search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்செங்கோடு அருகே மகாகணபதி - ஸ்ரீகுஞ்சுகாளி அம்மையப்பர் கோவில் கும்பாபிஷேக விழா 3-ந்தேதி நடக்கிறது
    X

    திருச்செங்கோடு அருகே மகாகணபதி - ஸ்ரீகுஞ்சுகாளி அம்மையப்பர் கோவில் கும்பாபிஷேக விழா 3-ந்தேதி நடக்கிறது

    திருச்செங்கோடு அருகே மகாகணபதி-ஸ்ரீகுஞ்சுகாளி அம்மையப்பர் கோவில் கும்பாபிஷேக விழா 3-ந்தேதி நடக்கிறது
    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கோக்கலை கிராமத்தில் உள்ள சேலநாடு செல்லங்குல கோவம்ச மக்களுக்கு பாத்தியப்பட்ட மகாகணபதி, ஸ்ரீகுஞ்சுகாளி அம்மையப்பர் சுவாமி, நாகராஜ சுவாமி, கருப்பண்ண சுவாமி, சப்த கன்னிமார் சுவாமிகளுக்கு நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நாளை மறு நாள் (3-ந்தேதி) காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடைபெறுகிறது.

    3-ந்தேதி காலை 6 மணிக்கு மேல் மங்கள இசை, வேதபாராயணம், 2-ம் கால யாக வேள்வி, விநாயகர் பூஜை, புண்யாக வாசனை, நாடிசந்தானம், பூர்ணாகுதி, தீபாராதனை, யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு மற்றும் 9 மணிக்கு மேல் மூலஸ்தான கோபுர கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    9.30 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேக விழா கஞ்சமலை சித்தேஸ்வர சுவாமி ஆலய பரம்பரை அர்ச்சக ஸ்தனிகர் கே.பி.சங்கர்கிருஷ்ண சிவாச்சாரியார் மற்றும் அகோரசிவம் சிவ ஆகம ரத்ன கஞ்சகிரி கே.எஸ். சந்திரமவுலீஸ்வர சிவாச்சாரியார் தலைமையில் நடக்கிறது. கும்பாபிஷேக விழாவினை தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இவ்விழாவிற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
    Next Story
    ×