என் மலர்
செய்திகள்
மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
விசாகப்பட்டிணத்தில் கப்பல் போக்குவரத்து துறை சார்பாக மத்திய மந்திரி நிதின்கட்காரி மற்றும் இணை மந்திரி மாண்டியா ஆகியோர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன்.
அப்போது ஆந்திர மாநிலம் கோதாவரி நதியில் இருந்து 3000 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கிறது. அந்த தண்ணீரை காவிரியில் சேர்க்க முயற்சி எடுக்கப்படும் என்று நிதின்கட்காரி தெரிவித்தார்.
ஆந்திர மாநில முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடுவிடம் தமிழகத்தில் காவிரி நீர் பிரச்சனை இருக்கிறது, அது தீரும் வரை தண்ணீர் தர வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர் ஆந்திர மாநிலத்தில் தண்ணீர் இல்லாத நேரத்தில் கூட சென்னைக்கு தண்ணீர் கொடுத்தேன் என்றார்.

பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா தமிழ்நாட்டில் ஊழல் பெருகுகிறது என்றுதான் சொன்னார். ஏற்கனவே ஆண்ட அரசையோ, தற்போது ஆளுகின்ற அரசையோ குறிப்பிட்டு சொல்லவில்லை. தற்போது தேர்தல் கூட்டணி பற்றி சொல்ல முடியாது. அதற்கு வெகுநாள் இருக்கிறது.
தி.மு.க. பெரிய ஊழலில் திளைத்த கட்சி என்று எல்லோருக்கும் தெரியும். தி.மு.க. மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்தபோது பெரிய ஊழலில் இருந்துள்ளது. ஆனால் தி.மு.க. மத்தியில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்திருந்தபோது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை. சேருகிற இடத்தை பொறுத்துதான் சேருபவர்கள் இருப்பார்கள்.
டாக்டர் ராமதாஸ் காங்கிரசுடன் கூட்டணி வைத்தாலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று கூறியிருக்கிறார். இதைப்போல் வசனம் பேசுபவர்கள் கடைசி நேரத்தில் அதை மாற்றுவார்கள் என்று பார்த்து இருக்கிறோம்.
அ.தி.மு.வை நடத்தும், அரசாங்கத்தை நடத்தும் தலைவர்கள், ஆளுகிறவர்கள் இருக்கிறார்கள். பா.ஜ.க. ஒட்டு மொத்தமாக ஊழலை எதிர்க்கின்ற கட்சி. தூய்மை, நேர்மை வழியில் நடக்கின்ற கட்சி.
நடிகர் கமல் தன்னை பகுத்தறிவாளன் என்றும் ஊழல், ஏழ்மையை ஒழிக்க அரசியலுக்கு வந்திருப்பதாக சொல்கிறார். தமிழக மக்களை ஏழை ஆக்கக் கூடாது.
பயங்கரவாதத்தை பற்றி நான் பேசியதால்தான் தமிழகத்தில் பலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். பயங்கரவாதம் வெகுவாக குறைந்துள்ளது. தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் மத்திய துறையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழக அரசாலோ, தமிழக போலீசாராலோ கைது செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan #EggNutritionCorruption
புதுவை பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர்கள் சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் நியமன எம்.எல்.ஏ.க்களின் நியமனத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வ கணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.
மேலும் அவர்களை சட்டமன்றத்துக்குள் அனுமதிக்கவும் உத்தரவிட்டது. சட்டசபைக்குள் நியமன எம்.எல்.ஏ.க்களை அனுமதிப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவு அறிவிப்பதாக சபாநாயகர் வைத்திலிங்கம் தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை கோரி கோர்ட்டில் தனலட்சுமி மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி சமூக வலை தளத்தில் ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்துக்கு மத்திய அரசு 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்து உள்ளது. சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் நியமன எம்.எல்..ஏ.க்கள் நியமனம் செல்லும் எனவும், அவர்களை சட்டசபைக்கு அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டிலும் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு தடை எதுவும் வழங்கப்படவில்லை.
எனவே, சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி நியமன எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம். அவர்களை தடுப்பது நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாகும்.
