search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்து வரும் தெப்ப திருவிழாவில் நம்பெருமாள் கற்பகவிருஷ வாகனத்தில் வீதி உலா வந்த காட்சி.
    X
    ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்து வரும் தெப்ப திருவிழாவில் நம்பெருமாள் கற்பகவிருஷ வாகனத்தில் வீதி உலா வந்த காட்சி.

    ஸ்ரீரங்கம் கோவில் தெப்ப திருவிழா: இன்று வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்ப திருவிழாவையொட்டி நம்பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் இன்று வீதி உலா வருகிறார்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்பத் திருவிழா கடந்த 28-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து வருகிற 8-ந் தேதி வரை விழா நடைபெறும். இத்திருவிழாவின் மூன்றாம் நாளான நேற்று காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு உள் திருவீதி வலம் வந்து வழிநடை உபயங்கள் கண்டருளி 11.30 மணிக்கு டிரான்ஸ்லேட்டர் ராமராவ் மண்டபத்தை வந்தடைந்தார்.

    பின்னர் அங்கு பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் கற்பகவிருஷ வாகனத்தில் புறப்பட்டு வீதிஉலா வந்து 8.30 மணிக்கு வாகன மண்டபம் சென்றடைந்தார். பின்னர் 8.45 மணிக்கு வாகன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    திருவிழாவின் நான்காம் நாளான இன்று(வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு உள் திருவீதி வலம் வந்து வழிநடை உபயங்கள் கண்டருளி 12 மணிக்கு காசுக்கடை செட்டியார் ஆஸ்தான மண்டபத்தை வந்தடைகிறார்.



    பின்னர் அங்கிருந்து மாலை 6 மணிக்கு நம்பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் புறப்பட்டு உள்திருவீதி வலம் வந்து 8.30 மணிக்கு வாகன மண்டபம் சென்றடை கிறார். பின்னர் இரவு 9 மணிக்கு வாகன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் திருவிழாக் காலங்களில் நம்பெருமாள் ஒரு ஆண்டில் நான்குமுறை கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இதில் 3 முறை தங்க கருட வாகனத்திலும், மாசிமாத திருவிழாவின் போது மட்டுமே வெள்ளி கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

    வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாளை தரிசித்தால் காசிக்கு சென்று வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே வெள்ளி கருட வாகன சேவையை தரிசிக்க பிற மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×