வரை எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. இத்திட்டம் வரும் ஆகஸ்டு 1 முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது. இதன்மூலம் 1. 67 கோடி பேர் பயன்பெறுவர்.

    சூரிய சக்தி மின்சார திட்டமும் மேலும் பரவலாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மானியம் வழங்கப்படும். ஏழை குடும்பங்களுக்கு இலவச சூரிய மின் உற்பத்தி உபகரணங்களும் வழங்கப்படும். இது மின் நெருக்கடியைக் குறைக்க உதவும். அனைத்து மக்களும் எளிய மின்சாரம் பெறவேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என பதிவிட்டுள்ளார்.

    இந்நிலையில், நிதிஷ்குமார் அறிவிப்பு பற்றி ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் மற்றும் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 20 ஆண்டு கால ஆட்சியில் அவருடைய வாக்குறுதிகள் நீண்டகாலம் நம்பத்தக்க ஒன்றாக இருந்தது இல்லை. பீகாரில் சட்டசபை தேர்தல் வரவுள்ள சூழலில், 125 யூனிட் இலவச மின்சாரம் என அவர் அறிவித்து இருக்கிறார். இதனை நம்ப ஒருவரும் தயாராக இல்லை. பீகாருக்கு புதிய முதல் மந்திரி வருவார். நிதிஷ்குமார் சென்று விடுவார் என தெரிவித்தார்.

    • தேர்தலை ஒட்டி பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
    • அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

    பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலுக்காக முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.

    தேர்தலை ஒட்டி பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவேன் என்றும் வாக்கு கொடுத்துள்ளார்.

    இந்நிலையில்,பீகார் மாநிலத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அனைத்து வீடுகளுக்கும் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்பை முதலமைச்சர் நிதிஷ் குமார் வெளியிட்டுள்ளார். 

    ×