search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அலகுமலை வலுப்பூரம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது
    X

    அலகுமலை வலுப்பூரம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது

    பொங்கலூர் அருகே உள்ள சேமலைக்கவுண்டம் பாளையத்தில் வலுப்பூரம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.
    பொங்கலூர் அருகே உள்ள சேமலைக்கவுண்டம் பாளையத்தில் வலுப்பூரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. அப்போது கோவிலுக்கு புதிதாக ரூ.40 லட்சம் செலவில் திருத்தேர் செய்யப்பட்டு அலகுமலை கைலாசநாதர் கோவில் முன்பு இருந்து பக்தர்கள் தேரை கோவிலை சுற்றி இழுத்து வந்தனர். அதுபோல் இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 30-ந் தேதி இரவு விக்னேஷ்வர் பூஜை மற்றும் கிராம சாந்தியுடன் தொடங்கியது.

    நேற்று காலை 7 மணிக்கு காப்பு கட்டுதலும், கொடியேற்றமும், 9 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. இன்று(புதன்கிழமை) இரவு 7 மணிக்கு திருவீதி உலா மற்றும் சிறப்பு பூஜை ஆகியவை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு அலகுமலை கைலாசநாதர் கோவில் முன்பு நடைபெறுகிறது. முன்னதாக அம்மன் வலுப்பூரம்மன் கோவிலில் இருந்து அழைத்து வரப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×