search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சரஸ்வதி
    X
    சரஸ்வதி

    வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாள்... ஞானமும் அறிவும் தந்திடுவாள்...

    இந்துப் பெண் கடவுளாகிய சரஸ்வதி நான்கு கரங்களுடன் களங்கமற்ற வெள்ளைச் சேலை அணிந்து, அழகிய வெள்ளைத் தாமரையில் அமர்ந்திருக்கும் அழகான தெய்வமாக சித்தரிக்கப்படுகிறார்.
    பிரபஞ்சத்தை உருவாக்கிய பிறகு, பிரம்மா அது வடிவமைப்படாதது போலவும், முற்றிலும் கருத்து இல்லாதது போலவும் ஏதோ ஒன்று குறைவாக உள்ளதாக உணர்ந்தார்.

    பின்னர் அவருக்கு உதவ, அறிவின் உருவமான ஒன்றை உருவாக்க முடிவு செய்தார். அப்பொழுது அவரது வாயிலிருந்து சரஸ்வதி - அறிவு மற்றும் ஞானத்தின் தெய்வம் வெளிப்பட்டது.

    சரஸ்வதி பிரம்மாவிடமிருந்து வெளிவந்து, அகிலத்தில் ஒவ்வொன்றையும் உருவாக்குவது எவ்வாறு என்பது குறித்து அவரை வழி நடத்தத் துவங்கினார். அதன் பின்னர், சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் அனைத்தும் தோன்றின. படைக்கும் கடவுளாம் பிரம்மாவின் துணைவியானார் சரஸ்வதி தேவி.

    சரஸ்வதி என்ற சொல்லுக்கு ஆறு எவ்வாறு ஓடுகின்றதோ அதைப்போல அறிவும், ஞானமும் கொண்ட அழகான பெண் என்பதாகும். இந்துப் பெண் கடவுளாகிய சரஸ்வதி நான்கு கரங்களுடன் களங்கமற்ற வெள்ளைச் சேலை அணிந்து அழகிய வெள்ளைத் தாமரையில் அமர்ந்திருக்கும் அழகான தெய்வமாக சித்தரிக்கப்படுகிறார்.

    இந்து மதத்தில் அறிவு, இசை, கலை மற்றும் அறிவியல் என அனைத்திற்கும் தெய்வமாக சரஸ்வதி தேவியைக் கருதுகிறார்கள்.

    பெர்சிய மதமான ஜோராஸ்ட்ரியனிசத்தில் ஸ்ரோஷா அதாவது பூமியைப் பாதுகாப்பவள் என்று சரஸ்வதியை அழைக்கிறார்கள். பெரும்பாலான சரஸ்வதி ஓவியத்தில் அவருக்குப் பின்னால் அழகிய மயிலானது இடம் பெற்றிருப்பதைப் பார்க்க முடியும்.

    கஷ்டங்களைத் துரத்தியடிப்பவள் என்னும் பொருள் கொண்டு ‘துர்கா’ என்றும் சரஸ்வதியை அழைக்கிறார்கள்.

    கலைமகள், வெள்ளைத் தாமரையில் அமர்ந்திருப்பவள், வீணை ஏந்தியவள், ஞானம் அருள்பவள், அஞ்ஞானம் அழிப்பவள், பிரமன் தேவி, கலைகளின் நாயகி, இருளை அகற்றுபவள், வெள்ளுடை தரித்தவள், மோகம் தீர்ப்பவள், முக்காலம் கடந்தவள், முழு முதற் பொருள், நாத ரூபிணி, வேதஒலி, சொல்லின் சுடர், பேரொளிச் சுடர் என்று பலவாறு போற்றப்படும் பெருமைக்கு உரியவள் அன்னை சரஸ்வதி.

    புத்தர்

    புத்த மதத்தில் கெளதம புத்தரின் போதனைகளை ஆதரிப்பவர்களுக்கு பாதுகாப்பையும், உதவிகளையும் வழங்கும் பாதுகாவலர் தெய்வம் என்று அழைக்கப்படுகிறார்.

