என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான்.
    • காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன்.

    சென்னை :

    கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என த.வெ.க. தலைவர் விஜய் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில்வெளியிட்டுள்ள பதிவில்,

    என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.

    கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்.

    நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது.

    என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன்.

    நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன். இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை.

    அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம் என்று கூறியுள்ளார். 



    • இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
    • 4 பேர் மீது கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    கரூரில் த.வெ.க. கூட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    இந்த நிலையில், கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாவ தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அந்த வகையில், புஸ்ஸி ஆனந்த், மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்மல்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

    • கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.
    • தவறு செய்தவன் திருந்த பார்க்கணும். தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்.

    கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர்.

    தமிழ்நாட்டையே உலுக்கி உள்ள இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இரங்கலும் தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், விஜய் பரப்புரையின்போது உயிரிழந்தவர்களுக்கு நடிகர் சத்யராஜ் இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில் பேசிய சத்யராஜ், "கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். தவறு என்பது தவறி செய்வது... தப்பு என்பது தெரிந்து செய்வது... தவறு செய்தவன் திருந்த பார்க்கணும். தப்பு செய்தவன் வருந்தி ஆகணும். சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து... சிறுசா இருக்கையில் திருத்திக்கோ தப்பு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ... தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது திரும்பவும் வராம பாத்துக்கோ... ச்ச" என்று தெரிவித்தார்.

    குறிப்பாக வீடியோ முடிவில் 'ச்ச' என்று வேதனையோடு சத்யராஜ் கூறினார்.

    • விஜய் பிரசாரத்தில் இதற்கு முன்பு எந்த பிரச்சனையுமே இல்லையே.
    • எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்வதற்கு அ.திமு.க. ஆட்சியில் முழு பாதுகாப்பு அளித்தோம்.

    கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிந்தவர்களின் உடல்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதலும் தெரிவித்தார்.

    இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    * விஜய் பிரசாரத்தில் இதற்கு முன்பு எந்த பிரச்சனையுமே இல்லையே.

    * 4 மாவட்டத்தில் த.வெ.க. பிரசாரம் செய்துள்ளது. ஏற்கனவே நடந்த கூட்டத்தை பார்த்து தமிழக அரசும், காவல்துறையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

    * விஜய் பேசும் போது மின் விளக்கு அணைந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

    * எதிர்கட்சிகளின் கூட்டத்திற்கு தி.மு.க. அரசு முறையான பாதுகாப்பு அளித்து நடுநிலையோடு செயல்பட்டிருக்க வேண்டும்.

    * கூட்டத்திற்கு ஏற்றவாறு தலைவர்களும் நடந்து கொள்ள வேண்டும்.

    * நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் பலனின்லை.

    * இக்கூட்டத்திற்கு பாதுகாப்பு தரப்பட்டதாக தெரியவில்லை.

    * எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்வதற்கு அ.திமு.க. ஆட்சியில் முழு பாதுகாப்பு அளித்தோம்.

    * அ.தி.மு.க. கூட்டத்திற்கும் காவல்துறை பாதுகாப்பு இல்லை.

    * எப்படிப்பட்ட நிலை இருந்தது என ஆய்வு செய்ய வேண்டும்.

    * ஒரு நபர் கமிஷன் அமைத்ததன் நோக்கம் என்ன என தெரியவில்லை.

    * கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதில் கட்சிகளுக்கு அனுபவம் உண்டு.

    * அரசியலுக்கு அப்பாற்பட்டு பேச வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது.

    * ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி எனும் வகையில் காவல்துறை தனது கடமையிலிருந்து தவறிவிட்டது.

    * அரசியல் கட்சி கூட்டங்களில் இதுவரை இப்படி உயிர் பலி நிகழ்ந்ததில்லை.

    * மக்களுக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை

    * கூட்டத்தை ஒழுங்குப்படுத்துவதில் கட்சிகளுக்கு அனுபவம் உண்டு.

    * ஒரு கட்சி தலைவர், இன்னொரு தலைவருக்கு அறிவுரை கூறகூடாது என்றார். 

    • பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 31க்கும மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று கரூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 31க்கும மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் கரூரில் நடந்த அரசியல் பிரசார கூட்டத்தின்போது நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது.

    தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன.

    இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு வலிமை கிடைக்கவும், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.
    • தற்போது அவரை 31 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழக வெற்றிக் கழகம் தலைவர் கரூரில் மக்களை சந்தித்து, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்ததாக, முதற்கட்ட தகவல் வெளியானது. பின்னர், பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. 3 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

    பின்னர் உயிர்ப்பலி 31 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி யாரும் உயிரிழக்கவில்லை. மருத்துவமனைக்கு கொண்டு வரும்போதே அவர்களின் உயிர் பிரிந்தது. சடலமாக கொண்டு வரப்பட்டது எனத் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் உயிரிழந்தவர்களில் 16 பெண்கள், 6 குழந்தைகள் எனத் தெரியவந்துள்ளது. இதற்கிடையே உயிரிழப்பு 40-ஐ தாண்டியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    • மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தொண்டர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்றிரவு கரூர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து உரையாற்றினார்.

    விஜய் வேன் அருகே கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இதனால் விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே, பெண் ஒருவர் மயக்கம் அடைந்தார். அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    இதில் 30-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக முதற்கட்டமாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. பலர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருப்பதாகவும், இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    உயிரிழந்ததில் பலர் குழந்தைகள் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில், கரூர் மாவட்டத்திற்கு நாளை அதிகாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்ல இருக்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூற உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

    • மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தொண்டர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்றிரவு கரூர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து உரையாற்றினார்.