இவ்வாறு அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். #GovernorKiranBedi #NominatedMLAs
சேலம் மாவட்டம் பா.ஜ.க. சார்பில் சேலம் மாநகர், கிழக்கு, மேற்கு மற்றும் நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநில பா.ஜ.க.பொதுச்செயலாளரும், சேலம் மண்டல பொறுப்பாளருமான வானதி சீனிவாசன் பங்கேற்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் சிவகாமி பரமசிவம், கோட்ட பொறுப்பாளர் முருகேசன், இணை செயலாளர் அண்ணாதுரை, மாநகர் மாவட்ட மகளிரணி தலைவி நளினி உள்பட பலர் கலந்து கொண்டனர். #BJP #VanathiSrinivasan
அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை காளவாசலில் ரூ.55 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதற்கான பூமிபூஜை வருகிற 15-ந் தேதி காலை 8.40 மணிக்கு நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இது மதுரை நகர போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் முக்கியமான திட்டமாகும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் நவீன வாகன நிறுத்துமிடம், பெரியார் பஸ் நிலையம், ஷாப்பிங் காம்ப்ளக்சை இணைத்து உயர்மட்ட மேம்பாலம், வைகை ஆற்றை சீரமைப்பதுடன் நடைபாதை மற்றும் பூங்கா அமைக்கும் பணிகள், அப்பல்லோ சந்திப்பில் உயர்மட்ட மேம்பாலம், குருவிக்காரன்சாலையில் மேம்பாலம்.
ரூ1,250 கோடி மதிப்பில் லோயர்கேம்ப்பில் இருந்து குழாய் மூலம் மதுரை நகருக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம், கீழவாசலில் உயர்மட்ட மேம்பாலம், கோரிப்பாளையத்தில் உயர்மட்ட மேம்பாலம் போன்ற சிறப்பான திட்டங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
மத்திய அரசுடன், அ.தி.மு.க. அரசு இணக்கமாக இருப்பதால் வளர்ச்சி திட்டப்பணிகளை நிறைவேற்ற முடிகிறது.
தரைவழி போக்குவரத்துக்கு மட்டும் ரூ.75 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை மத்திய அரசு, தமிழகத்துக்கு தந்துள்ளது.
மத்திய அரசுடன் அ.தி.மு.க. அரசு இணக்கமாக செயல்படுவதை தேர்தல் கூட்டணியாக கருதிவிட முடியாது. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

அ.தி.மு.க. தேர்தலை கண்டு பயப்படும் இயக்கம் அல்ல. எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது நிர்வாகிகள் துரைப்பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், திரவியம், பரவை ராஜா ஆகியோர் உடன் இருந்தனர். #ADMK #TNMinister #SellurRaju
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நேற்று புதிய நிர்வாகிகளை கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
அதன்படி மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2 தொகுதிக்கு ஒரு பொறுப்பாளர் வீதம் நியமித்துள்ளார். அவர்கள் பெயர் மற்றும் அவர்கள் கவனிக்கும் தொகுதிகள் விவரம் வருமாறு:-
முஷ்டாக் அலி (எ) பாபு- அம்பத்தூர், ஆவடி, எம்.லோகரங்கன்- திருத்தணி, திருவள்ளூர், டி.தேசிங்குராஜன்- கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, எஸ்.டி.மோகன்-மாதவரம், திருவொற்றியூர், எம்.அருணாச்சலம்- பூந்தமல்லி, மதுரவாயல்.
பி.கே.மணிவண்ணன்- ஆலந்தூர், பல்லாவரம், டி. ஆர்.பாலச்சந்திரன்-செங்கல் பட்டு, தாம்பரம், ராமராஜேந்திரன்- செய்யூர், மதுராந்தகம், உத்திரமேரூர், ஜி.சத்தியநாராயணன்- காட்பாடி, ஆற்காடு, வேலூர், எஸ்.சிவக்கொழுந்து- ஆம்பூர்.
பி.ராஜா- கே.வி.குப்பம், குடியாத்தம், ஆர்.சுரேஷ்- அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, எச்.அப்துல்கரீம்- ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், வாணியம்பாடி, எஸ்.சுரேஷ்-செய்யாறு, வந்தவாசி.
எம்.நாகராஜன்- செங்கம், கலசப்பாக்கம், ஏ.ரஞ்சித்குமார்- ஆரணி, போளூர், ஆர்.அருள்- திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், பி.பாபு- விழுப்புரம், விக்கிரவாண்டி, வி.ஷாஜி- வானூர், திண்டிவனம்.
ஆர்.ஸ்ரீபதி- செஞ்சி, மயிலம், திருக்கோவிலூர், கே.கணேஷ்- சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, எஸ். சரவணன்- சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, டி.கே.மூர்த்தி- காட்டுமன்னார்கோவில், புவனகிரி, முகமதுரபீக்- திட்டக்குடி, விருத்தாசலம், டி.வெங்கடேசன்-நெய்வேலி, பண்ருட்டி, கடலூர்.
ஆர்.ராஜா-காரைக்குடி, திருப்பத்தூர் (சிவங்கை மாவட்டம்), எம்.பெரியார் குணாஹாசன்- சிவகங்கை, மானாமதுரை, எம்.ஜி.ஜோதி அய்யப்பன்- ஆண்டிப்பட்டி, பெரியகுளம், பி.கணேஷ் குமார்- போடிநாயக்கனூர், கம்பம், ஜெ.காளிதாஸ்- திருச்சுழி, விருதுநகர்.
