என் மலர்

  ஆன்மிகம்

  கிருஷ்ணசாமி கருட வாகனத்தில் வீதி உலா
  X

  கிருஷ்ணசாமி கருட வாகனத்தில் வீதி உலா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பாலையில் உள்ள கிருஷ்ணசாமி திருக்கோவிலில் இருந்து வண்ண மலர்கள் அலங்காரத்தில் ராதை சமேத கிருஷ்ணசாமி கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
  மதுரையை அடுத்த காஞ்சரம்பேட்டையில், திருப்பாலையில் உள்ள கிருஷ்ணசாமி திருக்கோவிலில் இருந்து வண்ண மலர்கள் அலங்காரத்தில் ராதை சமேத கிருஷ்ணசாமி கருட வாகனத்தில் எழுந்தருளினார். அங்கு ஆறுபடையப்பன் நற்பணிமன்றத்தின் சார்பில் பெருமாளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மலையாண்டி என்ற அசோக் தலைமை தாங்கினார். கருட வாகன புறப்பாடு குழுத்தலைவர் நல்லமணிராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

  தொடர்ந்து பெருமாள் காஞ்சரம்பேட்டையில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் மன்ற நிர்வாகிகள் குணசேகரன், குருமுர்த்தி, ஜெயசீலன், சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் பெருமாள் மேளதாளங்கள் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் வந்த வழியாக கோவிலுக்கு போய் சேர்ந்தார்.
  Next Story
  ×