    விஜய் வேன் அருகே கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இதனால் விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே, பெண் ஒருவர் மயக்கம் அடைந்தார். அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    இதில் 30-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக முதற்கட்டமாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில் சுமார் 11 பேர் உயிரிழந்ததாக அச்சமான செய்தி வெளியாகியுள்ளது. மேலும், பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    உயிரிழந்ததில் 3 குழந்தைகள் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, விஜய் பரப்புரை மேற்கொண்ட பகுதியில் கூடியிருந்தவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்துள்ளனர்.

    • நாமக்கல்லில் இன்று பிற்பகலில் தேர்தல் பரப்புரை நடத்தினார்.
    • கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் விஜய் தனது பரப்புரையை தொடங்கினார்.

    கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் பலர் மயக்கமடைந்து உள்ளனர். மயக்கமடைந்தவர்கள் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதனால் மருத்துவமனையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மருத்துவமனையில் தவெக தொண்டர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    கரூரில் உள்ள அனைத்து ஆம்புலன்ஸ் வாகனங்களும், மயக்கமுற்ற நபர்களை ஏற்றிச் செல்வதற்காக வேலுச்சாமிபுரத்திற்கு வந்தவண்ணம் உள்ளன.

    கரூருக்கு உடனே செல்லும்படி அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    மயக்கமடைந்தவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 5 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், முதலமைச்சரின் உத்தரவை தொடர்ந்து, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் விரைந்துள்ளார்.

    • சென்னையில் மட்டும் 188 மையங்களில் 53 ஆயிரத்து 606 பேர் எழுத இருக்கிறார்கள்.
    • விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு காலை 9 மணிக்குள் வந்துவிடவேண்டும்.

    சென்னை:

    உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப்-2 பதவிகளில் 50 காலிப் பணியிடங்களும், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர், உதவியாளர் நிலை-3, உதவியாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், செயல் அலுவலர் நிலை-3, கீழ்நிலை செயலிட எழுத்தர் ஆகிய குரூப்-2 பதவிகளில் 595 இடங்களும் என மொத்தம் 645 இடங்கள் தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஜூலை மாதம் 15-ந்தேதி அறிவித்தது.

    இந்த பணியிடங்களுக்கு 2 லட்சத்து 12 ஆயிரத்து 495 ஆண்களும், 3 லட்சத்து 41 ஆயிரத்து 114 பெண்களும், 25 திருநங்கைகளும் என மொத்தம் 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 பேர் விண்ணப்பித்திருக்கின்றனர்.

    இவர்களுக்கான ஹால்டிக்கெட் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், முதல்நிலைத் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் 1905 தேர்வு மையங்களில் நடைபெற இருக்கிறது. சென்னையில் மட்டும் 188 மையங்களில் 53 ஆயிரத்து 606 பேர் எழுத இருக்கிறார்கள்.

    விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு காலை 9 மணிக்குள் வந்துவிடவேண்டும். 9 மணிக்கு மேல் வரக்கூடிய தேர்வர்கள் தேர்வுக்கூடத்தில் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என டி.என்.பி.எஸ்.சி. திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வை எழுதுவார்கள்.

    • ஆஸ்திரேலியா பாராளுமன்ற அவைத்தலைவர் இருக்கையில் அமர்ந்தார் தேவா.
    • ஆஸ்திரேலிய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி என்றார்.

    சிட்னி:

    தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவா. தமிழ் சினிமாவில் கானா பாடல்களை அறிமுகப்படுத்தியவர்.

    தனித்துவ குரல் வளத்தால் கவர்ந்தவருமான இசையமைப்பாளர் தேவாவின் இசை பயணத்தை ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மையம் பாராட்டி கவுரவித்துள்ளது.

    இந்நிலையில், ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் தேவாவுக்கு மரியாதை தரப்பட்டு, அவைத்தலைவர் இருக்கையில் அமரவும் வாய்ப்பு அளிக்கப்பட்டு, மதிப்பிற்குரிய செங்கோலும் வழங்கப்பட்டது.

    இதனால் தேவா நெகிழ்ந்து போனார். இதுதொடர்பாக தேவா கூறியதாவது:

    ஆஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் எனக்களித்த மரியாதை பெருமை அளிக்கிறது.

    எனக்கும் எனது இசைக்கலைஞர்கள் குழுவிற்கும் இவ்வளவு அரிய கவுரவத்தை வழங்கியதற்காக ஆஸ்திரேலிய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி.

    இந்தத் தருணம் எனக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் இசை மற்றும் கலாசாரத்தைப் பரப்பி வரும் ஒவ்வொரு தெற்காசிய கலைஞருக்கும் இது சொந்தம்.

    எனது 36 ஆண்டுகால இசைப் பயணத்தில் ரசிகர்களின் அன்பும், ஆதரவும்தான் என் பலம்.

    இந்த அங்கீகாரத்தை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன் என தெரிவித்தார்.

    • முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் வரும் 2-ம் தேதி தொடங்குகிறது.
    • ஷமார் ஜோசப் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 51 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    புதுடெல்லி:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் வரும் 2-ம் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெற்று இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசப் காயம் காரணமாக விலகி இருக்கிறார்.

    கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஷமார் ஜோசப் இதுவரை 11 டெஸ்ட் போட்டியில் விளையாடி 51 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

    ஷமார் ஜோசப் விலகலை எக்ஸ் தளத்தில் அறிவித்து இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அவருக்கு பதிலாக ஜோஹன் லெய்ன் சேர்க்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

    அறிமுக வீரராக சேர்க்கப்பட்டு இருக்கும் 22 வயதான வேகப்பந்து வீசும் ஆல்-ரவுண்டரான ஜோஹன் லெய்ன் 19 முதல் தர போட்டியில் ஆடி 495 ரன்னும், 66 விக்கெட்டும் எடுத்துள்ளார்.

    ×