எம்.பி.சீனிவாசகம்- சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், வி.ஜெய்சங்கர்- சாத்தூர், ராஜபாளையம், ஜெ.தேவராஜ்-பரமக்குடி, திருவாடானை, ஆர்.சோமநாத்- ராமநாதபுரம், முதுகுளத்தூர், முகம்மது அப்துர் ரஹீம்-ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர்.
ஆர்.சேகர்-ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, வி.ஸ்ரீ கருணாகர ராஜா- தென்காசி, ஆலங்குளம், அம்பாசமுத்திரம், எல்.செல்லப்பா- வாசுதேவநல்லூர், கடையநல்லூர், சங்கரன்கோவில், எஸ்.செந்தில் குமார்- திருநெல்வேலி, பாளையங்கோட்டை, பி.சசி-கன்னியகுமாரி, நாகர்கோவில்.
எம்.எஸ்.ஜேக்சன்- குளச்சல், கிள்ளியூர், ஜெ.நிர்மல் ஜோசப்- விளவங்கோடு, பத்மநாபுரம்.
கே.முருகேஷ்-ஊத்தங்கரை, பர்கூர், வி.செல்வ மூர்த்தி- ஓசூர், தளி, ஜெ.சத்யநாராயணா- பாப்பிரெட்டிபட்டி, அரூர், ஏ.பாலமுருகன்-பாலக் கோடு, பென்னாகரம், தர்மபுரி, எஸ்.மணி- ராசிபுரம், சேந்தமங்கலம்.
ஜெ.ஜெயபிரகாஷ்- நாமக்கல், பரமத்திவேலூர், கே.காமராஜ்- திருச்செங்கோடு, குமாரபாளையம், ஏ.சரவணகுமார்- பவானி சாகர், அந்தியூர், எம்.சிவகுமார்-பவானி, கோபிசெட்டி பாளையம், ஆனந்தம் எம்.ராஜேஷ்- ஈரோடு (கிழக்கு), மொடக் குறிச்சி.
எஸ்.சுரேஷ்பாபு- உதகமண்டலம், கூடலூர், இ.ஷாஜகான்-குன்னூர், எம்.தாமரைக்கண்ணன்- சூலூர், சிங்காநல்லூர், எம்.பரமேஷ்வரன் (எ) தம்புராஜ்- கோவை (வடக்கு), கவுந்தம்பாளையம், மேட்டுப்பாளையம், டி.பிரபு- தொண்டாமுத்தூர், கோவை (தெற்கு), கிணத்துக்கடவு.
எச்.செந்தாமரைக்கண்ணன்-பொள்ளாச்சி, வால்பாறை, எம்.நம்பிராஜ்- அரவக்குறிச்சி, குளித்தலை, எம்.புகழ்முருகன்- கிருஷ்ணராயபுரம், கரூர், வி.எம்.பிரசாத்குமார்-தாராபுரம், காங்கேயம், பி.வெங்கடேஷ்- பல்லடம், அவிநாசி.
கே.ஜீவா- திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு), ஏ.என்.சந்திரசேகர்- உடுமலைப்பேட்டை, மடத்துக் குளம்.
எம்.முகமது ஜப்பார்- ஆத்தூர், (திண்டுக்கல்), வேடசந்தூர், இம்மான் ஹசன் (எ) இம்மான் ஜப்பார் சாதிக்- பழனி, ஒட்டன்சத்திரம், ஆர்.எம்.ராஜசேகர்- நத்தம், நிலக்கோட்டை, திண்டுக்கல், எப்.பி.ஷாஜ்குமார்- திருவெறும்பூர், லால்குடி.
ஆர்.சாம்சன்-மணச்சநல்லூர், முசிறி, துறையூர், என்.சுரேஷ் - திருச்சி (மேற்கு), திருச்சி (கிழக்கு), எஸ். முத்துக்குமார்- பெரம்பலூர், குன்னம், சையது அனஸ் மொகிதின் சாதிக்- நாகப்பட்டினம், கீழவேலூர், வேதாரண்யம், ஜி.ஞானசம்பந்தம்- திருவாரூர், நன்னிலம்.
கே.அருண் சிதம்பரம்- திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, பி.சதாசிவம்- பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஓரத்தநாடு, பி.சுரேஷ்- கந்தவர்வகோட்டை, விராலிமலை, சி.எம்.ஆர்.கமல் சுதாகர்- புதுக்கோட்டை, திருமயம், எஸ்.மூர்த்தி- ஆலங்குடி, அறந்தாங்கி.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. #KamalHaasan #MakkalNeedhiMaiam
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பாரியூர் வெள்ளாள பாளையம் தொடக்கப் பள்ளியில் இன்று ‘‘ஸ்மார்ட் கிளாஸ்’’ வகுப்பு தொடக்க விழா நடந்தது.
விழாவுக்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பை தொடங்கி வைத்தார்.
