search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய போது எடுத்த படம்.
    X
    திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய போது எடுத்த படம்.

    மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் தெப்ப திருவிழா தொடங்கியது

    திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் தெப்ப திருவிழா நேற்று மதியம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 8-ந்தேதி தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.
    தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதில் பங்குனி மாதத்தில் நடைபெறும் தெப்ப உற்சவ திருவிழா சிறப்புவாய்ந்தது.

    தாயுமானசுவாமிக்கு மலைக்கோட்டை மேற்கில் பிரம்ம தீர்த்தம் என்ற சோம ரோகணி (தெப்பக்குளம்) கரிகால சோழனால் வெட்டப்பட்டது.

    இந்த தெப்பக்குளத்தில் மட்டுவார் குழலம்மை சமேத தாயுமானசுவாமிக்கு தெப்பத் திருவிழா நடைபெறும். இதற்காக நேற்று பகல் 12-மணிக்கு மேல் 1 மணிக்குள் மிதுன லக்கனத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இதற்காக தாயுமானசுவாமி கோவிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க கொடியை வீதி உலா கொண்டு செல்லப்பட்டது.



    பின்னர் பகல் 12.15 மணிக்கு மேல் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள கொடிமரத்தின் அருகில் தாயுமானவர், பிரியாவிடை மட்டுவார்குழலம்மை, பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப் பட்டது.

    பின்னர் 12.50 மணிக்கு தங்க கொடி மரத்தில் தாயுமானசுவாமியின் கொடி ஏற்றப்பட்டு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாலை 7 மணிக்கு சுவாமி கேடயம் வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நடை பெற்றது.

    இதே போல திருவிழா முடியும் வரை ஒவ்வொரு நாளும் உபயதாரர்கள் சார்பில் அபிஷேகம் மற்றும் புறப்பாடும் நடைபெறும். இதில் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் வருகிற 8-ந் தேதி இரவு 7 மணிக்கு நடைபெறும். தெப்பத்தில் சுவாமி,அம்பாள் எழுந்தருளி 5 சுற்றுகள் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் சுரேஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×