என் மலர்
ஆசிரியர் தேர்வு
- நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விஜய் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.
- வடசென்னை மற்றும் திருவள்ளூரில் பிரசாரம் செய்ய விஜய் திட்டமிட்டிருந்தார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் கடந்த 13-ந் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
அந்த வகையில், நாளை (சனிக்கிழமை) நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விஜய் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.
இந்நிலையில், தவெக பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, டிசம்பர் மாதம் 13ம் தேதியில் சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தவெக பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தது.
மேலும், வரும் 27ம் தேதி வடசென்னை மற்றும் திருவள்ளூரில் பிரசாரம் செய்ய விஜய் திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், வரும் 27ம் தேதி அன்று சேலம் மற்றும் நாமக்கல்லில் பிரசாரம செய்ய உள்ளதாக விஜய் அறிவித்துள்ளார்.
- இம்பாலில் இருந்து பிஷ்னுபூர் மாவட்டத்திற்கு வாகனத்தில் செல்லும்போது தாக்குதல்.
- காயம் அடைந்த மூன்று வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் ஆயுதமேந்திய குழு அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் சென்ற வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒரு வீரர் உயிரிழந்த நிலையில், 3 பேர் காயம் அடைந்தனர்.
வீரர்கள் இம்பாலில் இருநது பிஷ்னுபூர் மாவட்டத்திற்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆயுதமேந்திய ஒரு கும்பல் திடீரென வானத்தின் மீது தாக்கதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் மாலை 6 மணிக்கு நம்போல் சபால் லெய்கை என்ற இடத்தில் நடந்துள்ளது. இதில் வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காயம் அடைந்த வீரர்கள் போலீஸ் மற்றும் பொதுமக்கள் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் இரண்டு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட சண்டை, வன்முறையாக வெடித்தது. இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் மணிப்பூரில் இன்னும் முழுமையாக அமைதி திரும்பவில்லை. மணிப்பூர் கலவரத்திற்குப் பிறகு கடந்த வாரம் முதன்முறையாக பிரதமர் மோடி, அம்மாநிலத்திற்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மணிப்பூரில் தற்போது ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது.
- ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
- ரோபோ சங்கர் உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
நடிகர் ரோபோ சங்கர் (46) உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார்.
ரோபோ சங்கரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் ரோபோ சங்கரின் மறைவு செய்தி அறிந்து அவரது உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இதற்கிடையே, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய இயக்குனர் செல்லா அய்யாவு இரங்கல் தெரிவித்தார்.
அப்போது அவர் கூறுகையில்," ஆறு மணி காமெடி ஹிட்டாக முக்கிய காரணம் ரோபோ சங்கர்தான்.. அது எடுக்கும்போது எங்களுக்கு தெரியாது இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என்று.
நாள் முழுக்க ஒரே டோனில், ஒரே மீட்டரில் அட்சரம் பிசகாமல் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.
ரியாக்சன் மாறாமல் ஸ்பாட்டிலேயே எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். அதுதான் தியேட்டரிலும் எதிரொளித்தது. ரசிகர்களின் சிரிப்பினில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். கண்ணீர் அஞ்சலி அண்ணா" என்றார்.
இயக்குனர் செல்லா அய்யாவு தற்போது, கட்டாகுஸ்தி 2 படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவும், சீனாவும் பண்டைய நாகரிகங்கள் கொண்ட நாடுகள்.
- புதிய சந்தைகள், புதிய எரிசக்தி வினியோக ஆதாரங்களை தேட அவர்களை கட்டாயப் படுத்துகிறது.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்கி வருவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்து உள்ளது. உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக நிதி உதவி செய்து வருவதாக அமெரிக்கா விமர்சித்து வருகிறது. இதனை இந்தியா திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
மேலும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயப்படாமல் ரஷியாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணை வாங்கி வருகிறது. இந்தநிலையில் ரஷிய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்தியா மற்றும் சீனாவுக்கு எதிராக அதிக வரி விதிக்கும் அமெரிக்காவின் அச்சுறுத்தல் பலன் அளிக்காது என கூறி உள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு செர்ஜி லாவ்ரோவ் இது தொடர்பாக அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ரஷியா மீது விதிக்கப்பட்ட புதிய தடைகளால் எங்களுக்கு எந்த விதமான பிரச்சினையும் இல்லை. அந்த காலக்கட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தடைகளை டிரம்பின் முதல் பதவி காலத்தில் விடுக்கப்பட்டது.