    இந்தியாவில் மட்டுமல்லாமல் பர்மா, சீனா, தாய்லாந்து, ஜப்பான் நாடுகளிலும் பல்வேறு பெயர்களில் சரஸ்வதியை வணங்குகிறார்கள்.

    ஸ்கந்த புராணம் முதலான இதிகாசங்களில் சிவனின் மகளாக சரஸ்வதியைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல் கடவுள் விஷ்ணு நித்திய தூக்கத்தில் இருக்கும் பொழுது அவருடைய உடலின் இடப்பாகத்தில் இருந்து தோன்றியவள் என்றும் புராணங்கள் கூறுகின்றன.

    மஹா காளியின் திருமூர்த்தி ஸ்வரூபமாகவும் சரஸ்வதியை வணக்குகிறார்கள். அவள் தனது எட்டு கைகளிலும் மணி, திரிசூலம், கலப்பை, சங்கு, உலக்கை, தடகளம், வில் மற்றும் அம்பு ஆகியவற்றை ஏந்தி சந்திரனைப் போன்ற ஒளியுடன் பிரகாசிக்கிறாள்.

    கலைவாணியானவள் வெள்ளைத் தாமரையில் வெள்ளை நிறச் சேலையில் அமர்ந்திருப்பது உண்மையான அறிவின் புனிதத்தை வெளிப்படுத்துவதாகவே இருக்கின்றது.

    பொதுவாக சரஸ்வதியின் நான்கு கரங்களும் கற்றலில் மனித ஆளுமையின் நான்கு அம்சங்களைக் குறிக்கின்றன. அவை புத்தி, அறிவு, விழிப்புணர்வு மற்றும் தான் என்னும் அங்காரம் ஆகும். மாற்றாக, இந்துக்களின் புனித நூலான நான்கு வேதங்களையும் குறிப்பதாகவும் கூறப்படுகின்றது.

    சரஸ்வதி தேவியின் அருகில் அன்னப்பறவை இருப்பதால் ஹம்ஸவாஹினி என்றும் அழைக்கப்படுகிறாள்.

    இந்தியாவில் சரஸ்வதி அன்னைக்கு மிகச் சில இடங்களிலேயே ஆலயங்கள் உள்ளன. தெலுங்கானாவில் கோதாவரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஞான சரஸ்வதி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்திருக்கும் சரஸ்வதி தேவி சக்தி பீடம் இந்தியாவில் இருக்கும் 18 மஹா சக்தி பீடங்களில் ஒன்றாகும்.

    கர்நாடக மாநிலத்தின் துங்கா நதிக்கரையில் அமைந்திருக்கும் ஸ்ருங்கேரி சாரதாம்பாள் ஆலயமும் பிரபலமாக மக்கள் தரிசனம் செய்யும் இடமாகும்.

    கேரளாவில் உள்ள பனஞ்சிக்காடு என்ற இடத்தில் உள்ள சரஸ்வதி ஆலயமானது தக்‌ஷண மூகாம்பிகை என்ற பெயராலும் வழங்கப்படுகின்றது.

    இதுமட்டுமல்லாமல் கேரளாவில் உள்ள பரவூர், தெலுங்கானா வாரங்கல்லில் உள்ள ஸ்ரீவித்யா சரஸ்வதி ஆலயம் மற்றும் காலேஸ்வரம் மஹா சரஸ்வதி ஆலயமும் மற்றும் காலேஸ்வரம் மஹா சரஸ்வதி ஆலயமும் மிகவும் பிரபலமான ஆலயங்களாகும்.

    தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் உள்ள கூத்தனூர் சரஸ்வதி ஆலயமானது தமிழ்நாட்டில் சரஸ்வதிக்கு உள்ள ஒரே ஆலயம் என்ற பெருமையை உடையது.

    Next Story
    ×