search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டபோது எடுத்த படம்.
    X
    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டபோது எடுத்த படம்.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

    குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்றான மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இந்த கோவிலில் திருப்பணிகள் நடந்து வருகிறது. ரூ. 30 லட்சத்தில் கோபுரம், நாகர் ஆலயம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டும் பணிகளும் நடக்கிறது.

    இதன் ஒரு பகுதியாக ரூ.15 லட்சம் செலவில் புதிய கொடிமரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 1½ வருடத்திற்கு முன்பு மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து 51 அடி நீள கொடிமரம் கொண்டு வரப்பட்டது.

    பின்னர் இது 5 வகையான மூலிகை எண்ணெயில் பதப்படுத்தப்பட்டது. புதிய கொடிமரம் அமைப்பதற்காக கடந்த சில மாதத்திற்கு முன்பு பழைய கொடிமரத்தை அகற்றும் பணியும் நடந்தது.

    இதைத்தொடர்ந்து நேற்று காலை புதிய கொடிமரம் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதணை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. புதிய கொடிமரம் பிரதிஷ்டை நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் விஜயகுமார் எம்.பி. கலந்து கொண்டனர்.

    மேலும் குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் பாரதி, தேவசம்போர்டு துணை ஆணையர் பொன்.சுவாமிநாதன், பத்மநாபபுரம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் ஜீவானந்தம், மண்டைக்காடு கோவில் மேலாளர் ஆறுமுகதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×