மேற்கத்திய நாடுகள் இந்த தடைகளை விதித்தபோது இருந்த சூழ்நிலையில் இருந்து நாங்கள் முடிவுகளை எடுக்க தொடங்கினோம்.
இந்தியாவும், சீனாவும் பண்டைய நாகரிகங்கள் கொண்ட நாடுகள். எனக்கு பிடிக்காததை செய்வதை நீங்கள் நிறுத்துங்கள், அல்லது நான் உங்கள் மீது வரிகளை விதிப்பேன் என்று அவர்களிடம் பேசுவதில் எந்த பயனும் இல்லை. இந்தியா மற்றும் சீனாவுக்கு எதிராக அதிக வரி விதிக்கும் அமெரிக்காவின் அச்சுறுத் தல்கள் பலன் அளிக்காது என்பது நிரூபணம் ஆகி வருகிறது.
இந்தியாவும், சீனாவும் அமெரிக்காவின் கோரிக்கை களை எதிர்த்து வருகிறது. அந்த நாடுகள் அமெரிக்கா வின் அழுத்தத்தை விட தங்கள் சொந்த தேசிய நலன்களை அடிப்படையாக கொண்ட கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றி வருகின்றன.
இந்த வரி அச்சுறுத்தல் அந்த நாடுகளின் பொருளா தார வளர்ச்சியை குறை மதிப்பிற்கு உட்படுத்துகிறது என்பதோடு மட்டுமல்லாமல் குறைந்த பட்சம் மிகவும் கடுமையான சிரமங்களை உருவாக்குகிறது.
இதனால் புதிய சந்தைகள், புதிய எரிசக்தி வினியோக ஆதாரங்களை தேட அவர்களை கட்டாயப் படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காமல் இருந்த கட்சிகளின் அங்கீகாரம் ரத்து.
- தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத கட்சிகளின் அங்கீகாரத்தையும் ரத்து செய்துள்ளது.
தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காமல் இருந்த 42 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் 474 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத கட்சிகளின் அங்கீகாரத்தையும் ரத்து செய்துள்ளது.
- கிரில் கம்பிகள், தடுப்புகள் மேலே கண்டிப்பாக ஏறக் கூடாது.
- விஜயின் வருகையின்போது பட்டாசு வெடிப்பதை தோழர்கள் தவிர்க்க வேண்டும்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி தவெக தலைமை தொண்டர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை
விஜயின் மக்கள் சந்திப்பிற்கு வரும் தொண்டர்களுக்கு 12 வழிகாட்டு நெறிமுறைகளை விதித்து தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
முதியவர், பள்ளி சிறுவர்கள், கர்ப்பிணி, கை்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள் விஜய் பரப்புரைக்கு வரவேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கட்டிடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், மின்விளக்கு கம்பங்கள், உயரமாக இடங்கள் மேலே ஏற வேண்டாம்.
காவல்துறையின் அறிவுறுத்தல்படி அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளையும் தவிர்க்க வேண்டும்.
தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு வருபவர்கள் பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ, நடந்து கொள்ளவோ கூடாது.
சாலையின் இருபுறமும் பிளக்ஸ் பேனர்கள், அலங்கார வளைவுகள், கொடி கட்டப்பட்ட கம்பிகளை உரிய அனுமதியின்றி வைக்கக்கூடாது.