அதன் பிறகு அவர் நிரூபர்களிடம் கூறியதாவது:-
தமிழக கல்வித்துறையில் மாணவ- மாணவிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
வரும் செப்டம்பர் மாத இறுதியில் ஜெர்மனி நாட்டில் இருந்து ரோட்டரி சங்கம் சார்பில் 1000 வாகனங்கள் தமிழகம் வருகிறது.
இந்த வாகனங்கள் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று அங்குள்ள கழிப்பிடத்தை சுத்தம் செய்யும். முதல் கட்டமாக 20 ஆயிரம் பள்ளி கூடங்களுக்கு இந்த வாகனங்கள் சென்று கழிப்பிட கட்டமைப்பை சுத்தம் செய்யும்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் முதன் முதலாக இந்த கழிப்பிட வாகனங்கள் இயக்கப்படும். அதன் பிறகு தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களுக்கு சென்று பள்ளிகளில் கழிப்பிடத்தை சுத்தம் செய்யும்.
அரசு பள்ளிகளில் உள்ள செயல்படாத பெற்றோர்- ஆசிரியர் சங்கம் மாற்றி அமைக்கப்படும்.
டி.ஆர்.பி. ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு எழுதியவர்களுக்குழு விரைவில் பணி வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan
பா.ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்திற்கு அகில இந்திய தலைவர் அமித் ஷா வந்து சென்றது பா.ஜனதா கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் புதிய உற்சாகத்தை தந்துள்ளது.
தமிழகத்திற்கு மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி பல நல்ல திட்டங்களை தந்துள்ளது. தி.மு.க., காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்படாத எத்தனையோ திட்டங்களை பிரதமர் மோடி நிறைவேற்றித் தந்திருக்கிறார்.
தமிழகத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று பா.ஜனதா கட்சி முடிவெடுக்கும். வருகிற செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கப்படும்.

அமாவாசை நாளில் கட்சியை ஆரம்பிக்கிறார். அமாவாசை நாளில் கொடியேற்றுகிறார். ஆனால் “மய்யம்” என்ற பெயரில் கட்சியையும் ஆரம்பித்து பகுத்தறிவு பேசுகிறார் கமலஹாசன். அப்படி பேசி போலி வேஷம் போடுவதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் “நீட்” தேர்வில் நடைபெற்ற குளறுபடிக்கு காரணமான அதிகாரிகள் தண்டிக்கப்படவேண்டும். தமிழ் மொழியில் வினா மொழி பெயர்ப்பு சரியாக செய்யப்பட்டிருக்க வேண்டும். இதை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் கவனித்திருக்க வேண்டும்.
தமிழக அரசுடன் தாய், பிள்ளை உறவுடன் மத்திய அரசு செயல்பட்டு தமிழக வளர்ச்சிக்காக முன் உரிமை அளித்து வருகிறது.
பாராளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவிக்கிறது. இது ஜனநாயகத்தில் அந்த கட்சிக்கு உள்ள உரிமையாகும்.
இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan #KamalHaasan
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே இருக்கும் நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் கூட்டணி கணக்கில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.
பாரதிய ஜனதா கட்சியுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்த நிலையிலும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சியோடு கூட்டணி அமைக்காமல் அ.தி.மு.க. தனித்தே போட்டியிட்டது. தனி ஆளாக நின்று 37 தொகுதிகளில் அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்தார் ஜெயலலிதா.
இதன் பின்னர் அவரது மரணம் தமிழக அரசியல் களத்தில் ஏகப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.
அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டதும் அக்கட்சியின் இணைப்புக்காக பா.ஜனதா தலைவர்கள் துடியாய் துடித்தனர். மோடியே நேரடியாக தலையிட்டு எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் இணைத்து வைத்ததாகவே கூறப்பட்டது.
அதே பா.ஜனதா கட்சி தான் இன்று ஊழல் எதிர்ப்பு ஆயுதத்தை கையில் எடுத்து அ.தி.மு.க.வுக்கு எதிராக சாட்டையை சுழற்ற தொடங்கியுள்ளது.
இதன் பின்னணி என்ன? பா.ஜனதா கட்சியின் தமிழக ஊழல் எதிர்ப்பு கோஷத்துக்கு காரணம் என்ன? என்பது பற்றி பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-
கடந்த ஆண்டு இறுதியில் அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்ட ரஜினி, தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அ.தி.மு.க. அமைச்சர்கள் அவர் மீது பாய்ந்தனர். இதையெல்லாம் கண்டுகொள்ளாத ரஜினி, ஜெயலலிதா இல்லாததால் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை நான் கண்டிப்பாக நிரப்புவேன் என்றும் கூறினார்.
