என் மலர்

  ஆன்மிகம்

  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
  X

  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று அதிகாலையில் பொதுமக்கள் நீராடி கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
  பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நெய் தீபமும் ஏற்றினர்.  அதிகாலையில் அண்ணா மலையார் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர் மலர்களால் அலங்கரித்து, வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. புத்தாண்டையொட்டி ஏராளமான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
  Next Story
  ×