விஜயின் வருகையின்போது பட்டாசு வெடிப்பதை தோழர்கள் தவிர்க்குமாறும் தவெக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் காவல்துறையின் விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும் எனவும் தவெக தலைமை அறிவுறுத்தியுள்ளது.
- ஆளுநர் தேர்தலில் 2ஆம் பிடித்த நிலையில், மேல்சபை தேர்தலில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
- தோல்வி விரக்தியில் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நாம் கேட்கும் கேள்விகளுக்கு டக் டக்கென பதில் கொடுத்து வருகிறது. தகவல் பெறுவதற்காகவே ஏ.ஐ. பயன்படுத்தி வந்த நிலையில், ஜப்பானை சேர்ந்த கட்சி ஏ.ஐ.-யை கட்சித் தலைவராக்க முடிவு செய்துள்ளது.
தேர்தலில் தோல்வியடைந்ததால், விரக்தியடைந்து அந்த கட்சியின் நிறுவனர் உடனடியாக வெளியேறிவிட்டார். இதனால் புதிய தலைவர் நியமிக்கப்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், செயற்கை தொழில்நுட்பத்தை (AI) கட்சியின் தலைவராக நியமனம் செய்ய முடிவு செய்துள்ளது.
The Path to Rebirth என் கட்சி கடந்த ஜனவரியில் ஷிஞ்ஜி இஷிமாரு என்பவரால் தொடங்கப்பட்டது. இவர் மேற்கு ஜப்பானில் உள்ள ஒரு சிறு நகரின் முன்னாள் மேயர் ஆவார். அந்தக் கட்சி ஒருங்கிணைந்த கொள்கை தளத்தில் செயல்படுவதில்லை. மாறாக அதன் உறுப்பினர்கள் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களைத் தொடர அனுமதிக்கிறது.
2024 டோக்கியோ ஆளுநர் தேர்தலில், வலுவான ஆன்லைன் பிரசாரத்தின் மூலம் இரண்டாவது இடத்தைப் பிடித்தபோது, இஷிமாரு ஆரம்பத்தில் தேசிய கவனத்தை ஈர்த்தார். இருப்பினும், இந்த ஆண்டு மேல்சபை தேர்தலில் அவரின் கட்சி எந்த இடத்தையும் பிடிக்காத நிலையில், கட்சித் தலைவர் பதவியில் இருந்து வெளியேறினார்.
எப்படி செயல்படுத்தப்படும் என்பது உட்பட செயற்கை நுண்ணறிவு பற்றிய விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. உறுப்பினர்களின் அரசியல் நடவடிக்கைகளை AI கட்டுப்படுத்தாது. கட்சியின் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் என அக்கட்சியின் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
பாலா மற்றும் பாலாஜி சக்திவேல் நடிப்பில் அண்மையில் காந்தி கண்ணாடி திரைப்படம் வெளியானது. இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
இதுமட்டும் அல்லாமல் பாலா மக்களுக்கு அவரால் முடிந்த பல உத்விகளை செய்து வருகிறார். மேலும் ராகவா லாரன்ஸ் மாற்றம் இயக்கத்தின் மூலமும் பல உதிவிகளை செய்து வருகிறார்.
பெட்ரோல் பங்கில் வேலை செய்த ஊழியருக்கு பைக் வாங்கி கொடுத்தது, முடியாதவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தது என பாலா செய்த விஷயம் வைரலாகி கொண்டே இருந்தது.
இந்நிலையில் பாலாவை சர்வதேச கைக்கூலி என பல விமர்சனம் செய்து வருகின்றனர்.