எம்.ஜி.ஆர். தந்த ஏழைகளின் ஆட்சியை என்னால் தரமுடியும் என்றும் பேசினார். இப்படி அ.தி.மு.க. எதிர்ப்பை ரஜினி கையில் எடுத்தபோது பா.ஜனதா- அ.தி.மு.க. தலைவர்களிடையே இணக்கமான சூழலே நிலவியது.
தமிழக அரசியலில் தடம் பதிப்பதற்காக நீண்ட நெடுங்காலமாகவே ரஜினியை குறி வைத்து காய் நகர்த்தி வரும் பாரதிய ஜனதா கட்சி அவரது அரசியல் பிரவேசத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் அ.தி.மு.க.வையும் தங்களோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே பா.ஜனதாவின் எண்ணமாக இருந்தது. இதற்கான முயற்சிகளிலேயே அக்கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இதனை உறுதிபடுத்தும் விதத்திலேயே கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசியல் விமர்சகரும் ஆடிட்டருமான குருமூர்த்தி கருத்து தெரிவித்திருந்தார். பா.ஜனதா, அ.தி.மு.க. ஆகிய கட்சிகளோடு ரஜினியும் கூட்டு சேர்ந்தால் அது மிகப்பெரிய மாற்றமாக இருக்கும் என்று அவர் கூறினார்.
இந்த கூட்டணியில் ரஜினிக்கு உடன்பாடு இல்லாமலேயே இருந்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் காலூன்றுவதற்கான வேலைகளை முன் கூட்டியே தொடங்க வேண்டிய கட்டாயம் பாரதிய ஜனதா கட்சிக்கு ஏற்பட்டது.

அ.தி.மு.க.வை ஓரம் கட்டிவிட்டு வந்தால் மட்டுமே கூட்டணி பற்றி பேசலாம் என்று ரஜினி தரப்பில் பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் எதிரொலியே அமித்ஷாவின் ஊழல் எதிர்ப்பு குரல் என்றும் பா.ஜனதா மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் ஊழல் எதிர்ப்பு கோஷத்தை கோரசாக எழுப்பவும் பா.ஜனதா கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
பா.ஜனதா அரசின் சாதனைகள், தமிழகத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்தது உள்ளிட்ட விஷயங்களையும் மக்களிடம் எடுத்துச் செல்ல அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
‘ரஜினி’ என்ற மாஸ் நட்சத்திரத்துடன் மேலும் சில கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொண்டால் வெற்றி பெற்று விடலாம் என்பது பா.ஜனதாவின் கணக்காக உள்ளது. மற்ற மாநிலங்களில் அமித்ஷா இதுபோன்று ‘மேஜிக்’குகளை நிகழ்த்தி காட்டி உள்ளார். தமிழகத்தில் அது சாத்தியப்படுமா? என்பதும் மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது. #BJP #Rajinikanth #TNPolitical
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் தொழில் மற்றும் வணிகம் செய்வதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 15-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. தொழில் துறை முதலீடுகளை ஈர்த்து புதிய நிறுவனங்களை தொடங்கினால் மட்டுமே தமிழகம் முன்னேற முடியும் என்ற நிலையில், தமிழகத்தில் தொழில் தொடங்க யாரும் தயாராக இல்லை என்பதையே இந்த புள்ளிவிவரம் காட்டுகிறது. தமிழகத்தின் இந்த பின்னடைவு கவலை அளிக்கிறது.
மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை 2017-ம் ஆண்டிற்கான தொழில் மற்றும் வணிகம் செய்வதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலை நேற்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில் வழக்கம் போலவே ஆந்திரப் பிரதேசம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.
உண்மையான அக்கறையுடன் பரிந்துரைகளை செயல் படுத்தும் மாநிலங்கள் மிகவும் எளிதாக முதலிடத்தை பிடிக்க முடியும். ஆந்திரா அப்படித்தான் முதலிடத்தைப் பிடித்து வருகிறது. தமிழகத்திற்கும் முதலிடத்தைப் பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
ஆனால், ஆந்திரா 98.42 சதவீதம் சீர்திருத்தங்களை செய்து முதலிடம் பிடித்துள்ள நிலையில், தமிழகம் 90.68 சதவீதம் சீர்திருத்தங்களை மட்டுமே செய்ததால் தான் 15-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள சீர் திருத்தங்களை தமிழகத்தால் செய்ய முடியாமல் போனதற்குக் காரணம் தமிழக அரசு நிர்வாகத்தில் தலைவிரித்தாடும் ஊழல் என்பதைத் தவிர வேறல்ல.
தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் ஆந்திராவும், தெலுங்கானாவும் தான் தமிழகத்திற்கு கடுமையான போட்டியை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்திற்கு வந்திருக்க வேண்டிய ரூ.25,000 கோடி மதிப்புள்ள வாகன உற்பத்தித் துறை சார்ந்த முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றுள்ளன. கடந்த பல ஆண்டுகளாகவே இது தான் நிலை எனும் போது, அதற்கான காரணங்களைக் கண்டறிந்து சரி செய்வது தான் சரியான நடவடிக்கையாக இருக்கும்.
