search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    திருக்கோவிலூர் கீழையூரில் பிரசித்தி பெற்ற வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    திருக்கோவிலூர் கீழையூரில் பிரசித்தி பெற்ற வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி பெருவிழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா நேற்று காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    பின்னர் கொடி மரத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்தி வீதியுலா நடைபெற்றது. முன்னதாக காலை 8 மணிக்கு சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.

    இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் வீரட்டானேஸ்வரர் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 10-ந்தேதி தேரோட்டமும், 11-ந்தேதி தீர்த்தவாரியும் நடைபெற இருக்கிறது. மேலும் கோவிலில் தினந்தோறும் சாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் வீதியுலா நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர்கள், உபயதாரர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×