பாலா கொடுத்த ஆம்புலன்ஸ் நம்பரும் பொய்யாக இருப்பதாகவும் அவர் பித்தலாட்டம் செய்து வருவதாகவும் செய்தியாளர் ஒருவர் தொடர்ந்து பாலா மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது குறித்த பேட்டி ஒன்று வைரலான நிலையில் பலரின் பணத்தை தான் பாலா இப்படி உதவிகளாக செய்து விளம்பரம் தேடிக் கொள்வதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த வீடியோ வைரலான நிலையில் பாலாவை தொடர்ந்து பலரும் விமர்சிக்க தொடங்கி வருகின்றனர். இது குறித்து பதில் அளித்து இருக்கும் KPY பாலா என்னை சர்வதேச கைக்கூலி என்று கூறுவது எனக்கே அதிர்ச்சியாக தான் உள்ளது. நான் வண்டி வாங்கி தருகிறேன் என்றால் அதை அவர்கள் பெயரில் மாற்றிக் கொள்வார்கள். அதற்காகத்தான் வண்டியின் நம்பரை மறைத்துக் கொடுக்கிறேன்.
நான் செய்த உதவிகளுக்கெல்லாம் ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. நான் செய்த நிகழ்ச்சிகள், ப்ரோமோஷன், படங்களில் இருந்து வந்த வருமானத்தில் வைத்து தான் உதவிகள் செய்கிறேன். நான் கட்டி வருவது மருத்துவமனை அல்ல சின்ன கிளினிக் மட்டுமே. அதுவும் நான் வீடு கட்ட வைத்திருந்த நிலத்தில் கட்டி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையில் பாலாவுடன் இருக்கும் பிரபலங்கள் உதவி செய்பவரின் குணத்தை பாராட்டாமல் இருந்தால் கூட பரவாயில்லை அவரை இப்படி குறை சொல்வது அதிர்ச்சியாக இருப்பதாகவும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- கேலக்ஸி S24 FE மாடலின் விலை 59,999 ரூபாயில் இருந்து ரூ. 29,999 ஆகக் குறைந்துள்ளது.
- கேலக்ஸி A35 5ஜி ஸ்மார்ட்போன் 30,999 ரூபாயில் இருந்து தற்போது ரூ. 17,999 என குறைந்துள்ளது.
பண்டிகை கால விற்பனையின் அங்கமாக சாம்சங் இந்தியா நிறுவனம் தனது கேலக்ஸி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகளில் விலைக் குறைப்பு மற்றும் வங்கி சார்ந்த பலன்கள் வழங்கப்படுகிறது. இவை சாம்சங் நிறுவனத்தின் முதன்மை கேலக்ஸி S24 சீரிஸ் தொடங்கி பட்ஜெட் பிரிவில் கிடைக்கும் கேலக்ஸி F மற்றும் கேலக்ஸி M சீரிஸ் மாடல்கள் என பல்வேறு மாடல்களை வாங்க வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.
சலுகை விவரங்கள்:
சாம்சங் கேலக்ஸி S24 சீரிஸ்
கேலக்ஸி S24 சீரிசில் கேலக்ஸி S24 அல்ட்ரா, கேலக்ஸி S24 மற்றும் புதிதாக கிடைக்கும் கேலக்ஸி S24 FE ஆகியவை குறைந்த விலையில் கிடைக்கின்றன.
கேலக்ஸி S24 அல்ட்ரா மாடலின் விலை 1,34,999 ரூபாயில் இருந்து தற்போது 97,999 ரூபாய்க்கு கிடைக்கிறது
கேலக்ஸி S24 மாடலின் விலை 74,999 ரூபாயில் இருந்து தற்போது ரூ. 39,999 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
கேலக்ஸி S24 FE மாடலின் விலை 59,999 ரூபாயில் இருந்து ரூ. 29,999 ஆகக் குறைந்துள்ளது.
பட்ஜெட் பிரிவு ஆப்ஷன்கள்:
சாம்சங் அதன் மிட்-ரேஞ்ச் மற்றும் பட்ஜெட் பிரிவுக்கு ஏற்ற கேலக்ஸி A, கேலக்ஸி M மற்றும் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் தள்ளுபடியை வழங்குகிறது.
கேலக்ஸி A சீரிஸ்
கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் படி, 2024 ஆம் ஆண்டில் தங்கள் பிரிவுகளில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களாக இருந்த கேலக்ஸி A55 5ஜி மற்றும் கேலக்ஸி A35 5ஜி ஆகியவை தற்போது 42% வரை தள்ளுபடியுடன் கிடைக்கின்றன.
