search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தேவநாதசுவாமி கோவிலில் ராமர், லட்சுமணன், சீதை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
    X
    தேவநாதசுவாமி கோவிலில் ராமர், லட்சுமணன், சீதை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் ராமநவமி விழா

    திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் ராமநவமி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
    கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு விழா கடந்த மாதம் 26-ந் தேதி தொடங்கியது.

    விழாவையொட்டி, தினமும் மூலவர் தேவநாதசுவாமி, செங்கமலத்தாயார், ராமர், லட்சுமணன், சீதை, ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

    விழாவில் சிகர நிகழ்ச்சியான ராமநவமியையொட்டி நேற்று காலை 5 மணிக்கு விஸ்வரூபதரிசனம் நடந்தது. பின்னர், காலை 10 மணிக்கு ராமர், லட்சுமணன், சீதை, ஆஞ்சநேயர் ஆகிய சாமிகளுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் உள்பட 18 விதமான பொருட்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு திருமஞ்சனமும், மகா தீபாராதனையும் நடந்தது. பிரபந்தம் படிக்கும் நிகழ்ச்சியும், இந்திர விமானத்தில் ராமர் வீதியுலாவும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதே போல் கடலூர் அருகே குமராபுரம் மெயின்ரோட்டில் உள்ள 41 அடி உயர காரிய சித்தி ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி விழா நேற்று நடைபெற்றது. இதில் 41 அடி உயர ஆஞ்சநேயருக்கு 2,008 வடை மாலையும், 41 அடி உயர அங்கவஸ்திரமும், பூ மாலையும் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கீழ்பட்டாம்பாக்கம் கோதண்டராமர் கோவில், நெல்லிக்குப்பம் வேணுகோபாலசுவாமி கோவிலில் ராமநவமி விழா நடந்தது.
    Next Story
    ×