search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் - உருளைக்கிழங்கு கட்லெட்
    X

    குழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் - உருளைக்கிழங்கு கட்லெட்

    குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு, பீட்ரூட் என்றால் மிகவும் பிடிக்கும். இது இரண்டையும் வைத்து சத்தான கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பீட்ரூட் - 2,
    உருளைக்கிழங்கு - 2,
    பெரிய வெங்காயம் - 1,
    பச்சை மிளகாய் - 4,
    மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்,
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
    சீரகத் தூள் - 1 டீஸ்பூன் (வறுத்தது),
    ஆம்சூர் பவுடர் - 1 டீஸ்பூன்,
    காலா உப்பு அல்லது ராக் உப்பு - 1/2 டீஸ்பூன்,
    பிரெட் தூள் - 1/2 கப்,
    கொத்தமல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
    தண்ணீர் - 3 டேபிள்ஸ்பூன்,
    சோளமாவு - 3 டேபிள்ஸ்பூன்.

    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சோள மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கலந்து கொள்ளவும்.

    பீட்ரூட், உருளைக்கிழங்கு இரண்டையும் நன்கு கழுவி, பாதியாக வெட்டி குக்கரில் வேக வைத்து நன்றாக மசித்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மசித்த பீட்ரூட், உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள், ஆம்சூர் பவுடர், கருப்பு உப்பு, டேபிள் சால்ட் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு பிசையவும்.

    இத்துடன் பிரெட் தூள் சேர்த்து மசிக்கவும்.

    இந்தக் கலவையை உருண்டையாகத் தட்டி வைக்கவும். உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் செய்து கொள்ளலாம்.

    ஒரு தட்டில் பிரெட் தூள்களை வைக்கவும்.

    செய்து வைத்துள்ள கட்லெட் மாவை சோள மாவு கலவையில் போட்டு பிரட்டி பிரெட் தூளில் போட்டு பிரட்டி தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். இதே போல எல்லாவற்றையும் செய்யவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து இந்த கட்லெட்டை போட்டு இருபுறமும் பொன்னிறமாக வரும் வரை பிரட்டி எடுக்கவும்.

    சூப்பரான பீட்ரூட் கட்லெட் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×