search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இடைப்பாடி அருகே பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
    X

    இடைப்பாடி அருகே பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

    இடைப்பாடியை அடுத்த சித்தூரில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று பூலாம்பட்டி காவிரி ஆற்றுக்கு சென்று பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து மேளதாளத்துடன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
    இடைப்பாடியை அடுத்த சித்தூரில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில் பழமை வாய்ந்தது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று பூலாம்பட்டி காவிரி ஆற்றுக்கு சென்று பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து மேளதாளத்துடன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்ட யாக சாலையில் யாக பூஜைகள் நடைபெற்றது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    அதேபோல் இடைப்பாடி கவுண்டம்பட்டி சின்னமாரியம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் அங்கு யாகபூஜைகள் நடந்தன.
    Next Story
    ×