search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பங்குனி உத்திரம் பற்றிய அரிய தகவல்கள்
    X

    பங்குனி உத்திரம் பற்றிய அரிய தகவல்கள்

    முருகனுக்கு உகந்த பங்குனி உத்திர விழா விசேஷமாக நடக்கிறது. பங்குனி உத்திரம் பற்றிய அரிய தகவல்கள் இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
    முருகனுக்கு உகந்த பங்குனி உத்திர விழா விசேஷமாக நடக்கிறது. பங்குனி உத்திரம் பற்றிய அரிய தகவல்கள் இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

    அவதார நட்சத்திரம் :

    மகிஷி என்ற அரக்கியை அழிக்க தேவர்கள் விரும்பினார்கள். அவளை ஆணுக்கும், பெண்ணுக்கும் பிறக்காத ஒருவரே அழிக்க முடியும் என்பதால், விஷ்ணு மோகினி வடிவெடுத்து சிவனுடன் இணைந்து ஒரு மகனைப்பெற்றார். அந்த மகன் தர்மசாஸ்தா ஆவார். இவர் மகிஷியை அழித்தார். அய்யப்பனின் அவதாரமாகக் கருதப்படுவது இவரே. சாஸ்தா அவதாரம் எடுத்தது பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் ஆகும்.

    செவ்வாய் தோஷமா?:


    முருகப்பெருமான் பங்குனி உத்திரத்தில் திருமணம் செய்தவர் என்பதால், திருமணத்திற்கு காத்திருக்கும் பெண்கள், ஜாதக ரீதியாக செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், காரணமின்றி திருமணம் தடைபடுபவர்கள் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக் குமாரசுவாமியை (முருகன்) வணங்கிவர நிச்சயமாக உரிய பலன்கள் கிடைக்கும்.

    உத்திரத்து தாலி உறையிலா? :

    உத்திரம் நட்சத்திரத்தை மோசமான நட்சத்திரமாக சில ஜோதிடர்கள் சொல்வது உண்டு. இதனால் பல பெண்களின் வாழ்க்கை பாழாகிறது. உத்திரத்தில் பிறந்த பெண்களை திரு மணம் செய்யும் ஆணுக்கு விபரீதம் ஏற்படும் என்பதற்கு ஜோதிட ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை. மேலும் உத்திரத்து தாலி உறையில் என்பதெல்லாம் எதுகை-மோனைக்காக சொல் லப்பட்டதாகும். எனவே உத்திரத்தில் பிறந்து பெண்களைத் தகுந்த மணப்பொருத்தத்தின் பேரில் தாராளமாக மணம் முடிக்கலாம். இந்த நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களையும் சிலர் ஒதுக்கி வைக்கின்றனர். ஞானசம்பந்தரின் கோளாறு பதிகம் படித்தால் எந்த நட்சத்திர தோஷத்தையும் நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.



    பழனியில் உத்திரம் :

    பங்குனி மாதம் விவசாயிகளுக்கு வேலை குறைந்த மாதம். பெரும்பாலான வயல்களில் சாகுபடி வேலைகள் முடிந்து விடும். இதனால் விவசாயிகள் கோடை காலத்தை தெய்வ வழிபாட்டில் கழிக்க வாய்ப்பான மாதமாகும். முருகனுக்கு இது திருமண மாதம். ஐப்பசியில் சூரனை வதைத்து மறுநாள் திருப்பரங்குன்றத் தில் தெய்வானையை மணம் முடிக்கிறார். பங்குனியில் வள்ளியை திருமணம் செய்கிறார். இதன் காரணமாகவே பங்குனி உத்திரம் பழனியில் கொண்டாடப்படுகிறது.

    திருச்செந்தூரில் தீர்த்த மாடுங்கள்:

    உத்திர நட்சத்திரத்தில் பிறந்த திருமணம் ஆகாத பெண்களும், திருமணத்துக்குப் பிறகு பொருளாதார அல்லது மனரீதியாகத் துயரப்படும் பெண்களும் பங்குனி உத்திரம் தினத்தன்று திருச்செந்தூர் சென்று நாழிக்கிணற்றில் நீராடி அதன் பிறகு கடலில் குளிக்க வேண்டும். பிறகு முருகனுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இந்த பரிகாரத்தை செய்தால் தீராத இன்னல்களும் தீரும்.

    மாமிசம் வேண்டாம்:

    கிராமங்களில் தர்ம சாஸ்தாவை அய்யனார் என அழைக்கின்றனர். அவரது வாகனம் குதிரை. எனவே, குதிரை மீதமர்ந்த மிகப் பெரிய அய்யனார் சிலைகள் கிராமப்புறங்களில் அமைக்கப்படுகின்றன. இவருக்கு ஆடு, கோழி பலி கொடுக்கும் வழக்கம் உள்ளது. ஆனால் அய்யனாருக்கு பாயாசம் படைப்பதே நியாயமானது. அவருக்கு அசைவப் படையல் வைக்கக்கூடாது. அய்யப்பன் கோவிலுக்கு செல்லும்போது, அசைவத்தை ஒதுக்கப்படுவதுபோல, அய்யனார் கோவில்களிலும் அசைவத்தை ஒதுக்க வேண்டும்.
    Next Story
    ×