search icon
என் மலர்tooltip icon

  லைஃப்ஸ்டைல்

  ஜலதோஷம்
  X
  ஜலதோஷம்

  நோய் வராமல் தடுக்கும் பாதுகாப்பு முறைகள்

  வெயில் மற்றும் குளிர் காலங்களில் நோய்கள் வராமல் தடுக்க பாதுகாப்பு முறைகளை கையாள்வதன் மூலம் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
  சற்றே குளிர் தெரிகின்றது. நமக்கு வெயிலில் அதுவும் கடும் வெயிலில் சுக்காய் காய்ந்தே பழகி விட்டது. சற்று நல்ல சீசன் என்றால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது. சட்டென ஜலதோஷம், மூக்கடைப்பு, தொண்டைவலி, ஜூரம் என வந்து விடும். ஏனெனில் இத்தகைய தாக்குதல்களை கொடுக்கும் கிருமிகளை எதிர்க்கும் சக்தி பலருக்கு குறைவே. ஆனால் சில தவிர்ப்பு, பாதுகாப்பு முறைகளை கையாள்வதன் மூலம் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

  • கைகளை சோப்பு கொண்டு சுத்தமாகக் கழுவுங்கள். 20 நொடிகள் தேய்த்துக் கழுவுங்கள். உங்கள் கேள்வி எனக்கு புரிகின்றது. கோடை காலமோ, குளிர்காலமோ, மழை காலமோ எல்லா காலங்களிலும் கைகளை சோப்பு கொண்டு கழுவுவது அவசியம். இதுவே அநேக கிருமிகளைத் தவிர்த்துவிடும்.

  • பொதுவாகவே நம்ம ஊர் பழக்கமான கை கூப்பி வணக்கம் தெரிவிக்கும் முறை மருத்துவ ரீதியாக சிறந்தது. கை கொடுத்து குலுக்கிக் கொள்வது வைரஸ், பாக்டீரியா கிருமிகள் எளிதாய் பரவ வழி செய்கின்றது.

  • இரவு நேரம் குளுகுளுவென நன்றாய் இருக்கின்றதே. நம்மவூரில் இதெல்லாம் ‘மகரஜோதி’ போல் கொஞ்சம் காலம் தானே கிடைக்கும் என்பது அநேகரது ஏக்கம். இவர்கள் இரவில் நெடுநேரம் அமர்ந்து பேசுவது, சாப்பிடுவது என செலவழித்து தாமதமாக தூங்கச் செல்வார்கள். இரவு 2 மணி வரை அரட்டை அடிப்பவர்களும், டி.வி. பார்ப்பவர்களும் உண்டு. இப்படி நேரம் கழித்து உறங்குபவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து விடுகின்றது. எனவே இவர்களை எளிதில் நோய் தாக்கும்.

  • இருமும் பொழுதும், தூங்கும் பொழுதும் வாய், மூக்கு இவற்றை சற்று பொத்தியது போல மூடி இருமுவது கிருமிகள் எதிராளியினை தாக்காது இருக்கும். இது உங்களது சமுதாய சேவையாக இருக்க வேண்டும். ஆனால் வெறும் கைகளை பயன்படுத்தாமல் டிஷ்யூ பேப்பர் கொண்டு வாயினை மென்மையாக பொத்தி இருமுவது உங்கள் கைகளில் கிருமிகள் அள்ளிகொட்டுவதைத் தவிர்க்கும். மறக்காமல் அந்த டிஷ்யூ பேப்பரினை முறையாக நீக்கி விட வேண்டும்.

  • பொது கதவு பிடிகளை டிஷ்யூ உபயோகித்து திறப்பது நல்லது. இதெல்லாம் சாத்தியமா? ஓவராக இல்லையா என்று நினைக்கலாம். பாதுகாப்பு வழிகளில் இவையும் ஒன்று. கை குட்டை உபயோகிக்கிறேன் என்ற பெயரில் அதனை தரை துடைக்கும் துணியினை விட மோசமாக அழுக்காக கழுத்துப் பட்டையில் வைத்து நோய் கிருமிகளின் ஏஜண்டாக செயல்படுவதினைக் காட்டிலும் டிஷ்யூ பேப்பர்கள் மிகவும் சிறந்ததே.

  • பிறரிடம் பேனா வாங்காது உங்கள் பேனாக்களையே உபயோகியுங்கள்.

  * சுகாதாரமற்ற கைளைக் கொண்டு முகத்தினை தொடாதீர்கள். மூக்கு, கண், வாய் இவற்றில் எளதில் கிருமிகள் புகுந்து விடும்.

  * கிருமி நாசினி திரவம் சிறிய அளவில் கிடைக்கின்றது. அதனை கையில் அவ்வப்போது தடவிக் கொள்ளுங்கள்.

  * காலையில் இதமான குளிர் என்று இழுத்துப் போத்திக்கொண்டு ஆனந்தமாய் தூங்க வேண்டும். தலை, காது இவற்றினை நன்கு மப்ளர் அல்லது ஷால் கொண்டு சுற்றி நடைபயிற்சி செல்லுங்கள். அல்லது ஏதாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.

   நடைபயிற்சி

  * அதிக கூட்டம் உள்ள இடங்களைத் தவிர்த்திருங்கள்.

  * பூண்டு, வெங்காயம் இவற்றினை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

  ‘ குளிர்ந்த நீர் குடிப்பதனை குறைக்க வேண்டாம். அருவி போலவும் குடிக்க வேண்டாம். தேவையான அளவு (8 கிளாஸ்) தண்ணீர் குடியுங்கள்.

  * ஊசி போட்டுக் கொள்ளுங்கள்.

  * தியானம் செய்யுங்கள்.

  இந்த வசந்தமான 2 மாத காலத்தினை ஆரோக்கியத்துடன் அனுபவித்து மகிழுங்கள்.
  Next Story
  ×