ஆனால், தொழில் தொடங்க அனுமதிப்பதற்காக கையூட்டு வாங்குவதை பினாமி ஆட்சியாளர்கள் கைவிட மாட்டார்கள் என்பதால் தான், தமிழகத்தில் தொழில் தொடங்க வருபவர்கள் கூட ஆட்சியாளர்களுக்கு கையூட்டு கொடுக்கத் தயங்கி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கு செல்கின்றனர்.
தொழில்துறையில் தமிழகம் அடைந்து வரும் பின்னடைவு வேறு வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படாததால் தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பதுடன், அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயும் குறைந்திருக்கிறது.
இதனால் தமிழ்நாட்டின் கடன் சுமை ஆண்டுக்கு 29.85 சதவீதம் வீதம் அதிகரித்து வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கடன்களை தமிழகம் திரும்பச் செலுத்த வேண்டியிருக்கும் என்பதால், அப்போது தமிழகம் கடுமையான கடன் சுமையில் சிக்கிக்கொள்ளும் ஆபத்து உள்ளது. இச்சிக்கலை சரி செய்ய வேண்டிய ஆட்சியாளர்கள் கையூட்டை வாங்கிக் குவிப்பதில் மட்டுமே தீவிரம் காட்டுகின்றனர்.
தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழல் ஒழியாத வரை தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சியடையப் போவதில்லை. பினாமி ஆட்சி நீடிக்கும் வரை அரசு நிர்வாகத்தில் ஊழல் ஒழியப் போவதில்லை.
எனினும், வெகுவிரைவில் பினாமி ஆட்சி அகற்றப்படும்; அதன்பின்னர் அமையும் ஆட்சியில் முதலீட்டை ஈர்க்க சிறப்புத் திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெருகும் என்பது மட்டும் உறுதி!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அரசியல் பிரவேசம் செய்துள்ள ரஜினிகாந்த் புதிய படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு மேற்கு வங்காளத்தில் இருந்து நேற்று இரவு சென்னை திரும்பினார்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி ரஜினிகாந்த் அதிரடி அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை அவர் விரைவில் வெளியிட உள்ளார்.
புதிய கட்சியின் பெயரையும் ரஜினிகாந்த் அறிவிக்கிறார். இது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் மக்கள் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் அறிவிப்புகளை ரஜினி வெளியிடுவார். எந்தவித சோர்வும் இல்லாமல் அவர் உற்சாகமாக இருக்கிறார்’.
இவ்வாறு அவர் தெரிவித்தார். #Rajinikanth #TamilaruviManian
சென்னை:
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
தலைவர் கலைஞர் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற 1971-76 ஆட்சிக்காலத்தில், ‘பொதுவாழ்வில் ஈடுபட்டோர் இலஞ்ச ஊழல் குற்றத் தடுப்பு சட்டம்’, தமிழ்நாடு சட்ட மன்றத்தில் 1973ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.
தற்போது இந்தியா முழுவதும் லோக்பால், லோக் ஆயுக்தா சட்டங்கள் குறித்த விழிப்புணர்வும் அது குறித்த வலியுறுத்தலும் பரவி மிகுந்துள்ள சூழலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையிலேயே லோக் ஆயுக்தாவைக் கொண்டு வருவோம் என, பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்ததை கலைஞரின் உடன்பிறப்புகள் என்ற முறையில் நாம் அனைவருமே பெருமிதத்துடன் எடுத்துக் காட்ட முடியும்.
தேர்தல் களத்தில் நடந்த சூதான விளையாட்டுகளால் வெறும் 1.1 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே ஆட்சியைத் தொடரும் வாய்ப்பினை அ.தி.மு.க. பெற்றது. ஆனால், அது ஊழலை ஒழிக்கவோ, வெளிப்படைத்தன்மையான நிர்வாகத்தை அளிக்கவோ விரும்பாத காரணத்தால், லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்க முன்வரவேயில்லை. சட்டமன்றத்திலேயே லோக் ஆயுக்தாவை வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நானும் கழக உறுப்பினர்களும் வலியுறுத்திப் பேசினோம். “கரப்ஷன், கமிஷன், கலெக்ஷன்” என்றிருக்கக்கூடிய ஆட்சியாளர்கள் எப்படி லோக் ஆயுக்தா சட்டத்தைக் கொண்டு வருவார்கள்?