கேலக்ஸி A55 5ஜி மாடலின் விலை ரூ. 39,999-இல் இருந்து தற்போது ரூ. 23,999 என குறைக்கப்பட்டுள்ளது.
கேலக்ஸி A35 5ஜி ஸ்மார்ட்போன் 30,999 ரூபாயில் இருந்து தற்போது ரூ. 17,999 என குறைந்துள்ளது.
கேலக்ஸி M மற்றும் கேலக்ஸி F சீரிஸ்
இளம் பயனர்களை இலக்காகக் கொண்ட சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M மற்றும் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 30% வரை விலைக் குறைப்பு பெற்றுள்ளன.
கேலக்ஸி M36 5ஜி மாடலின் விலை ரூ. 19,999-இல் இருந்து தற்போது ரூ. 13,999 ஆகக் குறைந்துள்ளது.
கேலக்ஸி M16 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 13,499-இல் இருந்து தற்போது ரூ. 10,499ஆகக் குறைந்துள்ளது.
கேலக்ஸி M06 5ஜி மாடல் ரூ. 9,999-இல் இருந்து தற்போது ரூ. 7,499 என குறைக்கப்பட்டு இருக்கிறது.
கேலக்ஸி F36 5ஜி விலை ரூ. 19,999-இல் இருந்து தற்போது ரூ. 13,999 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
கேலக்ஸி F06 5ஜி மாடலின் விலை ரூ. 9,999-இல் இருந்து ரூ. 7,499 என குறைந்துள்ளது.
புதிய விலை மற்றும் சலுகைகள் சாம்சங் நிறுவனத்தின் AI-சார்ந்த அம்சங்கள் மற்றும் மேம்பட்ட வன்பொருளை அதிக வாடிக்கையாளர்கள் அனுபவிக்க வழி செய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் வருகிற 22ஆம் தேதி முதல் கிடைக்கும்.
- பொதுமக்கள் இருந்த இடத்திலேயே ஆவணங்களை பெறும் வகையில் ஆவணக்காப்பக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
- தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் ஆவணக்காப்பக இணையதளத்தை தொடங்கி வைத்தார்.
சென்னை:
தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறையின் சார்பில் 50-வது தேசிய ஆவணக்காப்பாளர்கள் குழு கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இதில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்று, 'பொதுமக்கள் நிலஆவணங்களை எளிதில் பெறும் வகையில் முதற்கட்டமாக 1864 முதல் 1897-ம் ஆண்டு வரை (பழைய செட்டில்மென்ட் ரிஜிஸ்டர்) மற்றும் 1861 முதல் 1940-ம் ஆண்டு வரையிலான இனாம் உண்மை பதிவேடு இணையத்தில் பதிவேற்றப்பட்டு பொதுமக்கள் இருந்த இடத்திலேயே ஆவணங்களை பெறும் வகையில் www.digitamiinsduarchives.gov.in ஆவணக்காப்பக இணையதளத்தை தொடங்கி வைத்தார்.
மேலும், 'ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக 1857-ம் ஆண்டுக்கு முன்பு தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் தியாகங்கள்', 'மைசூர் போர்களும் தமிழ்நாடு கைப்பற்றப்பட்ட முறைகளும்' ஆகிய 2 நூல்களை வெளியிட்டார்.
கூட்டத்தில் தேசிய ஆவணக்காப்பக தலைமை இயக்குனர் சஞ்சய் ரஸ்தோகி, தமிழ்நாடு உயர்கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் பொ.சங்கர், தமிழ்நாடு ஆவணக்காப்பக முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் ஹர்சஹாய் மீனா, 20 மாநில ஆவணக்காப்பக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- விமானத்தில் எரிபொருள் சுவிட்ச் பொருத்தப்பட்டுள்ள இடம் மற்றும் அதன் வடிவமைப்பு காரணமாக விபத்து நிகழ்வதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளன.
