search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செல்லியாண்டி அம்மன் கோவிலில் கருவறையில் உள்ள அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்த பக்தர்கள்
    X

    செல்லியாண்டி அம்மன் கோவிலில் கருவறையில் உள்ள அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்த பக்தர்கள்

    பவானி செல்லியாண்டி அம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று கருவறையில் உள்ள அம்மனுக்கு பக்தர்கள் பாலாபிஷேகம் செய்தார்கள். பக்தர்கள் உடலில் சேறுபூசும் வேண்டுதல் நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
    ஈரோடு மாவட்டம் பவானியில் பழமையான செல்லியாண்டி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமாதம் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழாகடந்த 17-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அன்று கோவில் முன் கம்பம் நடப்பட்டது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன. கம்பத்துக்கு மஞ்சள்பூசி பக்தர்கள் புனிதநீர் ஊற்றினார்கள். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் அம்மன் உற்சவ திருவீதி உலா நடக்கிறது.

    இந்தநிலையில் நேற்று கருவறையில் உள்ள செல்லியாண்டியம்மனுக்கு பக்தர்களே பாலாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று முன்தினம் இரவே கோவிலுக்கு சென்று வரிசையில் இடம் பிடித்துக்கொண்டார்கள். அதன்பின்னர் நேற்று அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் புனிதநீராடி நீண்ட வரிசையில் நின்று கருவறையில் உள்ள அம்மனுக்கு தாங்களே பாலாபிஷேகம், திருமஞ்சனம் மஞ்சள் நீர் அபிஷேகம், இளநீர் அபிஷேகம் செய்தார்கள். அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய பாலாபிஷேகம் மாலை 4 மணிவரை நடைபெற்றது.

    முக்கிய விழாவான பக்தர் கள் உடலில் சேறுபூசி வேண்டுதல் நடத்தும் நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதற்காக காலை 8 மணிக்கு பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க பவானி எல்லை அம்மன் கோவிலுக்கு செல்கிறார்கள். பின்னர் அங்கு அம்மன் அழைத்தலும், குதிரை துளுக்கும் நடக்கிறது. அதன்பின்னர் 9 மணியளவில் பக்தர்கள் உடலில் சேறுபூசிக்கொண்டும், பல்வேறு மாறுவேடங் களை அணிந்துகொண்டும் புறப்படுவார்கள்.

    அம்மனுக்கு அணிவிக்கப்படும் நகைகள் அடங்கிய படைக்கல பெட்டியை முறைதாரர்கள் சுமந்தபடி முன்னே செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சேறுபூசியபடி தொடர்ந்து வருவார்கள். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று செல்லியாண்டி அம்மன் கோவிலை வந்தடைகிறது. பக்தர்கள் ஊர்வலமாக வரும் வழிநெடுகிலும் தெருவில் தண்ணீருடன் கலந்து இருக்கும் சேற்றை அள்ளி பூசிக்கொள்வார்கள்.

    பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் இருந்து ஊராட்சி கோட்டை வேதகிரி மலைவரை நிலத்தில் சிவலிங்கம் புதைக்கப்பட்டு இருப்பதாக புராண வரலாறு. அதனால் சிவலிங்கம் புதைக் கப்பட்டு இருக்கும் மண்ணை (சேற்றை) திருநீறாக எடுத்து உடலில் பூசிக்கொள்வதாகவும். அவ்வாறு பூசிக்கொண்டால் நோய்நொடிகள் வராது என்றும் பக்தர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×