தமிழ்நாட்டைப் போலவே இந்தியாவில் இன்னும் சில மாநிலங்களும் இதேபோல இருந்த காரணத்தால், ஜூலை 10-ந்தேதிக்குள் லோக் ஆயுக்தாவை நிறைவேற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் கண்டிப்பான உத்தரவிட்டது. அதன் காரணமாகத்தான் அரைகுறை மனதுடன், தமிழ்நாடு சட்டமன்றத்தில் லோக் ஆயுக்தா மசோதா கொண்டு வரப்பட்டது. தி.மு.கழகத்தைப் பொறுத்த வரை, மக்கள் நலன்காத்திட நன்மையளிக்கும் செயல்பாடு எந்தப் பக்கமிருந்து வந்தாலும், கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு ஆதரிப்பது வழக்கம்.
அதே நேரத்தில் அந்த சட்டமுன்வடிவு முழுமையான வலிமை கொண்டதாக, நிர்வாகத்தில் ஊழலை உண்மையாகவே ஒழிக்கக்கூடியதாக வெளிப்படைத் தன்மை கொண்ட அரசாங்கத்துக்கு உத்தரவாதம் தரக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதில் தி.மு. கழகம் உறுதியாக இருப்பதால், அது குறித்த விவாதத்தின் போது கழகத்தின் சார்பிலான கருத்துகள் எடுத்து வைக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள், சமூக நல அமைப்பினர் உள்ளிட்ட பலரும் தமிழ்நாடு அரசாங்கத்தின் லோக் ஆயுக்தா சட்டம், வலிமையற்றதாக வெறும் காகிதக்கணை போல இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டியுள்ளனர். மக்கள் மன்றத்தின் எண்ணங்களை சட்டமன்றத்தில் எடுத்து வைத்தது தி.மு.கழகம். நமது ஆலோசனைகள் ஏற்கப்படாத நிலையில், எதிர்ப்பினைப் பதிவு செய்யும் வகையில் வெளிநடப்பு செய்தோம்.
நொண்டிக் குதிரைக்கு சறுக்கியதே சாக்கு என்பது போல, அரைகுறை மனதினரான அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் வலிமையில்லாத லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவின் குறைகளை மறைப்பதற்காக, லோக் ஆயுக்தா சட்டம் வேண்டும் என்று கோரிய தி.மு.க. அதனை எதிர்த்து வெளிநடப்பு செய்யலாமா என வழக்கம்போல தங்கள் மீது படிந்திருக்கும் களங்கத்தை மறைக்கும் யுக்தியாக, தி.மு.கழகத்தின் பக்கம் பழியைத் திருப்பப் பார்க்கிறார்கள். ஊடகங்கள் பத்திரிகைகள் ஒன்றிரண்டில்கூட, லோக் ஆயுக்தாவுக்கு தி.மு.க. எதிர்ப்பு என்பதைப் போலத் தலைப்பிடப்பட்டதைக் காண முடிகிறது.
லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவை தி.மு.கழகம் எதிர்க்கவில்லை. அது, பல் இல்லாத பொக்கை வாயாக வெட்டப் பயன்படாத அட்டைக்கத்தியாக இருக்கிறது என்பதையும், அந்த ஓட்டை வாய் வழியாக ஊழல் பெருச்சாளிகள் குறுக்கு வழியில் தப்பி ஓடி, நிர்வாக நேர்மை என்ற உன்னதமான உயிருக்கே உலை வைக்கும் என்பதைத்தான் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறது.
கமிஷன் ராஜ்ஜியம் நடத்தும் ஆட்சியாளர்கள் முடிவு செய்யும் ஒப்பந்தங்கள் (டெண்டர்கள்) பற்றி லோக் ஆயுக்தா நடவடிக்கை எடுக்க முடியாது; கலெக்ஷன் ராஜ்ஜியம் நடத்தும் ஆட்சியாளர்கள் நியமிக்கும் பணிகள் (போஸ்டிங்) குறித்து லோக் ஆயுக்தா நடவடிக்கை எடுக்க முடியாது. அப்படியென்றால், இந்த சட்டமுன்வடிவால் எப்படி ஊழலை ஒழிக்க முடியும்? அ.தி.மு.க. கட்டியுள்ள மதில் இல்லாத அரைகுறை மாளிகையில் “பல்பு” மட்டுமில்லை, “மெயின் ஸ்விட்ச்சும்“ இல்லை; மின் இணைப்பும் இல்லை. எவருக்கும் பயன்படாத இருளடைந்தபாழடைந்த கட்டடமாகத்தான் அது இருக்கிறது என்பதை மீண்டும் மீண்டும் மக்களிடம் எடுத்துரைப்போம்.
முழுமையான வலிமை மிக்க லோக் ஆயுக்தா சட்டம் உருவாக்கப்பட வேண்டுமென்றால், தற்போதைய தி.மு.கழகத்தின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை வலியுறுத்திய நிலையில், முதலமைச்சரோ இந்த பல் இல்லாத லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவே நீடிப்பதுதான் தனக்கும் தன்னைச் சார்ந்தோருக்கும் பாதுகாப்பானது என்ற காரணத்தால், தேர்வுக் குழுவுக்கு அனுப்புவதற்கு தயங்குகிறார் மறுக்கிறார் புறக்கணிக்கிறார்.
