search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நெல்லையில் அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்
    X

    நெல்லையில் அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்

    நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்லேறு அம்மன் கோவில்களில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    முத்தாரம்மன்

    நெல்லை வண்ணார்பேட்டை முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 7-ந் தேதி கணபதிபூஜை, யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

    நேற்று காலை 9 மணிக்கு 4-ம் கால பூஜைகள் நிறைவடைந்தது. பின்னர் கோவில் விமானம் மற்றும் முத்தாரம்மன், பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. காலை 11 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ஆயிரத்தம்மாள்

    பாளையங்கோட்டை திம்மராஜபுரம் ஆயிரத்தம்மாள் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 7-ந் தேதி மங்கள இசையுடன் பூஜைகள் தொடங்கின. நேற்று காலை 4-வது கால பூஜை முடிவடைந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 11.05 மணிக்கு விமான கோபுரம், பால விநாயகர், பாலசுப்பிரமணியர், ஆயிரத்தம்மாள், கால பைரவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பகல் 12 மணிக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

    வருசாபிஷேகம்

    நெல்லை டவுன் பாரதியார் தெருவில் உள்ள முருங்கையடி சாஸ்தா மற்றும் திரிபுரசுந்தரி என்ற முப்பிடாதி அம்மன் கோவிலில் நேற்று 2-வது ஆண்டு வருசாபிஷேகம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு ஹோமமும், 10 மணிக்கு கலசாபிஷேகமும் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×