- விசாரணையில் எரிபொருள் சுவிட்சுகள் 'கட்ஆஃப்' நிலையில் இருப்பது தெரியவந்தது.
கடந்த ஜூன் 12 அன்று, அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 போயிங் விமானத்தின் 2 இயந்திரங்களும் செயலிழந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அருகிலுள்ள கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், உயிரிழந்தவர்களில் நான்கு பேரின் குடும்பங்கள் அமெரிக்க விமான உற்பத்தியாளர் போயிங் மற்றும் எரிபொருள் ஸ்விட்ச் -ஐ தயாரித்த உபகரண நிறுவனமான ஹனிவெல் மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
அமெரிக்காவின் டெலாவேர் உயர் நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மனுவின்படி, தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், விமானத்தில் எரிபொருள் சுவிட்ச் பொருத்தப்பட்டுள்ள இடம் மற்றும் அதன் வடிவமைப்பு காரணமாக விபத்து நிகழ்வதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளன என்று மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
காக்பிட் குரல் பதிவுக் கருவியில் ஒரு விமானி, "நீங்கள் ஏன் எரிபொருளைக் தடுத்தீர்கள்?" என்று கேட்பது பதிவாகியுள்ளது. மற்ற விமானி, "நான் செய்யவில்லை" என்று பதிலளித்தார்.
விசாரணையில் எரிபொருள் சுவிட்சுகள் 'கட்ஆஃப்' நிலையில் இருப்பது தெரியவந்தது. குழுவினர் 14 வினாடிகளுக்குள் அவற்றை 'ரன்' நிலைக்குத் சொடுக்கினாலும், விமானம் ஏற்கனவே கட்டுப்பாட்டை இழந்து 32 வினாடிகளுக்குள் விபத்துக்குள்ளானது.
இருப்பினும், இந்த சுவிட்சுகளின் வடிவமைப்பை அமெரிக்க பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) சோதனை செய்து அங்கீகரித்துள்ளது.
இந்த விபத்து குறித்து எப்.ஏ.ஏ. நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், எரிபொருள் சுவிட்ச் கோளாறால் விபத்து நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டிருந்தது.
- அதானி குழுமப் பங்குகளின் சந்தை மதிப்பில் ரூ.12.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
- அப்போதைய செபி தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஈடுபட்டதாகவும் ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியிருந்தது.
அதானி குழுமம் பங்குச் சந்தையில் மோசடி செய்ததாக அமெரிக்கவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையை "கட்டுக்கதை" என இந்தியப் பங்குச் சந்தை வாரியம் (செபி) நிராகரித்துள்ளது .
அதானி குழுமத்திற்கு எதிராக எந்த முறைகேடுகளையும் கண்டறியவில்லை என்றும், எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை என்றும் செபி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரியில் அதானி குழுமத்திற்கு எதிராக வெளியான இந்த ஹிண்டன்பர்க் அறிக்கை பங்குச் சந்தையில் அதன் பங்குகளில் 50 சதவீதம் சரிவை ஏற்படுத்தியது. இதனால் அதானி குழுமப் பங்குகளின் சந்தை மதிப்பில் ரூ.12.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
அதானி மீதான முக்கிய குற்றச்சாட்டு, அவர் வெளிநாடுகளில் ஷெல் நிறுவனங்களை அமைத்தார், தனது சொந்த நிறுவனத்தின் பங்குதாரர்களிடம் முதலீடு செய்தார், பங்குகளின் விலையை உயர்த்தினார், மேலும் இந்த பங்குதாரர்கள் கடன்களைப் பெறுவதற்கு பிணையம் வழங்கினர் என்பதுதான்.
அதானி குழுமத்துடன் தொடர்புடைய ரகசிய வெளிநாட்டு முதலீடுகளில் அப்போதைய செபி தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஈடுபட்டதாகவும் ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியிருந்தது.
முன்னதாக, இந்த ஆண்டு துவக்கத்தில் ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