ஊழல் செய்வதற்காகவே மிச்சமிருக்கும் பதவிக்காலத்தை எப்படியாவது அனுபவித்து விடவேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் மாநிலத்தின் உரிமைகளைக்கூட அடகு வைத்து அடிமை ஆட்சி நடத்து பவர்களிடம், ஊழலுக்கு எதிரான வலிமையான லோக் ஆயுக்தா சட்டத்தை எதிர் பார்க்க முடியுமா?
உண்மையாகவே ஊழலை ஒழிக்கும் வலிமையுள்ள லோக் ஆயுக்தா வேண்டும் என்பதே ஆள்வோரிடம் நாம் வைக்கும் கோரிக்கை. ஊழலுக்கு இடம் தராமல், வலிமையான பற்களைக் கொண்ட லோக் ஆயுக்தா உருவாக்கப்பட்டு, ஆட்சி நிர்வாகம் என்பது அனைத்துத் தரப்பு மக்களும் அடி முதல் நுனி வரை விரும்பிச் சுவைக்கும் கரும்பு போன்ற சட்டத்தை வரவேற்று உருவாக்கும் காலம் விரைவில் ஜனநாயக ரீதியாக அமையும். அதுவரை போலிகள் போடும் கொண்டாட்டத்தைப் பொறுத்துக் கொண்டுதானே ஆகவேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தஞ்சை மாநகர பா.ஜனதா சார்பில் வீரன் அழகு முத்துகோன் ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் தேசிய செயலாளர் எச்.ராசா கலந்து கொண்டு, அழகுமுத்துகோன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
1857-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக நாடு முழுவதும் சுதந்திர போராட்டம் நடந்தது. இதுதான் முதல் சுதந்திர போராட்டம் என கூறுகிறோம்.
ஆனால் இதற்கு முன்பே வீரன் அழகுமுத்து கோன் பிரிட்டஷ் அரசுக்கு எதிராக போராடி தன்னுயிரை மாய்த்து கொண்டார்.
சுதந்திரத்துக்காக பாடுபட்ட தீரன் சின்னமலை, அழகு முத்து கோன் ஆகியோர் வரலாற்றுகளை பாடத்திட்டத்தில் சேர்க்கக் கோரியும், தபால் தலை வெளியிட கோரியும் என்னிடம் வலியுறுத்தினார்கள்.
தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றி உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படியே இந்த சட்டத்தை கொண்டு வந்து உள்ளனர்.
சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. தி.மு.க. ஆட்சி காலத்தில் சுமார் 3800 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் அப்போது விவசாயிகளின் 400 ஹெக்டேர் நிலம் தான் எடுக்கப்பட்டு உள்ளது. இது விவசாயிகளின் அனுமதியுடன் தான் நிலம் கையக்கப்படுத்தப்பட்டு வருகிறது. 8 வழிச்சாலை திட்டத்தில் விவசாயிகளின் கிளர்ச்சி இல்லை. நாட்டின் முன்னேற்றத்துக்கு நிலத்தை தர விவசாயிகள் தயாராக உள்ளார்கள்.

தமிழக அமைச்சர் ஒருவர் நான் அமித்ஷா சொன்னதை திரிந்து சொன்னதாக கூறி வருகிறார். அவருக்கு இந்தி தெரியவில்லை. நல்ல ஆசிரியரை வைத்து இந்தி கற்றுகொள்ள வேண்டும். பிறகு இதன் அர்த்தத்தை அவர் தெரிந்து கொள்ளலாம். இதற்கு அமைச்சருக்கு ஒருவார காலம் அவகாசம் அளிக்கிறேன்.
தமிழகத்தில் சமூக விரோத, தீய சக்திகள் உருவாகி உள்ளனர். இவர்களால் தமிழகம் பாதிக்கப்படும் சூழ்நிலை இருந்து வருகிறது. தூத்துக்குடி பிரச்சனையில் தமிழக அரசு தூங்கி விட்டது. ஆனால் சேலம் 8 வழிச்சாலை பிரச்சனையில் தமிழக அரசு விழித்து கொண்டது.
கதிராமங்கலம், தூத்துக்குடி, நெடுவாசல் போன்ற இடங்களில் நக்சலைட்டுகளின் எதிர்ப்பு உள்ளது. இதில் தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும். நக்சலைட்டுகளின் பேச்சை கேட்டு இளைஞர்கள் செயல்படுகிறார்கள். இதனால் தான் தமிழகம் தொழில்துறையில் 15-வது இடத்தில் பின்தங்கி உள்ளது. அரசு மட்டும் காரணமல்ல, பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் நக்சலைட்டுகளும் தான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார். #BJP #Amitshah #HRaja






