search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தென்காளஹஸ்தி சிவன் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி விழா 13-ந் தேதி நடக்கிறது
    X

    தென்காளஹஸ்தி சிவன் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி விழா 13-ந் தேதி நடக்கிறது

    நாகர்கோவில் அருகே இலந்தையடித்தட்டில் உள்ள தென்காளஹஸ்தி சிவன் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா வருகிற 13-ந் தேதி நடைபெறுகிறது.
    நாகர்கோவில் அருகே இலந்தையடித்தட்டில் உள்ள தென்காளஹஸ்தி சிவன் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா வருகிற 13-ந் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், 5.30 மணிக்கு லட்சுமி ஹோமம் ஆகியவை நடக்கிறது. பின்னர் 7 மணிக்கு முதல் கால பரிகார அர்ச்சனை அலங்கார பூஜையும், 10.30 மணிக்கு 2-ம் கால பரிகார அர்ச்சனை அலங்கார பூஜையும், 1 மணிக்கு பெயர்ச்சி நேர பூஜையும் நடக்க இருக்கின்றன. மாலை மற்றும் இரவில் அபிஷேக அலங்கார பரிகார பூஜை நடைபெறுகிறது.

    ராகு-கேது தரிசனத்துக்கு குமரி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து காலை 7 மணி முதல் 10 மணி வரை வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபடுகிறது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. விழா ஏற்பாடுகளை தென்காளஹஸ்தி பக்தர்கள் சேவா சங்க நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×